Saturday, 26 October 2024

அடுத்த சில மணி நேரங்களில் ஈரான் பதிலடி தருமா? Operation True Promise 3 ...


அடுத்த  சில மணி நேரங்களில் ஈரான் பதிலடி தருமா? Operation True Promise 3 ரெடி?

பதுங்கு குழிக்குள் ஒளிந்தபடி   ஈரானைத் தாக்க விமானப்படையை ஏவிய நெதன்யாஹு. 

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் மீதான அவர்களின் தாக்குதலை நிலத்தடி பதுங்கு குழியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெதன்யாஹூவின் மகன் மியாமியில் ஒளிந்து கொள்கிறார்.  நெதன்யாஹூ பதுங்கு குழியில் ஒளிந்து கொள்கிறார்.  இஸ்ரேலிய பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும்போது,  முன் வரிசையில் யஹ்யா சின்வார் இருந்தார் என்று நெட்டிஸன்கள் கழுவிக்கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தெஹ்ரான் மீது சூரியன் மெதுவாக உதிக்கிறது. ஈரான் போரை வென்றது, தெஹ்ரான், இரவு முழுவதும் மேம்பட்ட விமான எதிர்ப்பு அமைப்புகளை இயக்கும் வீரர்களால் ஈரான் பாதுகாக்கப்பட்டது என்று, உலகம் முழுவதும் மக்கள் ஆர்ப்பரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இனி ஈரானின் பதிலுக்காக காத்திருப்போம் என்றும் கூறிவருகிறார்கள்.

---

இஸ்ரேல்  விமானி தற்கொலை.

லெபனானில் கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் பத்து இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வீழ்ச்சி.  

இஸ்ரேலிய விமானப்படை விமானி ஆசஃப் தாகன் நேற்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்குமுன் தனது தாயாருக்கு ஒரு குறிப்பை விட்டுச் சென்றுள்ளார்.

அப்பாவி பாலஸ்தீன மக்களை ஆயிரக்கணக்கில்  கொன்று குவித்த பிறகு அவர், மன உளைச்சலுடன் திரிந்து  கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

இறப்பதற்கு முன்பான அவரது கடைசி வார்த்தைகள் என்னவென்றால்..:

"இன்று, என் கண்ணில் கண்ணீர் ஆறாக வழிகிறது,  எனது இந்த வார்த்தைகள் குழப்பத்துடனும், ஆழ்ந்த மனவேதனையுடனும்  எழுதப்படுகின்றன. எதைச் சொல்வது, எதைப் பகிர்வது, எதைப் பகிரக் கூடாது என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு தெரியாத பல உண்மைகள் உள்ளன.  உங்கள் அன்பு என் இதயத்தில்  ஆழமாக பதிந்துள்ளது.  உங்களிடம்  உண்மை சொல்வதால், ஒருவேளை நான் ஆறுதல் அடைந்தேன் என்பதை நீங்கள் அறியும்போது அறிவது உங்களுக்கு நிம்மதியளிக்கும், மேலும் நீங்கள் என்னைப் பற்றி இனி கவலைப்பட மாட்டீர்கள் என்று  குறிப்பிட்டுள்ளார். இங்கு, தெரியாத பல உண்மைகள் என்று குறிப்பிடப்பட்டது, அப்பாவி பாலஸ்தீனர்களை கொன்று குவித்தது என்பது தெரிகிறது.

--

 இஸ்ரேலின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேலியர்கள்  நிலத்தடி பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஒழிந்ததைப்போல இல்லாமல் , ஈரான் மீதான இஸ்ரேலின் துல்லிய  தாக்குதலை கேலி செய்ய, ஈரான் மக்கள் கூரைகளின் மேல் பரப்புகளுக்கு சென்று, இஸ்ரேலின் துல்லியத் தாக்குதல்  ஏவுகணைகளை துலாவிக் கொண்டிருந்தார்களாம்.

