Sunday, 24 March 2024

இஸ்லாமிய அமைப்புகளாக, இஸ்லாமிய பேச்சாளர்களாக, முஸ்லிம்களுக்குள் ஊடுருவிய...


நாசிசம் என்பது சியோனிஸத்தின் முந்தைய பெயரா?

இஸ்லாமிய அமைப்புகளாக, இஸ்லாமிய பேச்சாளர்களாக, முஸ்லிம்களுக்குள்  ஊடுருவியிருக்கும் சியோனிஸ்டுகள். மொசாட்டின் பல அடுக்கு சதி வேலைகள்.   எண்ணிப்பார்க்க முடியாத உச்சத்தில் இவர்களின் ஆதிக்கம். மூன்றாவது கலீஃபா உஸ்மான் ரசியல்லாஹு அன்ஹு காலத்தில் துவக்கப்பட்ட இவர்களது சதிவேலைகள், இன்றுவரை,  கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு வருடங்களாகத் தொடர்ந்து, இன்று இவர்கள் அனைவரின் முகத்திரைகளும் கிழியப்பெற்று, சாயம் வெளுத்துப்போக, இவர்களின் மூர்க்கத்தனமான தாக்குதல்களின் மூலம், உலகெங்கிலும்  பயத்தை உருவாக்கி, முஸ்லிம்களை அடக்கி வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். 

இவர்களால் பல தலைமுறைகளாக  உருவாக்கப்பட்ட போலி இமாம்கள் எவ்வளவு என்றே தெரியாத எண்ணிக்கையிலும், எங்கெங்கே இருக்கிறார்கள் என்று தெரியாத இடங்களிலும் தங்கள் பணியை செம்மையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். மத்திய கிழக்கிலும், சில மக்கள் தொகை அதிகமுள்ள ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவிலும் இவர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று தெரிகிறது. இவர்கள் போலி இமாம்கள் என்று அந்த இமாம்களுக்கே  தெரியாத அளவுக்கு இவர்கள் அளிக்கும் பயிற்சியும் பொருளாதார உதவிகளும் இருக்கிறது. 

முஸ்லிமல்லாதவர்களை இழிவுபடுத்தி பேசக்கூடிய, கேவலப்படுத்திப் பேசக்கூடிய  எந்த உரிமையும், எவருக்கும் கொடுக்கப்படவில்லை என்று இறைவன் கூறுவதாக ஃகுர்ஆன் கூறுகிறது, ஆனால் இன்று, சிலபல இமாம்களின் பேச்சுக்கள்,  பயான்களின் மூலம் பிரபலமாக, கூட்டத்தை கவர்ந்து இழுப்பதற்காக, மாற்று மதத்தவர்களை மட்டம்தட்டி அவ்வப்போது தேவையில்லாத இடைச்செருகல்கள் செய்வதை நாம் காண்கிறோம். சமூக ஊடகங்களில் லைக்ஸ் பெறுவதற்காக, இதுபோன்ற பல பயான்கள் நிரம்பி வழிகின்றன. 

இதுபோன்ற பேச்சுக்களை கேட்கும் முஸ்லிமல்லாதவர்கள், இஸ்லாத்தின்மீது, அதன் கோட்பாடுகளின்மீதும்  உண்டாகும் ஈடுபாடுகளுக்கு முட்டுக்கட்டையாக, இந்த மட்டம்தட்டும் இடைச்செருகல்கள், இஸ்லாத்தின் பெருந்தன்மையை சிதைத்து, அதன்மீது ஏன் என்றே தெரியாத ஒரு பின்வாங்கும் எண்ணத்தை வளர்க்கிறது, மனோரீதியாக. இஸ்லாம் காட்டும் வழிகாட்டுதல்களை முஸ்லிம்களே பேணாத நிலையில், இஸ்லாத்தைப்பற்றி அறிந்து கொள்ள நினைப்பவர்கள், இதுபோன்ற கேவலப்படுத்தக்கூடிய பேச்சைக் கேட்கும்போது, தங்களது ஆவலை மறந்து, முஸ்லிம்கள் மட்டும் என்ன, இதைச்செய்வதில்லையா, அதைச்செய்வதில்லையா, இவர்களிடம் என்ன பெரிய சிறப்பு இருக்கிறது என்று கடுப்புடன் விலகிச்செல்லும் நிலையே ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல்,  ஒரு இனம் புரியாத வெறுப்பும், இவர்கள் மனதில் பதியக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதுதான் இந்த சியோனிஸ்டுகளின் மாபெரும் வெற்றியாக தற்சமயம் வளர்ந்து நிற்கிறது. 

ஈரானில்கூட இது போன்ற விரோதத்தை வளர்க்கக்கூடிய பல பேச்சுக்கள் வெளிப்படுகின்றன என்று கூறப்படுகிறது. ஆயினும் அந்தப்பேச்சுக்கள், வெளிப்படையான, வரலாற்றை சுட்டிக்காட்டி, அநியாயக்காரர்களுக்கு  எதிரான, அவர்களின் அநியாயங்களை வெளிச்சம்போட்டுக்காட்டுகிற  தெளிவான பேச்சுக்கக்களாக இருப்பதால், ரஸ்ஸியா, சீனா, பல லத்தீன் அமெரிக்க நாடுகள், பல ஆப்பிரிக்க நாடுகள் இன்று ஈரானின் பின்னால் நிற்கின்றன. ஈரான் மீது அநியாயத்தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதன் எதிரொளி, எங்கெங்கே ஏற்படும், உலகின் எந்தெந்த மூலைகளில் ஏற்படும் என்பதை அறிந்தே, அமெரிக்க மற்றும் சியோனிஸ்டு பயங்கரவாதிகள் பின்வாங்கி நிற்கின்றனர். 

சமீபத்திய ரஸ்சியா மீதான பயங்கரவாதத்தாக்குதலில் ஐஎஸ் ஐஎஸ் பொறுப்பேற்றிருப்பதும், சில வாரங்களுக்கு முன் ஈரானில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலும், ஐஎஸ் ஐஎஸ் என்பது ஒரு சியோனிச மொஸாட் அமைப்பின் ஒரு அங்கம் என்று வெளிச்சம்போட்டுக்காட்டுகிறது. தன்சொந்த மக்களை ஏமாற்றி, தன சொந்த மக்களுக்கு இஸ்லாத்தின் மீது ஈடுபாடு உண்டாக விடாமல் தடுக்க, இஸ்லாம் ஒரு மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாத மதம் என்றும், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றும்  காட்டுவதற்காக, பல போலியான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை இவர்களே உருவாக்கிக்கொண்டு , தங்கள் மீதே இவர்கள் தாக்குதல்கள் நடத்திக்கொண்டு, இஸ்லாத்தின் பெயரைக்கெடுப்பதில் வெற்றி கண்டு வந்தனர். ஆனால் இன்று, இவர்கள் வண்டவாளங்கள் எல்லாம், சிறுது சிறிதாக தண்டவாளம் ஏறுகின்ற நிலையில், இவர்களது தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் வெளிச்சத்து வரும் நிலையில், இதே இஸ்லாமியர்களின் பெயரிலான மொஸாட் பயங்கரவாத அமைப்புகளை தூசு தட்டி, ரஸ்சியா, ஈரான் போன்ற, அமெரிக்க, மேற்கத்திய, சியோனிச எதிரிகளின் மீது நேரடி தாக்குதல்கள் நடத்தும் அளவுக்கு நிலை குலைந்து போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. 

இதற்கிடையில், ஜெர்மானிய சர்வாதிகாரி ருடால்ஃப் ஹிட்லர் ஒரு சியோனிஸ்டுகளின் உருவாக்கம் என்றும், நாசிசம் என்பது சியோனிஸத்தின் முந்தைய பெயர் என்றும், நாசிசத்தையும், ஹிட்லரையும் மனித விரோதியாக சித்தரித்து வெற்றி கண்டபின், உலகம் முழுவதும் யூதர்களின்மீது ஒரு பரிதாபத்தை உருவாக்கி, ஆட்டுத்தோல் போர்த்திய குள்ளநரிகூட்டமாக  வேடம் போட வெற்றிகண்டதாகவும், அதனால்தான், ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்படுகிற படுகொலைகளின் மேல் சந்தேகக்கேள்விகள் எழுப்பினால் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதும், மேற்கத்திய சட்ட புத்தகங்களில் எழுதப்பட்டு, சொந்த மக்களையே மிரட்டி வைத்து தடுத்துள்ளார்கள் என்றும்  கூறப்படுகிறது. ஹிட்லர் நிகழ்த்தியதாகக்கூறப்பட்ட படுகொலைகளின் மீது நியாயமான சர்வதேச அமைப்புகளின் மூலம் விசாரணை நடத்தப்பட்டாலே, இவர்களின் அனைத்து முகத்திரைகளும் கிழிக்கப்பட்டு விடும் என்பதும், மேற்கத்திய மக்களே தங்களது போலி அரசியல்வாதிகளை போட்டுத்தாக்கி துவம்சம் செய்து, பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்களாக மாறிவிடுவார்கள் என்பது உண்மையிலும் உண்மை என்று கூறப்படுகிறது. எனவேதான், எண்ணிப்பார்க்க முடியாத பல கோணங்களிலும், இஸ்லாத்தின் மீது வெறுப்புக்களைப் பரப்பி, முடிந்த வரையில் காலத்தை ஓட்டுகிறார்கள். இஸ்லாமியர்களின் பெயர்களில் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும், வெறுப்புப் பேச்சுக்களை பயான்களின் மூலம் பரப்பி வரும் மார்க்கப் பேச்சாளர்களும், மீடியாக்களின் மூலமாகவும், பொய்யான வதந்திகள் மூலமாகவும், அமெரிக்க பொருளாதாரத்தை உலகம் முழுவதும் திணித்து, உலக வங்கியில் கடன்காரர்களாக ஆக்கி, ப்ளாக் மெயில் செய்வதன் மூலமும், பேரழிவு ஆயுதங்களைக்காட்டியம், பலமில்லாத அப்பாவி நாடுகள் மீது போர் தொடுத்தி பேரழிவு ஏற்படுத்துவதன் மூலம் மிரட்டியும், இன்னும் பல கல்வி, மருத்துவம், தாவா, என்று எண்ணிப்பார்க்க முடியாத பல வழிகளில் இவர்களின்  கை  ஓங்கியே இருக்கிறது.  அது இப்போது சிறிது சிறிதாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

தற்காலத்தில் இவர்களால் எந்த ஒரு துறையிலும் நுழையமுடியாமல் தடுக்கப்பட்ட, தூய்மையான ஒரு பகுதி, பலஸ்தீனத்திலுள்ள காசாப்பகுதி மட்டும்தான். இந்த காஸாப்பகுதியில் என்ன நடக்கிறது என்று இந்த சியோனிச, அமெரிக்க, மேற்கத்திய பயங்கரவாதிகள் யாருக்குமே தெரியவில்லை.  இன்னும் ஒரு பத்து வருடங்கள் காசா மக்களுக்கு அவகாசம் கிடைத்திருந்தால், இஸ்ரேல் சியோனிஸ்டுகள் அனைவரைரும் அடித்து தொங்கவிட்டிருப்பார்கள். ஆனால், ஏதோ ஒரு பெரிய  விபரீதம் நடக்கப்போவதை மோப்பத் பிடித்த எதிரிகள், சவுதி அரேபியாவை கைக்குள் போட்டுகொண்டு, சமாதான உடன்படிக்கை கையெழுத்தாவதை தடுக்க, அதற்க்கு முதல்நாள், அக்டோபர் ஏழில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்பகுதிக்குள் நுழைந்து  திடீர் தாக்குதல் நடத்தக்கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பட்ட பயன்படுத்திக்கொண்ட சியோனிஸ்டுகள் காஸாவில் பேரழிவை ஏற்படுத்துகின்றனர். ஆனால் ஈமான் என்னும் அவர்கள் நம்பிக்கையோ பல மடங்கு வலியுடையதாக மாறியிருப்பதுடன், இந்த உலகை பாழாக்கும் மாபெரும் சமூக விரோதிகள் யார் என்று வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வெளிச்சம், உண்மையான வெளிச்சமாக மேற்கத்திய சாமானிய மக்களுக்கு சென்றடையாமலிருக்க, காசாப்பகுதி என்றுமே சியோனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியது அவசியம் என்று நினைக்கின்றனர். இல்லையென்றால், உண்மையை நோக்கி வரலாறு மாறி விடக்கூடிய வைப்புகம் பிரகாசமாக இருக்கிறது.

