Wednesday, 31 January 2024

ஏமன் ஹவுதிக்களுக்கு எதிராக அமெரிக்காவின் கடைசி ஆயுதம், USS Gridley நாசகா...


ஏமன் ஹவுதிக்களுக்கு எதிராக அமெரிக்காவின் கடைசி ஆயுதம், USS  Gridley  நாசகாரி போர்க்கப்பல்.

ஈரான் - ரஸ்சியா - சீனா போர் ஆயத்த நிலை. பின்வாங்கிய அமெரிக்கா. விலகிக்கொண்ட ஐரோப்பா. ஓடி ஒழிந்த ரிஷி சுனக்.

அதிர்ச்சியில் இஸ்ரேல். ஆப்பு வைத்த ஐரோப்பா. UNRWAவுக்கு மீண்டும் நிதியுதவி. 

இங்கிலாந்து அரசியலை நிர்ணயிக்கும் அளவுக்கு வளர்ந்து வரும் முஸ்லிம்கள்.

ஹவுத்தி ஏவுகணையை அழிக்க, அமெரிக்க கடற்படை நாசகாரி கப்பல், தனது கடைசி அடுக்கு பாதுகாப்பு கருவியை பயன்படுத்த வேண்டியிருந்தது என்று, அமெரிக்க அதிகாரி சிஎன்என் இடம் தெரிவித்தார்.

யுஎஸ்எஸ் கிரிட்லி நாசகாரி கப்பல், ஏமன் கப்பல் ஏவுகணையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, ஃபாலன்க்ஸ் சி ஐ டபிள்யூ எஸ் ஐப்பயன்படுத்தியது 

ஃபாலன்க்ஸ் சி ஐ டபிள்யூ எஸ்ஸை அமெரிக்கா ஏன் பயன்படுத்தியது என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில், ஃபாலன்க்ஸ் என்பது நாசகாரி கப்பலுக்கான கடைசி அடுக்கு ஆகும், இது ஒன்றை உருவாக்க 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும். 

இந்த நாசகார போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டால், அமெரிக்கா, அண்டார்டிக்காவில்தான் ரூம் போட்டு அழவேண்டும் என்று ஜோக்கர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

மேலும், இந்த மாதிரியான ஒரு அதிநவீன போர்க்கப்பலை தொட்டுப்பார்க்க, ஈரானிய, அமெரிக்க, சீன ரகசிய ஆயுதங்களும் எகிறிக்குதித்துக்கொண்டு இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

U N R W Aக்கு  நிதியுதவியை தொடர முடிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம். தனது முடிவை மாற்றிக் கொண்டு U N R W Aக்கு  நிதியுதவியை தொடர முடிவு செய்துள்ளது. இது  காசா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

ஈரான் தாக்கப்படலாம் என்ற வதந்தியை ஊடங்களின் மூலம் கிளப்பிவிட்ட அமெரிக்காவின் செயலை உண்மை என்று நம்பி, தங்களை இந்தத் தாக்குதலிலிருந்து தொலைவு படுத்திக்கொள்ள ஐரோப்பா, U N R W Aக்கு மீண்டும்  நிதியுதவியை ஒரு பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்திக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானைத்தாக்கினால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் என்று சீனாவும் ரஸ்சியாவும் விடுத்த கடுமையான எச்சரிக்கையும் குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்தின் உள்கட்டமைப்பையே மாற்றும் அளவுக்கு வளர்ந்து வரும் இஸ்லாமிய வாக்கு வங்கி. 

இங்கிலாந்தில் முஸ்லிம் வாக்கெடுப்பு டிசம்பர் 19 அன்று தொடங்கப்பட்டது.

முஸ்லிம் வாக்குகளைத் திரட்டுவதற்கான முதல் ஒருங்கிணைந்த முயற்சி இது அல்ல என்றாலும், இன்றுவரை இது மிகவும் சக்திவாய்ந்தது.

முஸ்லிம் வாக்குகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், "இது போராட்ட இயக்கம் அல்ல. இது உள்கட்டமைப்பு மாற்றத்தின் இயக்கம்.

"இன்னும் பத்தாண்டுகளில் எந்த அரசியல் கட்சியும் முஸ்லிம்களின் வாக்குகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது"

அடுத்தடுத்து வரும் தேர்தல்களில், TORY கட்சியும், Labour கட்சியும் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொண்டமைக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டியது  இருக்கும்.  

ஏமனில் கூலிப்படைக்களைக் கொண்டு, பெரும்படை உருவாக்கி, ஏமனுக்குள் தரை வழியாக நுழையத் திட்டமிடப் பட்ட நகர்வுகள் தெளிவாகத் தெரிகின்றன என்று அலி அல்-கஹும் தெரிவித்துள்ளார்.  கடந்த போரில் சஆதவில் நடந்த தரை வழித்தாக்குதல்களுக்குப் பிறகு   இப்போது முதற்சிகள் நடக்கிறது. இது தாக்குதல்களுக்கான நமது தயார்நிலை மற்றும் துப்பாக்கிகளில்  நமது கையை தயாராக வைத்திருப்பதற்கான தெளிவான செய்தியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏமனில் ஹுதைதா மற்றும், பிற இடங்களில் அமெரிக்க-பிரிட்டிஷ் பெயரில் ஊடுருவும்  எந்தவொரு கூலிப்படை இயக்கமும் ஒரு தீர்க்கமான பதிலடியை சந்திக்கும் என்றும் தெளிவு படுத்துகிறார்.

ஏமனின் உள்ளூர் ஆதாரங்களின்படி, நாட்டின் தெற்கில் உள்ள, அல் ஹுதைதாவை குறிவைத்து, அமெரிக்க ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மேலும், ஏமனின் மேற்கே RedSea கடலோர நகரமான ஹுதைதாவின் வடக்கே, அல்-ஜப்பானா பகுதியை அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் தாக்குதல்கள் நடத்திக்கொண்டு இருக்கின்றன என்று தலைநகர் சனாவில் இருந்து அலமயாதீன் செய்தி நிருபர் தெரிவிக்கிறார்.

இஸ்ரேல் ஆயுதங்களைக் கொண்டே இஸ்ரேலைத் தாக்கும் ஹமாஸ். இஸ்ரேல் வீசிய வெடிபொருள்களை மறுசுழட்சி செய்து, இஸ்ரேலை திருப்பித்தாக்கும் alquassam  brigade. 

ஆக்கிரமிப்பு ஆட்சிக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே, இஸ்ரேலால் தூண்டப்பட்ட எல்லை மோதல்கள் தொடரும் நிலையில், லெபனான் எதிர்ப்பு இயக்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் டெல் அவிவ் உடனான சாத்தியமான போருக்கு குழு முற்றிலும் தயாராக இருப்பதாக கூறுகிறார்.

ஹிஸ்புல்லாவின் நிர்வாக கவுன்சிலின் தலைவர், சையத் ஹாசிம் சஃபிதீன், பெய்ரூட்டில் புதன்கிழமை உரையாற்றிய போது இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

லெபனானின் அல்-மனார் தொலைக்காட்சி "லெபனான் தொடர்பான எந்தவொரு இஸ்ரேலிய தவறான கணக்கீட்டிற்கும் ஹெஸ்புல்லாவின் [சாத்தியமான] விடையிறுப்பு மிகவும் சக்திவாய்ந்ததாகவும் விரைவாகவும் இருக்கும்" என்று லெபனானின் அல்-மனார் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.


அடுத்த சில மணி நேரங்களில் ஈரானைத் தாக்கப்போகும் பைடன் USS Gravely தாக...

அடுத்த சில மணி நேரங்களில் ஈரானைத் தாக்கப்போகும் பைடன். SKY News தகவல். 

USS  Gravely  Destroyer போர்க்கப்பல் மீது ஏமன் சரமாரி தாக்குதல்.

ஈரானைத் தாக்கினால்... சீனா ரஷ்யா கடுமையான கூட்டு எச்சரிக்கை..

ஹமாஸ் 117-வது நாளாக காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்து வருகிறது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு, சிரியாவுக்கு முதல் தூதரை அனுப்பியது UAE.

இரண்டு வாரங்களாக கடல்நீரை சுரங்கப்பாதைகளுக்குள் செலுத்தும் இஸ்ரேல்.

சற்றுமுன் ஈராக்கின் ஏர்பிளில் மீண்டும் ஒரு ட்ரான் தாக்குதல். மத்தியக் கிழக்கில் சின்னாபின்னமாகும்  அமேரிக்கா.

------------

பைடன் அடுத்த சில மணி நேரங்களில் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது. இது உண்மைலேயானால், மத்தியக்கிழக்கில் மட்டுமல்ல, மேலும் உலகின் பல இடங்களிலும் பூகம்பம் வெடிக்கப்போவது உண்மையாகிவிடும் என்கிறார்கள்.

அமெரிக்காவிலும் பல கடும்போக்குவாதிகள், ஈரானுக்குள் ஆழமாக சென்று தாக்க அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அமெரிக்க தேர்தல் களத்தில், பைடேன் பின்னுக்கு தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், இந்தத்தாக்குதல் நடைபெற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இன்றிரவு ஜோ பைடன் ஈரானைத் தாக்கினால், இந்த தேதி நீண்டகால வரலாற்றில் நினைவில் வைக்கப்படும் என்கிற கூற்று உண்மையாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

------

செங்கடலில் ஏமன் கடற்கரைக்கு அருகே அமெரிக்க கடற்படை போர்க்கப்பலை நோக்கி ஏமன் கடற்படை பிரிவுகள் "பல" ஏவுகணைகளை வீசியதாக யேமன் இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி புதன்கிழமை ஏமன் தலைநகர் சனாவில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி உரையில், யுஎஸ்எஸ் கிரிட்லி நாசகாரி கப்பலுக்கு எதிராக யேமன் படைகள் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறினார்.

காசா பகுதியில் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் எதிர்ப்புப் போராளிகளுக்கு ஆதரவாகவும், யேமனுக்கு எதிரான அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு ஆக்கிரமிப்புக்கு விடையிறுப்பாகவும் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் ஆதரவு குழு செங்கடலில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தும் நிலையில், இனியும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.

-------------

ஈரான் போரை நாடவில்லை, ஆனால் அது அதைக் கண்டு பயப்படவில்லை என்று இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் (ஐஆர்ஜிசி) தலைமை தளபதி தெரிவித்துள்ளார்.

ஜோர்டானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பைடென் கூறினார்.  பைடேன் இந்தக் கூற்றுக்கு சீனாவும் ரசியாவும் இணைந்து கடுமையா கூட்டு எச்சரிக்கையை பைடெனுக்கு அனுப்பி உள்ளது. ஈரான் தாக்கப்பட்டால் அதன் விளைவுகள் படு பயங்கரமானதாக இருக்கும் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

------

கடந்த இருபத்து நன்கு  மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய குண்டுவீச்சு அல்லது துப்பாக்கிச் சூட்டில் நூற்றி முப்பதுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள சுரங்கப்பாதைகளை பல வாரங்களாக கடல் நீரால் நிரப்பி வருவதை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த கடல் நீர்,  அடுத்த பல வழிகளில் திருப்பிவும் கடலுக்குள்ளேயே செல்வது தெரியாமல் இஸ்ரேல் கூத்தைத் தொடர்கின்ற கோமாளிகள் என்று சிலர் வருணிக்கிறார்கள். 

மேலும், நிலத்தடி சுரங்கப்பாதை நெட்வொர்க்கை கடல் நீரால் நிரப்ப பம்புகளை அமைத்ததாக இஸ்ரேலிய படைகள் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டன.

இந்த நடவடிக்கை காசாவின் முழு நீர் விநியோகத்தையும் மாசுபடுத்தி, அதை குடிக்க முடியாததாக மாற்றும் ஒரு மிகப்பெரிய போர்க்குற்றமாகும்.

---

ஈராக்கின் எர்பிலின் வடகிழக்கில் அமைந்துள்ள அல்-ஹரிரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது மற்றொரு கமிகேஸ் ட்ரோன் தாக்குதல் பதிவாகியுள்ளது

மத்திய கிழக்கில் யாரும் இனி அமெரிக்காவைக் கண்டு அஞ்சவில்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது

-----------






 செங்கடலில் ஹவுதிக்கள்  இன்று மீண்டும் தாக்குதல்.

வெடித்து சிதறிய அமெரிக்க F-16 Fighter Jet .

காசா தொண்டு நிறுவன வண்டிகளை உள்ளே விட, ஒவ்வொரு வண்டிக்கும்  லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கும் எகிப்து.

ஹவுதிக்களுக்கு எதிராக போர் செய்ய,  இங்கிலாந்துக்கு தகுதியில்லை, திறமையில்லை, ஆயுதங்களும்  இல்லை.

மரண அடி வாங்கும் இஸ்ரேல் பொருளாதாரம். ஐ எம் ef எனப்படும் இன்டர்நேஷனல் மோனிட்டரி fund எச்சரிக்கை.

உக்ரைனிலும், மத்தியகிழக்கிலும் படுதோல்வி அடையும் நாடுகள்.

விரிவான செய்திகள் உள்ளே.


வெடித்து சிதறிய அமெரிக்க பைட்டர் ஜெட். தென் கொரியாவுக்கு அருகில் அமெரிக்க பைட்டர் ஜெட்  இன்று வெடித்து சிதறியது. இந்தப் பகுதியில அமெரிக்கா fighter ஜெட்  வெடித்து சிதறியது.  இந்த வருடத்தில் இது மூன்றாவது flight ஆகும், .

F-Sixteen  என்று அழைக்கப்படுகிற அதிநவீன போர் விமானம், அமெரிக்க கடல் படைத்தளத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில் வெடித்து சிதறி உள்ளது.

தொடர்ந்து F-Sixteen போர் விமானங்கள் வெடித்துச் சிதறுவது குறிப்பிடத்தக்கது.


----

சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) செவ்வாய்க்கிழமை, "இஸ்ரேலின்" பொருளாதார வளர்ச்சி குறித்து கவலைகளை வெளிப்படுத்தியது, ஏனெனில் Gaza மீதான நீண்டகால போர் காரணமாக, இரண்டாயிரத்து இருபத்து நான்காம்  ஆண்டில், குறிப்பிடத்தக்க மந்தநிலையை எதிர்பார்க்கிறது.

தலைமை பொருளாதார நிபுணர், Pierre-Olivier Gourinchas, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), போருக்கு முந்தைய மதிப்பீட்டான மூன்று சதவிகிதத்தை விட, மிகக் குறைவாக அதிகரிக்கும் என்று கூறினார், மேலும், குறிப்பிட்ட திருத்தப்பட்ட எண்ணிக்கை, இன்னும் வெளியிடப்படவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டார்.

போர் நீடித்துக் கொண்டிருக்கையில், இஸ்ரேலிய அதிகாரிகள் தங்களது பொருளாதாரம் தகர்க்கப்படுவதைக்கண்டு அச்சப்படுகின்றனர்.  தொடர்ந்த ஹமாஸ் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, தங்கள் பொருளாதாரம்  இன்னும் பல மாதங்கள், ஆண்டு முழுவதும் சரிவில் நீடிக்கும் சாத்தியக்கூறு உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.

---


---------

இனி ஈரானை அழிக்காமல், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும்  வேலை இல்லை. உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும், அமெரிக்கா படு தோல்வி அடைகின்ற நிலையில், ஈரானைத் தாக்குவது என்பது, நிரந்தரமான மிகப்பெரிய ஒரு அழிவை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்காவும் இஸ்ரேலும், மிகக் கடுமையான குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஈரான் ஆதரவு பெற்ற சிறிய சிறிய போராளி குழுக்களையே சந்திக்க முடியாத நிலைமை இருக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரானை நேரடியாக எப்படி தாக்கி வெற்றி பெறப் போகிறது, என்பது மிகப்பெரிய கேள்வி குறியாகவே உள்ளது. 

ஈரானை தாக்குவதால் மூன்றாவது உலகப் போர் உருவானாலும், அதன் விளைவு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பயங்கரமானதாக, மிகப் பல ஆண்டுகள் மத்திய கிழக்கில் கால் பாதிக்க இயலாத ஒரு நிலை உருவாகக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து அச்சப்படுகிறார்கள்.

---

மத்திய கிழக்கில் அவசர உதவி வழங்கும் சர்வதேச தொண்டு நிறுவனம், காஸாவுக்கு உதவி வழங்குவதற்காக, எகிப்தின் ஜிஐஎஸ் உடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்திற்கு ஒரு டிரக்கிற்கு ஐயாயிரம் டாலர், அதாவது நான்கு லட்சம் ரூபாய்களுக்குமேல் லஞ்சம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், காசாவில் நிவாரண நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் லஞ்சம் ஒழிய வேண்டும் என்று குமுறுகின்றனர்.

