கண்ணைக்கட்டி நெருப்பில் விடப்படும் இஸ்ரேல்...!
பொசுங்குமா? பலம் பெறுமா?
இதுநாள்வரை, ஹமாஸ், ஹெஸ்பொல்லாஹ் போன்ற, சுதந்திர போராட்டக்குழுக்களின் தலைவர்களின் பெயர்களும், அவர்களின் நடவடிக்கைகளும், இந்த உலகம் முழுவதும் அறியப்பட்டவைகளாக இருப்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஹசன் நஸ்ரல்லாஹ், இஸ்மாயில் ஹனியே, யஹ்யா சின்வர் போன்றவர்களை பல வருடங்களாகத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களைக் கொல்ல முடியாமல், கொத்து கொத்தாக அழிவுகர குண்டுகளை, கண்மூடித்தனமாக, சந்து பொந்துகளிலெல்லாம் வீசி, ஹசன் நஸ்ரல்லாஹ், யஹ்யா சின்வர் போன்ற தலைகளைக்கொன்றது, துல்லியத் தாக்குதல்களுக்காக இஸ்ரேலுக்கு கிடைத்த வெற்றிகளல்ல, அது இஸ்ரேல் என்னும் பயங்கரவாத நாட்டுக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்த வெற்றி. மொஸாட் எனப்படும் இஸ்ரேலிய உளவுத்துறை உண்மையில் சக்தி வாய்ந்ததாக இருந்திருந்தால், எந்தவித சேதமும் இன்றி என்றைக்கோ அவர்களை கொன்றிருப்பார்கள். ஆனால், அந்த உயர்த்திப்பேசப்பட்ட மோசடி அமைப்பின் கையாலாகதத் தனத்தால்தான், குத்துமதிப்பாக குண்டுகளை வீசி மொத்தமாகக் கொலை செய்கிறார்கள். இந்த கொலைகளானது, மொஸாட் அமைப்புக்கு எந்தவித வெற்றியையும் தேடித்தரவில்லை. மாறாக, மிகப்பெரிய அவமனாத்தைத்தான் தேடித்தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இனி வரும் காலங்களில், இந்த சுதந்திரப்போராளிகளின் தலைவர்களின் பெயர்கள், வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்படாமல், செய்தித்தொடர்பாளர்களின் மூலம் மட்டும் செய்திகளை பரிமாறிக்கொள்வது, இஸ்ரேலுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தப்போகிறது. இஸ்ரேலின் கண்கள் பிடுங்கப்பட்டு, நடுக்கடலில் அல்ல, நெருப்பின் நடுவில் விடப்பட்ட சருகுகளாய் மாறப்போகிறார்கள் என்பதில் ஐயமில்லை.
தற்போது, ஹமாஸ் தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்டிருக்கும் ஃகாலித் மெஷல், முன்னரே ஒரு சக்திவாய்ந்த தலைவராக இருந்தவர். அப்போது இஸ்ரேலின் பிரதமராக இருந்த ஏரியல் சரோன், வெளியுறவு மந்திரியாக இருந்த tzipi livni ஆகியோர், அமெரிக்க அதிபராக இருந்த, பில் கிளின்டன் மற்றும் வெளியுறவு மந்திரி கொண்டொலீசா ரைஸ் ஆகியவர்களின் ஆசியுடன், ஃகாலித் மெஷல் அவர்களை ஜோர்டானில் வைத்து கொலை செய்ய, மொஸாட் அமைப்பு செய்த இமாலய முயற்சிகள் பெருந்தோல்வியில் முடிந்தது. இதன் மூலம், ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதட்டம் ஏற்பட்டு, பின் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் தலையிட்டு, ஏரியல் ஷரோன் வருத்தம் தெரிவிக்க வலியறுத்தியதன் மூலம், அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதுபோல நேருக்கு நேராக சண்டையிட தகுதியில்லாத, இஸ்ரேலிய ராணுவம், மொஸாட் மூலமாக தந்திரமாகவும் செய்த பல கொலை முயற்சிகள் மண்ணைக்கவ்வின.