பல இஸ்லாமிய நிறுவனங்களின் செயல்பாடுகளுக்குள், மேலும், பல இஸ்லாமிய அமைப்புகளின் நிறுவனங்களாகவும், சியோனிஸ்டுகள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறு ஆதாரமாக, ரசியாவின்மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இன்று அமெரிக்காவின் associated press  வெளியிட்ட ஒறு செய்திக் காணொளியில், உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில், உக்ரைன் படைப்பிரிவின் தளபதி ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உபயோகிக்கும், கையில் அடையாளத்திற்காக அணியக்கூடிய பட்டையை அணிந்திருந்த காட்சிகளை அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ளது. மேற்கத்தியர்கள் ஆதரவளிக்கும், உக்ரைனின் படைத்தளபதி, ஐஎஸ் ஐஎஸ் அடையாளத்தை அணிந்திருப்பதன் நோக்கம் என்ன? ஐஎஸ் ஐஎஸ் என்பது மேற்கத்தியர்களின் ஒரு படைப்பிரிவாக, உக்ரைனுக்கு உதவிகள் புரிகின்றன என்கிற உண்மையைத்தானே உணர்த்துகிறது? இந்தக் காணொளியைப் பார்க்கக்கூடிய அனைவரும், நமது சேனல்லை subscribe செய்துகொள்ளுங்கள். எமது செய்திகளைப்பற்றிய, பயமற்ற உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள். மீண்டும் அடுத்த செய்தியில் இணைவோம், நன்றி.   





Thursday, 21 March 2024

நொருங்கக் காத்திருக்கும் இஸ்ரேலிய பிம்பம் | மெல்லச் சிதைக்கப்படும் அமெரி...


சமூக ஊடகங்களில் உலாவரும் பல்லாயிரக்கணக்கான போலிக்கணக்குகள். உண்மையானது போன்றே தோற்றமளித்து, உலக மக்களை ஏமாற்ற, இஸ்ரேலிய நயவஞ்சகர்கள்  செய்யும் பித்தலாட்ட வேலைகள்.  அதற்கு துணைபோகின்ற சமூக ஊடகங்கள். 

நொருங்கக் காத்திருக்கும்  இஸ்ரேலிய பிம்பம்.

பயம், அவமானம், அசிங்கம், எதிர்ப்பு என,  இஸ்ரேலுக்கு திரும்ப மறுக்கும் இஸ்ரேலியர்கள்.

உலக உற்பத்தியில் சூப்பர் பவராக மாறிய சைனா. 

மெல்ல மெல்லச்  சிதைக்கப்படும் அமெரிக்க பொருளாதாரம்.

----

சமூக ஊடகங்களில் பல்லாயிரம் போலிக்கணக்குகளை உருவாக்கி, ஒவ்வொன்றுக்கும் புதுப்புது நபர்களின் புகைப்படங்களுடன், பார்ப்பதற்கு நிஜமானது போன்றும், படித்த அறிவாளிகளைப்போன்றும், மாணவர்களைப் போன்றும், சமூகத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் போன்றும், ராணுவ அதிகாரிகளைப்போன்றும், போலியான பிம்பத்தில் போலியான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதை அதிகமாகப் படிக்கும், இஸ்லாமியர்களும், நடுநிலைவாதைகளும், நேர்மையானவர்களும் குழப்பத்தில் ஆழ்த்தும் அளவுக்கு, சாத்தான்களின் வேலைகள் சிறப்பாக உள்ளன ஏற்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.  இந்த அயோக்கியர்கள் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அந்த உயரத்தில் இருந்து பார்க்கும்போது, நாம் நிற்கும் தரைகூட பாதாளமாகத்தெரியும். அவ்வாறு போலியான உயரத்திற்கு சென்றவர்கள் சறுக்கும் வேளையில், அவர்களின் அழிவு கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிவிடும். ஆட்டாக்காரர்களுக்கெல்லாம் ஆட்டம் காட்டுபவன் ஒருவன் இருக்கிறான். சதி செய்பவர்களுக்கெல்லாம் சதி செய்பவன் ஒருவன் இருக்கிறான்.  அவனை மிகைத்தவன் எவனும் இல்லை.  அவனுக்கு அவனே நிகரானவன். அவன் மிகத்தூய்மையானவன். 

மேலும், குறிப்பாக, காசாவுக்கு ஆதரவாக, குரல் கொடுத்து போராடும் மக்களை, கயவர்கள் என்றும், தீவிரவாத ஆதரவாளர்கள் என்றும், anti-semitist என்றும் பலகோணங்களில் மட்டம்தட்டி, மிரட்டி, கேவலப்படுத்தி, அவர்களின் தொடர் போராட்ட எண்ணங்களை குலைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. நமக்கெதுக்கு தேவையில்லாத வேலை என்று பின்வாங்கும் அளவுக்கு, மிகையான செயல்பாடுகள் உள்ளன.  TIKTOK செயலியை பல வளர்ந்த நாடுகள் தடை செய்வதற்குக் காரணம், அந்த செயலியின் சொந்தக்காரர், பொய் புரட்டுகளுக்கு சாதகமாக பிளேட்டை திருப்பிப்போடும் மேற்கத்தியர் அல்ல என்பதுதான் உண்மை என்பதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.

சியோனிஸ்டுகளின் மிகைத்த தோற்றம், பெரிதாக ஊதப்பட்ட பலூன்களைப்போன்றது, அல்லது, சோப் வாட்டர் bubblesஐப் போன்றது. திடீரெண்று உடைந்து சிதறும்போது எதுவுமே இல்லாமல் போய்விடும். ஆனால், உலக முஸ்லிம்களின் எல்லா வளர்ச்சிக்கும், அமெரிக்க மற்றும் சியோனிஸ்டுகளை ஒட்டி உள்ளடி வேலை பார்க்கும் தகுதியற்ற அரபு அரச குடும்பங்கள் பெரும் தடைகளாக உள்ளன. ஏனென்றால், மத்தியக்கிழக்குதான், அனைத்து உலக முஸ்லிம்களின் இதயமாக உள்ளது.  தகுதியில்லாத போலியான ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது அந்த இதயம் கனக்கிறது.

உலக உற்பத்தியில் சூப்பர் பவராக மாறிய சைனா.  BRICS கூட்டணியில் ரஸ்சியாவுடன் இனைந்து, அமெரிக்க பொருளாதாரத்தை, மண்ணைக்கவ்வச்செய்யும் முயற்சிகள் வெற்றிப்பாதையை நோக்கிச்செல்கின்றன. அமெரிக்காவுடன் ஆயுதப்போர் புரிந்து பயனில்லை. பொருளாதாரப்போர் வெற்றியைத்தேடித்தரும். மெல்ல மெல்லச்  சிதைக்கப்படும் அமெரிக்க பொருளாதார ஆதிக்கம். 

Amos Hochstein என்னும் அமெரிக்கன் Coordinator for Global Infrastructure,  இஸ்ரேல் மீதான ஹெஸ்பொல்லாஹ் தாக்குதலை நிறுத்த, நபி பெர்ரி மூலம் நடந்த பேச்சுவார்த்தைக்கு ஹெஸ்பொல்லாஹ் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த மறுத்துவிட்டது. Amos Hochsteinனின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.

Amos Hochsteinனின் வருகையின் போது, ஹெஸ்பொல்லா எதிர்ப்பு அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்தனர், அமோஸ் ஹோச்டைனிடம் விரைந்தனர், மேலும் அவருடன் புகைப்படம் எடுக்கவும், செல்ஃபி எடுக்கவும் கேட்டனர், அவரை ஒரு சூப்பர் ஸ்டார் போல நடத்தினர் மற்றும் கிட்டத்தட்ட கவனத்தை ஈர்க்குமாறு கெஞ்சினர். ஏனென்றால் ஹெஸ்பொல்லாஹ் எதிர்ப்பு அரசியல்வாதிகளுக்கு, லெபனானில் தற்போது யாரும் கண்டுகொள்வதில்லை.

பாலஸ்தீனின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள, அல்மயாதீனின் ஆதாரங்களின்படி, துல்கர்மில் உள்ள அல்-செக்கா தெருவில்,  எதிர்ப்பாளர்களால் இஸ்ரேலிய இராணுவ புல்டோசர் ஒன்று குறிவைத்து தாக்கப்பட்டதை அடுத்து,  ஒரு மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக அங்கிருந்தோர் தெரிவித்தனர். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் பயங்கரவாத ராணுவத்தின்மீது தொடர் தாக்குதல்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஹமாஸ் ;விடுதலைப்போராட்டக்கார்கள். இவர்கள் என்ன விலை கொடுத்தேனும் சுதந்திரத்தைப் பெறவே முனைப்போடு இருக்கிறார்கள். இந்த உலகத்தில் இருந்த எத்தனையோ நாடுகள் எவ்வளவோ விலை கொடுத்துத்தான் சுதந்திரத்தைப் பெற்றிருக்கின்றன இந்திய உட்பட. 