ஏற்கெனவே, மருந்துகளின்றி, குடிக்க தண்ணீரின்றி, உன்ன உணவின்றி, குளிரில் வாடி நிற்கின்ற, பாலஸ்தீன மக்களுக்கு சென்று சேரவேண்டிய உதவிப்பொருள்களை கொண்டுசெல்லும் வண்டிகளிடம், லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுமையிலும் கொடுமை என்று கதறுகின்றார்கள். 

--------

ஈராக்கிய எதிர்ப்புப் படைகள் தங்கள் நடவடிக்கைகளை இடைநிறுத்துகின்றன 

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஈராக்கில் கதாயிப் ஹிஸ்புல்லா நிறுத்தியுள்ளது 

ஈராக்கிய அரசாங்கத்தை சங்கடப்படுத்தக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கதாயிப் ஹிஸ்புல்லா தலைவர் கூறுகிறார்

------

இங்கிலாந்துக்கு பெரிய சங்கடம்.

தரையில் உள்ள ஹவுத்தி இலக்குகளைத் தாக்க இங்கிலாந்து போர்க்கப்பல்களிடம் எந்த ஆயுதங்களும் இல்லை, அதனால்தான் இங்கிலாந்து போர்க்கப்பல்கள் ஹவுத்திகளுக்கு எதிரான தாக்குதல்களில் பங்கேற்கவில்லை, இது முக்கியமாக அமெரிக்காவால் செய்யப்படுகிறது

இங்கிலாந்து ராணுவம்  ஏமனுக்கு  எதிராக போர் செய்யத் தகுதியற்றவை, போர்க்கப்பல்களோ, ஹவுதிக்களைத் தாக்கப் பயனற்றவை என்று  The Telegraph தெரிவித்துள்ளது. 

--------

அன்சருல்லாஹ் அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் கூறுவது யாதெனில், எங்கள் போர் தார்மீகமானது, எனவே உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். எங்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு தெஹ்ரானிலோ , மாஸ்கோவிலோ  அல்லது பெய்ஜிங்கிலோ  இல்லை, மாறாக காசாவில் உள்ளது," என்றார். 

மனிதப்படுகொலைகளை தைரியமாக நிகழ்த்திக்கொண்டு, பாலஸ்தீனத்தில் இன அழிப்பு செய்கின்ற நாசகார துரோகிகளை தடுத்து நிறுத்தாத துப்பில்லாத வல்லரசுகளும் கோழைகளே. 

எனவே செங்கடலில் அமெரிக்காவும், பிரிட்டனும் மற்றும் அதன் ஆதரவாளர்களும் தப்பிப்பிழைக்க ஒரே வழி, காஸாவில் போர் நிரந்தரமான போர் நிறுத்தம்தான் என்பதை அன்ஸாருல்லாஹ் தெளிவாக உணர்த்தி உள்ளது.

-----






Tuesday, 30 January 2024



தொடரும் ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்கள். டெல் அவிவ் முழுவதும் தொடர்ந்து ஒலிக்கும் சைரன்கள். ஓரி மில்லர் என்பவர் இஸ்ரேலிலிருந்து பதிவு செய்திருக்கிறார். தலைநகரில் இரவும் பகலும் மக்கள் பயத்துடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அங்கு வசிப்பவர்களின் செய்தியாக உள்ளது.

இன்று, டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலில், பொதுமக்களை நோக்கி, ஹமாஸ் கண்மூடித்தனமாக ராக்கெட்டுகளை வீசியது என்று ஜோ ராபர்ட்ஸ் என்பவர் பதிவு செய்திருக்கிறார்.

மறுபுறம், ஹெஸ்புல்லாஹ், இஸ்ரேல் எல்லைகளில், பல இடங்களில் கடும் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. முக்கியமாக ராணுவ தலங்களையும், ராணுவம் தொடர்பான ரகசிய இடங்களையும் துல்லியமாகத் தாக்கித் தகர்த்து வருகிறது.

Kiryat Shmona, tayhat hill, Al-Manara மற்றும் Yifthah போன்ற இடங்களில் தாக்குதல்கள் நடந்ததாகவும், வெடிச்சத்தம் கேட்டதாகவும், அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. `Ma’ale Golani` Barracksசில் Falaq -1 ஏவுகனைளைக்கொண்டு துள்ளியத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஹெஸ்புல்லாஹ் அறிவித்துள்ளது.

ஹெஸ்புல்லாஹ்வின் தொடர் தாக்குதல்கள் காரணமாக, லெபனான் எல்லையில் இஸ்ரேல் படைகள் குவிப்பு. லெபனானுக்குள் அதிரடியாக நுழையப்போகும் இஸ்ரேல் ராணுவம். பாதுகாப்பு மந்திரி யோவ் கல்லன்ட் அறிவித்துள்ளார். 

காசா நகரில், ஐ.நா. தங்குமிடம் மீது, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி  பலரை கைது செய்துள்ளனர். இந்தக் கைது கொடுமைகளுக்கு பயந்து, பெண்களும் குழந்தைகளும், UNRWA தங்குமிடத்திலிருந்து தப்பி ஓட்டம். 

யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ தங்குமிடம் ஒன்றில், தஞ்சம் புகுந்திருந்த டஜன் கணக்கான ஆண்களை, இஸ்ரேலிய படைகள் கைது செய்ததை அடுத்து, பெண்களும் குழந்தைகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக, வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலில், தனது முழு குடும்பமும் கொல்லப்பட்ட பின்னர், பல மணி நேரங்களாக காரில் சிக்கிய, ஆறு வயது சிறுமியை மீட்கும் முயற்சியில், காசா நகரத்தில் உள்ள தனது குழுவுடனான தொடர்பை இழந்ததாக, பாலஸ்தீனிய Red Crescent  அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்தித்துணுக்குகள் :

காஸாவில் குழந்தைகளைக் கொன்று குவித்து, பாதுகாப்பை ஏற்படுத்த முடியாது. உடனே போரை நிறுத்து என்று, இஸ்ரேல் அரசை நிர்ப்பந்தித்து, telavivஇல் பெரும் பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சவுத் ஆப்பிரிக்கா உண்மையிலேய,  பாலஸ்தீன மக்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்பினால், பாலஸ்தீனத்தில் உள்ள போராளிகளுக்கு முதுகெலும்பாக, அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை அளியுங்கள் என்று E F F அழைப்பு விடுத்துள்ளது. இந்த E F F  என்பது, உலக Economic Free Forum  என்பதாகும்.

அநியாயக்காரர்கள்,  பண பலத்துடனும், ஆயுத பலத்துடனும், உலக தலைவர்களாக இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையோ, ஐக்கிய நாடுகள் செக்யூரிட்டி கவுன்சிலோ, சர்வதேச நீதி மன்றங்களோ, எந்த நியாயத்தையும் உலகில் யாருக்கும் பெற்றுத் தர முடியாது,  இவை எல்லாம், அநியாயாயக்காரர்களுக்கு துணைபோக மட்டுமே உருவாக்கப்பட்ட  வெறும் கண் துடைப்புகள் தான். இவைகளினால் எந்தப்பயனும் இல்லை.

சில முக்கிய நாடுகள், UNRWAக்கு அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில், பாலஸ்தீனம் விடுதலை பெறும் வரை, அயர்லாந்து  மக்கள் பாலஸ்தீனத்தை  ஆதரிப்பதை நிறுத்த மாட்டார்கள் என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார்கள்..

UKயில் வறுமை வளரத்துவங்கி இருக்கிறது/ இரண்டாயிரத்து இருபத்து ஒன்றுக்கு முன்பு பதிமூன்று புள்ளி நான்கு மில்லியன் என்னும் கணக்கில்  வறுமையில் இருந்த மக்களின் எண்ணிக்கை, தற்போது பதிநான்கு புள்ளி நான்கு மில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் நான்கு மில்லியன் குழந்தைகளும் அடங்குவர்.

அடுத்து, பின்வரும் காரணங்களுக்காக அமெரிக்கா ஈரானைத் தாக்காது:

ஈரான் ஏற்கனவே அணு ஆயுத நாடாக உள்ளது, அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பில் கொண்டு, பல ஆயுதங்களை தயாரிக்கும் திறன் கொண்டது.

பென்டகன் ஒருபோதும், ஈரானுக்கு எதிரான, போர் உருவகப்படுத்துதலை, அதாவது War game simulationஐ  வென்றதில்லை. மில்லினியம் சேலஞ்ச் எனப்படும் இரண்டாயிரத்து இரண்டில் நடத்தப்பட்ட பயிற்சியிலும் இது வெளிப்பட்டது.

அடுத்து,

காஸாவில், சட்டவிரோத குடியேற்றங்கள் கட்டப்படாது என்று,  இஸ்ரேல் பிரதமர் அமெரிக்காவுக்கு 'உத்தரவாதம்' அளித்துள்ளார்.

பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்வதையோ, அல்லது காசா பகுதியிலிருந்து அவர்களை இடமாற்றம் செய்வதையோ, தாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கிறோம் என்று, அமெரிக்க அறிக்கை மீண்டும் வலியுறுத்தியது.

தொடர்ந்து ஆறாவது நாளாக, பொதுமக்கள் போல் வேடம் போட்ட, இஸ்ரேலிய தீவிரவாதிகள்,  கர்ம் அபு சலேம் எல்லைக் பகுதியில்  கூடி, மனிதாபிமான உதவிகள் ஹமாஸுக்கு செல்லும் என்று கூறி, மனிதாபிமான உதவிகள் நுழைவதைத் தடுக்கின்றனர். 

இதற்கிடையில், காசாவின் வடக்கில் உள்ள குடிமக்கள், உணவு முற்றிலும் இல்லாததால், ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் இல்லாமல் இருப்பதாக எச்சரித்துள்ள நிலையில், பட்டினியால் பல இறப்பு செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பல தொடர் செய்திகளுக்கு Subscribe செய்து கொள்ளுங்கள். நன்றி. 


 


Sunday, 28 January 2024

இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது கடும் தாக்குதல் ஜோர்டானில் மூன்று அமெரிக...

அமெரிக்காவைக் கண்டு மற்ற நாடுகள் பயந்து  நடுங்க வேண்டும் என்று  அமெரிக்க சபாநாயகர் ஜான்சன் கூறியிருக்கிறார். இஸ்ரேலின் பல ராணுவ  நிலைகள் மீது ஹெஸ்bulla  கடும் தாக்குதல். ஜோர்டானில்  மூன்று  அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயம் .அடைந்துள்ளனர்.  மேலும் விவரங்களுக்கு வீடியோவை கடைசீ வரை பாருங்கள். 

எங்கள் படைகள் மீதான தாக்குதல்களை, நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்ற, வலுவான செய்தியை உலகிற்கு அனுப்ப வேண்டும். அமெரிக்காவைக் கண்டு மற்ற நாடுகள் பயந்தால், அவர்கள் அமெரிக்க தளங்களைத் தாக்கியிருக்க மாட்டார்கள், என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் கூறியிருக்கிறார்

 லெபனோனிலுள்ள ஹிஸ்புல்லாஹ் போராளிகளுக்கு, ஹசன் நஸ்ரல்லாஹ் கடிதம் : 

பாலஸ்தீன நலனுக்காக ரத்தம் சிந்துவதை விட, பெரிய செயல் எதுவும்  கிடையாது. உங்கள் சேவை மகத்தானது.  நன்றி என் அன்பு சகோதரர்களே. தொடரும் நமது பணி, பாலஸ்தீன விடுதலை ஏற்படும்வரை தொடரட்டும் என்று, நஸ்ரல்லாஹ் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

இரத்தக்களரி சிவப்புக் கோடு: இஸ்ரேல் மற்றொரு அரபு நாட்டை போருக்கு இழுக்கும் அபாயம் உள்ளது

Philadelphi  தாழ்வாரத்தை மீண்டும் கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது, ஆனால் நிபுணர்கள் இது ஒரு மோசமான யோசனையாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.

எகிப்திலிருந்து காஸாவைப் பிரிக்கும், பதினான்கு  கிலோ மீட்டர் எல்லை, பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள போராளிகளால், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பணம் மற்றும் பணியாளர்களைக் கொண்டுவரப்  பயன்படுத்தப்படுகிறது. அதைத் தடுக்க, இஸ்ரேல் இப்போது அதை மீண்டும் ஆக்கிரமிக்கும் சாத்தியத்தை யோசித்து வருகிறது. இது எகிப்தையும்  போர் வளையத்துக்குள் இழுக்கும் அபாய எச்சரிக்கையை உண்டாக்குகிறது,

இஸ்ரேலிய நிலைகள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்: இஸ்ரேலிய ஊடகங்கள் துல்லியமான ஏவுகணைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளன.

லெபனானில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல அரபு நாடுகளின் ஆதரவுடன், மிருகத்தனமான சியோனிச ஆக்கிரமிப்புக்கு மத்தியில்,  காசா மக்களுக்கு ஆதரவளிப்பதிலும், இஸ்ரேலிய பயங்கரவாதத்தை எதிர்ப்பிலும் உறுதியாக உள்ளது.

கவனமாக செயல்படுத்தப்பட்ட, தொடர்ச்சியான நடவடிக்கைகளில், ஹெஸ்புல்லா போராளிகள் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி இருபத்தெட்டு,   இரண்டாயிரத்து இருபத்து நான்கு அன்று, இஸ்ரேலிய எதிரி நிலைகளை துல்லியமாக குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து, பிர்கட் ரிஷா ராணுவ தளம்,  ரமின் ராணுவ பாசறை,  தல் ஷார் ராணுவ தளம், அல் ரஹிப் தளம், கிர்பெட் மஎர் தளம், மற்றும் கிர்யூட் ஷிமோன  ஆகிய பகுதிகளில், புர்கான் மற்றும் Falaq-One  முதலிய ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் கொண்டு துல்லிய தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதல்களில்,  காசா பகுதியில் உள்ள Sderot, Efim மற்றும் Niram ஆகிய இடங்களில், சைரன்கள் எதிரொலித்ததால், நிலைமை மேலும் தீவிரமடைந்தது, இது அந்தப் பகுதிகளில் பதட்டங்களை உயர்த்தியுள்ளது..

இஸ்ரேலிய  தலைநகர் டெல் அவிவில்,   பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில், பொது மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையே, கைகலப்பு நிகழ்ந்ததாக செய்திகள் வந்துள்ளன. காசாவில் இஸ்ரேல் நடத்தும் படுகொலைகளையும், இன அழிப்பு நடவடிக்கையை எதிர்த்தும், இஸ்ரேலிய பிணையக்கைதிகளை விடுவிக்க வேண்டியும் தொடர் போராட்டங்கள், நெட்டன்யாஹுவுக்கு எதிராக நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜோர்டானில் உள்ள ஒரு இராணுவ தளத்தின் மீது, ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர், மற்றும் குறைந்தது, முப்பத்தி ஒருவர் காயமடைந்தனர், இது காசா போர் தொடங்கிய பின்னர், மத்திய கிழக்கில், அமெரிக்க படைகள் கொல்லப்பட்ட முதல் முறையாகும் என்று, அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள இஸ்லாமிய போராளிகள், இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள  நிலையில்,  தாக்குதலுக்கு   தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று, அமெரிக்க ஜனாதிபதி பைடன் .எச்சரிக்கை விடுத்துள்ளார்.


   


Thursday, 25 January 2024

தொடர் தாக்குதல்கள் எதிரொலி. ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்க ராணுவம் திட்டம். தெஹ்ரான் மருத்துவ மையத்தில் பயங்கர தீ விபத்து. ஈரான் தலைநகர் காந்தி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று இஸ்ரேல் மீதான இனப்படுகொலை வழக்கில் I C J   தீர்ப்பு.

அமெரிக்கப் படைகளை ஈராக்கிலிருந்து திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்க, ஈராக்கும்  அமெரிக்காவும், முடிவு செய்துள்ளது..

அரபு நாடான ஈராக்கில் இருந்து, அமெரிக்கப் படைகளை, படிப்படியாக திரும்பப் பெறுவதற்கான கால அட்டவணையை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க, ஒரு குழுவை அமைக்க, பாக்தாத்தும் வாஷிங்டனும் ஒப்புக் கொண்டுள்ளதாக, ஈராக்கின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஈராக்கில், அமெரிக்கா தலைமையிலான இராணுவ கூட்டணியின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தை, இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடைபெற உள்ளது, என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமேரிக்கா ஈராக்  ஆகிய இரு நாடுகளும், பணிக்குழுக்களை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளன.,  அது இறுதியில், "ஒரு குறிப்பிட்ட, மற்றும் தெளிவான காலக்கெடுவை உருவாக்க வழிவகுக்கும்... மற்றும் ஈராக் மண்ணில் அதன் (கூட்டணியின்) ஆலோசகர்களை, படிப்படியாக குறைக்கத் தொடங்க வேண்டும்," என்று அந்த அறிக்கை கூறியது.

