Saturday, 30 November 2024

Death blow to Netanyahu's ambition | வரைபடத்தை மாற்றியமைக்கும் நெதன்யாஹூ...


லெபனான் தோல்விக்குப்பின், சிரியாவில் பயங்கரவாதத்தை தேர்ந்தெடுத்த அமேரிக்கா மற்றும் கூட்டாளிகள்.

மத்திய கிழக்கின் வரைபடத்தை மாற்றியமைக்கும் நெதன்யாஹூவின் பிரம்மைக்கு மரண அடி.

சிரியாவில் கிழிந்த எர்டோகனின் முகத்திரை. 

லெபனான் மற்றும் பாலஸ்தீனிய பிராந்தியங்கள் முழுவதிலும், இஸ்ரேல் பயங்கரவாதத்தை எதிர்க்கும் போராளி இயக்கங்களின் கைகளில், இஸ்ரேலிய ஆட்சி அடைந்துள்ள தோல்விகளைத் தொடர்ந்து, சிரியாவில் நடக்கும் மோதல்கள், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அமெரிக்காவின் மற்றொரு முயற்சியாக  கூறப்படுகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை, தனது சிரியா பிரதிநிதி பாசம் அல்-சபாக் உடனான தொலைபேசி உரையாடலின் போது, ஈரானின்  உயர்மட்ட இராஜதந்திரியான அப்பாஸ் அரக்ச்சி இந்த கருத்துக்களை வெளியிட்டார். மேலும் வடக்கு சிரியாவில், தக்ஃபிரி பயங்கரவாத தாக்குதல்களை, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சூழ்ச்சியான திட்டத்தின் விளைவு என்றும் தெரிவித்துள்ளார்.

ஹெஸ்பொல்லாவுடனான போர் நிறுத்தம், மேற்கு ஆசியாவை பலாத்காரத்தின் மூலம் மறுவடிவமைக்கும் இஸ்ரேலின் போலித் தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஹிஸ்புல்லாவுடன் இஸ்ரேல் செய்து கொண்ட போர் நிறுத்தம், மேற்கு ஆசியாவை மிரட்டி பலவந்தமாக மாற்றியமைக்கும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் - மாயையை - தகர்த்துவிட்டது என்று, பாலஸ்தீன எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ் கூறுகிறது.

டெல்அவிவை  நோக்கி இடைவிடாமல் ஏவத்தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஹெஸ்பொல்லாவின் பன்னிரெண்டாயிரம் அதிநவீன ஏவுகனைகளில் சிக்கி, இஸ்ரேல் தலைநகரம் காசாவைவிட படுபயங்கர பேரழிவிலிருந்து தப்பிக்க, போர்நிறுத்தம் அறிவிக்கக்கப்பட்டுள்ளது.  இந்த உண்மைகளை மறைத்து, மேற்கத்திய ஊடகங்களும், பல தமிழ் ஊடகங்களும்,  இஸ்ரேலுக்கு முட்டுக்கொடுத்து தூக்கிப் பிடித்து வருகின்றனர் என்பதை நேயர்கள் யாவரும் அறிவர்.

லெபனானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை, தனது தாக்குதலுக்கான குறிக்கோள்களை அடையாமலேயே இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது, மத்திய கிழக்கின் வரைபடத்தை பலவந்தமாக மாற்றுவதற்கான, நெதன்யாகுவின் பிரமைகளை உடைப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும் என்று ஹமாஸ் புதன்கிழமை தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பயங்கரவாதத்தை எதிர்க்கும் எதிர்ப்புப் படைகளைத் தோற்கடிப்பது அல்லது அவர்களை நிராயுதபாணியாக்குவது போன்ற பிரம்மைகள் தவிடுபொடியாக்கப்பட்டன. போராளிகளின் உறுதியும்,  அவர்களுக்கான  மக்கள் ஆதரவும் இல்லாமல், இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்காது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். எங்கள் இயக்கம் எங்கள் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் எங்களின் போராட்டத்தை ஆதரிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்று ஹமாஸ் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