இஸ்ரேலுக்கு திரும்ப மறுக்கும் இஸ்ரேலியர்கள். இஸ்ரேல் குடியேற்றம், உள்வாங்குதல் மற்றும் புலம்பெயர்ந்தோர் விவகாரங்களுக்கான, ஒரு புதிய இஸ்ரேலிய குழு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலான இஸ்ரேலியர்கள், தாங்கள் வசிக்கும் நாடுகளில் பாதுகாப்பற்றதாக உணர்ந்தாலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு திரும்ப விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

பதிலளித்தவர்களில் தொண்ணூற்று ஆறு சதவீதம் பேர் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு வெளியே வசிக்கும் இஸ்ரேலியர்கள், அவர்களில் ஐம்பத்தைந்து சதவீதம் பேர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, வெளிநாட்டில் வசிக்கின்றனர், மேலும் பத்தொன்பது சதவீதம் பேர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஸாவில் ஒன்பதாயிரம் பெண்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட சம்பவம், உலகளவில் பெண்களுக்கான அமைப்புகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இதைத்தொடர்ந்து, ஐ.நா.வின் பெண்கள் அமைப்பில் இருந்து இஸ்ரேலை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் பாவம், ஐநா என்றாலே அது அமெரிக்க முதலாளிகளின் ஆஃபீஸ் என்று தெறியாமல், அப்பாவிகளாக கோரிக்கை வைக்கிறார்கள். தற்போதுள்ள உலகநாடுகள் என்றும் ஆரம்பிக்கும், எல்லா அமைப்புகளையும், அதாவது அமெரிக்க, ஐரோப்பியர்களின் பணத்தில் செயல்படும் அமைப்புகளை கலைத்துவிட்டு, சமத்துவமான சர்வதேச அமைப்புகள் உருவாகும்வரை, இந்த உலகில், கொலை, கொள்ளை, ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இஸ்லாமிய அடிப்படையிலான, ஒரு உன்னதமான சமத்துவ உலகத்தை உருவாக்க, மாபெரும் தடைகளாக இருக்கும் மத்திய கிழக்கு அரச பரம்பரைகள் ஒளியும்வரை, இஸ்லாமியர்களை அழிவும் அவமானமும் சூழ்ந்து கொண்டேயிருக்கும். இந்த மாற்றத்திற்கு துவக்கமாக, மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்க ஆளுமைகள் அழிக்கப்படவேண்டும். அது நடந்தால், புத்துணர்வு பெரும் மத்திய கிழக்கு நாட்டு மக்கள், அவர்களை ஆளும் அரசப்பரம்பரைகளுக்கு ஆப்பு வைத்து விடுவார்கள். அதன் பிறகு அச்சமற்ற இஸ்லாம், இந்த உலகில் சமத்துவத்தை, மூளை முடுக்கெல்லாம் மீண்டும் எடுத்துச்செல்லும்.

Saturday, 9 March 2024

காசாவில் செயலிழந்து பரிதாபமாக நிற்கும் இஸ்ரேல் | புகையும் அமெரிக்க - இஸ்...


காசாவில் செயலிழந்து பரிதாபமாக  நிற்கும்  இஸ்ரேல்... 

புகையும் அமெரிக்க - இஸ்ரேல் உறவு. உண்மையா அல்லது நாடகமா?...

அமெரிக்காவின் வரிப்பணத்தை, இஸ்ரேல் காஸாவில் வீணடித்தது என்று,  ஜோ பைடன்  காட்டமாகக் கூறியுள்ளார்.

காசாவுக்குள்  உலகநாடுகளைத்  தடுக்கும் இஸ்ரேல், அமெரிக்க துறைமுகத்தை தடுக்குமா?..

---

இன்று, ஜோ பைடனின், ஸ்டேட் ஆஃப் யூனியனில்  நிகழ்த்திய உரையில், காஸாவில், இஸ்ரேலுக்கு எதிரான, ஒரு குறிப்பிடத்தக்க எதிர் கருத்துக்களின் வளர்ச்சி, அமேரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான புகைச்சலை  வெளிப்படுத்தியுள்ளது.. பொதுமக்களின் கட்டுமானங்களை அழிப்பது மற்றும், படுகொலைகளைச் செய்வதைத்தவிர,  உலகம் ஏற்றுக்கொள்ளும்படி எதையும் செய்ய இயலாமல், காசாவில் இஸ்ரேல் செயலிழந்து பரிதாபமாக  நிற்கிறது. ஆக்கபூர்வமான செயல்கள் எதையும் திட்டமிடவும் முடியவில்லை, ஹமாஸை அளிக்கும் திறமையும் இஸ்ரேல் பயங்கரவாதிகளுக்கு இல்லை, பணயக்கைதிகளை மீட்க வழியும் இல்லை. உலக அரங்கில் இனி தலைநிமிர வாய்ப்பும் இல்லை.  

இந்த நிலையில், தற்சமயம் இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, அமெரிக்காவின் ஆதரவை நம்பியிருப்பதுதான். காசா பகுதிக்குள், எந்த நாடும், எக்காரணத்தை முன்னிட்டும்  நுழையக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கைகளை இஸ்ரேல் வெளியிட்டிருந்தது. இதன் காரணமாகவே ஈரான், சீனா, ரஸ்ஸியா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகள், மனிதாபிமான உதவிகளைக்கூட கொண்டு சேர்க்க முடியாமல், தயங்கி நின்றன. இந்த நிலையில், காசாவில் அமேரிக்கா நிறுவும் தற்காலிக துறைமுகம், இஸ்ரேலின் கட்டளைகளுக்கும், எச்சரிக்கைகளும், பிரத்தியேகமாக விதிமுறைகளை மீறிய நிலையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  காஸாவில் அந்நிய நாடுகளின் செல்வாக்கை எதிர்ப்பது பற்றிய எண்ணங்கள் இன்னமும் இஸ்ரேலுக்கு  ஏதேனும் இருந்தால், அமெரிக்காவின் தற்காலிகத் துறைமுகம் அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. அதாவது, காசாவில் அந்நிய நாடுகளின் செயல்பாடுகளை தடுக்கும் இஸ்ரேல், தற்போது காசா மண்ணில், அமெரிக்காவின் செயல்பாடுகளை தடுத்துப்பார் என்று சவால் விடுவதாக இருக்கிறது.  இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்து, சுதந்திரமாக காஸாவை உதவிகள் அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம், அமெரிக்கா ஒரு வியத்தகு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறார்கள். 

ஆனால் இவர்கள் மாபெரும் நடிகர்கள்.  அமெரிக்காவின் வரிப்பணத்தை இஸ்ரேல் காஸாவில் வீணடித்துவிட்டது என்று, ஜோ பைடென் தனது இன்றைய உரையில் சாடியிருந்தார்.  அமேரிக்கா கண்மூடித்தனமாக பணமும் ஆயுதங்களும் இஸ்ரேலுக்கு உதவியதற்கு முக்கிய காரணம், இஸ்ரேல் ஹமாஸிடமிருந்து அமெரிக்க பணயக்கைதிகளை மீட்டுவிடும் என்று நம்பியதால்தான். ஆனால், இஸ்ரேல் காஸாவில் அடைந்திருக்கின்ற மாபெரும் தோல்வி, ஒரு மிகப்பெரிய வரலாற்றுப்பிழைக்கு துணைபோன பழியை அமெரிக்காவின் மீதும் திணிக்கப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்க தனது சொந்த நாட்டு பினையக்கைதிகளை மீட்க, ஹமாஸிடம் கெஞ்சியே தீரவேண்டும். சில வாரங்களுக்கு முன்பு,, இஸ்ரேலிடம் ஏமாந்த அமெரிக்கா என்னும் தலைப்பில், இனி அமெரிக்கா ஹமாஸிடம் கெஞ்சியே தீரவேண்டும் என்று பிரத்தியேகமான காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தோம். சரி, இப்போது,  அமேரிக்கா தனது நாட்டு குடிமக்களைக் காப்பாற்ற, காஸாவுக்கு உதவி செய்வது போல நடிக்கிறதா என்கிற தீரிக்கமான முன்னோட்டத்தை சிந்திக்கவேண்டும். அது உண்மையானால், அமெரிக்காவை வைத்து, இஸ்ரேலுக்கு கடிவாளமிடக்கூடிய முழுமையான தரவுகளுடன், கையொப்பங்கள் பரிமாறிக்கொள்ளப்படவேண்டும். இதன் மூலமாக, இஸ்ரேலை தனிமைப்படுத்தும் முயற்சியில் வெற்றியும் காணப்பட வேண்டும். போராளிகளின் தலைவர்களும் ஆலோசகர்களும் இதைத்தான் செய்வார்கள் என்று நம்புவோம்.

மற்றபடி, வெளிநாட்டு உதவியைப் பொறுத்தவரை, சர்வதேச சமூகம், இந்த தனிமைப்படுத்தப்பட்ட, ஹமாஸ் ஆளும் பிராந்தியத்தில் வாழும், இருபது லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்கு நிவாரணம் வழங்க, காசா பகுதிக்கு, பல கோடிக்கணக்கான கணக்கான டாலர்களை அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து காஸாவில் நிலைமை மென்மையானதாக உள்ளது, மேலும் அதிகார சமநிலையும்  தொடர்ந்து உருவாகி வருகிறது, அதாவது ஹமாஸுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பேரழிவு ஏற்பட்டிருந்தாலும், பாலஸ்தீன மக்கள், குறிப்பாக காசா மக்களுக்கு வெற்றியை கொடுத்து, உலக வரலாற்றில் மாவீரர்களாக பொறிக்கப்படுவார்கள் என்று நம்புவோம்.  மேலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  நமது channelஐ சூபிசகிரிபே செய்து கொள்ளுங்கள்.  நன்றி. 




Friday, 8 March 2024

இஸ்ரேலுக்காக அமெரிக்கா பின்னும் சதிவலை | காசாப்பகுதியில் அமைக்கும் துறை...


இஸ்ரேலுக்காக அமெரிக்கா பின்னும் சதிவலை. காசாப்பகுதியில்  அமைக்கும்  துறைமுகம். 

கான் யூனிஸ் நகர மையப்பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியதா?

காசா மனிதாபிமான உதவிகளை, பேரம் பேசும் பொருளாக, இஸ்ரேல் பயன்படுத்தக் கூடாது என்று பைடன் கூறுகிறார்.

இந்த இஸ்ரேல், ஒரு பயங்கரவாத காட்டுமிராண்டி கூட்டம் என்பது எல்லாத்துக்கும் தெரியும், ஆனால் இவங்க, இவங்களோட எதிரியான, ஹமாச ஒன்னும் பண்ண முடியல. ஹமாஸ் கிட்ட போய் போய் நல்லா அடி வாங்குறாங்க, ஆனா, அப்பாவி மக்களையும் குழந்தைகளையும்  அநியாயமா கொன்னு, அதுதான் வெற்றி அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க.  இப்போ, காசால இருக்குற அப்பாவி மக்கள் உணவு இல்லாமல் தவிச்சிட்டு இருக்காங்க.  இதுக்கு  காரணமான  இஸ்ரேல் கொள்ளை கொள்ளைக்கூட்டத்த சேர்ந்த ரவுடிங்க,  அவங்களுக்கு சேர வேண்டிய உணவுப் பொருள தடுத்து, அந்த மக்கள் பட்டினியால சாகாமல் இருக்கணும் அப்படின்னா, ஹமாஸ் சரணடையனும், இல்லைன்னா நாங்க சொல்லுற மாதிரி  போர் நிறுத்த ;ஒப்பந்தத்துல கையெழுத்து போடணும், அப்படீன்னு பிளாக் மெயில் பண்றங்க. மக்கள் உணவில்லாமல் சாகிறது வேற, ஒரு ராணுவ சம்பந்தமான ஒரு அக்ரிமெண்ட் போடுறது வேற, இதையும் அதையும் முடிச்சு போறது தப்பு. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது, அப்படின்னு பொதுவா ஒரு பழமொழி சொல்லுவாங்க அதுதான் பண்ண கூடாது அப்படீன்னு பைடன் சொல்லி இருக்காரு.