"ஐ.எஸ் முன்வைக்கும் அச்சுறுத்தல், மற்றும் அதன் ஆபத்து", மற்றும், "ஈராக்கிய பாதுகாப்புப் படைகளின், திறன்களை வலுப்படுத்துதல்", ஆகியவற்றை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில்,  இந்த காலக்கெடு இருக்கும் என்று அமைச்சகம் குறிப்பிட்டது.

ஒரு அறிக்கையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், ஆகஸ்டில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற, கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையின் முடிவுகளின் அடிப்படையில், கூட்டணியின் "மாற்றம்" குறித்து விவாதிக்க, "வரவிருக்கும் நாட்களில்" சந்திப்புகள் தொடரும் என்பதை உறுதிப்படுத்தினார்.

டாவோஸில் நடந்,த உலகப் பொருளாதார மன்றத்தில், பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, ஈராக்கில், ஐ எஸ்ஸை ஒழிப்பதற்க்காக உருவாக்கப்பட்ட,  "சர்வதேச ஆலோசகர்களின் பணியின் முடிவு குறித்து, ஒரு புரிதல் மற்றும் கால அட்டவணையை எட்டுவதற்கு, உடனடியாக ஒரு உரையாடலைத் தொடங்க வேண்டியது அவசியம்" என்று கூறிய,. சில நாட்களுக்குப் பிறகு, இந்த அறிக்கை வந்துள்ளது.

ஈராக்கில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் முடிவு, ஈராக்கின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரு தேவை, என்று மூத்த ஈராக்கிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, வெளியேற வேண்டும் என்று, ஈராக்கிய போராளிகள், நீண்டகாலமாக விடுத்து வரும் அழைப்புகள், ஈராக்கின் பாதுகாப்புப் படைகளின் ஒரு பகுதியான, ஈராக்கின் மக்கள் அணிதிரள்வு, அதாவது. P M U என்றழைக்கப்படுகிற  Popular Mobilisation Forces என்னும் அமைப்பின்  பிரிவுகள் மீது, அமெரிக்கா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, அமெரிக்க ராணுவப் படைகள்  வெளியேற்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன..

ஈராக் அரசும், அமெரிக்கத் தாக்குதல்களை கண்டித்துள்ளது. பாக்தாத்தின் முக்கிய பகுதியில், ஒரு மூத்த P M U  தளபதிக்கு எதிரான , சமீபத்திய தாக்குதலையும் கண்டித்துள்ளது.

ஈராக்கில் உள்ள, அமெரிக்காவிற்கு எதிரான, ஆயுதமேந்திய குழுக்களின் குடைக்குழுவான, ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு, காசாவின் போராளிகளின்  எதிர்ப்பிற்கு ஆதரவாக, அமெரிக்க தளங்களின் மீது, டஜன் கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதி மீதான, இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டு வருவது மட்டுமே,  மத்தியக் கிழக்கு முழுவதும் விரிவடையும் போரின் அபாயத்தை நிறுத்தும் என்று, பாக்தாத்தில் உள்ள, மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதும், இடப்பெயர்வு செய்வதும், இனப்படுகொலைக்கு ஒரு மிகச்சிறந்த  உதாரணம் என்று, ஈராக் கூறுகிறது.

இரண்டாயிரத்துப் பதிநாளில்  ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய, தாயிஷ் என்னும் பயங்கரவாத குழுவை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற, சாக்குபோக்கின் கீழ் அமெரிக்கா, ஈராக்கில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ராணுவ  துருப்புகளைப் பராமரித்து வருகிறது.

இரண்டாயிரத்துப் பதினேழு  நவம்பரில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் (ஐ ஆர் ஜி சி) குட்ஸ் படையின் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் காசிம் சுலைமானி, முஸ்லீம் நிலங்களில் பயங்கரவாத குழுவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தபோது, ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டாயிரத்து இருபதாம்  ஆண்டில், ஈராக்கின் நாடாளுமன்றம், அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதற்கு வாக்களித்தது. சில நாட்களுக்கு முன்பு, பாக்தாத் விமான நிலையத்திற்கு வெளியே. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட ட்ரோன் தாக்குதலில், ஜெனரல் சுலைமானி மற்றும் P எம்.யூ துணை தளபதி, அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இது போன்ற பல தாக்குதல்களை, தான் தோன்றித்தனமாக செய்து கொண்டிருந்த அமெரிக்காவை எதிர்த்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களும், பல்வேறு போராளிக்குழுக்களின் தொடர் தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டதன் காரணமாக, இந்த அமெரிக்க ராணுவ வெளியேற்றத்திற்கு தூண்டுகோள்களாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாகக் கூறப்படுவது தொடர்பாக, அதற்கு எதிராக "இடைக்கால நடவடிக்கைகள்" எடுக்க வேண்டும், என்ற தென்னாப்பிரிக்காவின் கோரிக்கை மீது, சர்வதேச நீதிமன்றம் (ஐ சி ஜே) தீர்ப்பளிக்கும்; பாலஸ்தீன பகுதிக்கு எதிரான தாக்குதலை நிறுத்துமாறு, ஐ.நா.வின் உயர்மட்ட நீதிமன்றம், இஸ்ரேலுக்கு உத்தரவிட முடியும்.

கான் யூனிஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதல், நகரம் முழுவதும் கொடிய குண்டுவீச்சுடன் தொடர்கிறது, நூறாயிரக்கணக்கானவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், ஆனால், குடியிருப்பாளர்கள், வன்முறைக்கு மத்தியில் தப்பி ஓட முடியாது என்று கூறுகின்றனர்.


ICJ தீர்ப்பு இன்று 


வலுக்கும் போர் ஹவுதி போர்ப்பிரகடனம். இரண்டாம் கட்ட தாக்குதல்களுக்கு தயார் - ஈராக் அறிவிப்பு

வலுக்கும் போர்  ஹவுதி போர்ப்பிரகடனம். இரண்டாம் கட்ட  தாக்குதல்களுக்கு  தயார் - ஈராக் அறிவிப்பு  

ICJ  வெள்ளிக்கிழமை தீர்ப்பு.  இஸ்ரேலுக்கு காத்திருக்கும் ஆப்பு.

 ஜனாதிபதி ரெயிஸி, துருக்கியில்.

காசாவுக்குள் ஊடுருவிய FBI ஏஜெண்டுகள். 

சமூக ஊடகங்களில் மறைக்கப்படும் இன அழிப்பு செய்திகள். 

காசாவில் போடப்பட்ட உணவு டப்பாக்களில் வெடிகுண்டு.  

------

 உங்களுடைய, மேலான ஆதரவுகளுடன் வளர்ந்து வரும் நமது - நுண்ணுரை - ஊடகம்,  பரபரப்பான செய்திகளை, உங்களுக்கு தொகுத்துத் தருவதில், மட்டற்ற மகிழ்ச்சி  அடைகிறது.  மேலும், நமது நுண்ணுரை  Channelலை subscribe செய்து கொள்ளுங்கள். அது , மென்மேலும் செய்திகளை சிறப்பாகவும், தொடர்ந்தும்,  அளித்திட எங்களுக்கு ஊக்கமளிப்பதாக  இருக்கும்..,  வாருங்கள் செய்திகளுக்குள் பயணிக்கலாம்.

--

 ஹவுதிகள், தமது நாட்டை தாக்கும் எதிரிகளுக்கு எதிராகவும், இஸ்ரேல் உடைய இனப்படுகொலைகளுக்கு எதிராகவும், காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இது நாள் வரையில், இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் எந்த சரக்கு கப்பல்களும் செல்ல முடியாத அளவுக்கு தடைகளை ஏற்ப்பற்றி ஏற்படுத்தி, அதை நிறைவேற்றி வருகிறார்கள். இந்த நிலையில், ஏமனின் நியாயமான நடவடிக்கைகளுக்கு எதிராக, அமெரிக்க, பிரிட்டன் போன்ற நாடுகள், தொடர்ந்து எமனை தாக்கி வர, எமன் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட நடவடி நடவடிக்கையாக, தன்னை தாக்குகின்ற நாடுகளுக்கு எதிராக  போர் பிரகடனத்தை அறிவித்துள்ளது.  இதன் காரணமாக,  ஐநா பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாட்டுக்காரர்கள், தங்களது நாட்டில் இருந்து ஒரு மாதத்திற்குள் வெளியேறுமாறு இப்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்தனை நாட்களாக, இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கையும், வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டு  வந்த  நிலையில், தற்போது ஹௌதிக்கள்  போர் பிரகடனம்  செய்துள்ளனர்.இது செங்கடலில்   பல ஆண்டுகளுக்கு போர் நடப்பதற்கான வாய்ப்பை  பிரகாசமாக்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

------

இந்த இஸ்ரேல் ராணுவம் என்ன பண்ணி இருக்குது, காசா பகுதில, ஜெட் விமானத்தில இருந்து, உணவு டப்பாக்கள, அகதிகள் முகாம்ல வீசி இருக்கிறாங்க. அதை  சாப்பாடுன்னு நெனச்சு,  எடுத்து சாப்பிட்ட ரெண்டு குழந்தைகளும், ஒரு ஆண், ஒரு பெண், நாலு பேரும் இறந்துட்டாங்க. என்னன்னு பார்த்தா, அந்த உணவு டப்பால   உண்மையிலேயே உணவு   கிடையாது. அதுக்கு பதிலா பாம்ப செட்பண்ணி  வச்சிருக்காங்க.  அதாவது, அந்த உணவு டப்பாவ,  சாப்பாடுண்ணு நெனச்சு ஓபன் பண்ணா,  உடனே வெடிச்சிரும். இந்த மாதிரி செட் பண்ணி நிறைய உணவு டப்பாக்கல, காசா அகதிகள் முகாம் மேல போட்டு இருக்காங்க.  அதை எடுத்து ஓபன் பண்ண சில பேரு இறந்து போயிருக்காங்க. 

இன்னைக்கு khan யூனிஸ் பகுதியில, இஸ்ரேல் நடத்தின குண்டு வீச்சில,  குறைஞ்சபட்சமா நாப்பது  பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருக்காங்கன்னு சொல்லப்படுது. தொடர்ந்து இஸ்ரேல் குண்டு வீசிட்டே இருக்கறதுனால, இறந்து போன உடல்களை எடுக்குறதுக்கு முடியல, அப்படின்னு சொல்லி இருக்காங்க. இப்படி  பொது மக்கள அநியாயமா கொன்னுட்டு,  ஹாமாஸ்கூட சண்டைன்னு வர்ர்ப்ப, இஸ்ரேல் உடைய தரைப்படைகள் , காசா பகுதிக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தின முதல் நாளில் இருந்து, எதிர்கொண்ட மோசமான நாட்களாக  இப்போதைய நாட்கள் இருக்குதுன்னு புலம்பிகிட்டு இருக்குது.

---

காசாவுக்குள் ஊடுருவிய, F B I ஏஜெண்டுகள். 

சமூக ஊடகங்களில் மறைக்கப்படும் இன அழிப்பு செய்திகள். 

பல சமூக ஊடகங்கள்ல, பாலஸ்தீனத்தில் நடக்கிற இனப்படுகொலைய, நிறைய பேர் வீடியோவாகவும் மற்ற டாக்குமெண்டாகவும் பதிவு செஞ்சு, சமூக ஊடகங்கள்ல post பண்ணிட்டு  இருக்காங்க. இவ்வாறு post  பண்றத, பல சமூக ஊடகங்கள் தடை பண்ணிட்டே இருக்காங்க அவங்க அக்கவுண்ட்களை எல்லாம் கேன்சல் பண்றங்க, பிளாக்கும்  பண்னிடறாங்க. இப்படி தடை பண்ணுறது, இஸ்ரேலோட அநியாயங்களுக்கு அப்பட்டமா துணை போகுற வேலை அப்படின்னு பிரச்சினை கிளம்பறதுனால,  இந்த மாதிரி வேலை எல்லாம் யார் பண்றாங்க அப்படின்னு கண்டுபிடிக்கிறதுக்கு, அமெரிக்காவில் இருந்து எஸ் பி ஐ ஏஜென்சி, அதாவது F B I ஏஜெண்டுகள்,  ரகசிய விசாரணை  நடத்துறதுக்காக,   காசா பகுதிக்குள்ள ஊடுருவி இருக்காங்க அப்படின்னு பாலஸ்தீன லீகல் டிபார்ட்மெண்ட்டும், மற்ற நிறைய ரிப்போர்ட்சும், வந்துட்டு இருக்குன்னு சொல்றாங்க.

---

ஏமன் போருக்கு தயாராகிறது.

ஐ.நா.வில் பணியாற்றும் அனைத்து அமெரிக்க மற்றும் பிரித்தானிய குடிமக்களையும் ஒரு மாதத்திற்குள் யேமனை விட்டு வெளியேறுமாறு ஹூதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஏமன் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அதிகாரப்பூர்வ பயணமாக துருக்கி சென்றிருக்கிறார்.  மத்திய கிழக்கு அரசியலில், பாலஸ்தீன பிரச்சினை சூடு  பிடித்துள்ள நிலையில், இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஈரானிய ஜனாதிபதியின் துருக்கி விஜயத்தில், காசா முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.. 

அடுத்து,  இஸ்ரேல்' காசா இனப்படுகொலை வழக்கில், வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தீர்ப்பின்  முதல் நாள் அன்றே, ​​காசா பகுதியில் தனது இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த "இஸ்ரேலை" கட்டாயப்படுத்துமாறு தென்ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. 

முழு இஸ்ரேலும் பாலஸ்தனத்திலிருந்து  அபகரிக்கப்பட்ட நிலமாக இருக்கும் நிலையில், பாலஸ்தீனியர்கள் 'சியோனிச  அமைப்பை' சட்டப்பூர்வமாக்க  மாட்டார்கள் என்று கூறி,  இஸ்ரேலுடன் இரு நாட்டு  ஒப்பந்தத்திற்கான  கோரிக்கையை ஹமாஸின்  மூத்த அதிகாரி  நிராகரித்துள்ளார்.  மேலும் செய்திகளுக்கு, subscribe  செய்து கொள்ளுங்கள், நன்றி 




Sunday, 21 January 2024

இஸ்ரேலின் EVO Max 4Tயை பறிமுதல் செய்த அல்குத்ஸ் படையணி.

அனைத்துப் போராளிகளின்  நடவடிக்கை - காசா, லெபனான், ஈராக் போராளிகளின் நடவடிக்கைகளின், இன்றைய பிரத்தியேக செய்திகள். 

இஸ்ரேல் போர் நிறுத்த, அழுத்தம் கொடுக்கும் ஐரோப்பா.

வலுக்கும் செங்கடல் பிரச்சினை, உள்நாட்டு போராட்டம்,  பொருளாதார மந்த நிலை  மற்றும், இன்னும் பல நிகழ்வுகள்  காரணமாக, ஐரோப்பிய பாராளுமன்றம், போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கத்த துவங்கி உள்ளதாக, ஐரோப்பிய  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

பாலஸ்தீனம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வரும்,  சாத்தியமான எதிர் 'விளைவுகளை' எதிர்கொள்ளும் , நெதன்யாகு. 

ஒரு பாலஸ்தீனிய அரசை, உருவாக்குவது பற்றி பரிசீலிக்குமாறு, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகுவுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க முயன்று வருவதாக, பைனான்சியல் டைம்ஸ் கூறுகிறது.

 தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும். அமெரிக்க-இஸ்ரேலிய படைகளுக்கு எதிரான, அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளின் பெரிய சுருக்கம் .

அல்-கஸ்ஸாம்பிரிகேட்சின் செயல்பாடுகள்:.

வடக்கு காசாவின், ஜபாலியா அல்-பலாட் பகுதிக்கு கிழக்கே, யாசின் 105 ராக்கெட் மூலம், மெர்காவா tankகை /தாக்கியது..