சிரியாவில், ஹயாத் தஹ்ரிர் அல்ஷாம் அதாவது ஹெச் டீ எஸ் என்றழைக்கப்படும் தக்ஃபிரி பயங்கரவாத குழுவின் உறுப்பினர்கள், சிரியாவின் பல அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளை ஆக்கிரமித்ததாகவும், அரபு நாட்டின் வடக்கில், டஜன் கணக்கான சிரிய வீரர்களைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், லெபனானின் அல்-மயாதீன் தொலைக்காட்சி நெட்வொர்க், அலெப்போ மாகாணத்தில் பெரிய அளவிலான பயங்கரவாத நடவடிக்கைகளை, சிரிய இராணுவம் ஒரு முன்கூட்டிய தாக்குதல் மூலம் முறியடித்ததாக கூறியது.

அலெப்போவுக்கு வடமேற்கே, பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனாதான் நகரில் இருந்து தொடங்கவிருந்த, நான்கு பெரிய பயங்கரவாத நடவடிக்கைகள், அவை தொடங்குவதற்கு முன்பே முறியடிக்கப்பட்டன என்று அந்த நெட்வொர்க் தெரிவித்துள்ளது.

சிரியா அரசாங்கமும் சிரிய மக்களும் ஒன்றிணைந்து, பயங்கரவாதிகள் தங்களது குறிக்கோள்கள் அடியாதவண்ணம் தொடர்ந்து பதிலடிகள் கொடுப்போம் என்று சிரியா தெரிவித்துள்ளது.

சிரியாவின் இறையாண்மையின் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களை மிகக் கடுமையாகச் சாடியுள்ள ரஸ்சியா, இந்த தாக்குதல்கள் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

துருக்கியின் எர்தோகனைப்போன்ற அமெரிக்காவின் பினாமிகள், The Great சாத்தான் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் கூட்டணியில், சிரியாவில் மீண்டும் ஒன்று கூடி இருக்கிறார்கள்.  கடந்த முறையைப் போலவே இந்த முறையும் அவர்கள் தோல்வியடைவார்கள் என்று ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படை லெபனானில் இருந்து  வெளியேறுகிறது என்று கேள்விப்பட்ட பின்னர்,  சிரியா மீது போர் தொடுக்கலாம் என்று  எதிர்பார்க்கப்பட்டது. லெபனான் அல்லது ஈரானை விட சிரியாவை தோற்கடிப்பது எளிது என்று டிரம்ப் நிர்வாகம் நினைக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

----

Thursday, 21 November 2024

Breaking: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்...


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி யோவ் கல்லன்ட் ஆகியோருக்கு, காசா உட்பட பாலஸ்தீனிய பிராந்தியங்களில் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக, கைது ஆணைகளை பிறப்பித்துள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது.

Hague நீதிமன்றத்தின் விசாரணைக்குபின், பெஞ்சமின் நெதன்யாகு மற்றும்  யோவ் கேலண்ட் ஆகிய இரண்டு தனிநபர்களுக்கு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக, கைது வாரண்டுகளுக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்த நாள் வரை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

ரோம் சாசனத்தின் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாவது பிரிவுகளின் கீழ், இஸ்ரேலின் வாதங்கள் அனைத்தையும், நீதிமன்றம் ஒருமனதாக நிராகரித்தது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநெதன்யாஹூ மற்றும் கல்லன்ட்  செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் குறித்து நீதிமன்றம் கூறுகையில், நெதன்யாகு மற்றும் கேலண்ட்  இருவரும், ஒருவர் மற்றவருடன் கூட்டாக குற்றச் செயல்களை செய்ததற்காக, சககுற்றவாளிகள் என்ற முறையில், பின்வரும் குற்றங்களுக்கு குற்றவியல் பொறுப்பைக் கொண்டுள்ளனர்: போர் முனையில் அப்பாவிகளை பட்டினியில் வாடவிட்டது போர்க்குற்றம். மற்றும் கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று வரிசைப்படுத்தியுள்ளது.