பொதுவாகவே,  ஒரு முட்டாள்கிட்ட வாக்குவாதம் பண்ணக்கூடாது அப்படீன்னு சொல்லுவாங்க. அவங்க கிட்ட வாக்குவாதம் பண்ணா, கண்டிப்பா ஜெயிக்க முடியாது. ஏன்னா, இந்த  முட்டாள்கள் எந்த உண்மையையும் ஏத்துக்க  மாட்டாங்க.  அதனால முட்டாள்களோட வாக்குவாதம் பண்ற அந்த புத்திசாலிக்கு எந்த மரியாதையும் கிடைக்கப்போவதில்லை, அப்படிங்கற ஒரு தத்துவத்தை, காலம் காலமா சொல்லிட்டு இருக்காங்கல்.  இந்த இஸ்ரேல் ஒரு முழு முட்டாள். அந்த முட்டாளோட பேரம் பேசுறதனாலயோ,  ஆர்கியூ  பண்ணுறதுனாலயோ எந்த பிரயோஜனமும் கிடையாது. அவங்க அப்படித்தான்  கேவலமாக நடந்துக்குவாங்க. யாரையும்  மதிக்க மாட்டாங்க யார் சொல்றதையும் கேட்கவும் மாட்டாங்க. தாங்கள்தான் உலகத்தில் பெரியவங்க. நாங்க சொல்றததான் உலகத்துல இருக்குற எல்லாருமே கேட்கணும்னு நினைக்கிறாங்க. இவ ங்களோட  மொத்த மக்கள்தொகையே, உலகம் பூரா சேத்துனாலும், ஒரு கோடி தேராது.  இந்த ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் இனவெறியோட  திரியறப்போ,  இருநூறு  கோடி முஸ்லிம்கள் இன வெறியோட கிளர்ந்து எழுந்தாங்க அப்படின்னா, இவங்க எல்லாம் எத்தனை நாளைக்கு உலகத்துல இருப்பாங்க?  இது தெரியாம இவங்க ரொம்ப ஆடிட்டு இருக்காங்க. இந்த ஆட்டம் கண்டிப்பா ஒரு நாள் அவங்களையே காலி பண்ணிடும் அப்படின்னு நம்புவோம். 

காசாவில் உள்ள தெற்கு நகரமான, கான் யூனிஸின் மையப்பகுதியில் இருந்து, இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ளதாக, Associated File Press  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏ.எஃப்.பி நிருபர் ஒருவர் கூறுகையில், மையத்திலிருந்து படைகள் வெளியேறிய பின்னர், டஜன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை ஆய்வு செய்ய சென்றனர் என்று கூறுகிறது. 

படைகளை திரும்பப் பெறுவதை உறுதிப்படுத்தும் பொது அறிக்கை எதுவும், இராணுவத்திடம் இருந்து வெளியாகவில்லை, மேலும் உறுதிப்படுத்தலுக்கான அதன் கோரிக்கைக்கு, இராணுவம் இன்னும் பதிலளிக்கவில்லை என்று ஏ.எஃப்.பி தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பயங்கரவாதா ராணுவம், கடந்த பல வாரங்களாக, அந்நகரில் பெரிய அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இஸ்ரேல் எவ்வளவு படுகொலைகளைச் செய்தாலும், எவ்வளவு கட்டிடங்களை தரைமட்டமாக்கினாலும், காசா மக்கள் நம்பிக்கை இழக்காமல், உணவுக்கும் மருந்துக்கும் போராடி வருகிறார்கள். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதைப்போல, மேற்கத்தியர்கள், ஆளாளுக்கு  அறிக்கைகள் விடுவதில் குறியாக இருக்கிறார்கள்.களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டிய அராபியர்கள், பத்ருப் போர்க்களத்தைக்கண்ட மாவீரர்களின் சந்ததிகள், வீர தீர பராக்கிரமங்களை நிலைநாட்டிய புலிகள், இன்று  பல் பிடுங்கப்பட்ட எலிகளாக, சியோனிஸ்டுகளுக்குப் பின்னால் மறைந்து நின்று  வேடிக்கை பார்க்கிறார்கள். 

இவ்வளவு அழிவை ஏற்படுத்திய பின்னும், இஸ்ரேலின் உண்மையான எதிரிகளான ஹமாசை, இவர்களால் தொட்டுக்கூடப்பார்க்க முடியவில்லை. அதாவது அப்பாவிகள் மீதும், சாமானியர்கள் மீதும் பேரழிவை ஏற்படுத்தி, கொடூரமானவர்கள், பொய்யர்கள் மற்றும் கோழைகள் என்கிற தங்களது உண்மையான சொரூபத்தை வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்துள்ளார்கள்.  ஆனால், தங்களது திறமையையும், வீரத்தையும் நிலைநாட்டுவதில், பத்து சதவீதமாவது வென்றார்களா என்பது கேள்விக்குறியே.  ஆக, இஸ்ரேல் கால் பதிக்க முடியாத காசாப்பகுதியில்,  மனிதாமான உதவிகள் என்னும் பெயரில், ஒரு துறைமுகத்தை அமைக்க முயற்சி நடக்கிறது. இந்த அமேரிக்கா கால் ஊன்ற  நடக்கும் முயற்சியா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு துறைமுகம் நிறுவப்பட்டால், அது கண்டிப்பாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் சந்தேகமில்லை. ஏனென்றால், அந்த துறைமுகம் உருவாக்கப்படுவதே இஸ்ரேலுக்காகத்தான்.  காரணம்  மட்டும் மனிதாபிமான உதவிகளுக்காக என்று.  யோசித்துப்பாருங்கள், ஒரு துறைமுகத்தையே உருவாக்க நினைக்கும் அமேரிக்கா, ஆண்மையும், தைரியமும் இருந்தால், இஸ்ரேலை எச்சரிக்கட்டும், இஸ்ரேலிய பயங்கரவாத ராணுவத்துக்கு பாலஸ்தீனப்பகுதிகளில் தடை விதிக்கட்டும். போர் விமானங்கள் பறக்க தடை விதிக்கட்டும், முதல் கட்டமாக ஒரு லட்சம் வீடுகளையும், இரண்டாயிரம் மருத்துவமனைகளையும், ஆயிரம் பள்ளிக்கூடங்களையம் போர்க்கால அடிப்படையில் விரைவாக  கட்ட ஏற்பாடு செய்யட்டும்.  எல்லாம் வேடதாரிகள். 

இப்போதைய நிகழ்வுகளை, உலகம் தெளிவாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் எவ்வளவு பெரிய அயோக்கியர்கள் என்று. எப்படிப்பட்ட பொய்யும், புரட்டும், காட்டுமிராண்டித்தனமும், இவர்கள்  ரத்தத்தில் ஊறியிருக்கிறதென்று. இவர்களை ஆதரிப்பவர்கள் எப்படிப்பட்ட கயவர்கள் என்று.  இந்தப்போர் ஓய்ந்தபின், உலகில் மிகப்பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. புவிசார் அரசியலை புரட்டிப்போடும் திடமான அரசியல் மாற்றங்களுக்கு, இது ஒரு வரலாற்று மையப்புள்ளியாக, வரலாற்றில் பலகாலம் பேசப்படும்.  மேலும் செய்திகள் எமது அடுத்தடுத்த காணொளிகளில்.  எங்களது சேனலை subscribe செய்துகொள்ளுங்கள், நன்றி.



Sunday, 3 March 2024

சொர்க்கம், இம்மையிலா? அல்லது மறுமையிலா? பின் சல்மானின் சொகுசு வாழ்க்கை ர...


சொர்க்கம், இம்மையிலா? அல்லது மறுமையிலா?
பின் சல்மானின் சொகுசு வாழ்க்கை ரகசியங்கள்.  

சில வருடங்களுக்கு முன்பு பின் சல்மான், தன்னிடம் கொட்டிகிடக்கிற கணக்கில்லாத பணத்தை முறையாக செலவு செய்ய, இஸ்லாமிய ஏழை நாடுகளுக்கும், மற்றும் பல உலக நாடுகளில் உள்ள, ஏழை இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும்,  ...    ம்ம்ம் ... மன்னிக்கவும், யார் யாருக்கோ வாரிக்கொடுக்க, இவர் முட்டாள் முஸ்லீம் இல்லையாம்.  ஜியோனிஸ்டுகளைப்போல, மேகத்தியர்களைப்போல, நாகரீகமாக வாழ விரும்பி, ஒரு சொகுசுக்கப்பலை வாங்கினார். அதன் விலை  குறைவுதாங்க.. வெறும் நானூறு மில்லியன் அமெரிக்க டாலர்தான். அதாவது, சுமார்,  மூவாயிரத்து முந்நூற்று அறுபது கோடி ரூபாய்தான்... எவ்வளரு ரூபா..?  மூவாயிரத்து முந்நூற்று அறுபது கோடி ரூபா.... சரி, மூவாயிரத்து முந்நூற்று அறுபது கோடி ரூபா கொடுத்து கப்பல் மட்டும் வாங்குனா போதுமா? ரசனை  இல்லாதவன்னு சொல்லுவாங்களே, அதனால, அதுல வெக்கிறதுக்கு ஒரு ஓவியம் வாங்குனாரு.  அதோட வெலயும் கம்மிதாங்க, கப்பலவிட  கொஞ்சம் அதிகம். நானூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டாலர்தான். அதாவது, கிட்டத்தட்ட மூவாயிரத்து எழுநூற்று என்பது கோடி ரூபாய்கள்தான்.

சவுதி இளவரசர் எம் பி எஸ் இந்த நானூறு மில்லியன் டாலர் மெகாயாட்ச்சை, ஒரு ரஷ்ய தன்னலக்குழுவிடமிருந்து வாங்கினார், வாங்கிய உடனே, அந்தக்கப்பலின் சொந்தக்காரரை, உடனடியாக வெளியேற்றினார். நானூற்று முப்பத்தொன்பது அடி நீளமுள்ள இந்த கப்பலில், இரண்டு ஹெலிபேடுகள், ஒரு நீர்மூழ்கி கப்பல் மற்றும், ஒரு இரவு விடுதி ஆகியவை உள்ளன. அதில் நானூற்றைம்பது  மில்லியன் டாலர் மதிப்பிலான ஓவியமும் தொங்க விடப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸின் நிறுவனத்தின் கூற்றுப்படி, செரீன் என்றழைக்கப்படும் இந்த சூப்பர் சொகுசுக்கப்பல், இத்தாலியின் ஃபின்கான்டீரி யார்டால் கட்டப்பட்ட,  முதல் சூப்பர் படகு மற்றும், ஒரு காலத்தில், உலகின் மூன்று பெரிய படகுகளில் ஒன்றாக  இடம்பெற்றது. நானூற்று முப்பத்தொன்பது அடியில், இது ரோமன் அப்ரமோவிச்சின் ஐநூற்றைம்பது அடி நீளமுள்ள, எக்லிப்ஸ் என்னும் கப்பல் மற்றும், ஸ்டீல் தொழிலபதிபர், விக்டர் ராஷிகோவின் நானூற்றி ஐம்பத்தொன்பது அடி நீளமுள்ள,  ஓஷன் விக்டரி என்னும் கப்பல் ஆகியவற்றுக்குப் பின்னால் மூன்றாவது பெரிய சொகுசு ஆகும்.. இந்த அமைதியான சூப்பர் படகின் வசீகரத்தையும், எல்லாவற்றையும் கொண்ட மனிதனான, சவுதி இளவரசரை, அது எவ்வாறு கவர்ந்தது என்பதையும், சற்று  உற்று நோக்கலாம் வாருங்கள்.