---

தற்போதைய முக்கிய மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்தி. ஈரானும் ஈராக்கும் தங்கள் வான்வெளியை மூடின. வரும் சில மணி நேரங்களில் ஈரான் பதிலடி கொடுக்கலாம். Operation True Promise  மூன்று என்று இந்த நடவடிக்கைக்குப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆயிரம் முதல் இரண்டாயிரம்  ஏவுகணைகள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

எனினும், இஸ்ரேலால் ஈரானின் மீது  பெருத்த சேதத்தை ஏற்படுத்த  முடியாத  நிலையில், ஈரான் பதில் தாக்குதல் நடத்தாது என்றும், Operation True Promise  மூன்று எனப்படும் இந்த நடவடிக்கையைப் பற்றிய செய்தியானது, இஸ்ரேலிய ராணுவத்தை தூக்கமிழக்கச்செய்து, பயத்தில் வைக்கக்கூடிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

---

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் நாங்கள் பங்கேற்கவில்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்  நடவடிக்கையில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்றும், இராஜதந்திரத்தை அதிகரிப்பதன் மூலம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதட்டங்களைக் குறைப்பதே எங்கள் குறிக்கோள் என்று கூறியுள்ளது.

இஸ்ரேல் மீதான அதன் தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்றும் , அப்பொழுதுதான் இந்த போர் சுழற்சி மேலும் விரிவாக்கம் இல்லாமல் நிறுத்தப்பட முடியும் என்றும் கூறியுள்ளது.

 மேலும் தகவல்கள் தொடர்கின்றன. subscribe செய்துகொள்ளுங்கள். நன்றி.

---.



இஸ்ரேல் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த ஈரான் | Iran Repelled Israel At...


ஈரான்மீது  இஸ்ரேல் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த ஈரான்...

ஈரானுக்குள் கேட்ட  வெடிச்சத்தம்,  வான் பாதுகாப்பு சாதனங்கள் எழுப்பியதே... 

இஸ்ரேல் தாக்குதலுக்குப்பின் ஈரானில்  நிலை.

ஈரானிலிருந்து பிரத்தியேகச் செய்தி ... 

தெஹ்ரான், குஜெஸ்தான் மற்றும், இலாம் மாகாணங்களில் உள்ள நிலைகளை குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை ஈரானின் வான் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்றும் ஈரான் கூறியுள்ளது. 

இஸ்ரேலின் எந்தவொரு தாக்குதல் நடவடிக்கையையும் தவிர்ப்பதற்காக, குற்றவியல் மற்றும் சட்டவிரோத சியோனிச ஆட்சிக்கு எதிராக , இஸ்லாமிய குடியரசின் அதிகாரிகள் முன்  கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், இந்த இஸ்ரேலிய போலி ஆட்சி, இன்று காலை தெஹ்ரான், குஜெஸ்தான் மற்றும் இலாம் மாகாணங்களில் உள்ள இராணுவ மையங்களின் சில பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈரானை தாக்கியது என்று ஈரானின்விமான பாதுகாப்புப் படை, இன்று சனிக்கிழமை காலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

--

ஈரான் நாட்டின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதலை வெற்றிகரமாக இடைமறித்து எதிர்கொண்டது என்று ஈரான் கூறியது.

இந்த தாக்குதல்கள், சில இடங்களில் மட்டுப்படுத்தப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியதாகவும், சம்பவத்தின் பரிமாணங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்பாக,  இந்த கட்டத்தில் நான் கவனித்தது இதோ,:

இஸ்ரேலியர்கள் நிறைய ஏவுகணைகளை ஏவினர் - அனைத்தும் அதிகபட்ச ஏவக்கூடிய தூரத்தில் இருந்து ஏவப்பட்டது...

ஈரான் நிறைய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை நிறுவி வைத்துள்ளது...

சேதங்கள் தொடர்பான  உறுதியான அறிக்கைகள் அல்லது வீடியோ ஆதாரங்கள் இதுவரை இல்லை என்று, வில் ஷ்ரைவர் என்கிற ஒரு  நோக்கரின் அறிக்கை  தெரிவிக்கிறது.