துஃபா, மற்றும் தராஜ், புறநகர்ப் பகுதிகளின் கிழக்குப் பகுதியில், இராணுவ முகாம்கள் மீது, மோர்ட்டார் குண்டுகள் வீசின, இது இஸ்ரேல்  படையினரிடையே நேரடியாக காயங்களை ஏற்படுத்தியது./

அல்-குத்ஸ் படையணியின்  செயல்பாடுகள் :

மத்திய காசாவில், வானில், அதன் உளவுப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, "EVO Max 4T" என்ற, இஸ்ரேல்  உளவு Quadcopter  ட்ரோனை பறிமுதல் செய்தது.

மத்திய காசாவில் உள்ள, அல்-புரைஜ் அகதிகள் முகாமின் வடக்கு மற்றும் கிழக்கில், 107 மிமீ ராக்கெட்டுகள் மற்றும் மோட்டார்கள் மூலம், இஸ்ரேல்  வீரர்கள் மற்றும் வாகனங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

இராணுவ தளம் மற்றும் "சூஃபா" தலைமையகத்தின் மீது பல மோட்டார் குண்டுகளை வீசினர்.

அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸுடன் இணைந்து, இராணுவ சூஃபா தளத்தின் மீது, சரமாரியான மோட்டார் குண்டுகளைப் பயன்படுத்தி, ஷெல் தாக்குதல்களை நடத்தினர்.

அல்-புரைஜ் முகாமின் வடகிழக்கில் உள்ள, அல்-அஜ்லா பகுதியில்,  இஸ்ரேலிய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Khan Yunisஸுக்கு கிழக்கே, ஒரு Tandem ராக்கெட்டுகளுடன் ஒரு மெர்காவா டாங்கியை குறிவைத்துத் .தாக்கியது.

எதியூரி கவனம் செலுத்துகிற பகுதிகள்,, கிழக்கு மற்றும், மத்திய கான் யூனிஸ் மீது, வழக்கமான  அறுபது மில்லிமீட்டர், மோட்டார்களால் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அல்-முஜாஹிதீன் படையணியின்  செயல்பாடுகள் ::.

காசா நகரின் கிழக்கே, இராணுவ வாகனங்கள், மற்றும் சிப்பாய்களின் கூட்டங்கள் மீது, கனரக பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.

அல்-அக்ஸா பிரிகேட்ஸ்யின்  செயல்பாடுகள் ::.

முஜாஹிதீன் பிரிகேடுகளுடன், ஒரு கூட்டு நடவடிக்கையில், அவர்கள் நஹால் ஓஸ் பாதுகாக்கப்பட்ட இராணுவ தளத்தை, செறிவூட்டப்பட்ட ராக்கெட் கொண்டு சரமாரியாக தாக்கினர்.

மத்திய கான் யூனிஸின் அச்சில், ஒரு Tandom  ராக்கெட் மூலம், ஒரு இராணுவ வாகனத்தை அழித்தது.

ஹிஸ்புல்லாவின்  செயல்பாடுகள் ::

பிரனிட் படைத்தளத்தை, ராக்கெட்டுகளால் குறிவைத்து, நேரடியாகத் தாக்கியது.

ஆக்கிரமிக்கப்பட்ட Shebaa பண்ணைகளில் உள்ள, ருவேசத் அல்-கர்ன்இஸ்ரேல் ராணுவ தளத்தை, ராக்கெட்டுகளால் குறிவைத்து, நேரடியாகத் தாக்கப்பட்டது.

ஹடாப் அல்-புஸ்தான் தளத்தை, ஐ.ஆர்.ஏ.எம் புர்கான், ராக்கெட் மூலம் குறிவைத்தது, இதன் விளைவாக நேரடி தாக்குதல் ஏற்பட்டது.

அவிவிம் குடியிருப்பை, ராக்கெட்டுகளால் குறிவைத்தது, இதனால், ஒரு வீடு சேதமடைந்தது,  மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

ஈராக்கில் இஸ்லாமிக் எதிர்ப்பின்  செயல்பாடுகள்:.

ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில், ஒரு இராணுவ இலக்கை நோக்கி, ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது.

ஒரே நேரத்தில், சிரியாவில் அல்-ஒமர் மற்றும், அல்-ஷதாதி வயல்களில் உள்ள, இரண்டு அமெரிக்க தளங்களை, தற்கொலை ட்ரோன்கள் மூலம் தாக்கியது. 

இந்த பட்டியலில், காசாவில் இருந்து குடியிருப்புகளை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகள் சேர்க்கப்படவில்லை.

காஸாவில் இனப்படுகொலை அரங்கேறுகிறது என்று  ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்திருக்கிறார். 

காஸா சமூக ஊடக பதிவுகள் குறித்து ஆஸ்திரேலிய மருத்துவர்கள் கட்டுப்பாட்டாளரிடம் புகார் அளித்தனர்.

இஸ்ரேல் குண்டுவெடிப்பால் நாசர் மருத்துவமனை அருகே உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கான் யூனிஸில் இஸ்ரேல் குண்டுவெடிப்பு நடத்தியதில் காரணமாக  பத்து  பாலஸ்தீனியர்கள் பலி.

மேலும் செய்திகள் தொடர்கின்றன. எங்களுடன் இணைந்திருங்கள். நன்றி,



Saturday, 20 January 2024

மோதிக்கொண்ட  போர்க்கப்பல்கள் - நியூக்ளியர் நீர்மூழ்கி Super Glue ஒட்டி ரிப்பேர்

இரண்டு U K  போர்க்கப்பல்கள், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு சேதம். இங்கிலாந்து அணு உலை நீர்மூழ்கி கப்பல், "சூப்பர் Glue"  கொண்டு பழுது பார்க்கப்பட்ட - சூப்பர் சம்பவம்.

பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய போர்க்கப்பல்கள் மோதி விபத்து

பஹரைனோட கடல் பகுதியில, ரெண்டு பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள், ஒன்னோட ஒன்னு மோதிக்கிச்சு. இந்த ரெண்டு போர்க்கப்பலகல்ல, ஒரு போர் கப்பல் கடுமையான சேதம் அடஞ்சிருக்கு. ஒரு கப்பல்ல, பெரிய அளவுக்கு ஓட்ட ஆயிருச்சுன்னு  சொல்றாங்க. 

கன்னி வெடிகள கண்டுபிடிச்சு அளிக்கிற, இந்த ரெண்டு போர்க்கப்பல்களும், பஹரைன் கடற் கரையில, ஒதுக்கி நிப்பாட்டுறப்போ, ஒன்னுக்கு பின்னாடி ஒன்னு இடிச்சு, அதனால டேமேஜ் ஆயிருச்சு.

ஒரு பிரிட்டிஷ் ராணுவ செய்தித் தொடர்பாளர், இந்த அசம்பாவிதத்த உறுதிப்படுத்தியிருக்காரு. மேலும், இந்த அசம்பாவிதத்திற்கு என்ன காரணம் அப்படின்னு, விசாரிச்சுட்டு இருக்கோம் அப்படின்னு சொன்னாங்க.

ஹெச் எம் எஸ் Chiddingfold,  என்று அழைக்கப்படுகிற, கடல் கன்னிவெடிகளை செயல் இழக்க வைக்கிற, ஒரு போர்க்கப்பல்,  வளைகுடா பகுதியில் இருக்கிற, பெயர் சொல்லப்படாத ஒரு தீவில், நிலை நிறுத்தி வைக்கிறப்ப, இந்த அசம்பாவிதம் நடந்ததுன்னு சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்வ, படம் பிடிச்ச  ஒரு கேமரா பதிவில, இந்த ஹெச்  எம் எஸ் Chiddingfold  அப்படிங்கற போர்க்  கப்பல், அதுக்கு பின்னாடி இருந்த, கன்னி வெடிகள  கன்டு பிடிக்கிற, ஹெச் எம் எஸ் Bangor அப்படிங்கிற கப்பல் மேல, பலத்த சப்தத்தோட மோதறது பதிவாகி இருக்கு.

U K பாதுகாப்பு பத்திரிக்கையில, பேர் சொல்லப்படாத ஒரு பதிவுல, பிரிட்டிஷ் கப்பல் படை,  கப்பலோட சேதத்தை ஆராய்ந்து, அத எப்படி சரி பண்ணலாம், அப்டிங்கிற அறிக்கை தயார் பண்றதுக்கு, ஒரு குழுவை அனுப்பியிருக்கிறதா சொல்றாங்க. U K  ராயல் நேவியோட, செய்தி தொடர்பாளரும், வெள்ளிக்கிழமை  கொடுத்த ஒரு அறிக்கையில், இந்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்காங்க.

-------

இந்த கன்னிவெடிகள அகற்றுகிற, இரண்டு போர்க்கப்பல்களும் மோதிக்கிட்ட தகவல், எங்களுக்கு தெரிய வந்தது. இந்த அசம்பாவிதத்துல உயிர் சேதம் எதுவும் ஏற்படல. விசாரணை  நடந்துட்டு இருக்கிற இந்த  நேரத்துல,  இதைப்பற்றி அதிகப்படியான கமெண்ட் கொடுக்கிறது சரியில்ல, அப்படின்னு அந்த அறிக்கையில் சொல்லி இருக்காங்க.


[16:10, 20/01/2024] Salamkudhus: மற்றொரு கேமரா பதிவில் ஹெச்எம்எஸ் bangor கப்பலோட வெளிப்பகுதியில ஒரு பெரிய ஓட்ட விழுந்து இருக்கரதையும் பார்க்க முடியுது.

கடல் கன்னிவெடிகள கண்டுபிடிச்சு அளிக்கிற எச்எம்எஸ் Chiddington அப்படிங்கிற போர்க்கப்பல் உறுதிப்படுத்தப்பட்ட கண்ணாடியும் பிளாஸ்டிக்கும் கலந்து, அதோட காந்தத்தன்மைய  குறைக்கிறதுக்காக, நான் Ferrous மெட்டீரியல் சேர்த்து, கப்பலோட வெளிப்பகுதிய தயாரிச்சி இருக்காங்க.

ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பது அல்ல என்பதுகளில் பயன்பாட்டிற்கு வந்த இந்த கப்பல் கடன் கன்னி வெடிகளை  கண்டுபிடித்து அழிக்கிறது மட்டும் இல்லாம, கடலோரப்புல ரோந்து போற கப்பலாகவும் உபயோக படுத்திட்டு இருந்தாங்க. பிரிட்டிஷ் கப்பல் படையில, கடல் கன்னி வெடி கண்டுபிடிக்கிற கப்பல்கள்கல்ல இது ஒரு முக்கியமான கப்பலா இருக்கு. இந்த கப்பலோட வெளிப்பகுதியில மேம்படுத்தப்பட்ட சோனார் கருவி பொருத்தப்பட்டு, பல முன்னேற்றங்களையும் செஞ்சு வச்சிருந்தாங்க. 

இன்னொரு போட்டோக்கள் ஹெச் எம் எஸ் Bangor, இரண்டாயிரமாம்  வருடத்துல, கப்பல் படையில இணைக்கப்பட்டு, கடல் பகுதியில,  இருபது மீட்டர் ஆழம் வரை உள்ள, கடல் கன்னி வெடிகளை கண்டுபிடிக்கிறதுக்கு  உபயோகப்படுத்திட்டு இருந்தாங்க. வட ஆப்ரிக்க நாடான லிபியால pநீண்ட காலமாக ஆட்சியில் இருந்த முயம்மர் கடடாபிக்கு எதிராக போகாமல் இருக்க இஸ்லாமிய போராளிகள் தீவிரமா சண்டையிட்ட நேரத்துல இரண்டாயிரத்துப் பதினெட்டுல  இந்த கப்பலும் பங்கெடுத்திருக்கிறது

-----

இங்கிலாந்து அணு உலை நீர்மூழ்கி,சூப்பர் பசை கொண்டு, ஒட்டி, பழுது பார்க்கப்பட்ட சூப்பர் சம்பவம்.

பிரிட்டிஷ் டிரைடென்ட் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களில்பாதுகாப்புத் அதிகாரிகள் விரைவாக வேலைகளை முடிக்க உத்தரவாதங்களைக் கோரிய காரணத்தால், நடந்த இந்த மோசமான வேலைகலைப் பற்றி, அவசர விசாரணை நடத்த ஆணையிடப்பட்டது.

எச்.எம்.எஸ் வான்கார்ட், அணு உலை நீர்மூழ்கி கப்பலை குளிரூட்டும் குழாய்களை ஒன்றாக இணைக்க பயன்படுத்தப்படும் பல உடைந்த போல்ட் தலைகளை சரிசெய்ய தொழிலாளர்கள் சூப்பர் பசை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஒப்பந்தக்காரர், பாப்காக்கின் பொறியாளர்கள், முதலில் போல்ட்களை சேதப்படுத்தியதாகத் தெரிகிறது, ஆனால் அவற்றை மாற்றுவதற்கு பதிலாக, அவர்கள் வெறுமனே போல்டர்களின்  தலைகளை SUPER GLUEவைக் கொண்டு மீண்டும் ஒட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Friday, 19 January 2024

முக்கியச் செய்திகள் அமெரிக்க கப்பலை தாக்கிய ஹவுத்தி அமெரிக்கா ஐந்...


மத்திய கிழக்கு நெருக்கடி நேரலை: ஏடன் வளைகுடாவில், மற்றொரு அமெரிக்க கப்பலை குறிவைத்த,  ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்! ஏமனுக்குள், அமெரிக்கா, ஐந்தாவது சுற்று தாக்குதலை தொடங்கியது.

முக்கியச் செய்திகள் - அமெரிக்க கப்பலை தாக்கிய  ஹவுத்தி -   அமெரிக்கா ஐந்தாவது சுற்று தாக்குதல் 

ஏடன் வளைகுடாவில், செம் ரேஞ்சர் கப்பல் மீது, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் புதிய தாக்குதல்; ஏவுகணைகள் தண்ணீரில் மோதியதால், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். சேதங்கள் மறைக்கப்படுகிறதா?

நாங்கள் ஈரானைத்  தாக்குகிறோம்.. நெதன்யாஹூ பேச்சின் முழு விவரம்.

======

குண்டுவீச்சு தாக்குதல்களை நிறுத்தவில்லை என்பதை, ஜோ பைடன் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, ஐந்தாவது தாக்குதலை நடத்துகிறது.

அமெரிக்க ஜனாதிபதியை கிண்டல் செய்த ஹவுத்தி தலைவர், இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளார், 

இதையடுத்து, ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்கள் தொடரும், என்று பைடன் செய்தியாளர்களிடம் கூறுகிறார்.

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தகவல்படி, அமெரிக்க போர் விமானங்கள் "தெற்கு செங்கடலை இலக்காகக் கொண்டு, ஏவத்தயாராக இருந்த", கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை, வீ சித்தாக்கின.

ஆனால் வாஷிங்டன் டி.சி.யில், செய்தியாளர்கன் பேசும்போது, அமெரிக்க ஜனாதிபதி,  அமெரிக்க வான்வழித் தாக்குதல்களின் செயல்திறன் குறித்து வெளிப்படையாக இருந்தார். எங்களது தாக்குதல்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை நிறுத்துமா என்று தெரியவில்லை.  ஆனாலும், நாங்கள் தாக்குகிறோம்? ஆம் நாங்கள் தாக்குகிறோம்.." என்றோ தெரிவித்திருக்கிறார்,

=====

ஈரான் மீது இஸ்ரேல், ஏற்கனவே நேரடித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், தெஹ்ரான் அணுவாயுதத்தை அடைவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

வியாழன் அன்று, டெல் அவிவில், செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த நெதன்யாகு,  ஈரான் மீது இஸ்ரேல் நேரடியாக தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக, ஈரானின் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்துகிறது, 

காசாவிற்கு அருகே, ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில், சுமார்  ஆயிரத்து இருநூறு  பேர் கொல்லப்பட்டனர். மற்றும் ஏராளமானோர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டபோது, ​​அக்டோபர் ஏழு  தாக்குதல்களுக்கு, சதித்திட்டம் தீட்டியதில், ஈரான் ஈடுபட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. ஹமாஸ் அரசாங்கத்தின், சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேல், பாலஸ்தீனிய பகுதி மீது தீவிர இராணுவ குண்டுவீச்சைத் தொடுத்ததன் மூலம் பதிலடி கொடுத்தது, இந்தத்தாக்குதல்களால், இதுவரை, சுமார் இருபத்து நாலாயிரம்  பேர் இறந்துள்ளனர். இந்த நடவடிக்கை, ஹமாஸை  அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என்று இஸ்ரேல்  கூறுகிறது.

"paணம், பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு" மற்றும் உளவுத்துறை மூலம், ஹமாஸுக்கு ஈரான் உதவுவதாக, இஸ்ரேல் முன்பு வெளிப்படையாக குற்றம் சாட்டியது.