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதல், சமீபத்தில் அதன் இரண்டாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், ஏற்கனவே சுமார் நாற்பத்தையாயிரம்  பாலஸ்தீனியர்களை கொன்றுள்ளது, அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள், மற்றும் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதல் கிட்டத்தட்ட அப்பகுதியின் முழு மக்களையும் இடம்பெயர்த்துள்ளது, இன்னும்  தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த குற்றங்கள், வேண்டுமென்றே காசா முற்றுகையிடப்பட்ட பின் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  இது, உணவு, சுத்தமான நீர் மற்றும், மருந்துகளின் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது, மக்களை பட்டினியின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது.

இத்தகைய கொடிய குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்த காரணத்தால், நெதன்யாஹூவையும், யோவ் காலாண்டையும் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

அடுத்து என்ன நடக்கும்?

சட்ட நடவடிக்கைகள்: நெதன்யாகு மற்றும் கேலண்ட் ஆகியோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை ஐ.சி.சி தொடரும். கைது செய்யப்பட்டால் சாத்தியமான விசாரணைக்கு தயாரிப்பதும் இதில் அடங்கும்.

First Point  : சர்வதேச பதில்: ஐசிசி உறுப்பு நாடுகள் தங்கள் அதிகார வரம்புகளுக்குள் நுழைந்தால், தனிநபர்களைக் கைது செய்ய சட்டப்பூர்வ கடமையில் உள்ளன. இது இராஜதந்திர பதட்டங்களை அதிகரிப்பதற்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

Second Point : மேல்முறையீடுகள் மற்றும் சவால்கள்: ஐ.சி.சி.யின் அதிகார வரம்பை இஸ்ரேல் நிராகரித்துள்ளது, மற்றும் வாரண்டுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. நெதன்யாகு மற்றும் கேலண்ட் ஆகியோர், இந்த குற்றச்சாட்டுகளை கண்டித்துள்ளனர், அவை யூத எதிர்ப்பு மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று கூறியுள்ளனர்.

Third Point : இஸ்ரேல் மீதான தாக்கம்: இந்த பிடி வாரண்டுகள், இஸ்ரேலின் இராஜதந்திர உறவுகள் மற்றும் போர் நிறுத்தம், அல்லது அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல் மற்றும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை சிக்கலாக்கும். இது உள்நாட்டு அரசியலையும், இஸ்ரேலுக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலைப்பாட்டையும் பாதிக்கலாம்.

சர்வதேச சட்டம் மற்றும் மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கங்களுடன், நிலைமை சிக்கலானது மற்றும் உருவாகி வருகிறது. ICJயின் அறிவிப்புக்குப்பின் என்ன நடக்கும் என்பது பற்றிய உங்களது கருத்துக்களை பதிவு செய்வீர். நன்றி.

Wednesday, 20 November 2024

மொசாத்தின் டிஜிட்டல் கோட்டையை தகர்த்த ஈரான் | இஸ்ரேலிய கப்பலை கப்பலை கைப...


மொசாத்தின் டிஜிட்டல் கோட்டையை ஈரான் தகர்த்த ஈரான்.

உக்ரைனில் தூதரகங்களை மூடிய அமெரிக்கா, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி. 

துருக்கி வான்பரப்பில் நெதன்யாஹு நுழைய அனுமதி மறுத்த எர்டோகன்.

சற்றுமுன் இஸ்ரேலிய கப்பலை கப்பலை கைப்பற்றிய ஏமன் படைகள்.
---
ஈரான் வெற்றிகரமாக மொசாட்டின் எஸ் எஸ் வி பிளாக்செயின் நெட்வொர்க்கை ஹேக் செய்து, எட்டு Terabyte அளவிலான வகைப்படுத்தப்பட்ட தகவல்களை ஹேக்  செய்துள்ளது. 

மொசாத்தின் டிஜிட்டல் கோட்டையை ஈரான் தகர்த்தது. எட்டு Terabyte வகைப்படுத்தப்பட்ட தரவானது,  நாம்தான் பெரியவர் என்று கொக்கரித்துக் கொண்டிருந்த மொசாத்துக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.