--

முன்னதாக, தெஹ்ரானுக்கு அருகிலுள்ள சிலரால் கேட்கப்பட்ட உரத்த ஒலிகள், வான் பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்துவதால் ஏற்பட்டவை என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரானின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம், சனிக்கிழமை காலை ஒரு பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி, தலைநகரில் கேட்ட சில ஒலிகள் "தெஹ்ரானில் பாதுகாப்பு நடவடிக்கைகளால்" ஏற்பட்டவை என்று கூறியது.

உதவி தேவைப்படும் சம்பவங்கள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை என்றும், மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தின் நிலைமை "இயல்பானது" என்றும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானிய வான் பாதுகாப்பு "தெஹ்ரான் மாகாணத்தைச் சுற்றியுள்ள வான்வெளியில் எதிரி இலக்குகளை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது" என்று ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் பகிரப்பட்ட காட்சிகள் ஈரானிய தலைநகர் மீது இடைமறிப்புகள் போல் தோன்றியதைப் படம்பிடித்தன.

 --

இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையம் மற்றும், மெஹ்ராபாத் விமான நிலையத்தில் நிலைமை இயல்பானது என்று, தஸ்னிம் செய்தி நிறுவனம் சனிக்கிழமை காலை தெரிவித்துள்ளது.

தெஹ்ரானின் மேற்கு மற்றும் தென்மேற்கில் உள்ள இஸ்லாமிய புரட்சி காவலர் படை (ஐ.ஆர்.ஜி.சி) இராணுவ மையங்கள் மீது, எந்த ஏவுகணை தாக்குதலும் அல்லது தாக்கமும் ஏற்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தி நிறுவனம் பெற்ற தகவல்களின்படி, தெஹ்ரானின் மேற்கு அல்லது தென்மேற்கில் உள்ள I R G C இராணுவ மையங்களில் எந்த பாதிப்பும் இல்லை.

தெஹ்ரானைச் சுற்றியுள்ள மூன்று பகுதிகளில், இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தின் வான் பாதுகாப்பு தொடர்பான ஒலிகள் கேட்கப்படுகின்றன.

"முன்னர் கூறியபடி" இஸ்ரேலிய அராஜக தாக்குதல்களுக்கு  பதிலளிக்க ஈரான் தயாராக இருப்பதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தஸ்னிமிடம் தெரிவித்தன.

"எந்த வடிவிலான ஆக்கிரமிப்புக்கும் பதிலளிப்பதற்கான அதன் உரிமையை, ஈரான் தக்க வைத்துக் கொண்டுள்ளது, எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும், இஸ்ரேல் தகுந்த  பதிலடிகளைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை என்று  தெரிவிக்கிறது.    

மேலும் செய்திகள் தொடரும். subscribe செய்து கொள்ளுங்கள். நன்றி.


Saturday, 19 October 2024

Israel is on fire! Will it burn of Escape? கண்ணைக்கட்டி விடப்படும் இஸ்ர...


கண்ணைக்கட்டி நெருப்பில் விடப்படும் இஸ்ரேல்...!

பொசுங்குமா?  பலம் பெறுமா?

இதுநாள்வரை, ஹமாஸ், ஹெஸ்பொல்லாஹ் போன்ற, சுதந்திர போராட்டக்குழுக்களின் தலைவர்களின் பெயர்களும்,  அவர்களின் நடவடிக்கைகளும்,  இந்த உலகம் முழுவதும் அறியப்பட்டவைகளாக  இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். 