ஹமாஸுக்கு pinனால் ஈரான் நிற்கிறது. நாங்கள் ஈரானுடன் மோதலில் இருக்கிறோம். எங்களை அழிக்க ஈரான் என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டாம், ”என்று நெதன்யாகு கூறினார், காசா முழுவதும்,  பாதுகாப்புக் கட்டுப்பாட்டை வழங்கும் ஒப்பந்தத்திற்கு மட்டுமே தான் உடன்படுவேன் என்று கூறினார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் எந்தப் பங்கையும் ஈரான் மறுத்துள்ளது, ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி இத்தகைய குற்றச்சாட்டுகள் "அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை" என்று கூறினார்.

நெதன்யாகு மேலும் கூறுகையில், "ஈரான் ஆக்டோபஸின் தலைவர், ஹூதிகள் முதல் ஹிஸ்புல்லா மற்றும்  ஹமாஸ் வரை, அதன் கூடாரங்கள என்கிறார்.

----------

ஈரான், பரவலாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கில், பாதுகாப்பு இல்லாத நிலை உருவாக்குவதில், முக்கிய சக்தியாக உள்ளது, காசாவில் உள்ள ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புல்லா மற்றும் யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு, ஆயுதங்கள், இராணுவ நிபுணத்துவம் மற்றும் பயிற்சி அனைத்தையும் ஈரான் அளித்ததாக கூறுகிறது.

செங்கடலில், வணிகக் கப்பல்கள் மீது, ஹூதிகள் நடத்திய தாக்குதலில், ஈரான் "ஆழமாக ஈடுபட்டுள்ளது" என்று, அமெரிக்கா முன்பு குற்றம் சாட்டியது. தெஹ்ரான் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது, "எதிர்ப்புக் குழுக்கள்" சுதந்திரமாகச் செயல்படுவதாகவும், "இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை எதிர்கொள்ள, தெஹ்ரானிடம் இருந்து உத்தரவுகளைப் பெறவில்லை" என்றும் வலியுறுத்துகிறது.

ஈரானை நேரடியாக தாக்குவதை, இஸ்ரேல் பகிரங்கமாக ஒப்புக்கொள்வது இல்லை, ஆனால் இஸ்லாமிய குடியரசு, நீண்ட காலமாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியின் போது பலமுறை இலக்காக இருந்ததுள்ளது.

டிசம்பரில், இஸ்ரேலின் முன்னாள் பிரதம மந்திரி நஃப்தலி பென்னட், ஈரானில் உள்ள ஆளில்லா வான்வழித் தளத்தை இஸ்ரேல் தாக்கி, மூத்த இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படைத் தளபதியை படுகொலை செய்ததை வெளிப்படுத்தினார். ஜூன்  இரண்டாயிரத்து இருபத்து ஒன்று  முதல் ஜூன் இரண்டாயிரத்து இருபத்திரண்டு  வரை இஸ்ரேலிய பிரதமராக இருந்த பென்னட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு பதிப்பில் ஒப்புக்கொண்டார்.

சரி   இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கே முக்கியமாக நாம் கவனிக்க  வேண்டியது, இஸ்ரேல் ஈரானை தாக்கியதா? தாக்கிக்கொண்டிருக்கிறதா? தாக்கப்போகிறதா?

 நேரடியாக  அறிவித்து விட்டு பின் தாக்குக்கி                                                                                                                                                                               

\-----------------                                                                                                                                                                                         

இனி, முக்கிய செய்தித்துளிகள்:.

வடக்கு காஸாவுக்கு வருகின்ற,  எழுபது  சதவீதமான  உதவிப் பொருட்களை அனுப்ப, இஸ்ரேல் அனுமதி மறுக்கிறது என்று  ஐ.நா சபை தெரிவிக்கிறது. 

ஜனவரி முதல் பகுதியில், வடக்கு காசா பகுதிக்கு வந்த , இருபத்தொன்பது மனிதாபிமான உதவித் திட்டங்களில், ஏழுக்கு மட்டுமே இஸ்ரேல் ஒப்புதல் அளித்ததாகவும், அப்பகுதிக்கு எரிபொருள் மற்றும் மருந்து விநியோக முயற்சிகளில், தொண்ணூற்று ஐந்து சதவீதத்தை இஸ்ரேல் மறுத்ததாகவும், ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

சுதந்திர பாலஸ்தீன அரசுக்கு எதிராக இஸ்ரேலிய பிரதமர் வலுவான நிலைப்பாட்டை எடுத்த பின்னர், இருதரப்பு தொலைபேசி அழைப்பின் போது நெதன்யாகு இரண்டு அரசு தீர்வை "எதிர்க்கவில்லை" என்று பைடன் கூறுகிறார்.

காசாவில், இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துமாறு, மெக்சிகோ மற்றும் சிலி நாடுகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இஸ்ரேல் வேண்டுமென்றே போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான, எந்த ஆதாரமும் இல்லை என்று, அமெரிக்க அதிகாரி ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

காசாவில், இஸ்ரேலிய படைகளால் தடுத்து வைக்கப்பட்டு, தாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டவர்களைத் தான் சந்தித்ததாக, ஐ.நா மனித உரிமை அதிகாரி கூறுகிறார்.

அக்டோபர் ஏழு  முதல், காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில், குறைந்தது  இருபத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபத்திரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் அறுபத்து இரண்டாயிரத்து நூற்று எட்டு பேர் காயமடைந்தனர்.

 அக்டோபர் ஏழு  ஹமாஸ் தாக்குதலில், இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை  ஆயிரத்து நூற்று முப்பத்தொன்பது  ஆக உள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,. இஸ்ரயேலின் இறப்புகள், பல ஆயிரங்கள்  இருக்கக்கூடும், என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இஸ்ரேல் தங்களது உயிர் இழப்புகளை, பல மாதங்களாக மறைத்து வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்தித்துளிகள், வீடியோவின் இறுதிப்பகுதியில்...

இந்த நிலையில் மத்திய கிழக்குக்கு சிறிதும் தொடர்பு  இல்லாத, இஸ்ரேல், அமேரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகள்,  மத்தியக்கிழக்கை குறிவைத்து, நாடுகளுக்குள் பிரிவினையையும், பிளவையும் ஏற்படுத்தி, நியாயமற்ற தடைகள், மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்கள் மூலமாக, நிம்மதியின்மையை  ஏற்படுத்தி, மக்களை அழிக்கின்ற கொடூரங்களுக்கு எதிராக, மக்கள் சுதந்திரமாக சிந்திக்க ஆரம்பித்துள்ளனர் என்று, வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

மேலும், மத்தியக் கிழக்கில் உள்ள கச்சா என்னை வளங்களை, நிரந்தரமாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்தும், தந்திரமாக அந்த வளங்களை சுரண்டிச்செல்ல, பல இட்டுக்கட்டுகளை பரப்பி, பாதுகாப்பு அளிக்கிறோம் என்னும் பெயரில், மத்தியகிழக்கு முழுவதும் ராணுவமயமாக்கப் படுவதும், அவ்வாறு ஊடுருவும் ராணுவத்தின் ஆயுதங்கள், அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, அவர்களை அழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை, உணர ஆரம்பித்திருக்கிறார்கள், என்று நுன்னுரையிடம்  ஐரோப்பாவிலுள்ள ஒரு Think Tank கருத்து தெரிவித்திருக்கிறது. 
















ற 


Thursday, 18 January 2024

Breaking News - பழிக்குப் பழி வாங்கிய பாகிஸ்தான். ஈரானில் நடத்திய தாக்குதல்கள்.

Breaking News - பழிக்குப் பழி வாங்கிய பாகிஸ்தான். ஈரானில் நடத்திய தாக்குதல்கள்.

பாகிஸ்தான், ஈரானின், சிஸ்தான்-ஓ-பலுசிஸ்தானில்,  வியாழக்கிழமை காலை நடத்திய பதிலடி இராணுவத் தாக்குதலில், "ஏராளமான பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் எல்லைக்குள், பயங்கரவாதிகளை குறிவைத்து, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஈரானின் சரவான் நகரில், பல குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக, A F P  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான்-பாகிஸ்தான் மோதல் குறித்த முக்கிய செய்திகள் இதோ:---

இன்று காலை, ஈரானின் சிஸ்தான்-ஓ-பலுசிஸ்தான் மாகாணத்தில், பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது, பாகிஸ்தான், மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட, மற்றும் குறிப்பாக இலக்கு வைக்கப்பட்ட, தொடர்ச்சியான, துல்லியமான இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டது. மார்க் பார் சர்மச்சார் என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட, உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையின் போது, ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்று, பாகிஸ்தான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது

இது, ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் என்று, இந்தியா கூறியுள்ளது. "இது ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்தை சகித்துக்கொள்வதில்லை, என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம். நாடுகள், தற்காப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகளை, நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்று புதுடெல்லி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள, பாகிஸ்தானின் எல்லை நகரமான பஞ்ச்கூரில் உள்ள, பலுச்சி போராளிக் குழுவான, ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்களை குறிவைத்து, செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணைகள், மற்றும் ஆளில்லா விமான தாக்குதல், நாட்டின் இறையாண்மையை கடுமையாக மீறுவதாகும் என்று, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி ஈரானிடம் தெரிவித்துள்ளார். "இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானின் நிபந்தனையற்ற கண்டனத்தை வெளிப்படுத்திய வெளியுறவு அமைச்சர், இந்த சம்பவம், பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையிலான, இருதரப்பு உறவுகளுக்கு, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அண்டை நாடுகளின், இந்த ஆத்திரமூட்டம் செயலுக்கு  பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

ஈராக், சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், ஈரான் நடத்திய தாக்குதலுக்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், மேத்யூ மில்லர் கூறுகையில், "இந்த தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த இரண்டு நாட்களில், ஈரான் அதன் மூன்று அண்டை நாடுகளின் இறையாண்மை, எல்லைகளை மீறுவதை, நாங்கள் கண்டோம். சூழலில் உள்ள வேறுபாடு மிகவும் முக்கியமானது என்று நான் கூறுவேன்.   ஒருபுறம், ஈரான் பிராந்தியத்தில், பயங்கரவாதத்திற்கு முன்னணி நிதியளிப்பவராகவும், பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மைக்கு, முன்னணி நிதியளிப்பவராகவும் இருப்பது, கொஞ்சம் அதிகமான  விஷயம் என்று நான் நினைக்கிறேன்; மறுபுறம், பயங்கரவாதத்தை எதிர்க்க, இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், மோதலுக்கு ஒரு அமைதியான தீர்வு கிடைக்கும் என்று மில்லர் நம்பினார். "இது அமைதியான முறையில் தீர்க்கப்படக்கூடிய ஒரு பிரச்சினை என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான், ஈரான் ஆகிய இரு நாடுகளையும், நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு சீனா கேட்டுக் கொண்டுள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "இரு தரப்பினரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், பிராந்தியத்தை அமைதியாகவும், நிலையானதாகவும் வைத்திருக்கவும், நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்" என்றார்.

பாகிஸ்தான், ஈரானுக்கான தனது தூதரை, புதன்கிழமை திரும்ப அழைத்துக் கொண்டது. உயர்மட்ட, இருதரப்பு பயணங்களை இடைநிறுத்த திட்டமிட்டிருந்தது. "ஈரானில் இருந்து தனது தூதரை திரும்ப அழைக்க, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகவும், இப்போது, ஈரானுக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானுக்கான ஈரானிய தூதர், தற்போதைக்கு திரும்ப மாட்டார் என்றும் நாங்கள் அவர்களிடம்  தெரிவித்துள்ளோம் என்கிறார்.

வரவிருக்கும் நாட்களில், பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் நடந்து கொண்டிருந்த, அல்லது திட்டமிடப்பட்ட அனைத்து உயர்மட்ட பயணங்களையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்", என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல், பாகிஸ்தானின் இறையாண்மையை, தூண்டப்படாத மற்றும் அப்பட்டமான மீறல் என்றும் அது விவரித்தது.

ஈரானுக்கு எதிரான, எல்லை தாண்டிய நடவடிக்கைகளைத் தடுக்குமாறு, பாகிஸ்தானை தனது நாடு எச்சரித்ததாக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியான் தெரிவித்துள்ளார். ஈரானிய பயங்கரவாத குழுவான, ஜெய்ஷ் அல்-அட்ல் மீது, ஈரான் தாக்குதல் நடத்தியதாக அவர் கூறினார். "நட்பு மற்றும் சகோதர நாடான பாகிஸ்தானின் குடிமக்கள் யாரும், ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் குறிவைக்கப்படவில்லை" என்று அவர் டாவோஸில் கூறினார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி, இந்த தாக்குதல் கவலையளிப்பதாக கூறியுள்ளது என்று கூறியுள்ளது. "இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்குப் பிறகு, ஈரானுடனான உறவுகள், மிகவும் மோசமடைந்து வருவது, மிகவும் கவலைக்குரியது. இது நமது தோல்வியுற்ற வெளியுறவு, மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளைப் பற்றி பேசுகிறது" என்று அது கூறியது.

முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்த தாக்குதல், எங்கள் நட்பின் உணர்வு, மற்றும் நல்ல அண்டை நாடுகளின் கொள்கைகளுக்கு எதிரானது, என்று கூறினார். "இது எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான, வரலாற்று உறவை, குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது," என்று அவர் கூறினார்.


பகீர் செய்தி - 500 ரூபாய் நோட்டில் ராமர் படம். செங்கோட்டைக்குப் பதிலாக ராமர் கோயில். நடப்பது என்ன?

ரூபாய் நோட்டு, அதாவது, பணத்தாள் என்பது என்ன? 


ரூபாய் நோட்டு என்பது, ஒரு மாற்றத்தக்க, காகித்தத்தில் அச்சிடப்பட்ட உறுதிமொழி பத்திரமாகும், இது, ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினருக்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த பயன்படுத்தலாம். ஒரு பணத்தாள், கேட்பவருக்கு கொடுக்கப்பட வேண்டும், மேலும், செலுத்த வேண்டிய தொகை நோட்டின் முகப்பில் தெளிவாகத் தெளிவாகத் தெரியும்படி அச்சடிக்கப்பட்டு இருக்கும். இந்த ரூபாய் நோட்டுகள், சட்டப்பூர்வ, டெண்டராகக் கருதப்படுகின்றன; நாணயங்களுடன், பணத்தாளும்,  பல  நவீன பணத்தின் டிசைன்களுடன் பிரிண்ட் செய்யப்படுகிறது.

ரூபாய் நோட்டு "பில்" என்றும்,அல்லது "நோட்டு" என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ரூபாய் நோட்டுகள், இந்திய நாட்டில், மத்திய ரிசர்வ் வங்கியால் பிரிண்ட் செய்யப்படுகிறது.  எவ்வளவு ரூபாய் நோட்டுகளெல்லாம் அச்சிடலாம் என்பதை, அரசாங்கம் முன்கூட்டியே ரிசர்வ்  வங்கிக்கு தெரியப்படுத்தி விடுகிறது.  புதிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் முன், அது அரசாங்கத்தால் தகுந்த முறையில் பரிசீலிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியிடம் ஆணை கோறுக்கப்படுகிறது, 

இந்நிலையில், 

500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக ராமரின் படமும், செங்கோட்டைக்குப் பதிலாக ராமர் கோயிலும் இருக்கும் ரூபாய் நோட்டுகள் ஜனவரி 22 அன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

அயோத்தியில், ராமர் கோவில், வரும் ஜனவரி 22 அன்று திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பல அரசியல்வாதிகள் மற்றும், பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஒருபுறம், ராமர் கோவில் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மறுபுறம், இதுபோன்ற  தகவல்களும், சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

சோஷியல் மீடியாவில், `இப்போது 500 ரூபாய் நோட்டில், செங்கோட்டைக்குப் பதிலாக ஸ்ரீராம் மந்திர் படம் இருக்கும்.-- ஜெய் ஸ்ரீ ராம்'... `புதிய 500 ரூபாய் நோட்டு. காந்தி ஒழிந்தார், இதற்கு மேல், அவரை மகாத்மா என அழைக்கத் தேவையில்லை’ எனப், பலர் குறிப்பிட்டு வருவதைக் காண முடிகிறது.

இது வெகுஜன மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து ஆராய்கையில், இந்த 500 ரூபாய் நோட்டு மார்பிங் செய்யப்பட்ட ஒன்று. மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளது குறித்து, எந்தவித பத்திரிகை செய்திகளும், மத்திய அரசு தகவலும் இல்லை. ரிசர்வ் வங்கியின் இணையதளத்திலும், இதுபோன்ற எந்த அறிவிப்பும் இல்லை.

ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில், தற்போதுள்ள மகாத்மா காந்தியின் உருவம் பதித்த 500 ரூபாய் நோட்டு காட்டப்படுகிறது. ஆக இந்த ராமர் படமுள்ள, மார்பிங் செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டு குறித்த குழப்பம் தேவையில்லை. இந்த தகவல் தவறானது. 

இருந்தபோதும், மக்களின் குழப்பத்தைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் ரிசர்வ் வங்கி, இது குறித்து விளக்கமளித்து செய்தி வெளியிடுவது நல்லது.  வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பது சாலச்சிறந்தது.

இதுபோன்ற மேலும் பல தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள், கமெண்டில் உங்கள் எண்ணங்களை பதிவிடுங்கள்,  Subscribe செய்து கொள்ளுங்கள், நண்பர்களுக்கும் பகிருங்கள்.  நன்றி. 


Wednesday, 17 January 2024

இன்றைய பரபரப்பு உலகச்செய்திகளின் தொகுப்பு Middle East News Roundup: Qata...


இன்றைய பரபரப்பு உலகச்செய்திகளின் தொகுப்பு.

செய்த்தித் தொகுப்புகளில் இன்னும் பல.. இஸ்ரேலைத்தாக்கிய ஹிஸ்பொல்லாஹ் 

பணயக் கைதிகளுக்கு,  மருந்து ஏற்றிச் சென்ற கத்தார் விமானம், எகிப்தில் தரையிறங்கியது; காசாவில், இரண்டு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ், மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான, கத்தார் மத்தியஸ்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய பணயக்கைதிகள், மற்றும் காசா பொதுமக்களுக்கு, மருந்து மற்றும் உதவிகளை ஏற்றிச் சென்ற கத்தார் விமானம், எகிப்தில் உள்ள அரிஷ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. காசாவில் உள்ள பணயக் கைதிகளுக்கு  மருந்துகள் அடையும்போது, மற்ற நோயாளிகளுக்கும் தேவைப்படும்  மருந்துகளை அனுமதிக்கும் உடன்பாடு இஸ்ரேல் நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொண்டு செல்லப்பட்ட மருந்துகளில்,  ஆஸ்துமா, நீரிழிவு, சிறுநீரக நோய், இதய நோய் போன்றவற்றுக்கான மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் பிணைய கைதிகளுக்கு போய் சேருமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

ஈராக்கில் தாக்குதல் நடத்திய,  ஈரானின் 'அத்துமீறல்' குறித்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், ஈராக் புகார் அளித்துள்ளது  இதுகுறித்து, ஈராக் வெளியுறவு அமைச்சகம், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் "ஆக்கிரமிப்பு" தொடர்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு எதிராக ஈராக் புகார் அளித்துள்ளது.

டெல் அவிவ் நகரில், போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை,  இஸ்ரேலிய போலீசார், வலுக்கட்டாயமாக கலைத்ததுடன், போராட்டக்காரர்கள் வைத்திருந்த பதாகைகளையும் பறிமுதல் செய்தனர்.

பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில், கத்தார் அதிகாரிகளுடன், அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.  

 பல ஐரோப்பிய நாடுகள், "அக்கறை" கொண்ட அரபு நாடுகள், மற்றும் அமெரிக்கா ஆகியவை, பாலஸ்தீனத்திற்கு மறுசீரமைப்பு நிதியை ஈர்க்க க்கூடிய, ஒரு ஒருங்கிணைந்த, பாலஸ்தீனிய அரசாங்கத்திற்கான, ஒருமித்த கருத்தை உருவாக்க முயன்று வருகின்றன என்று, நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் டாவோஸில், ஒரு பேட்டியின்போது கூறினார்.

வாஷிங்டனின் முழு ஆதரவையும் அனுபவித்து வரும் இஸ்ரேல், காசாவில் போர் என்ற பெயரில், இனப்படுகொலைகளை செய்து வரும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைவிதியுடன் "தனது தலைவிதியை முடிச்சுப் போட" வேண்டாம் என்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஈரான் எச்சரித்துள்ளது.

செவ்வாயன்று, அமெரிக்க வணிக செய்தி சேனலான, சிஎன்பிசியிடம் பேசிய ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், மேற்கு ஆசியாவில், பாதுகாப்பின்மையின் வேராகத்திகழும் இஸ்ரேலின் படுகொலைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதை விவரித்தார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த, உலகப் பொருளாதார மன்றத்தின் போது, அவர் அளித்த பேட்டியில், "அமெரிக்கா தங்கள் தலைவிதியை, நெதன்யாகுவின் தலைவிதியுடன் முடிச்சுப் போடக்கூடாது, திரு. ஜோ பைடன் அவ்வாறு செய்யக்கூடாது" என்று கூறினார்.

"இஸ்ரேலில், நெதன்யாகு போன்ற குண்டர்களுடன், பைடன் மற்றும் வெள்ளை மாளிகையின் முழு அளவிலான ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையின் வேராக மாறும் என்று தெரிவித்தார்.


அமெரிக்க செனட் கூட்டத்தில்,  பேர்ணி சாண்டர்ஸ் முன்வைத்த, முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதியில் நடக்கும்  போரில்,  இஸ்ரேல் மனித உரிமை மீறல்களை செய்கிறதா என்பதை கண்டறிய ,  நிபந்தனையாக வைக்கும் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை, அமெரிக்க செனட் பெரும்பான்மையாக நிராகரித்துள்ளது.

செனட்டர் தீர்மானம் இன்று புதன்கிழமை, பதினோரு  வாக்குகள் ஆதரவாகவும், எதிராக எழுபத்திரண்டு  வாக்குகளுடனும் நிறைவேறத் தவறியது, நடைமுறையளவில் தீர்மானத்தை தோல்வியடையச்செய்தது..

"மனித உரிமைகள் மற்றும் நமது சொந்த சட்டங்களுக்கு ஏற்ப அமெரிக்க உதவி பயன்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்று சாண்டர்ஸ் வாக்கெடுப்புக்கு முன்னர் ஒரு உரையில் கூறினார்.

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு "மனிதாபிமான பேரழிவு" என்று விவரித்த அவர், "காசாவில் ஏற்பட்டுள்ள அழிவின் அளவின் காரணமாக, இந்த வாக்கெடுப்பு அவசியமானது" என்று கூறும் அளவுக்குச் சென்றார்.

பிரச்சினை ஹமாஸிடம் இருக்கும்போது, முழு பாலஸ்தீனிய மக்களுக்கும் எதிராக போருக்குச் செல்ல, அமெரிக்காவிடம் இருந்து இராணுவ உதவியைப் பயன்படுத்த, இஸ்ரேலுக்கு உரிமை இல்லை என்றும், அவர் வலியுறுத்தினார்.

லெபனானின் எதிர்ப்புப் படைகள் ஷெபா பண்ணைகளில் உள்ள சியோனிச நிலைகளை குறி வைத்துத் தாக்கின.

அல் ஜசீராவின் புதன்கிழமை அறிக்கையின்படி, இஸ்ரேலிய ராணுவப்  படைகள், ஹெஸ்பொல்லாவிடமிருந்து, புதிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய  வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

இதற்கிடையில், லெபனான் ஊடகங்களின் அறிக்கைகளின்படி, சியோனிச ஆட்சி கஃபர்கேலா மற்றும், டெய்ர் மிமாஸ் ஆடிய பகுதிகள் மீது மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது . 

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின்  வடக்கில், ஒரு சியோனிச குடியேற்றத்தைச் சுற்றியுள்ள, மூன்று இராணுவ தளங்களை, ஹெஸ்புல்லா குறி வைத்துத் தாக்கி உள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் வடக்கில் உள்ள, அல்-நபி யுஷாவையும், ஹிஸ்புல்லா படைகள் ஏவுகணைகளால் தாக்கின.

இஸ்ரேலின் மீதான எதிர்ப்புப் படைகளின் தாக்குதல்கள், காசாவில், ஒரு பெரிய அளவிலான படுகொலையில், இஸ்ரேல் ஈடுபட்டுள்ள நிலையில் வந்துள்ளன, அங்கு, அது ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய குடிமக்களை கொன்று குவித்துள்ளது. 

Tuesday, 16 January 2024

செங்கடலில் ஜோக்ராஃபியா சரக்கு கப்பல் தாக்கப்பட்டது , ஈரான், பாகிஸ்தான் க...


செங்கடலில் ஜோக்ராஃபியா சரக்கு கப்பல் தாக்கப்பட்டது., ஈரான், பாகிஸ்தான் கடற்படைகள் கூட்டு ராணுவப் பயிற்சி.

காஸாவில் ஆக்கிரமிப்பு டாங்கிகளை குறிவைத்து பாலஸ்தீன போராளிகள்  தாக்குதல்.

இஸ்ரேல், பலஸ்தீன், இரண்டு நாடுகள் உருவானால், இஸ்ரேலை அங்கீகரிப்போம் என்று  சவுதி அரேபியா தகவல் தெரிவித்திருக்கிறது.

பொருத்தமான, பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி, இஸ்ரேலிய துறைமுகங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த, "Zografia" என்ற  சரக்கு கப்பலை குறிவைத்து, யேமன் கடற்படைப் படைகள், தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டன, மேலும், தாக்குதல் நேரடியாக இருந்தது.

ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின்மீது தொடர்கின்ற தாக்குதலுக்கு எதிராகவும், ஏமனைப் பாதுகாப்பதற்கான சட்டபூர்வமான உரிமையை உறுதிப்படுத்தும் விதமாகவும், ஏமன் ஆயுதப்படைகள், அனைத்து விதமான தற்காப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகின்றன என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் கூட்டு கடற்படை பயிற்சி இரு நாடுகளின் கடற்படைகளின் ஏவுகணை ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவதன் மூலம் ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடாவில் நடைபெற்றது.

இந்த ஒரு நாள் பயிற்சி இரு நாடுகளின் கடற்படைகளின் அதிகாரிகள் மற்றும் இளம் ஆணையிடப்படாத அதிகாரிகளுக்கு இடையிலான பயிற்சி அனுபவங்களை பரிமாறிக் கொள்ள வழிவகுத்தது.

காஸாவில் ஆக்கிரமிப்பு டாங்கிகளை குறிவைத்து, பாலஸ்தீன போராட்டக்காரர்கள் தாக்குதல்:

அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு காலாட்படையை, மிக அருகாமையில் இருந்து எதிர்கொண்டு தாக்குகின்றனர். மேலும்,  ஆக்கிரமிப்பு வாகனங்கள், மற்றும் சிப்பாய்களின் கூட்டத்தை, மோட்டார் குண்டுகளால்  தாக்கி அழிக்கின்ற காட்சிகளை வெளியிட்டுள்ளனர். 

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் என்று, இரண்டு அரசு தீர்வுகள் ஏற்பட்டால்,  நாங்கள் இஸ்ரேலை அங்கீகரிப்போம் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

பிராந்திய அமைதி என்பது, இஸ்ரேலுக்கான சமாதானத்தையம்  உள்ளடக்கியது, என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஆனால், அது பாலஸ்தீனிய அரசு மூலம், பாலஸ்தீனியர்களுக்கு ஏற்படும் சமாதானம் மூலம் மட்டுமே, நடக்க முடியும். அதாவது, மேற்குக்கரையிலுள்ள, மஹ்மூத் அப்பாஸின் தலைமையின் கீழ்,  புதிய பாலஸ்தீனம், இஸ்ரேலிய அரசின் கீழ், ஒரு பொம்மை அரசாக இருக்கலாம் என்னும், பிலிங்கெனின் முன் மொழிதலை  ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

காசாவுக்குள் மருந்து பொருள்கள் கொண்டு செல்வது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கத்தார் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு ஒரு அறிக்கையில், கத்தார் வெளியுறவு அமைச்சகம், தோஹா மத்தியஸ்தத்தின் மூலம், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே, காஸாவுக்கு மிகவும் தேவையான மருந்து, மற்றும் உதவிக்காக ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடிந்தது என்று அறிவித்தது.

"காசாவில், இஸ்ரேலிய கைதிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்குவதற்கு ஈடாக, பொதுமக்களுக்கு மருந்து வழங்குவதும், உதவுவதும், இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்" என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகமும், இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது, காசாவில் உள்ள கைதிகளுக்கு மருந்து, நாளை முதல் பரிமாற்றம் செய்யப்படுவதாக கூறியுள்ளது.

முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதியில், பல மாதங்களாக நீடித்த போரில், பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸை, இஸ்ரேலால் தோற்கடிக்க முடியவில்லை என்பதை, எதிர்பாராத திருப்பமாக, இஸ்ரேலிய போர் அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் ஆட்சிக்கு மாற்று இல்லை, என்று இஸ்ரேலின் போர் அமைச்சர் கிடியோன் சார் இஸ்ரேல் ஊடகங்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

"ஹமாஸ் தோற்கடிக்கப்படவில்லை, காசா பகுதியில் அதன் ஆட்சிக்கு மாற்று இருக்கும் என்று யாராவது நினைத்தால், அது நடக்காது" என்று கிடியோன் சார் இஸ்ரேலின் இராணுவ வானொலிக்கு மேற்கோளிட்டுள்ளார்.

மூன்று மாதமாக கடுமையான  இராணுவ தாக்குதல் நடவடிக்கை இருந்தபோதிலும், காசாவின் அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஹமாஸ் எதிர்ப்பு தொடர்ந்துகொண்டு இருக்கும் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING NEWS எகிப்து -இஸ்ரேல் மோதல் ஆறு பேர் மரணம் | செங்கடல் அமெரி...


எகிப்து - இஸ்ரேல் மோதல் ஆறு  பேர் மரணம். செங்கடல் அமெரிக்காவின் கல்லறையாக மாறும் - ஹவுதி அறிவிப்பு..
கத்தார் எரிவாயு நிறுத்தம். ஐரோப்பாவில் சோகம். Bob-El-Mandeb வழியாகச் செல்ல US-UK கப்பல்களுக்கு நிரந்தரத்தடை, ஏமன் அதிகாரி அறிவிப்பு.
----

எகிப்து மற்றும் இஸ்ரேல் எல்லையில் நடந்த மோதலில், மூன்று இஸ்ரேல் ராணுவ வீரர்களும், ஒரு எகிப்திய அதிகாரியும் பலி. ஏற்கெனவே, சமீபத்தில் நடந்த சண்டையில்,  நான்கு பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
எல்லை தாண்டி, ராணுவ சாவடி மீது தாக்குதல் நடத்தியதி, எகிப்து அதிகாரி என்று இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கு அருகே, எகிப்திய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட, அரிய துப்பாக்கிச் சண்டையில், மூன்று இஸ்ரேலிய வீரர்கள் சனிக்கிழமை கொல்லப்பட்டனர். 

ஒரு எல்லை இராணுவ சாவடியை பாதுகாத்து வந்த இரண்டு இஸ்ரேலிய துருப்புக்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், அதிகாலையில், நேரடி துப்பாக்கிச் சூட்டில் இறந்து கிடந்தனர்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது..

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு எகிப்திய பாதுகாப்பு அதிகாரியும் மூன்றாவது இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய இராணுவம், எகிப்திய அதிகாரியை ஒரு "தாக்குதல்காரர்" என்றும், அவர் தனது துருப்புக்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தார் என்றும் விவரித்தது.

இஸ்ரேலில், அதிகாரி ஒருவர் உயிரிழந்ததை, எகிப்து ராணுவம் உறுதி செய்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை, போலீசார் துரத்தும் போது, அவர் எல்லை தாண்டியதாக அது கூறியது. பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார், அதில் அவரும் மூன்று இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

எகிப்திய இராணுவத்தின் முழு ஒத்துழைப்புடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

-----------
செங்கடல் அமெரிக்காவின் கல்லறையாக மாறும் என்று அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை தாக்கிய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏமனுக்கு எதிரான உங்கள் நடவடிக்கைகள் தோற்கடிக்கப்படும் என்றும், எங்கள் முழு பலத்துடன் உங்களை சந்திப்போம் என்றும் நாங்கள் அமெரிக்கர்களிடம் கூறுகிறோம் என்று அன்சருல்லா அதிகாரி கூறுகிறார். 

செங்கடல் அமெரிக்கர்களுக்கு ஒரு கல்லறையாக மாறும், அவர்கள் அவமானத்துடன் பிராந்தியத்தை விட்டு வெளியேறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்..

--------

காஸாவில், ஹமாஸிடம் உள்ள பினயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் போர் அமைச்சரவை உறுப்பினர் 'மாபெரும் ஒப்பந்தம்' செய்ய தயாராக வேண்டும் என்கிறார்.