கண்கவர் அமைதியான படகு. சவுதி அரேபியாவின் துணை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு சொந்தமான செரீன், உலகின் மிகப்பெரிய படகுகளில் ஒன்று மட்டும்  அல்ல. வேலை செய்யும் அம்சங்கள் மற்றும் வெளித்தோற்றத்தில், முடிவில்லாத வசதிகளின் பட்டியல், என்று வரும்போது, செரீன் என்பது வெல்ல கடினமாக இருக்கும் அளவுக்கு அளவில்லாத வசதிகள் கொண்ட ஒரு கப்பல். அறுபது அடிகல் கொண்ட ஒரு பெரிய பீமுடன், இந்தக் கப்பல் ஏழு தளங்கள் மற்றும், நாலாயிரத்து ஐநூறு சதுர மீட்டர், உட்புற இடத்தைக் கொண்டுள்ளது, இது ரெய்மண்ட் லாங்டன் டிசைன் வடிவமைப்பின் பாஸ்கேல் ரெய்மண்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

இந்த அதிநவீன சொகுசுக்கப்பல், இரண்டாயிரத்துப் பதினொன்றாம் ஆண்டில்  தயாரிக்கப்பட்டது, செரீன், ஒரு எஃகு ஹல் மற்றும் அலுமினிய சூப்பர் ஸ்ட்ரக்சரைக் கொண்டுள்ளது. அதன் U S P எனப்படும் ரகசிய அறைகள், அதில் மறைந்துள்ள பல வசதிகள், மற்றும், ஆடம்பரங்களைக் கண்டுபிடிப்பது கடினம். இந்த அம்சம் உலகின் செல்வந்தர்களை ஈர்த்துள்ளது. Super Yacht World என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர் போல் ஆஷ்டன் கூறும்போது,:  இது கப்பலின் உட்புறம், ஒரு நெருக்கமாக பாதுகாக்கப்பட்ட இரகசியமாகும், பெரும்பாலும், மேல் முனையில் உள்ள மிகவும் தனியார் படகுகளைப் போலவே. ஆனால், இது உலகின் மிகவும் பிரத்யேக வடிவமைப்பு குழுக்களில் ஒன்றான, ரேமண்ட் லாங்டனின் வேலை, எனவே இதன் ரகசியங்களைக் கேட்டாலே மூச்சடைக்கும்  என்கிறார்.

அவர் மேலும் கூறினார், "இது போன்ற ஒரு படகு உண்மையில், வேறு எதுவும் இதற்கு நிகரானது அல்ல. - ஒரு நிறுவனம் அல்லது ஒரு கால்பந்து கிளப் மற்றும், பணம் சம்பாதிப்பதற்கா கூட உள்ளன - ஒரு பெரிய படகு என்றால் பணம் மட்டுமே செலவாகும்." செரீன், ஒரு மாபெரும் உள்கடல் நீர், நீச்சல் குளத்துடன் வருவதால் அதிகப்பணம் செலவாகும் என்பது நிச்சயமானது மற்றும் உறுதியானது.  அந்த நீச்சல் குளமும் போதாது என்றால், இரண்டு ஹெலிபேடுகளில் ஒன்றை, மற்றொரு நீச்சல் குளமாகவோ அல்லது, நடன தளமாகவோ, அதாவது பால் ரூம் அல்லது டான்ஸ் ஃப்ளோர் ஆகவோ  மாற்றிக் கொள்ளலாம்.

ஆடம்பரமான உரிமையாளரின் பிரத்தியேகமான தொகுப்பில்,  தனியாக ஒரு  நீச்சல் தளம் மற்றும், பிரத்தியேகமான தனி லிஃப்ட் கொண்ட, ஒரு கம்பீரமான இரட்டை அறை ஆகும். கூடுதலாக, பன்னிரண்டு நேர்த்தியான அறைகள் இருபத்தி நான்கு  விருந்தினர்களுக்கு இடமளிக்கின்றன, அவர்கள் கடல் நீருக்கு கீழே உள்ள உலகத்தை ஆராய, படகின் நீர்மூழ்கிக் கப்பலில் குதிக்கலாம். 

பிரமிக்க வைக்கும் ஸ்னோ விழும் பனி அறை, குழந்தைகள் விளையாடக்கூடிய அறைகள்,  அடுக்குகளை மத்தியில், உயரமான சுவற்றில் ஏறி இறங்கி விளையாடுவதற்கான வசதி, தண்ணீருக்குள் மூழ்கிக்கொண்டே கடல்நீரைப் பார்க்கக்கூடிய வசதி போன்ற எண்ணற்ற வசதிகள் உள்ளன.

பெரியவர்களும், வெளிப்புற சினிமாவில், ஒரு கிளாசிக் அனுபவத்தை அனுபவிப்பதில் ஆக்கிரமிக்கப்படுவார்கள், அதே நேரத்தில், இசை மற்றும் உரையாடல்கள், பியானோ அறை மற்றும், பார் வசதியும் உள்ளது. ஆரோக்கிய மற்றும் அழகு மையம் சிறந்த இடமாகும், இது ஸ்பாக்கள், ஹம்மாம்கள் மற்றும், பலவற்றை ஓய்வெடுக்கும் வசதியுடன், அலங்கரிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற செரீன், ஒரு தனியார் கடற்கரை கிளப்பில் தங்குமிடம் கொண்ட, சூரிய குளியல் வசதியுள்ள பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஜக்குஸிகள், ஜக்குஸிகள் என்பது, உடலை மசாஜ் செய்ய, நீருக்கடியில் ஜெட் தண்ணீரின் அமைப்புடன், வேகமாக உடலின் மீது பீச்சி அடிக்கக்கூடிய தண்ணீர் அமைப்புகளுடன் கூடிய ஒரு பெரிய குளியல் அறையைப்போன்றது ஆகும்.  மற்றும் ஒரு சன்டெக் நடன தளமும் உள்ளன. பெரும்பாலானவை கப்பலின் கண்காணிப்பு தளத்திற்கு விழும், கூடுதல் சன் லவுஞ்சர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக கையிருப்பு வைக்கப்பட்ட உயர்ந்த ரக  பொம்மைகளின் முழுமையான சேகரிப்பும் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுள்ளது.

உலகளவில் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் கூட அதன் அழகை எதிர்க்க முடியவில்லை, பின் சல்மான் இந்த சொகுசு கப்பலே வாங்குவதற்கு முன்பு, பில் கேட்ஸ்,  இரண்டாயிரத்துப் பதினான்கில் வாரத்திற்கு ஐந்து  மில்லியன் டாலருக்கு, செரீன் சூப்பர் படகை வாடகைக்கு எடுத்ததில் ஆச்சரியமில்லை. போர்டோ கடற்கரைக்கு சற்று தொலைவில் உள்ள படகில் பில் கேட்ஸ் குடும்பம் ஒரு வாரத்தை ஒன்றாக அனுபவித்தது. 

செரீன் எனப்படும் இந்த சொகுசுக்கப்பலின் அமைதியான வசீகரத்தைப் பற்றி பேசுகையில், இந்த அற்புதமான மெகாயாட்ச் மூலம் சவுதி இளவரசர் மிகவும் ஈர்க்கப்பட்டார், அவர் அதை வாங்கிய உடனேயே நானூறு  மில்லியன் டாலர் மதிப்புள்ள, அதன் ரஷ்ய தன்னலக்குழு உரிமையாளரை வெளியேற்றினார். பிரான்சின் தெற்கில் விடுமுறையில் இருந்தபோது, சவுதி இளவரசர் இந்த சொகுசு கப்பலைக் கண்ட பின்னர், விடுமுறை ஷாப்பிங்கின் அர்த்தத்தை சமன் செய்தார், உடனே அந்த சொகுசுக்கப்பலை வாங்குவதில் நேரத்தை வீணாக்கவில்லை. சொர்க்கம் அங்கேதான் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டார் போல. இவ்வளவு ஆசைகளைத் தாங்கி, சொகுசுகளுக்கு மயங்கி. பணக்கடலில் மிதக்கும் சவூதி அரச குடும்ப வாரிசு. இதை அனுமதிக்கும் சவுதி மன்னர் கைகளில், இஸ்லாமியர்களின் புனிதத்தலங்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனவா? இவர்கள் குடும்பம், பகட்டிலும், ஆடம்பரத்திலும், சொகுசுக்கப்பலிலும் மயங்கி  இருக்கும் வேளையில்.. இறைவன்தான் காப்பாற்றவேண்டும். இந்தப்புனிதத்தலங்கள் இறைவனின் பாதுகாப்பில் உள்ளவை, பல ஆயிரம் ஆண்டுகளாக காப்பாற்றப்பட்டவை, அவை மேலும் காப்பாற்றப்படும்.  இறைவன் மிகப்பெரியவன். அவனே போதுமானவன். 

நியூயார்க் டைம்ஸ் கருத்துப்படி, பின் சல்மான் கப்பலை வாங்க ஒரு உதவியாளரை அனுப்பினார், மேலும், அந்த ஒப்பந்தம் சில மணி நேரங்களுக்குள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதே நாளில்  மிஸ்டர் யூரி ஷெஃப்லர் படகில் இருந்து வெளியேறினார். கோடீஸ்வர தொழிலதிபரான  யூரி ஷெஃப்லர், S P I குழுமத்தின் உரிமையாளர் ஆவார், இவரின் கம்பெனி  நூற்று அறுபது  நாடுகளில், மதுபானங்களை விற்கும் ஒரு சர்வதேச கூட்டமைப்பாகும், குறிப்பாக, ஸ்டோலிச்னாயா - ஓட்கா பிராண்ட் -  மார்ச் இரண்டாயிரத்து இருபத்திரண்டு  நிலவரப்படி, அவரது நிகர மதிப்பு ஒன் பாயிண்ட் five  பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.  போதை பொருட்களை தயாரித்து நூற்று அறுவது நாடுகளில் விற்கும் ஒருவரின் சொகுசுக்கப்பலின்மீது  ஆசைப்பட்டு, அந்தக்கப்பலை தான் வாங்கி உல்லாசத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை, மேன்மை அனைத்தும் பொருந்திய இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கிறதா? உலக முஸ்லிம்களுக்கு மையமாகத்திகழும் சவூதி அரேபியாவை ஆளக்கூடிய அரச குடும்பம், இப்படிச்செய்வது ஏற்புடையதா? தயவு செய்து நீங்கள் அனைவரும் உங்களது கமெண்டுகளை பதிவு செய்வீர். உலகம் முழுவதும் எவ்வளவு வறியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காகத்தானே செல்வம் கொடுக்கப்படுகிறது என்று மார்க்கம் சொல்கிறது. மரணிப்பதற்கு முன் ஆடம்பரத்தை அனுபவித்து விடவேண்டும் என்று நினைக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் அரபு முஸ்லிம்கள், ஒருவேளை சோற்றுக்கு வழியின்றி, கால்நடைத்தீவனங்களை உணவாக உண்டு, அதுவும் தீர்ந்துபோய், மடிய ஆரம்பித்திருக்கிறார்கள். 