ஹசன் நஸ்ரல்லாஹ்,  இஸ்மாயில் ஹனியே, யஹ்யா சின்வர்  போன்றவர்களை  பல வருடங்களாகத் தொடர்ந்து கண்காணித்து,   அவர்களைக் கொல்ல முடியாமல், கொத்து கொத்தாக அழிவுகர குண்டுகளை, கண்மூடித்தனமாக, சந்து பொந்துகளிலெல்லாம் வீசி, ஹசன் நஸ்ரல்லாஹ், யஹ்யா சின்வர் போன்ற தலைகளைக்கொன்றது, துல்லியத் தாக்குதல்களுக்காக இஸ்ரேலுக்கு கிடைத்த வெற்றிகளல்ல, அது இஸ்ரேல் என்னும் பயங்கரவாத நாட்டுக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்த வெற்றி.  மொஸாட் எனப்படும் இஸ்ரேலிய உளவுத்துறை உண்மையில் சக்தி வாய்ந்ததாக இருந்திருந்தால், எந்தவித சேதமும் இன்றி என்றைக்கோ அவர்களை கொன்றிருப்பார்கள். ஆனால், அந்த உயர்த்திப்பேசப்பட்ட மோசடி அமைப்பின் கையாலாகதத் தனத்தால்தான், குத்துமதிப்பாக குண்டுகளை வீசி மொத்தமாகக் கொலை செய்கிறார்கள். இந்த கொலைகளானது, மொஸாட் அமைப்புக்கு எந்தவித வெற்றியையும் தேடித்தரவில்லை. மாறாக, மிகப்பெரிய அவமனாத்தைத்தான் தேடித்தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே, இனி வரும் காலங்களில், இந்த சுதந்திரப்போராளிகளின் தலைவர்களின் பெயர்கள், வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்படாமல், செய்தித்தொடர்பாளர்களின் மூலம் மட்டும் செய்திகளை பரிமாறிக்கொள்வது, இஸ்ரேலுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தப்போகிறது.  இஸ்ரேலின் கண்கள் பிடுங்கப்பட்டு, நடுக்கடலில் அல்ல, நெருப்பின் நடுவில் விடப்பட்ட சருகுகளாய் மாறப்போகிறார்கள் என்பதில் ஐயமில்லை.  

தற்போது, ஹமாஸ் தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்டிருக்கும் ஃகாலித் மெஷல், முன்னரே ஒரு சக்திவாய்ந்த தலைவராக இருந்தவர். அப்போது இஸ்ரேலின் பிரதமராக இருந்த ஏரியல் சரோன், வெளியுறவு மந்திரியாக இருந்த tzipi livni ஆகியோர், அமெரிக்க அதிபராக இருந்த, பில் கிளின்டன் மற்றும் வெளியுறவு மந்திரி கொண்டொலீசா ரைஸ் ஆகியவர்களின் ஆசியுடன்,   ஃகாலித் மெஷல் அவர்களை ஜோர்டானில் வைத்து கொலை செய்ய, மொஸாட் அமைப்பு செய்த இமாலய முயற்சிகள் பெருந்தோல்வியில் முடிந்தது. இதன் மூலம், ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதட்டம் ஏற்பட்டு, பின் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் தலையிட்டு, ஏரியல் ஷரோன் வருத்தம் தெரிவிக்க வலியறுத்தியதன் மூலம், அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.  இதுபோல நேருக்கு  நேராக சண்டையிட  தகுதியில்லாத, இஸ்ரேலிய ராணுவம், மொஸாட் மூலமாக தந்திரமாகவும் செய்த பல கொலை முயற்சிகள் மண்ணைக்கவ்வின.

தற்போதைய நிகழ்வுகள்,  இஸ்ரேல் பயங்கரவாதம் மற்றும் அமெரிக்க அராஜகங்களுக்கு வெற்றி கிடைப்பது போல பிம்பத்தை தோற்றுவித்தாலும், உண்மையில் இவர்களுக்கு ஒரு நிலையில்லாத, நிம்மதியில்லாத எதிர்காலத்தை நோக்கியே இட்டுச்செல்லும் என்பது உறுதியாகத் தெரிகிறது.  தியாகிகளின் ரத்தம் திருச்சபையின் வித்து என்றும், கெடுவான் கேடு நினைப்பான் என்றும், காலம் காலமாக அறியப்பட்டுவரும் வாசகங்கள், உங்களுக்கு இஸ்ரேலின் இருண்ட எதிர்காலத்தை வெளிச்சம்போட்டு காட்டக்கூடும். 