தற்போதைய நிகழ்வுகள், இஸ்ரேல் பயங்கரவாதம் மற்றும் அமெரிக்க அராஜகங்களுக்கு வெற்றி கிடைப்பது போல பிம்பத்தை தோற்றுவித்தாலும், உண்மையில் இவர்களுக்கு ஒரு நிலையில்லாத, நிம்மதியில்லாத எதிர்காலத்தை நோக்கியே இட்டுச்செல்லும் என்பது உறுதியாகத் தெரிகிறது. தியாகிகளின் ரத்தம் திருச்சபையின் வித்து என்றும், கெடுவான் கேடு நினைப்பான் என்றும், காலம் காலமாக அறியப்பட்டுவரும் வாசகங்கள், உங்களுக்கு இஸ்ரேலின் இருண்ட எதிர்காலத்தை வெளிச்சம்போட்டு காட்டக்கூடும்.
மேலும், தற்போதைய பேரழிவு நிகழ்வுகளால், பிரிந்தும் தளர்ந்தும் போயிருக்கும் பல்வேறு போராளிகளின் குழுக்கள், மீண்டும் ஒன்றிணைந்து, தற்போதைய நிகழ்வுகளின் தாக்கத்தையும், பாதிப்பையும் மனதில் கொண்டு, அடுத்த பெரும் போர், எதிரிகளின் நிலப்பரப்பில் நடத்தப்பட வேண்டும் என்பதையும், எதிரிகளின் தொழில்நுட்பத்தில் மண்ணைத்தூவி, iron Curtain எனப்படும் ஒரு மாய இரும்புத்திறையை உருவாக்கினால் மட்டுமே, எதிரிகள் நெருங்க முடியாத ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்க முடியக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உதாரணமாக, சோவியத் ரஷியா உடைக்கப்பட்டபின், தன்னைச் சுற்றி iron Curtain எனப்படும் ஒரு இரும்புத்திறையை உருவாக்கி தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பின், தன்னை பெருமளவுக்கு பலப்படுத்திக்கொண்டது என்பதை இந்த உலகம் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஆய்வாளரான, சலாம் குதூஸ் என்பவரின் கருத்துப்படி, சுதந்திரப் போராட்டங்கள் என்பது , தமது சமூகத்துக்கு தேவையான பாதுகாப்பையும், சுதந்திரமான வாழ்க்கையையும் உறுதிசெய்யும் விதமாக இருக்கும் வண்ணம், அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டும். பேரழிவையும், பெரும் உயிர்ச் சேதத்தையும் உண்டாக்கும் தாக்குதல்களிலிருந்து, பெரும் அரணாக, தமது மக்களை காக்கும் தலைவர்களாக உருவெடுக்கவேண்டும் என்பது, பாலஸ்தீனத்தின் தற்போதைய மிக முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே, ஒரு ராணுவத்தின் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவதும், எதிரிகளின் பலத்தையும், பலவீனத்தையும் நன்றாக அலசி ஆராய்ந்தபின், அதன் பலங்களை முறியடிக்கத் தேவையான ஆயுதங்களை நிறுவுவதும், உடல் மற்றும் மனோதத்துவ ரீதியான, தீர்க்கமான மற்றும் உறுதியான முடிவுகள் எடுப்பதும், சிறந்த ராஜதந்திர உத்திகளாக இருக்கும் பட்சத்தில், தமது பக்கமான அழிவுகள் குறைக்கப்பட்டு, எதிரிகளின் நரித்தந்திரங்கள் நொறுக்கப்பட்டு, எதிர்பார்க்கப்படும் அளவுக்கு வெற்றிகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இந்த செய்தியை அறியும் நீங்கள், உங்களது மேலான கருத்துக்களையும் comment பகுதியில் பதிவு செய்யுங்கள். செய்திகளிலுள்ள குறைகளையும் நிறைகளையும் சுட்டிக்காட்டுங்கள். subscribe செய்துகொள்ளுங்கள். இணைந்திருங்கள். மேலும் அடுத்த செய்தியில் சந்திப்போம். நன்றி.
No comments:
Post a Comment