இவ்வாரு  தகவல்களை ஹேக் செய்வதும், உச்சத்தில் உள்ள ஒரு வகையான சைபர் போராகும். மொசாட்டின் பிளாக்செயின் நெட்வொர்க்கை ஈரான் வெற்றிகரமாக மீறியது, மொசாத்துக்கும், மற்றவர்களுக்கும் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது. அந்த செய்தியானது, எந்த அமைப்பும் பாதுகாப்பானது அல்ல என்பதைக் குறிக்கிறது.

இந்த சம்பவம்  ஒரு ஹேக் மட்டுமல்ல, இது உளவுத்துறை விளையாட்டில் ஒரு பெரிய  நில அதிர்வு  மாற்றம். மொசாத் உட்பட யாரும்,  எட்டமுடியாத உயரத்தில் உள்ளவர்கள்  அல்ல என்பதை ஈரான் நிரூபித்ததாகக் கூறப்படுகிறது..
---
அமெரிக்கா, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள், ஒரு பெரிய ரஷ்ய தாக்குதலை எதிர்பார்த்து, உக்ரைனில் உள்ள தங்கள் தூதரகங்களை மூடியுள்ளன.  அவசரகதியில் ரஷ்யாவைத் தாக்க பைடன் கொடுத்த அனுமதியை நிராகரித்த இத்தாலி, ரஷ்யாவின்மீது நடத்தப்படும் தாக்குதல்களை நாங்கள் ஏற்கவில்லை என்று  ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், உக்ரைனில் உள்ள அனைத்து A T C A M S   ஏவுகணைகளையும் தாக்கி அளிக்க, புடின் ஆணை பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மிதமாக இருந்த ரஷ்யாவை தூண்டிவிட்டு, உக்ரைனியர்களை சாகடிக்க அமேரிக்கா வழிவகுக்கிறது என்று பலரும்  கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
--
துருக்கி வான் எல்லைக்குள் நுழைய அனுமதி மறுத்து, நெதன்யாகுவின் விமானத்தை துருக்கி அதிபர் எர்டோகன் தடுத்துள்ளார். 

அசர்பைஜான்  தலைநகர் பாகுவில், பருவநிலை மாற்றம் தொடர்பான ஒரு மாநாட்டிற்கு செல்ல, துருக்கியின் வான்வெளியைத் திறக்க இஸ்ரேல் அதிபர் வலியுறுத்தினார், ஆனால் துருக்கி அதற்கு மறுத்துவிட்டது.

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் எந்தவொரு நாடும், தனது வான் பரப்பை, இஸ்ரேலிய  அரசியல்வாதிகள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்னும் கோரிக்கை வலுத்து வருகிறது என்று கூறப்படுகிறது.
----

சற்றுமுன் இஸ்ரேலிய கப்பலை கைப்பற்றிய ஏமன் படைகள்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான புதிய நடவடிக்கையில், ஒரு இஸ்ரேல் கப்பலை ஏமன் படைகள் கைப்பற்றியுள்ளன. 

இது ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டதாகக்  கருத்தப்படக்கூடிய U S S ஆப்ரஹாம் லிங்கன் போர்க்கப்பலை அமெரிக்கா திரும்பப் பெற்ற ஒரு நாளைக்குள், இஸ்ரேலிய கப்பல் செங்கடலில் ஹவுதிக்களால் கைப்பற்றப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
---
நேற்று  காசாவில் உடனடியான , நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தைக் கோரும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்தது. பகைமைகளை நிறுத்தி, பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பதினான்கு  வாக்குகள் கிடைத்தன, ஆனால், அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம் காரணமாக அந்த போர் நிறுத்த தீர்மானம் தடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, பல்வேறு சர்வதேச விமர்சனங்களை ஈர்த்துள்ளது, சிலர் அமெரிக்கா தொடர்ந்து வன்முறைக்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டினர்.

இந்த தீர்மானத்தில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக U K  ஆம் என்று வாக்களித்தது. மேலும், காஸாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவும் பாதுகாப்பும் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் போர் நிறுத்தப்பட நாம் தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் அறிவித்துள்ளது.