மேலும், தற்போதைய பேரழிவு நிகழ்வுகளால், பிரிந்தும் தளர்ந்தும்  போயிருக்கும் பல்வேறு போராளிகளின் குழுக்கள், மீண்டும் ஒன்றிணைந்து, தற்போதைய நிகழ்வுகளின் தாக்கத்தையும், பாதிப்பையும் மனதில் கொண்டு, அடுத்த பெரும் போர், எதிரிகளின் நிலப்பரப்பில் நடத்தப்பட வேண்டும் என்பதையும்,  எதிரிகளின் தொழில்நுட்பத்தில் மண்ணைத்தூவி, iron Curtain எனப்படும் ஒரு மாய இரும்புத்திறையை உருவாக்கினால் மட்டுமே, எதிரிகள் நெருங்க முடியாத ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்க முடியக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.  உதாரணமாக, சோவியத் ரஷியா உடைக்கப்பட்டபின், தன்னைச் சுற்றி iron Curtain எனப்படும் ஒரு இரும்புத்திறையை உருவாக்கி தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பின், தன்னை பெருமளவுக்கு பலப்படுத்திக்கொண்டது என்பதை இந்த உலகம் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. 

ஆய்வாளரான, சலாம் குதூஸ் என்பவரின் கருத்துப்படி, சுதந்திரப் போராட்டங்கள் என்பது , தமது சமூகத்துக்கு தேவையான பாதுகாப்பையும், சுதந்திரமான வாழ்க்கையையும் உறுதிசெய்யும் விதமாக இருக்கும் வண்ணம், அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டும். பேரழிவையும், பெரும் உயிர்ச் சேதத்தையும் உண்டாக்கும் தாக்குதல்களிலிருந்து, பெரும் அரணாக, தமது மக்களை காக்கும் தலைவர்களாக  உருவெடுக்கவேண்டும் என்பது, பாலஸ்தீனத்தின் தற்போதைய மிக முக்கிய தேவையாக இருக்கிறது.  எனவே, ஒரு  ராணுவத்தின் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவதும், எதிரிகளின் பலத்தையும், பலவீனத்தையும் நன்றாக அலசி ஆராய்ந்தபின், அதன் பலங்களை முறியடிக்கத் தேவையான ஆயுதங்களை நிறுவுவதும், உடல் மற்றும் மனோதத்துவ ரீதியான,  தீர்க்கமான மற்றும் உறுதியான முடிவுகள் எடுப்பதும்,  சிறந்த ராஜதந்திர உத்திகளாக இருக்கும் பட்சத்தில்,  தமது பக்கமான அழிவுகள் குறைக்கப்பட்டு, எதிரிகளின் நரித்தந்திரங்கள் நொறுக்கப்பட்டு, எதிர்பார்க்கப்படும் அளவுக்கு வெற்றிகளை  ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

இந்த செய்தியை அறியும் நீங்கள், உங்களது மேலான கருத்துக்களையும் comment பகுதியில் பதிவு செய்யுங்கள். செய்திகளிலுள்ள குறைகளையும் நிறைகளையும் சுட்டிக்காட்டுங்கள். subscribe செய்துகொள்ளுங்கள். இணைந்திருங்கள். மேலும் அடுத்த செய்தியில் சந்திப்போம். நன்றி.

Thursday, 17 October 2024

அயர்ன் டோமை தூக்கி குப்பையில் போடுங்க Iran Installed Advanced Laser Air ...


அயர்ன் டோமை தூக்கி குப்பையில் போடுங்க. 

ஈரானின் அதிநவீன  லேசர் வான் பாதுகாப்பு சாதனம் தயார் நிலையில்.