ஏழை நாடான ஏமன் இசுரேலியா கப்பல்களுக்கு தடைகள் விதிக்க, இவர்கள் ஏமனையும், உலக முஸ்லிம்களையும் ஏமாற்றி, யூ யே ஈ வழியாக, சவூதி வழியாக, ஜோர்டான் வழியாக, இஸ்ரேலுக்கு திருட்டுத்தனமாக பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள். இந்த அராபியர்கள், முஸ்லீம் வேடமணிந்த, முஸ்லீம் பெயருக்குப்பின் மறைந்து வாழ்கின்ற பயங்கரவாத ஜியோனிஸ்டுகள் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்களே அது எல்லாம் உண்மைதானா? உங்களுக்குத்தெரிந்திருந்தால், உங்களது என்னாத்தை வெளிப்படுத்துங்கள்.


சி என் பி சி செய்தியின் படி, முகமது பின் சல்மான் ஒரு  டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான, அதாவது, எண்பத்து நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான  குடும்ப நிகர மதிப்பைக் கொண்டுள்ளார். அவர் வைத்திருக்கும்  ஆடம்பரமான சூப்பர் படகு, அரண்மனைகளை வாசிகளுக்காக பயன்படுத்தப்படும்.. அந்த செரீன் எனப்படும் சொகுசுக்கப்பலின் வசதிகள் அதிகரித்துக்கொண்டே செலின்றன.  

செரீனின் உள்ளே, உலகின் மிகவும் விலை உயர்ந்த, நினைவில் கொள்ளுங்கள், உலகின் மிக விலையுயர்ந்த ஒரு ஓவியத்தைக் காணலாம், லியோனார்டோ டா வின்சியின், சால்வேட்டர் முண்டி என்ற ஓவியம், இரண்டாயிரத்துப்பதினேழில், கிட்டத்தட்ட அரை பில்லியன், மில்லியன் அல்ல, பில்லியன்  டாலர்களுக்கு வாங்கப்பட்டது.  இந்த  லியோனார்டோ டா வின்சியின் ஓவியம், அந்த சொகுசுக்கப்பலை விட விலை உயர்ந்தது. 

காய்ந்து போய்க்கிடந்த அரேபியாவில், தங்கத்தைவிட மதிப்பு மிகுந்த எண்ணை வளத்தை, இறைவன் உயர்த்திக் கொடுத்தான். இவர்கள் சொகுசுக்கப்பலில் சொர்க்கத்தைக் காண்கிறார்கள்.  உண்மையில் சொர்க்கம், இம்மையிலா? அல்லது மறுமையிலா?




Saturday, 2 March 2024

ஏமனின் செங்கடல் முற்றுகையிலிருந்து தப்பிக்க இஸ்ரேலுக்கு உதவுவது யார்? - ...


ஏமனின் செங்கடல் முற்றுகையிலிருந்து தப்பிக்க இஸ்ரேலுக்கு உதவுவது யார்?

சிறப்புத் தொகுப்பு 

ஏமனால் விதிக்கப்பட்ட செங்கடல் முற்றுகையைத் தவிர்ப்பதற்கு இஸ்ரேலுக்கு உதவுவது யார்? மத்தியக்கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளும் இஸ்லாமிய நாடுகளே. இவர்கள் ஒன்றிணைந்தால், இஸ்ரேல் என்ன, அமெரிக்காவையே தெறித்து ஓடும்படி செய்யக்கூடிய வல்லமை நிறைந்த பகுதி. மத்தியக்கிழக்கு முழுவதும் அரபியர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆட்சியையும் செய்கிறார்கள். துருக்கியும், ஈரானும் மட்டுமே விதிவிலக்கு. ஏனென்றால் இந்த இரு நாடுகள் மட்டும் அரேபிய நாடுகள் அல்ல. ஆனால், பாலஸ்தீன நிலப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து,  ஒரு பயங்கரவாத மாஃபியா கும்பலால் இஸ்ரேல் என்று பெயர் சூட்டப்பட்டு, பல படுகொலைகளை செய்யும் குண்டர்களுக்கு, மத்தியக்கிழக்கில் உதவக்கூடியவர்கள் யார்? இதில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன நாடும் அரேபிய நாடே..!

இஸ்ரேலின் இனப்படுகொலைகளை அராபியர்கள் கண்டும் காணாமல் இருக்கும் நிலையில், ஏமனைச்சேர்ந்த அன்ஸாருல்லா அமைப்பு செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களுக்கு பாப்-எல்-மண்டப் பகுதியில் தடைகளை  விதித்தது.  இந்தத்தடைகள், இஸ்ரேல் பயங்கரவாதிகள், காசாவில் தாக்குதல்களை நிறுத்தும்வரையில் தொடரும் என்று அறிவித்திருந்தது அனைவருக்கு தெரிந்ததே.  இந்நிலையில், செங்கடல் வழியாக செல்லமுடியாத இஸ்ரேலிய கப்பல்கள், அதன் சரக்குகளை வேறு ஏதோ ஏமாற்று வேலைகள் செய்து இஸ்ரேலுக்குள் கொண்டுசெல்லப்படுவதாக செய்திகள் வரவே, அந்த தகவல்களை சேகரித்து வெளியிட முயற்சி செய்தோம்.  அதன் விளைவாக கிடைத்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

காஸாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலைகளும் , அதைத்தொடர்ந்து ஏமன், சியோனிசப் பகுதிக்கு செல்லும் கப்பல்கள்மீது தாக்குதல்கள் நடத்தியதும், இந்த தாக்குதல்கள் பல மதிப்புமிக்க கப்பல் நிறுவனங்களை, முக்கியமான செங்கடல் நீர்வழிப்பாதையை தவிர்க்க கட்டாயப் படுத்தியுள்ளன, இது இஸ்ரேலிய ஆட்சியின், நிதியடிப்படியிலான  இரத்த நாளங்களில் பலத்த அடியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட பல்வேறு அறிக்கைகளின்படி, இஸ்ரேல் செல்லும் சரக்குகள், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியாவின் உதவியுடன் செங்கடலைத் தவிர்த்து, ஒரு மாற்று வர்த்தக பாதையை ஏற்படுத்தியுள்ளன. நினைவு கொள்ளுங்கள், இஸ்ரேலின் கூற்றுப்படி, இஸ்ரேல் பயங்கரவாத நாட்டிற்கு உதவும் கருப்பு ஆடுகள், U A E, ஜோர்டான்  மற்றும் சவுதி அரேபியா.

இஸ்ரேலின் சேனல் Thirteenஆல் ஒளிபரப்பப்பட்ட ஒரு சமீபத்திய அறிக்கை, ஒரு புதிய அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது, கப்பல்கள் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயிலிருந்து புறப்பட்டு, சவுதி அரேபியா மற்றும் ஜோர்டானைக் கடந்து, இறுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள ஜோர்டான் பாலத்தை அடைகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த சிக்கலான செயல்பாட்டில் இரண்டு முக்கிய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் - ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட, ப்யூர்ட்ரான்ஸ் எஃப்இசட்கோ மற்றும், டிரக்நெட் ஆகியவை, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் அதாவது இஸ்ரேலுக்கு,  இந்த இரண்டு நிறுவனங்களும், லாரிகள் மற்றும் சரக்கு மூலம், பொருட்களை கொண்டு செல்ல ஒத்துழைக்கின்றன.

அரபு நாடுகளிலேயே மிகவும் ஏழ்மையுடன் இருக்கும் நாடான ஏமன், பாலஸ்தீன அரேபியர்களுக்காக செங்கடலில் தடைகளை ஏற்படுத்தி இருக்க, பணபோதையில் மிதந்து கொண்டிருக்கும் பணக்கார அரபு  நாடுகளோ, தங்களது சகோதரிகளையும், குழந்தைகளையும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளுக்கு விற்றுக்கொண்டிருக்கின்றன.  மன்னிக்க முடியாத துரோகங்களை இழைத்துக் கொண்டிருக்கின்றன. 

எமிராட்டி மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களில் இருந்து, இஸ்ரேலிய  பகுதிகளுக்கு, சரக்குகள் மற்றும் ஆயுதங்களை, தரைவழியாக கொண்டு செல்வதற்கு வசதியாக, டிரக்நெட் எண்டர்பிரைஸ் லிமிடெட் போன்ற, மென்பொருள் தொடக்க நிறுவனங்களை, இஸ்ரேல் முக்கியமான தரகர்களாக  வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று, டிரக்னெட்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹனன் ஃப்ரிட்மேன் தெரிவித்தார்.

டிரக்நெட், ப்யூர்ட்ரான்ஸ் எஃப்இசட்கோ மற்றும், டி. பி. வேர்ல்ட் ஆகியவற்றுடன் இணைந்து, செங்கடலை தவிர்த்து, சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் வழியாக, இரு-திசை வர்த்தக பாதையை நிறுவியுள்ளது என்று ஃப்ரிட்மேன், மேலும் வெளிப்படுத்தினார்.

ஜெர்மன் கப்பல் நிறுவனமான ஹப்பக் லாயிட் ஏஜி, இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, துபாயின் ஜெபல் அலியை, கிழக்கு சவுதி துறைமுகங்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, செங்கடலில், இஸ்ரேல் செல்லும் கப்பல்களுக்கு இடையூறுகள் காரணமாக, மாற்று வழிகளைப் பயன்படுத்துகிறது . அதன் மற்றொரு பகுதியான ஜெபல் அலியை ஜோர்டானுடன் இணைக்கிறது" என்று அறிக்கை மேலும் கூறியது.

இருப்பினும், இந்த நில வழிகள், வரையறுக்கப்பட்ட சரக்குகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாக கருதப்படுகின்றன, இதை ஹப்பக் லாயிட் ஏஜி செய்தித் தொடர்பாளர் நில்ஸ் ஹாப்ட் ஒப்புக் கொண்டார்.

இந்த வழித்தடங்கள் மெதுவானவை மற்றும், கடினமானவை என்று ஹாப்ட் வலியுறுத்தினார், ஆனால் செங்கடலில், யேமன் இராணுவத்தின் பாலஸ்தீன சார்பு நடவடிக்கைகள் தொடர்வதால், அரபு துறைமுகங்கள் வழியாக வர்த்தகத்தை அதிகரிக்க இது உதவும். ஆக, இஸ்ரேலுக்கு திருட்டுத்தனமாக உதவுவது மட்டுமின்றி, இஸ்ரேலின் சரக்கு வியாபாரமும் களைகட்டத் தொடங்குவதாக கூறுகின்றனர்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட, எஸ் அண்ட் பி குளோபல் இன்க் என்றழைக்கப்படும், சந்தை புலனாய்வு நிறுவனத்தின், கிறிஸ் ரோஜர்ஸ் கூறுகையில், "தரை பாலம், சிறிய அளவிலான சரக்குகளை சுமந்து செல்லும்போதிலும், குறிப்பாக இஸ்ரேலுக்கு, ஏற்றுமதி செய்வதற்கான ஒரு முக்கிய தீர்வாக இருக்கும்" என்று மேற்கோளிட்டுள்ளார். 