இஸ்ரேலிய, போர் அமைச்சரவை பார்வையாளர், அமைச்சர் காடி ஐசென்கோட், நாட்டின் தலைவர்கள், "தங்களுக்குத் தாங்களே பொய் சொல்வதாக" குற்றம் சாட்டியுள்ளார், காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க ஹமாஸுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று கூறினார்.

காசாவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஐசென்கோட்டின் மகன் மற்றும் மருமகன் இருவரும், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில், "நமக்கு நாமே பொய் சொல்வதை நிறுத்த வேண்டும், உண்மையை தைரியத்துடன் உரைக்க வேண்டும், பணயக்கைதிகளை வீட்டிற்கு கொண்டு வர, ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு வழிவகுக்க வேண்டும்" என்று டைம்ஸ் ஆப் இஸ்ரேல் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.

"உங்கள் நேரம் முடிந்து கொண்டிருக்கிறது, கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் கைதிகளின் உயிருக்கு  உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது" என்று ஓய்வு பெற்ற ஜெனரல் கூறினார்..
-----------
ஏமன், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் காரணமாக,  செங்கடலில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தியது கத்தார். 

ஏமனில்,  அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்திய, பயனற்ற  வான்வழித் தாக்குதல்களால், ஏமன்  பாதிக்கப்படாத நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுடன் நடந்து வரும் சர்ச்சைக்கு மத்தியில், பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தை கத்தார் நிறுத்தியுள்ளது.

2023 ஆம் ஆண்டில், மேற்கு ஐரோப்பா, அதன் இயற்கை எரிவாயு தேவைகளில், சுமார் பதிமூன்று சதவீதம் பூர்த்தி செய்ய, கத்தாரை நம்பியிருந்தது, இது பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய சப்ளையராக கத்தாரை நிறுவியது.  கத்தாரில் இருந்து புறப்படும் 5 எல்.என்.ஜி கப்பல்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.


இங்கே கவனிக்கவும். ஹௌத்திக்கல், இஸ்ரேலுக்குள் செல்லக்கூடிய கப்பல்களை மட்டுமே தடுத்து வந்தனர். ஆனால், கத்தார், ஐரோப்பாவுக்கு செல்லவேண்டிய கப்பல்களை நிறுத்தியதில் ஏதாவது பின்புலமுண்டா என்பதை. தயவு செய்து கமெண்டில் தெரிவியுங்கள்.

-==================-

Monday, 15 January 2024

அதிரடி திருப்பங்கள் : ஜோ பிடென் VS நெதன்யாஹு இஸ்ரேல் இழந்தது 4,50,000 ...


ஜோ பிடென் VS  நெதன்யாஹு 
அதிகமா உரசுனது பத்திக்கிச்சுங்கோ..!

நண்பர்களே..!

காஸா யுத்தம் 100 நாட்களை எட்டிய நிலையில், பொறுமையின் எல்லைக்குச்சென்ற ஜோ பிடென்.

பதட்டமான டிசம்பர் 23 அழைப்பிலிருந்து, 20 நாட்களில் பிடென் நெதன்யாகுவுடன் பேசவில்லை, விரக்தியடைந்த பிடென் "இந்த உரையாடல் முடிந்தது" என்ற வார்த்தைகளுடன் முடித்தார். போரின் முதல் இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவில் போர் தொடர்பான நிகழ்வுகளில், பிடென் நிர்வாகத்தின் சமீபத்திய கோரிக்கைகளை நிராகரித்ததால், பிடென் உள்ளிட்ட பலர்  மிகவும்  விரக்தியடைந்துள்ளனர், இந்த பிரச்சினையை நேரடியாக அறிந்த நான்கு அமெரிக்க அதிகாரிகள் இந்த செய்தியைத் தெரிவித்தனர்.
-----------------------

இது ஏன் இப்போது முக்கியமானது என்றால், 100 நாட்களுக்கு முன்பு அக்டோபர் ஏழு  ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, பிடென் இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவையும், தடையில்லாத  இராணுவ மற்றும் இராஜதந்திர ஆதரவையும் அளித்துள்ளார், ஒரு தேர்தல் நடக்கின்ற ஆண்டில், வெளிப்படையாக, பகிரங்கமாக ஆதரவை அளித்திருந்தாலும், திரைக்குப் பின்னால், பிடென் தனது பொறுமையை இழந்திருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன, என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் இருபத்து மூன்றாம் தேதி, பிடென்,  நெதன்யாஹூவிடம், மேற்குக்கரையிலிருந்து வசூலித்த வரிப்பணத்தை பாலஸ்தீனத்திற்கு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும், அதற்க்கு நெதன்யாஹு மறுத்ததால் கோபமடைந்த பிடென், பேச்சு இத்துடன் முடிந்து விட்டது என்று தொலைபேசியை வைத்து விட்டதாகவும் , அதன் பிறகு எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------- இஸ்ரேல் இழந்தது 4,50,000 கோடி ரூபாய் - இஸ்ரேலிய வங்கி.

ஹமாஸுக்கு எதிரான போருக்கு சுமார் நாற்பத்தொன்பது  பில்லியன் யூரோக்கள் செலவாகும் என்று இஸ்ரேல் வங்கி தெரிவித்திருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில், சுமார், நாலு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள். மலைக்க வைக்கிறதல்லவா? இத்தனையும், நெதன்யாஹூ என்ற தலைக்கனம் பிடித்த ஒற்றை நாரினால் உண்டான செலவுகள் என்று பேசப்படுகிறது.

லண்டனில், சியோனிச எதிர்ப்பு தோரா  யூதர்கள், மற்றும் முஸ்லிம்கள் ஒன்று கூடி, இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளித்தனர். சியோனிஸ்டுகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு அவர்களை அவமதிக்கவும், அச்சுறுத்தவும் தொடங்கினர்.

யூதர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து சண்டையிடுவதை, சியோனிஸ்டுகள் பொறுத்துக்கொள்ள முடியாமல் கதறுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

-------------
சீனாவின் Foreign Minister  வாங் யீ, "சுதந்திரமான, முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீனத்தை" நிறுவுவதற்கும், இஸ்ரேலால் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை, ICJ ஆலோசித்து வரும் நிலையில், காஸாவில் போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்தார்..


100 நாட்கள் போருக்குப் பிறகு, சியோனிச ஆட்சி ஒவ்வொரு முனையிலும் தோல்வியைத் தவிர வேறு எதையும் காணவில்லை - அபு உபைதா..

"அவர்கள் ஒரு பணயக்கைதியையும் மீட்கவில்லை."

"அவர்கள் காசா முழுவதும் பல பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர், இது ஜியோனிஸ்டுகளுக்கு பெரும்  சங்கடமாக உள்ளது."

--------------

கடந்த நூறு  நாட்களில் முப்பதாயிரம்  வீரர்கள் வரை செயலிழந்தவர்களாக கருதப்படலாம் என்று IDF கூறுகிறது.

சகோதர சகோதரிகளே... இதுவே இப்படியென்றால், அவர்களது வீரர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்?!
எதிரி இராணுவத்தில், இது முற்றிலும் எதிர்பார்த்திருவிக்கவே முடியாத இழப்புகள், என்று ஹசன் நஸ்ரல்லாஹ் தெரிவித்திருக்கிறார்,

--------------

இப்போது நெதன்யாகு எகிப்துடனும்  போரை விரும்புகிறார்.

“ஹமாஸுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் இருக்க, காசா மற்றும் எகிப்து எல்லையை மூட வேண்டும்.. அந்த எல்லையை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் எடுக்காமல், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது.

 நாங்கள் ஹமாஸை அழிப்போம், நாங்கள் காசா பகுதியை இராணுவமயமாக்குவோம், ஆனால் இராணுவ உபகரணங்களும், பிற கொடிய ஆயுதங்களும், அந்த தெற்குப் பாதையில், எகிப்தின் எல்லையில் தொடர்ந்து ஊடுருவக்கூடும், எனவே நாங்கள் அதை மூட வேண்டும். என்று நெதன்யாஹு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இஸ்ரேல் எல்லையை கைப்பற்ற முயன்றால், அது எகிப்து மீதான போர் அறிவிப்பாகவே பார்க்கப்படும், என எகிப்து ஏற்கனவே கூறியுள்ளது.

அந்த எல்லையைத் தாண்டி,  ஆயுதங்களும் வருகின்றன என்பதற்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இஸ்ரேல் அதை ஏன் கட்டுப்படுத்த விரும்புகிறது என்பது வெளிப்படையானது, ஏனென்றால் அவர்கள் காசாவிலுள்ள மக்களை எகிப்துக்குள் அனுமதிப்பார்கள், பிருகு மீண்டும் காசா திரும்ப அனுமதிக்க மாட்டார்கள்.

அவர்கள் தங்கள் "மனிதாபிமானம்", என்ற போர்வையில் மக்களை வெளியேற்றுவார்கள்.அத்தோடு அவர்கள் வேலை முடிந்துவிடும். பின் காசாவுக்குல் செல்லவே முடியாது.
-----

ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக், செங்கடலில் தனது சொந்த கடற்படை நடவடிக்கையை நிலைநிறுத்துவது குறித்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர ஆலோசனைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.

காசாவில், பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்கும், யேமன் ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளைப் பற்றி  உரையாற்றிய பேர்பாக், செங்கடலில் தனது சொந்த கடற்படை நடவடிக்கைகள் 
 நிலைநிறுத்தப்படும் என்று கூறினார்.

தீவிர பேச்சுவார்த்தைகளில், எந்தெந்த நாடுகள், எவ்வளவு காலத்தில் தமது பங்கெடுப்பை உறுதிப்படுத்தும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி தனது பங்குக்கு ஹெசென் போர்க்கப்பலை அளிக்க முடிவய செய்துள்ளது.

ஜேர்மன் செய்தித்தாள், டை வெல்ட்,  கூற்றின்படி, February  பத்தொன்பது  அன்று நடக்கவிருக்கும், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தின் போது, ஒருமித்த கருத்தை எட்டுவதை, E U நோக்கமாகக் கொண்டுள்ளது.
==============
ஆட்டைத்திருடுவாங்க.. மாட்டைத்திருடுவாங்க... இந்த நாசமாப்போனவங்க   நாட்டியயே திருடிட்டாங்க. கடைசியில் தர்மம் ஜெயிக்கும், அநியாயம் அழியும்.  கொள்கை வெல்லும்.  உயிருக்கு பயந்து சொந்த நாட்டை விட்டுக்கொடுக்குறவன் கோழை.  அங்கே இஸ்ரேல் 45 லட்சம் கோடி ரூபாய்கள் இழந்திருக்கு இந்தப்போர் மூலமா... பலன் அப்பாவிகளையும், குழந்தைகளையும் கொன்னதுதான்.  இவனுங்களையெல்லாம் விட்டு வைக்கவே கூடாது.  இது சொந்தக் கருத்து.

Saturday, 13 January 2024

ஏமன் நிலைகள் மீது மீண்டும் தாக்குதல் ICJ கூனிக்குறுகிப்போய் கேவலப்பட...


மிரட்டல்களுக்குப் பணியுமா ஏமன் ஹௌதி..?
செங்கடலில் சிக்கிக்கொண்ட அமேரிக்கா, பிரிட்டன்,  இனி, தாக்குதல்கள் தொடர ஏமனுக்குத் தேவையான காரணம் இருக்கிறது.
பழிக்குப்பழி. மத்திய கிழக்கில் ஒரு பெரிய மோதலுக்குள் நுழையும் ஏமன்.
 துருக்கி , ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ், , மற்றும் ஈராக் போராளிகள் கண்டனம். 

=============
ஏமனை சேர்ந்த ஹவுதிக்கள், இப்ப official  ஸ்டேட்மெண்ட் ஒன்னு ரிலீஸ் பண்ணி இருக்காங்க.  அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய  ரெண்டு  எதிரிகளும் சேர்ந்து, எங்க நாட்டுல, எழுபத்தி மூன்று  இடங்களில் தாக்குதல் நடத்தி, அஞ்சு பேர கொன்னு, ஆறு பேரை காயப்படுத்தி இருக்காங்க.  இந்த ரெண்டு எதிரிகளும் காசால இஸ்ரேல் செய்ற கொடுமைகளுக்கு, குற்றங்களுக்கு ஆதரவாக இருக்காங்க. நாஙக  அவங்களுக்கு ஆதரவாக, இஸ்ரேல் குற்றவாளி மேல நடவடிக்கை எடுக்கறோம். அதனால எங்க மேல தாக்குதல் நடத்தி, எங்களோட தலைநகர் சனாவையும், ஹுதாய்தா, தாய்ஸ், ஹஜ்ஜா அப்புறம் சஆதா பகுதிகள்ல  எல்லாம் தாக்குதல் நடத்தி இருக்காங்க. இந்த தாக்குதல் நடந்ததன் காரணமா, அஞ்சு பேர் வீர மரணம் அடஞ்சிருக்காங்க, 6 பேர் காயம் பட்டிருக்காங்க.  இவங்க எல்லாம் எங்களோட ராணுவப் படைகள சேர்ந்தவங்க.
-----

எங்கலோட மக்களுக்கு எதிரா, அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் எதிரிகள் நடத்திய தாக்குதலுக்கு, அவங்களே முழு பொறுப்பு ஆவாங்க.   நாங்க அவங்கள தண்டிக்காம சும்மா விட்டுர  மாட்டோம். எங்கள மிரட்டி தாக்குற சக்திகள் எங்கிருந்தாலும், எவ்வளவு தொலைவுல  இருந்தாலும், எவ்வளவு பலம் இருக்குறவங்களா இருந்தாலும், அவங்களோட இலக்குகளை தாக்க தயங்க மாட்டோம். அந்த இலக்குகள் தரயில இருந்தாலும் சரி, கடல்ல இருந்தாலும் சரி. எங்களோட நாட்டு மக்களோட தற்காப்பு உரிமையும், சுதந்திரமும்தான்  எங்களுக்கு முக்கியம்.
----
இந்த கொடூரமான தாக்குதல்கள் எங்கள நிலைகுலைய வச்சிடாது.  பாலஸ்தீனியர்களுக்கு உதவி செய்ற எங்களோட நிலையிலிருந்து பின் வாங்க மாட்டோம். அது மட்டும் இல்லாம இஸ்ரேலுக்கு போற கப்பல்கள்,  செங்கடல் வழியாகவும், அரபிக்கடல் வழியாகவும் போறத நாங்க கண்டிப்பா அனுமதிக்க மாட்டோம்.

எங்களுக்கு இறைவன் ஒருவனே போதுமானவன். அவனே எங்கள் பிரச்சினைகளை தீர்க்கிறவன். எங்கள பாதுகாக்குறவன், எங்கள் எமன் மக்கள் நீண்ட நாட்கள் வாழ உதவி செய்பவன். எங்க நாட்டு  சுதந்திரத்துக்காகவும், எங்க மக்கள் சுதந்திரத்திற்காகவும், நாங்கள் கண்டிப்பாக போராடுவோம். அப்படீன்னு  அண்ட் statementல சொல்லி இருக்காங்க.


============

ஏமன் மீதான தாக்குதலுக்கு வேதனையான பதிலடி இருக்கும் அப்டீன்னு அன்சாருல்லா அரசியல் பிரிவின் உறுப்பினர்,  அல்-புகைதி தெரிவித்துள்ளார்., செங்கடலில்  நுழையும் நாடுகளுக்கான, கப்பல்களுக்கான  புதிய விதிகளை, ஏமன் உருவாக்க முடிந்தது, இது உறுதியானது மற்றும் நிரந்தரமானது என்று அறிவித்துள்ளார். இதற்கு காரணம், சமீபத்திய ஏமன் மீதான தாக்குதல்கள்.

தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவுக்கு எதிராக, ஹவுதி பழிவாங்குவதாக உறுதியளிச்சிருக்குறதுனால , ஏமனில் மில்லியன் கணக்கான மக்கள் தெருக்கள்ள  குவிஞ்சு  அமேரிக்கா, பிரிட்டனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாங்க.  யேமன் மீது இங்கிலாந்தும் அமெரிக்காவும் சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதல்கள், சுமார் நூறு  ஏவுகணைகள் கொண்ட எழுபத்தி ஆறு  தாக்குதல்களை செஞ்சிருந்தாங்க, இது ஒரு வரையறுக்கப்பட்ட, மற்றும் அரங்கேற்றப்பட்ட, பலத்தைக் காட்டுவதா இருந்தது. போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க, ஹவுத்திகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஸ்கை நியூஸ் அரேபியா தெரிவிச்சிருக்கு. கண்காணிப்பு நிலைகள், மற்றும் காலியான ராணுவ தளத்தை குறிவைத்து, இந்த தாக்குதல்கள் நடத்திருக்காங்க, தாக்குதல் நடந்தப்போ, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களோ, உபகாரணங்களோ அங்க இல்லன்னு சொல்றாங்க.
--------------

இஸ்ரேலுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள, கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் கட்டுப்பாடு ஒரு பெரிய பிராந்திய போரைத் தவிர்ப்பதாக பார்க்கராங்க. எண்ணெய் கிடங்குகள் மேல  தாக்குதல் நடத்தப் போவதாக, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் இருக்கறதுனால, ஐரோப்பால பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுருக்கு. பைடன் நிர்வாகத்தோட நடவடிக்கைகளாலே,  சூயஸ் கால்வாய் மூடப்பட்டு, பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளது. 

வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியா, சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்கு வெச்ச ஹௌதிக்கள், மத்திய கிழக்கில, ஒரு பெரிய மோதலுக்குள்ளாற நுழையுற சாத்தியம் இருக்குன்னு சொல்றாங்க. இஸ்ரேல் மீதான மோதல்ல,  தற்போதைய கவனம் காசாவில பொதுமக்களை பாதிக்குற  அதே நேரத்தில, கடுமையான இராணுவ மற்றும் பொருளாதார சேதத்தயும் ஏற்படுத்துது.
------------



அமெரிக்காவும் இங்கிலாந்தும் செங்கடலை 'இரத்த கடல்' ஆக மாற்ற முயற்சிக்கின்றன,  அப்டீன்னு துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் கண்டனம் தெரிவிச்சிருக்காரு.

Hagueவில இருக்குற சர்வதேச நீதிமன்றத்தில நீதி கெடக்யூம்னு  நாங்க நம்புகிறோம், அது இஸ்ரேல கண்டிக்கும் அப்டீன்னும் நாங்க நம்புறோம்.

துருக்கி இஸ்ரேலைக் கண்டிக்குற ஆவணங்கள ஒப்படச்சு, ஒடுக்கப்பட்டவங்க  ஒருபோதும் தோற்கல, மாறா ஒடுக்குமுறையாளர்கள்தான் நஷ்டமடையறாங்க " அப்டீன்னும் துருக்கி தெரிவிச்சிருக்காங்க.

-----------------மிஸ்க்-----------

மேற்குக்கரையில் உள்ள 'அடோரா' குடியிருப்புக்குள் ஊடுருவிய போராளிகள்.இந்த குடியிருப்புக்குள் ஊடுருவிய மூன்று போராளிகள், இஸ்ரேல் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக கூறப்படுவதை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துள்ளார். சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவின் வழக்கின் அடிப்படையை அவரது நாடு நிராகரிக்கிறது, தென்னாப்பிரிக்காவின் தரப்பில் இது உண்மை அடிப்படையிலானது மற்றும் கட்டாயமானது என்று விவரிக்கப்பட்டது.

ஜேர்மனிய அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்தில் மூன்றாம் தரப்பினராக இணையப்போவதாக அறிவித்து, இஸ்ரேலை ஆதரிப்பதோடு, "குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை" என்று வாதிடுகிறது.

ஜேர்மனியின் அறிக்கை, காசாவில், இஸ்ரேல் நிகழ்த்தும்  இனப்படுகொலையை ஆதரிக்கும் அதன் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதாக உள்ளது.  

பாலஸ்தீனிய மேற்குக் கரை மக்கள், சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஆதாரங்களை வழங்குவதற்கு பழிவாங்கும்  விதமாக, இஸ்ரேல், மேற்குக் கரைக்கான சில அத்தியாவசிய பொருட்கள் 
 வழங்கலை நிறுத்தி வைக்கலாம் என்று பாலஸ்தீன அறிக்கைகள் கூறுகின்றன என்று உள்ளூர் செய்தியாளர் முஹம்மத் நஜிப் தெரிவிக்கிறார்.

-------------

அமேரிக்கா ஏமன் நிலைகள் மீது மீண்டும் தாக்குதல். 

ஏமன்ல, ஹவுத்திகளின் திறனை குரைக்கிரதுக்காக,  அமெரிக்கா மறுபடியும் தாக்குதல்  நடத்தியிருக்குன்னு அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவிச்சிருக்காங்க.

ஏமன்ல, கிட்டத்தட்ட முப்பது  இடங்கள்ல, தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் கூடுதல் தாக்குதலை நடத்தி இருக்கு. இந்த தாக்குதல்கள் செங்கடலில் கப்பல்களை குறிவைக்கும் ஹவுத்திகளின் திறனைக் குறைப்பத நோக்கமாகக் கொண்டுள்ளன அப்டீன்னு, பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ஒரு செய்தி நிறுவனத்திடம் தெரிவிச்சிருக்காங்க. அதனால இது தொடர்பான தொடர்பான கூடுதல் விவரங்கள வெளியிடவில.

-----------------

நேற்று இஸ்ரேலுக்கு மிகவும் கடினமான நாள். உண்மையில், போர் தொடங்கியதிலிருந்து, இராஜதந்திர மட்டத்தில், மிகவும் கடினமான நாட்களில் இதுவும் ஒன்றாகும், அதை மறுப்பதில் அர்த்தமில்லை, 

இந்த சூழ்நிலையில், இஸ்ரேல் ஏற்கனவே தோற்றுவிட்டது.  "இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததா?" என்ற விவாதம், சர்வதேச கவனம், மற்றும் ஊடக விவாதம் தொடங்கியதும்,  இஸ்ரேல் வரலாறு காணாத அளவுக்கு, கூனிக்குறுகிப்போய் கேவலப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க ஆவணம் சுத்தமாகவும், உண்மைகள் மற்றும் மேற்கோள்கள் நிறைந்ததாகவும் இருந்தது.

இந்த விவாதங்கள்தான் ஆறுதலாக உள்ளன.  ஆனால், முடிவுகள், இஸ்ரேல் விரும்பிய படிதான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இல்லையென்றால், அது வீட்டோ செய்யப்படும். அது மட்டுமல்ல, உலக மீடியாக்கள் அனைத்தும் செய்திகளை இருட்டடிப்பு செய்து, இஸ்ரேல் செய்ததுதான் மிகமிகச்சரியானது, இந்த சர்வதேச நீதிமன்றம் ஒரு சாராரிடம் விலை போய்விட்டது என்று இட்டுக்கட்டி விடுவார்கள் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

அடுத்து நாம் மீண்டும் விரைவில் சந்திக்கலாம், நன்றி.

Wednesday, 10 January 2024

Breaking: இஸ்ரேலுடன் இயல்புநிலைக்கு ஆக்கபூர்வமான ஆர்வத்தை வெளிப்படுத்திய...


இஸ்ரேலுடன் இயல்புநிலைக்கு", ஆக்கபூர்வமான ஆர்வத்தை வெளிப்படுத்திய, சவுதி இளவரசர் பின் சல்மான்?
பதுங்குகிறாரா? பாய்வதற்கு முன் தயாராகிறாரா? 
Blinken பயனம் வெற்றி. அதற்குப் பரிசாக, Eurofitghter Jets விற்க, ஜெர்மனி தடை நீக்கம்.

--------
பின் சல்மான் பதுங்குகிறாரா? பாய்வதற்கு முன் தயாராகிறாரா? இஸ்லாமியக்கட்டமைப்பில் இருந்துகொன்டே அதைக்காட்டிக் கொடுப்பாரா? நல்லவரா? நம்பிக்கையாளரா? அல்லது அபாயமானவரா?

திங்களன்று, அமெரிக்க வெளியுறவு ஆன்டனி பிளிங்கன், முகமது பின் சல்மானை சந்தித்தபோது,   "இஸ்ரேலுடன் இயல்புநிலைக்கு" ஆக்கபூர்வமான ஆர்வத்தை வெளிப்படுத்தினார் என்று பளிங்கின் தெரிவித்துள்ளார். 

----------------
ஜேர்மனியின் Chancellor,  Olaf Scholz, சவூதி அரேபியாவிற்கு EuroFighter  போர் விமானங்களை வழங்குவதை மேலும் தடுக்க விரும்பவில்லை - அவரது கட்சி மற்றும் அரசாங்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிலர், தற்போதைய மத்திய கிழக்கு மோதலில், இஸ்ரேலுக்கு எதிராக சவுதி அரேபியா "மிகவும் ஆக்கபூர்வமான நிலைப்பாட்டை" எடுத்து வருகிறது, என்ற கூட்டாட்சி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்போக்கின் மதிப்பீட்டை, சான்சிலர் பகிர்ந்து கொள்கிறார் என்று, அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ஹெப்ஸ்ட்ரீட், திங்களன்று, அதாவது ஜனவரி எட்டு இரண்டாயிரத்துப்பதினான்கு அன்று  பெர்லினில் தெரிவித்தார்.  

ஆயினும், ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலை நோக்கி வீசிய ராக்கெட்டுகளை இடைமறிக்க, சவுதி விமானப்படை ஏற்கெனவே விற்கப்பட்ட யூரோஃபைட்டர்களைப் பயன்படுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

-------------------
ஞாயிறன்று, தனது இஸ்ரேல் பயணத்தின் போது, ரியாத்திற்கு Eurofighter  ஜெட் விமானங்களை உருவாக்கி வழங்குவதற்கான, பிரிட்டிஷ் விருப்பத்தை, கூட்டாட்சி அரசாங்கம் இனியும் "எதிர்க்காது", என்று பேர்பாக் ஏற்கனவே கூறியிருந்தார். பெர்லினின் நிலைப்பாடு முக்கியமானது, ஏனெனில் விமானத்தின் பாகங்கள் ஜேர்மனியில் தயாரிக்கப்படுவதால், பிரிட்டனால் அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே Eurofighter  சவூதிக்கு வழங்க முடியும்.

கடந்த யேமன் போரில், சவூதி செய்த அட்டூழியங்கள்,, மற்றும் சவூதி அரேபிய மனித உரிமை மீறல்களில், சவூதி அரேபியாவின் பங்கு, போன்றவை குறித்து, ஜெர்மனியின் ஆளும் கட்சிகளில் அங்கம் வகிக்கும் சிலரின்  கவலைகளை விட, ஷோல்ஸ் மற்றும் பேர்போக்கைப் பொறுத்தவரை, சவூதி அரேபியாவின் "ஆக்கபூர்வமான அணுகுமுறை", பற்றிய வாதம், வெளிப்படையாகவே அதிகமாக உள்ளது.

------------------
ஜெர்மன், பிரன்ஸ் மற்றும் பிரிட்டன் கூற்றுப்படி, சவுதியின் இந்த உண்மையான அரசியல் அணுகுமுறையில், சவுதி ஆட்சியாளர்கள்  தனியாக இல்லை. திங்களன்று, ரியாத் வருகைக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும், சவுதி அரேபியாவின் பங்கு குறித்து சாதகமான வார்த்தைகளைக் கூறினார். சவூதி அரேபியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை இயல்பாக்குவது குறித்து பேசப்பட்டதாக, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடனான உரையாடலில் இருந்து, அவர் தெரிவித்தார். ஏஜென்சி அறிக்கைகளின்படி, சவூதிகள் " இஸ்ரேலுடனான இயல்பான நட்பைத் தொடர்வதில் தெளிவான ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்" என்று பிளிங்கன் கூறினார்.

----------------
இதன் பொருள் என்னவென்றால், அக்டோபர் ஏழாம் தேதி ஹமாஸ் நடத்திய  தாக்குதல், மற்றும் அதைத் தொடர்ந்து, காசா போருக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் சவூதிக்கும் இடையில் அதிகரித்து வரும் தூரத்தைக் கண்ட, சில மத்திய கிழக்கு நிபுணர்களை விட, பிளிங்கன், ஷோல்ஸ் மற்றும் பேர்பாக் ஆகியோர் வேறுபட்ட, மிகவும் நேர்மறையான மதிப்பீடுகளுக்கு வருகிறார்கள். 

ஹமாஸின் தாக்குதலானது, சவூதி  மற்றும் இஸ்ரேல் ஒற்றுமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே நடத்தப்பட்டதாகவே நம்புகிறார்கள். ஹமாஸ் தாக்குதல் நடக்காமல் இருந்திருந்தால், இந்நேரம், சவூதி-இஸ்ரேல் ஒற்றுமை அங்கீகாரம் கையெழுத்தாகி இருக்கும்.

டிசம்பர் தொடக்கத்தில், அரபு மற்றும் சர்வதேச மத்திய கிழக்கு நிபுணர்களின் கூட்டமான, தோஹா மன்றத்தில் பல பங்கேற்பாளர்கள்,  இஸ்ரேல்-சவூதி இயல்பாக்க செயல்முறை நடைமுறைக்கு  வெளியே இருப்பதாகக் கூறினர். உண்மையில், காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போரைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியா சமரச செயல்முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இருப்பினும், அது இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரவில்லை. உண்மையில், நல்லிணக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

----------------
இருப்பினும், இந்த இயல்பாக்க செயல்முறை, ஏற்கனவே நன்கு முன்னேறிய நிலையில் உள்ளது.. இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபிய, உயர்மட்ட அரசியல்வாதிகளின் அறிக்கைகளால் ஊக்குவிக்கப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரலாற்று ஒப்பந்தம் விரைவில் முடிவடையும் என்று, மீண்டும் மீண்டும் ஊகங்கள் எழுந்தன, அவை இன்னும் ஒருவருக்கொருவர் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை - ஆனால் முறைசாரா தொடர்புகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மிக சமீபத்தில், சவுதி அரேபியா தனது வான்வெளியை  இஸ்ரேலிய விமானங்களுக்கு திறந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 ஆனா, நவம்பர் மாதத்தில், பிரிக்ஸ் நாடுகளின் டிஜிட்டல் உச்சிமாநாட்டில், எம்.பி.எஸ் இஸ்ரேலுக்கு இனி ஆயுதங்களை வழங்கக்கூடாது என்று அழைப்பு விடுத்தார். காஸா போரின் செல்வாக்கின் கீழ், சவூதி அரேபியா தனது பரம எதிரியான ஈரானுடன் கூட, நெருக்கமாக நகரும் என்று சில பார்வையாளர்கள் கருதினர். மேலும், காசாவித்தாக்கி அழிக்கக்கூடிய இஸ்ரேலின் செயல் சட்டத்திற்கு உட்பட்டதா என்றும், அதற்க்கு அமெரிக்க அளிக்கும் நிபந்தனையற்ற ஆதரவு சரியானதா என்றும் தெளிவான கேள்விகளை எழுப்பியுள்ளதாக foreign policy  என்ற பகுப்பாய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

-----------
உண்மையில், சவூதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் பர்ஹான் அல்-சவுத், அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றால் தொடங்கப்பட்ட, ஒரு இராஜதந்திர குழுவின் தலைமையை ஏற்றுக்கொண்டார், இது இஸ்ரேலின் விருப்பங்களுக்கு எதிராக - உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது. இந்த பிரச்சினையில், பின் ஃபர்ஹானின் முதல் கூட்டங்கள்,வெளியுறவுக் கொள்கையின் படி, பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது - வாஷிங்டனில் அல்ல: 

"தொடர்ந்து வளர்ந்து வரும் இந்த பன்முனை உலகில், சவுதி அரேபியாவுக்கு வேறு விருப்பங்கள் உள்ளன என்பதை, வாஷிங்டனுக்கு ஒரு தெளிவான சமிக்ஞை" என்று நிபுணர் இதழ் தெரிவித்துள்ளது. மேலும்: "சவூதி தலைமை உயரடுக்குகள் இஸ்ரேலிய உரையாடலுக்குள் இழுக்கப்படுவதைத் தவிர்க்க விரும்புகின்றன."

------
சவுதி BRICS உடன் இணைந்து Mutipolar உலகை உருவாக்கத்துணை நிற்குமா? அல்லது மீண்டும் குட்டிக்கரணம் அடித்து அமெரிக்காவைத்தூக்கி நிறுத்தம் Unipolar உலகில் சேருமா என்று பாப்போம்.

பின் குறிப்பு, சவூதி, ஜனவரி ஒன்று முதல் பிரிக்ஸில் உறுப்பிலினராகி விட்டதால், இஸ்லாமிய நாடுகளுடனும், மற்றும் மேலாதிக்கங்களால் நசுக்கப்படும் நாடுகளை முன்னேற்றும் அணியில் இனி நிற்கும் என்று நம்புவோம். நன்றி. 

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...