எதிரிகளின் ஆளில்லா விமானங்கள் உட்பட, எந்த விதமான  வான்வழி அச்சுறுத்தல்களையம்  எதிர்கொள்ளும் திறன் கொண்ட, அதி நவீன லேசர் ஆயுதத்தை தயாரித்து நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளதாக ஈரான் கூறுகிறது. "சதேப்" என்று அழைக்கப்படும் இந்த லேசர் பீரங்கி, சக்திவாய்ந்த லேசர் கற்றைகளைப் பயன்படுத்தி, வான்வழி இலக்குகளை இலகுவாக சுட்டு வீழ்த்த முடியும் என்றும், இந்த லேசர் பாதுகாப்பு  அமைப்பானது "முக்கியமான பகுதிகளை" பாதுகாக்க பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், லேசர் ஆயுத தொழில்நுட்பத்தில், ஈரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்பது உலகம் அறிந்த செய்தி. இராணுவ பயன்பாடுகளுக்காக ஈரான் பல வகையான லேசர் அமைப்புகளை உருவாக்கியுள்ளது என்று, பலவிதமான உலகளாவிய ராணுவ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன, இதில் துல்லியமான இலக்குக்கான, லேசர் வழிகாட்டப்பட்ட ஆயுதங்கள் மற்றும், வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவையம் அடங்கும். வெட்டுதல் மற்றும் வேலைப்பாடு போன்ற தொழில்துறை பயன்பாடுகளுக்கு லேசர்களைப் பயன்படுத்துவதில் உள்ள திறன்களையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், குறிப்பிட்ட செயல்பாட்டு அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்திறன் பற்றிய விவரங்கள், குறைவாகவே வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுவிட்டால், இஸ்ரேலும், அமெரிக்காவும், மற்றும் மேற்கத்திய நாடுகளும், எந்த பொந்துகளில் ஓடி ஒழிந்து, தங்களது அவமானகர முகத்தை மறைத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.

ஈரானின் லேசர் ஆயுதங்களைத்தவிர, சீனா, ரஷ்யா போன்ற பெருந்தலைகளும், தங்களது நவீன வான் பாதுகாப்பு  சாதனங்களை அளித்துள்ளதாகத் தெரிகிறது. 

இந்த மாதம், அதாவது அக்டோபர் நான்காம் தேதி. மெஹ்தி எச் என்பவரின் எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு படத்தின்படி, ஈரான் ஒரு புதிய மேம்பட்ட லேசர் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த லேசர் அமைப்பு, சீனாவில் தயாரிக்கப்பட்ட, ஷென் நுங் ஷீல்ட், அதாவது தெய்வீக விவசாயி என்னும் குறியீட்டுடன் மூவாயிரம் மற்றும் ஐயாயிரம் வரிசை லேசர் பாதுகாப்பு அமைப்பாக இருக்கலாம் என்று, ஆரம்ப பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன, இது 'சைலண்ட் ஹண்டர்' என்றும் அழைக்கப்படுகிறது. குறைந்த உயர அச்சுறுத்தல்களுக்கு எதிராக, அதன் தற்காப்பு திறன்களை மேம்படுத்த, ஈரான் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை பெற்றிருக்கலாம் என்பதை இந்த பார்வை குறிக்கிறது.

ஈரான் அமைத்துள்ள இந்த வான் பாதுகாப்பு சாதனங்களில் கண்டறியப்பட்ட அமைப்பு, எல் ஏ எஸ் எஸ் எனப்படும், ஒரு குறைந்த உயர, லேசர் பாதுகாப்பு அமைப்பு ஆகும், இது ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும், பிற குறைந்த உயரத்தில் பறக்கும் பொருட்களை குறிவைத்து அழிக்கும் திறனால் வகைப்படுத்தப் படுகிறது. "சைலண்ட் ஹண்டர்" என்று அழைக்கப்படும் இந்த பாதுகாப்பு சாதனம்  மின்சாரத்தால் இயங்கும், Fiber Optic  லேசர் ஆயுத அமைப்பாகும். இது முப்பது  முதல் நூறு கிலோவாட் வரையிலான சக்தி வெளியீட்டைக் கொண்டுள்ளது, இது பல்வேறு வரம்புகள் மற்றும் உயரங்களில் உள்ள  இலக்குகளை திறம்பட ஈடுபடுத்த அனுமதிக்கிறது.

மேலும், நவீன சமச்சீரற்ற போர்முறையில், ஒரு பொதுவான அம்சமாக மாறியுள்ள அதிநவீன ட்ரோன் ஊடுருவல்களுக்கு எதிராக, அதன் வான்வெளியைப் பாதுகாப்பதற்கான ஈரானின் திறனை இது மேம்படுத்துகிறது. 