நவம்பரில் பைலட் ஓட்டங்கள், அதாவது சோதனை ஓட்டங்கள் செய்யப்பட்டு,  டிசம்பரில் முதல் ஏற்றுமதிக்கு வழி வகுத்தது, இஸ்ரேலை தளமாகக்கொண்டு, அங்கிருந்து சரக்கு அனுப்புநர், மென்ட்ஃபீல்ட் லாஜிஸ்டிக்ஸும், துபாய் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களிலிருந்து பொருட்களை அனுப்புவதன் மூலம், இந்த தரை வழி  வர்த்தக பாதைக்கு பங்களித்துள்ளது.

ஏமன்,  இஸ்ரேலிய கப்பல்களுக்கு தடை விதித்தார்களோ இல்லையோ, இவர்கள் அதற்காகவே காத்திருந்ததுபோல வியாபாரத்தை ஆரம்பித்து விட்டார்கள். அரேபியர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வியாபாரம் களை  கட்டத்தொடங்கிவிட்டது. இனி இந்தத் தரைவழியில் தொடர்ந்து வியாபாரம்  பெருகும் என்கிறார்கள்.  

இன்னும் சிலபேர், இந்தத்தரை வழித்தொடர்பு ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல, பலகாலமாகவே ரகசியமாக நடைபெறுகிறது என்கிறார்கள். 

சானல் thirteen கருத்துப்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும் டிரக்குகள், ஜோர்டானை அடையும் வரை, நியமிக்கப்பட்ட வழிகள் வழியாக, சவுதி அரேபியாவிற்குள் நுழைந்து, இறுதியில் ஜோர்டான் நதியைக் கடக்கும் வழியாக, இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹைஃபாவுக்குச் செல்கின்றன.

டெல் அவிவ் அரசாங்கத்துடன், ரியாத்திற்கு எந்த இராஜதந்திர உறவுகளும் இல்லை என்றாலும் கூட, இந்த பொருட்கள் சவூதி அரேபியா வழியாக செல்கின்றன, இது உலகெங்கிலும் உள்ள பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரகர்களிடமிருந்து, கோபத்தையும் சீற்றத்தையும் ஈர்த்துள்ளது. இந்த அரபியர்கள் உலக முஸ்லிம்களையும், மனிதநேய நல்லபிமானிகளிடம், நல்லவர்கள் போல நடித்து, முகங்களில் நன்றாகக் கறியைப்பூசி வைக்கிறார்கள். திருடன் என்று தெரியாத வரையில் நல்லவன், தெரிந்துவிட்டால், ஆம்.. திருடன், இப்போது என்ன அதற்க்கு என்று, சினிமாவில் பேசுகின்ற வசனம்போலவே இருக்கிறது அல்லவா?

சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வரும் கப்பல்கள், பஹ்ரைன் மற்றும் துபாய் துறைமுகங்களில் கொள்கலன்களை இறக்குகின்றன, பின்னர் சரக்குகள் ஜோர்டானிய டிரக்குகளில் ஏற்றப்பட்டு, ஜோர்டானுடனான கிங் ஹுசைன் எல்லை வழியாக இஸ்ரேலுக்கு தரைவழியாக மாற்றப்படுகின்றன, அங்கு இஸ்ரேலிய டிரக்குகள் பொருட்களுக்காக காத்திருக்கின்றன" என்று மென்ட்ஃபீல்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஓமர் இஜாரி கூறினார்.

இதுபோன்ற செயல்களெல்லாம், அங்குள்ள மக்களுக்குத் தெரியாமல் இருக்குமா? தெரிந்தாலும் சும்மாதான்  இருப்பார்களா? என்ன நடக்கிறது அரேபிய நாடுகளில், உண்மையில் இந்த அராபியர்கள் என்பவர்கள் யார்?  இவர்கள் முஸ்லீம்கள்தானா? இல்லை உலக மக்களை ஏமாற்றுகிறீர்களா? இப்படி அடுக்கடுக்காக பல கேள்விகள் எழுகிறதல்லவா?

இந்தியாவை விடுங்கள். சீனாவைப்பாருங்கள். அதன் வியாபாரப் பொருள்களும் இந்த வழியாகத்தான் செல்கிறதாம். உங்களுக்கு நினைவிருக்கிறதா? சீனாவின்  அலிபாபா வரைபடத்தில் இருந்து  இஸ்ரேல் நீக்கப்பட்டுவிட்டது என்னும் செய்திகள் வந்தன. இப்போது அதே சீனப்பொருள்கள் மறைமுகமாக விற்கப்படுகின்றன  என்றால் இதற்கு என்ன அர்த்தம்?  உங்களுக்கு ஏதாவது  புரிந்தால் கமெண்ட் பண்ணுங்கள்.

சரி, விட்ட இடத்திற்கு மீண்டும் வருவோம். 

சவுதி அரேபியா வழியாக கொண்டு செல்லப்படும், இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் பொருட்கள், இஸ்ரேலிய பொருட்களாக கண்காணிக்கப்படாமல் இருப்பதை, இந்த சேவை உறுதி செய்கிறது என்று, மென்ட்ஃபீல்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஓமர் இஜாரி மேலும் கூறினார்.

நாங்கள் வழங்கும் சேவையில், பொருட்கள் இஸ்ரேலுக்கு செல்கின்றன., ஆனால் அவை இஸ்ரேலுக்கு சாதாரண போக்குவரத்து வழியாக செல்கின்றன, மேலும், அது இஸ்ரேலிய பொருட்களாக தெரியப்படுத்தப்படுவதோ அல்லது கண்காணிக்கப்படுவதோ இல்லை" என்று இஷாரி கூறினார்.

இஸ்ரேலிய ஆட்சி, பாதைகளை பன்முகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவில் இருந்து, அபுதாபி வழியாக, சரக்குகளை தரைவழியாக மாற்றுவதற்கான திட்டங்களை உருவாக்கி வருகிறது, இது கப்பல் நேரங்களைக் குறைக்கிறது என்று, இஸ்ரேலிய போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அமைச்சர் மிரி ரெகேவ் ஜனவரியில் அறிவித்தார்.

இருப்பினும், கடந்த வாரம், இந்தியாவின் முன்னணி கடல்சார் ஒன்றியம், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியங்களுக்கு செல்லும் ஆயுத சரக்குகளை ஏற்றவோ அல்லது இறக்கவோ மாட்டோம் என்று கூறியது.  இதுவெல்லாம் உண்மையா அல்லது கண்துடைப்பா யாருக்குத் தெரியும்?

இந்திய தொழிற்சங்கங்களின் ஒரு பகுதியான, துறைமுகத் தொழிலாளர்கள், எப்போதும் போருக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற அப்பாவி மக்களைக் கொல்வதற்கு எதிராகவும் நிற்பார்கள்" என்று,  பதினோரு  முக்கிய இந்திய துறைமுகங்களில், மூவாயிரத்து ஐநூறு தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும், இந்திய நீர் போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு கூறியது.

இதற்கிடையில், இஸ்ரேலிய ஆட்சியுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு எதிராக யேமன் இராணுவம் தனது நடவடிக்கைகளை தொடர்கிறது.

கடந்த மாதம் பல முறை ஏமன் மீது குண்டு வீசிய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு சொந்தமான கப்பல்களைத் தவிர, பல கப்பல்கள் தங்கள் அடையாள அமைப்புகளில் "இஸ்ரேலுடன் எந்த தொடர்பும் இல்லை" என்பதை ஒளிபரப்புவதன் மூலம் பாதுகாப்பாக செங்கடலை கடந்துள்ளன என்று யேமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தங்களது ஆதரவிற்கு நன்றி. மேலும் பல முக்கிய செய்திகளை அடுத்தடுத்த கானொளிகளில் காண்போம். நன்றி.





Friday, 1 March 2024

ஒரே பாலஸ்தீனம் முஸ்லிம்கள், யூதர்கள், கிருஸ்தவர்கள் என அனைவரும் சம உரிம...


ஒரே பாலஸ்தீனம். முஸ்லிம்கள், யூதர்கள், கிருஸ்தவர்கள் என அனைவரும் சம உரிமையுடன் வாழக்கூடிய ஒரே நாடாக பாலஸ்தீனம் மீண்டும் மலரவேண்டும். 

அடக்குமுறைக்கு அடிபணிவது அவமானம், இஸ்ரேலின் முட்டாள்தனங்கள் ஒழிக்கப்படவேண்டும். சியோனிஸ்டுகள் ஆட்சி செய்யும் இஸ்ரேல், மனிதகுலத்திற்கு விரோதமாக செயல்படுவது மட்டுமின்றி, எந்த சர்வதேச சட்டங்களையும் மதிக்காமல், இந்த உலகத்தையே கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி,  பயங்கரவாத புத்தி பேதலிப்பும், இனவெறி என்னும் விஷமும் தலைக்கேறி, இந்த உலகம் முழுதும் பரந்து வாழும், பலகோடி மக்களையும், அவர்களின் அரசாங்கங்களும், தனக்கு அடிமையானவர்கள் என்று கொக்கரித்துத் திரியும், சிறு பயங்கரவாத கும்பலுக்கு அடிபணிவது, இந்த உலகம் முழுதும் உள்ள, மேன்மையான மனிதகுலம், சிறுமையான, புத்தி பேதலித்து வாழும் மூடர்களின் காலடியில் வீழ்ந்து கிடப்பதற்கு வழிவகுக்கும். 

இஸ்லாம் எதனால் உருவானது, அதன் கோற்பாடு என்ன? எத்தகைய கொடுமைகளையும், அநியாயங்களையும், அடக்குமுறைகளையும், அவமானங்களையும், பேரழிவுகளையம் தாண்டி இஸ்லாம் வளர்ந்து நின்றது. சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமநீதியையும், வறியவர்களை மேன்மைப்படுத்தி, சமதர்மத்தை வென்றெடுத்த இஸ்லாம் இன்று, இனவெறியின் உச்சகட்ட ஊசலாட்டத்தில் இருக்கும், ஒரு சிறு மூர்க்கத்தனமான காட்டுமிராண்டி கும்பலுக்கு பயந்து, மனித நேயத்தை அடகு வைப்பது எந்த வகையில் நாகரீகமானது. 