ஏற்கெனவே, அமேரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் லேசர் ராணுவ தளவாடங்களை தயாரித்து வருகின்றன. இஸ்ரேலிலும், ஐயன் டோம் போல, ஐயன் பீம் என்கிற லேசர் சாதனத்தை தயாரிக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், எலி வலை போன்ற இத்தனூண்டு இடத்தில் உக்கார்ந்து கொண்டு, அளவில்லாத அளவுக்கு அட்டகாசம் செய்ய நினைக்கும். இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாட்டுத்தலைவர்களுக்கு,  பாதுகாப்பு என்று நினைத்து தாங்கள் தயாரிக்கும் பாதுகாப்பு  சாதனங்கள், தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுவிடும் என்பதை, தாங்கள் உணர்வதற்கு முன்னரே அழிந்துவிடுவோம் என்பதை உணராத முட்டாள்களாக இருக்கிறார்கள்.  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

சரி, மேலும் இதுபோல, மற்றொரு செய்தியில் மீண்டும் சந்திப்போம். தொடர்ந்து இணைந்திருக்க subscribe செய்து கொள்ளுங்கள். உடலையும் மனதையும் திடமாக வைத்துக்கொள்ளுங்கள், தாய் தந்தையருக்கும், எளியோருக்கும்  உங்களால் ஆன உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள். நன்றி. 


Wednesday, 16 October 2024

THAAD என்னும் அதி நவீன வான் பாதுகாப்பு சாதனத்தை டுபாக்கூராக்கிய ஈரான்


 THAAD என்னும் அதி நவீன வான் பாதுகாப்பு சாதனத்தை டுபாக்கூராக்கிய ஈரான்.

இஸ்ரேல்ல, அமெரிக்காவோட thaad  அப்படிங்கற, அதி நவீன Air defense சிஸ்டெம் வெச்சாச்சு. இந்த thaad Air defense சிஸ்டெம்தான், உலகத்துலயே மிகவும் அதி நவீனமான  Air defense சிஸ்டெம்னு சொல்றாங்க. அதனால, இனி ஈரானோட ஏவுகணைகள் இஸ்ரேல் வான் பரப்புல பறந்து வந்தா, அத சுலபமா தாக்கி அழிச்சிரலாம்னு செய்திகள் பரப்பறாங்க. இந்த செய்தி உண்மையா..?

Thaad சிஸ்டம் அப்படிங்கறது உண்மைல என்னான்னா, குறுகிய, நடுத்தர மற்றும் இடைப்பட்ட தூர, பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க வடிவமைக்கப்பட்ட, Terminal, High, Altitude, Area, Defense அமைப்பு ஆகும். இந்த Thaad defense சிஸ்டத்த ஊடுருவுவதற்கான ஈரானோட திறமையானது, ஈரானோட ஏவுகணை தொழில்நுட்பம், மற்றும் தாக்கக்கூடிய திறன் உட்பட பல்வேறு காரணிகள், thaad சிஸ்டெத்த தடுமாற வைக்கிர அளவுக்கு சிறப்பா இருக்கிறதா சொல்றாங்க. ஈரான் இஸ்ரேல இரண்டாவது முறையா தாக்குன, Operation True Promise அப்படிங்கற நடவடிக்கை  மூலமா, ஈரான் இதை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் சொல்றாங்க.

Thaad Air defens சிஸ்டம், ஏற்கெனவே இஸ்ரேலுக்குள் ரகசியமாக பொறுத்தி உள்ளதாவும், ஆனால், அது ஈரான் ஏவுகணைகள் சிலவற்றை சரிவர தாக்கி அழிக்கவில்லை என்பதுதான் உண்மைன்னும், பெயர் சொல்ல விரும்பாத சில முக்கிய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிச்சிருக்கிறதாகத் தெரிகிறது. ஈரான் சமீபத்தில நடத்துன, Operation True Promise இரண்டு அப்படீன்னு சொல்லப்பட்ட, இஸ்ரேல் மீதான இரண்டாவது தாக்குதல உடனடியா நடத்தாம, ஈரான் காலம் தாழ்த்திட்டே வந்தது நம்ம எல்லாருக்கும் தெரியும்.  இதுக்கு உண்மையான காரணம் என்னன்னா.., இங்க ஒரு நிமிடம் கவனிங்க... ஈரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்துனா, thaad சிஸ்டம், அந்த ஏவுகணைகளை எப்படி தடுத்து அழிக்கிறது, அப்படீங்கறத தெரிஞ்சிக்கிறதுக்கு, அமேரிக்கா ரகசியமாகவும்  அவசர அவசரமாகவும்  thaad சிஸ்டம் இன்ஸ்டால் பண்ணதா சொல்றாங்க. இதை உளவாளிகள் மூலமா மோப்பம் பிடித்த ஈரான், தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், thaad சிஸ்டத்தோட கண்ணுல மண்ணத்தூவிவிட்டு, சரியாக விழுந்து வெடிக்கிறதான்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்தோட, அந்த thaad சிஸ்டம், இஸ்ரலோட சில பகுதிகள்ல இன்ஸ்டால் பண்ணி முடிக்கும்வரை காலம் தாழ்த்தியதாகவும்,  சொல்ராங்க. 

இஸ்ரேல் மீதான ஈரானுடைய இந்த Real Time சோதனை வெற்றிகரமா முடிஞ்சுது, அதோட, ஈரானோட துல்லிய தாக்குதல்கள் வெற்றிகரமாகவும் அமைஞ்சுது. இதனாலதான், ஈரான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், அன்ஸாருல்லா போன்ற அமைப்புகள் எல்லாம் இந்த வெற்றியை மிகப்பெரிய அளவில் கொண்டாடினாங்க. வாயடைச்சுப்போன இஸ்ரேல், அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகள் தெகைச்சுப்போய் அமைதி ஆயிட்டாங்க. அதனால, இப்போதான் thaad சிஸ்டெத்த முதல் முறையா இஸ்ரேலுக்குள்ளாற அமைக்கறோம்னு சொல்றதெல்லாம், வெறும் வாய் வழி மிரட்டல்தான்னும் சொல்றாங்க.  

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால செய்ய முடியறது எல்லாம் என்னன்னா, பக்க பலமில்லாத போராளிக்குழுக்களோட சண்டை போட்டு வெற்றிபெற நினைக்கிறது. அப்புறம் அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்னு பேரழிவை ஏற்படுத்துறது மட்டும்தான். இவங்கனால எந்த ஒரு வலிமையான நாட்டோடவும் சண்டை போடமுடியாது, சண்டை போட்டு வெற்றி பெறவும் முடியாது. எப்பவும், யாரையாவது அடிச்சுட்டு, மிரட்டல் உருட்டல் வேலைகள பாத்துட்டே இருந்தா மட்டும்தான் இவங்க பொழப்பு ஓடும்போல. இதெல்லாம் என்ன ஒரு பொழப்போ போங்க.  

ஏற்கெனவே, அயண்டோம், ஏரோ one , ஏரோ two, டேவிட் ஸ்லிங் மாதிரியான, ஏ ஐ தொழில் நுட்பமெல்லாம் உபயோகப்படுத்தி, வான் பாதுகாப்பு சாதனங்கள் வைக்கிறாங்க. எதை வச்சாலும் என்ன பயன்? மழை வந்தா, நாட்டுக்கே குடை பிடிக்க முடியுமா, மழை மாதிரி நெருப்பு வந்தாதான் தடுக்க முடியுமா? அழிக்கிறது சுலபம், அத இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்யுது. ஆனா காப்பாத்துறது கடினம். அதனால, இஸ்ரேல் ரொம்ப நாளைக்கு தன்னை காப்பாத்திக்க முடியாது. அமெரிக்காகூட, ரொம்ப நாளைக்கு  இஸ்ரேல காப்பாத்திட்டே இருக்க முடியாது. ஒருநாள் இல்லைன்னா இன்னொருநாள், பட்டுன்னு அடி வாங்கி பொட்டுன்னு போயிரும். இது ஏதோ ஒரு பஞ்ச் டயலாக் மாதிரி இருந்தாலும், உங்களுக்கு உண்மைகள் புரிஞ்சிருக்கும், ஆமாவா இல்லையா..?

சரி, இதுபோல  மீண்டும் பல செய்திகள் மூலமாக நாம் மீண்டும் சந்திக்கலாம், மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள், இணைந்திருங்கள். நன்றி.


-----

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...