இஸ்ரேலின் இந்த அட்டூழியங்களை அனுமதிப்பது, இந்த நவீன உலகத்தை, கி.பி.ஐநூறுக்கு முன்னிருந்த காலத்தை நோக்கி இட்டுச்செல்லும். அதாவது நாம் வாழும் இந்த நிகழ்காலத்தை விட்டு, ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு பின்னோக்கி சென்றுவிடுவோம். இருநாடுகள் தீர்வும், அதில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி, பல பொய்களையும், படுகொலைகளையும், நிலங்களைத்திருடி, மிரட்டி, நிலமோசடிகளில் ஈடுபடும் மாஃபியாக்களிடம், ஆட்சியை, அரசாங்கத்தை ஒப்படைப்பது, எந்த வகையில் அமைதியை இந்த உலகில் ஏற்படுத்தும்?  கொடுங்கோல் புரிந்த அரசர்களையும், அரசங்களையும் ஒழித்து, நல்லவர்கள் நல்லாட்சி கொடுத்ததாக, வரலாற்றில் படிக்கிறோம். குழந்தைகளுக்கு, நன்னெறி படிப்பிணைகளுக்காக இது போன்ற, தீயவர்களை ஒழித்து, நல்லவர்களை, வறியவர்களை வாழவைக்க வேண்டும். அதற்க்கு, மனிதநேயம் வளர்க்கவேண்டும், அறிவை வளர்க்க வேண்டும், வீரம் வளர்க்க வேண்டும், விவேகம் வளர்க்க வேண்டும் என்றெல்லாம் கற்றுத் தருகிறோம்.  ஆனால் இன்று, ஒரு மூர்க்கன் பலசாலியாக இருக்கிறான் என்பதற்காக, ஒரு மிகப்பெரிய நிலபரப்பை மிரட்டி, ஏமாற்றி பிடுங்கி வைத்துக்கொண்டு, அளவற்ற கொலை கொள்ளைகள் புரிந்து, நாங்கள்தான் ஆட்சியாளர்கள், நாங்கள்தான் கடவுள் தேர்ந்தெடுத்த பிள்ளைகள், சர்வதேச சட்டங்களெல்லாம்  எல்லாம் எங்களிடம் செல்லாது, எங்கள் சட்டத்தைத்தான் சர்வதேசங்களும் மதித்து, கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இஸ்லாமிய உலகம் பெருமையுடன் போற்றும் அரபுநாடுகள், இன்று இந்த சியோனிஸ்டுகளின்  அடிவருடிகளாக, அவர்களை பின்தொடரும் நிழல்களாக,  மார்க்கம் மறந்து, சுயமரியாதையைத் துறந்து, வலிமை குன்றி, பெருமையைப் பறிகொடுத்து, மரபை மதியாது, திருமறையைப்பேணாது, போலி நாகரீகத்தின் மேல்பூச்சிலே மயங்கி,  பண்புகள் பிறழ, அறத்திலே பிடிப்பிழந்து, ஆண்மை குலைந்து, நம்பிக்கையை தவறவிட்டு, பதவி மோகத்தால் கவரப்பட்டு, பெட்ரோல் பணத்தில் திளைத்து. திருமறையைத் துழைத்து, மார்க்க நெறிகளைக் குலைத்து, மேற்கத்திய வாழ்வியலை வளைத்து, காஃபிரே பாதுகாப்பென அழைத்து, பதவி மோகத்துடனும், தமது அரச பரம்பரை, ஆண்டாண்டுகாலம் ஆட்சி செய்து அமோகமாக வாழ வேண்டும் என்னும் பேராசையே இன்று இஸ்லாமியர்களுக்கு பெரு நஷ்டமாக அமைகிறது என்பது, எங்கள் போன்ற பலரின் கண்ணோட்டமாக இருக்கிறது. உலகம் முழுவதும், சமத்துவத்தையும், மனித நேயத்தையும் ஏற்பவர்கள், முஸ்லிமாக இல்லாத போதும், இஸ்லாத்தின் கோட்பாடுகளின் பக்கம் நிற்கிறார்கள். குரல் கொடுக்கிறார்கள். இன்று பயங்கரவாதிகளுக்கெதிராக, அரசாங்க ரீதியாக நடவடிக்கை எடுக்கின்ற பல நாடுகளைப் பார்க்கிறோம். ஆனால், எந்த அரபு நாடு இஸ்ரேலுக்கு எதிராக, அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக ஒரு சிறு துரும்பையாவது நகர்த்தியது என்று உங்களால் கூற முடியுமா, சிந்தியுங்கள். 

எனவே இருநாடுகள் என்பது ஏமாற்றுவேலை.  ஆனால் ஒரே பாலஸ்தீன நாடு. அங்கே, எல்லா இன, மத, மொழியைச்சார்ந்தவர்கள் சம அந்தஸ்துடன் வாழவேண்டும் என்ற ஒரே நாடு கொள்கைதான் சரியான, வரலாற்றுப் பிழையற்ற, அறிவார்ந்த, சமஉரிமை சார்ந்த, நவ நாகரீகமான, மேன்மையடைந்த மனிதனின் தீர்வாக இருக்க முடியும். இந்த குழப்பமான கால கட்டத்தில், எங்கேயே ஏதோ பிரச்சினை நடக்கிறது, நமக்கென்ன என்று, சும்மாவாக,  செய்திகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்காமல், உங்கள் அறிவார்ந்த கருத்துக்களை, இந்த காணொலியைக் கேட்கின்ற அனைவரும் பதிவிடவும். அது உங்கள் எண்ணங்களையும், உங்கள் சிந்தனைகளில் தோன்றுகின்ற மேன்மைகளையும், அறிவு சார்ந்த, மனிதநேயம் சார்ந்த, நாகரிகம் சார்ந்த உங்கள் நிலைப்பாடுகளில், உங்களின் கண்ணியத்தை வெளிப்படுத்தும்.  

இனி மற்ற செய்தித்துளிகளை சற்று பார்ப்போம். அதற்க்கு முன், எங்கள் ச்சேனலை subscribe செய்யாத அனைவரும் subscribe செய்து கொள்ளுங்கள், subscription மிகவும் குறைவாக இருப்பதால், அடிக்கடி காணொளிகளை வெளியிட முடிவதில்லை. எமது channel monitize ஆனாலும், இதுவரையிலும் ஒரு நயா பைசா கூட வருமானம் ஈட்டித்தரவில்லை.  எங்களது நோக்கம் இந்த channelலில் இருந்து பணம் சம்பாதிப்பது அல்ல, நமது செய்திகளும், கருத்துக்களும் நிறைய பேர்களை சென்றடைகிறது, சிந்திக்கவைக்கிறது என்பதற்காகவே அதிக subscriptionகளையும், கமெண்டுகளையும் எதிர் பார்க்கிறோம்.

காஸாவில் உணவுக்காக காத்திருந்த அப்பாவிகள்,  நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்ற இஸ்ரேலிய ராணுவ கொலைகாரர்கள். மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயம். 

ஸ்கை நியூஸ் உடனான ஒரு நேர்காணலின் போது, ஒரு இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர், வடக்கு காசாவில் இஸ்ரேலிய படுகொலை குறித்து பேசினார், அங்கு  நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் உணவு வாகனங்களுக்காக காத்திருந்தபோது காயமடைந்தனர். இஸ்ரேலிய படைகள் அவர்களை "தவறுதலாக" சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறிய செய்தித் தொடர்பாளர், அப்பகுதியை "போர் மண்டலம்" என்று விவரித்ததை தொடர்ந்து, தாங்கள் எந்த அளவுக்கு மனிதகுல விரோதிகள் என்பதை, இஸ்ரேலிய பயங்கரவாதிகள் இந்த உலகத்திற்கு உணர்த்தியுள்ளனர்.

சியோனிசமும், இனவெறி  மேலாதிக்கமும் முடிவுக்கு வர வேண்டும்.  எந்த இனமோ அல்லது மக்களோ சர்வதேச சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சம உரிமை கொண்ட ஒரே மாநிலத் தீர்வு. சியோனிஸ்டுகளிடமிருந்து ஆட்சி பறிக்கப்பட்டு,  உண்மையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாலஸ்தீன  நாட்டில், முஸ்லிம்கள், யூதர்கள், கிருஸ்தவர்கள் என அனைவரும் சம உரிமையுடன் வாழக்கூடிய ஒரே நாடாக பாலஸ்தீனம் உருவாக வேண்டும். 

நெதன்யாகு, பயங்கரவாதிகளின் தலைவன், காஸாவில் நடக்கின்ற போரால், 'உணர்ச்சி ரீதியாக நொறுங்கி, மோசமான இடத்தில்' இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மோசக்கார பேர்வழி, இன வெறியின் உச்சக்கட்டத்தில், உலகில் உள்ள அனைத்து மாஃபியா, திருட்டு கும்பலின் தலைவனாக, உலகில் நடக்கும் அனைத்து underground பயங்கரவாதிகளின் தாதாவாக, பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தி, அப்பாவி மக்களை கொன்று குவித்தும், குழந்தைகளைக்கொன்று அவர்களைத் தீவிரவாதிகள் என்று கூறியும், குழந்தைகளின் பொம்மைகளைக்கைப்பற்றி, அவைகளை பேரழிவு ஆயுதங்கள் என்று கூறித்திரிவதும், மனவியாதியின் உச்சக்கட்டத்தில் இருக்கும் ஒரு மனநோயாளியின்  செயல் என்பதில் சந்தேகம் ஏதேனும் உண்டோ?

I C J கோர்ட்டில் ஜெர்மனியை கோர்த்துவிடும்  நிகரகுவா. காசாவில் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதில், ஜேர்மனி உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டி, நிகரகுவா நாடு,  ஐ சி ஜே சர்வதேச நீதிமன்றத்தில்,  ஒரு முறையான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

ஜெர்மனி கடந்த ஆண்டு, இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை, பத்து மடங்கு அதிகரித்தது. அக்டோபர் ஏழுக்குப் பிறகு வழங்கப்பட்ட இருநூற்றுப் பதினெட்டு  உரிமங்களில் நூற்று எண்பத்தைந்து உரிமங்கள் இஸ்ரேலுக்கானது. இந்த நிலையில்தான், நிகரகுவா ஜெர்மனியை ஐ சி ஜே விடம் கோர்த்துவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீன இன அழிப்பு சம்பவத்தில், உலகளாவிய அளவில், அரேபியர்களின் மீது தொடர்ந்து  பெருகிவரும் அதிருப்தியின் காரணமாக,   ஏமனில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த, தனது வான்வெளியை பயன்படுத்த கூட்டணி நாடுகளுக்கு அனுமதி அளிக்க சவுதி அரேபியா மறுத்துள்ளது.

இதுநாள் வரையில் அமெரிக்க எமென்மீது போர்க்கப்பலில் இருந்தே தாக்குதல் நடத்தி வந்தன.  இது அமெரிக்காவுக்கு மிகமிக ஆபத்தானதும், மிகமிக அதிகமான செலவை உண்டாக்கக்கூடிய, பயனற்ற தாக்குதல்களாக இருக்கும் நிலையில், தரையில் இருந்து தாக்க வசதியாக, சவூதியிடம் அனுமதி கேட்டிருக்கலாம் என்றும், அதை சவூதி மறுத்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.  சவூதியையும் ஏமனையும் மீண்டும் கோர்த்துவிட்டு, குளிர்காய அமேரிக்கா நினைத்தால், அது இந்த முறை நடக்காது என்றே தெரிகிறது. ஏனென்றால் யேமெனின் பின்புலத்தில் ஈரானும், ஈரானின் பின்புலத்தில் சீனாவும், ரஷியாவும் இருப்பதும், ஈரான், சீனா, ரஷ்யாவுடன், சவுதிஅரேபியா  பிரிக்ஸ் கூட்டமைப்பில் கால் பதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...