இந்தியா போர் நிறுத்தத் தீர்மானம் அமெரிக்காவால் தோற்கடிக்கப்பட்ட அதே நேரம், காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், எழுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்பது பெருத்த வேதனையாக இருக்கிறது.

---

காசா   போர் நிறுத்தத் தீர்மானத்தை வீட்டோ செய்த அமெரிக்கா 


Breaking: ஹெஸ்பொல்லாஹ் எச்சரிக்கை : 12,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் டெல்அவிவ...


ஹவுதிக்கள் வைத்த உறுதியான ஆப்பு.  அமெரிக்க போர்க்கப்பல்  எஸ்கேப். 

துருக்கியின் Anatolu S சரக்கு கப்பலை தாக்கிய ஹவுதிக்கள். 

ஹெஸ்பொல்லாஹ் எச்சரிக்கை. 12000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் டெல்அவிவை நோக்கி தயார் நிலையில்.. 

டெல் அவிவை அழிக்கும் திறன் கொண்ட பதினோராயிரம்  வெடிக்கும் ஆயுதங்கள் மற்றும் ஹைப்பர்சோனிக் வேகம் கொண்பன்னிரெண்டாயிரம்  பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரித்துள்ளதாக ஹெஸ்பொல்லா அறிவித்துள்ளது. அவை இப்போது எந்த நேரத்திலும் ஏவப்படுவதற்கு ஏவுதளங்களில் தயாராக உள்ளன. இந்தப் பன்னிரெண்டாயிரம் ஏவுகணைகளும் ஒரே நேரத்தில் தொடர்ந்து ஏவப்பட்டால், அயர்ன் டோம் என்னும் இரும்புக்கவசம் அட்டைக்கவசமாக மாறி பற்றி எரிந்துவிடும் என்று  கூறப்படுகிறது.  அதுவும் இத்தனை ஏவுகணைகளும் டெல்அவிவை நோக்கி மட்டுமே குறிவைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பாலிஸ்டிக் தாக்குதல் மட்டும் நடத்தப்பட்டால், இஸ்ரேல் தலைநகரமான டெல்அவிவின் நிலைமை காசாவின் தற்போதைய பேரழிவைவிட பெரும் பேரழிவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

--
செங்கடலில் துருக்கியின் அனடோலு எஸ் போர்க்கப்பல் மீது ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு முன்னர் கப்பலுக்கு பல எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதாக அன்சருல்லாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி துண்டித்துள்ளதாக ஜனாதிபதி எர்டோகன் கூறிய போதிலும், அனடோலு எஸ் இஸ்ரேலுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

பாலஸ்தீனத்தின் எதிரிகளானாலும், முதுகில் குத்தும் துரோகிகளானாலும், பாலஸ்தீனத்தில் இன அழிப்பை நிகழ்த்தும் சியோனிச பயங்கரவாதிகளுக்கு உதவும் யாரையும் தாக்குவோம் என்று ஹஉதிக்கள் தெளிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
---

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஏமனில் இருந்து பெரும் தாக்குதலுக்கு உள்ளான ஆபிரஹாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை, மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா திரும்பப் பெற்றது.
போர்க்கப்பல்களைப் பொறுத்தவரை, ஈரான், ரஷியா, சீனா போன்ற நாடுகள் நடத்திய, கடல்சார்ந்த ராணுவ ஒத்திகைகளில், அமெரிக்க போர்க்கப்பல்களை சுலபமாக அழித்துவிட முடியும் என்பதையே காட்டுகிறது. ஒரு தீவிரமானபோரின் முதல் பதினைந்து நிமிடங்களில், அமெரிக்கா அனைத்து விமானம் தாங்கி கப்பல்களையும் இழக்கும் நிலை ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், ஈரானின்torpedoes, அதிவேகப் படகுகள், போர்க்கப்பல்களுக்கு அருகிலேயே சென்று வெடிகுண்டுகளை கப்பலின் வெளிப்புறத்தில் ஆங்காங்கே ஒட்டவைத்துவிட்டு தப்பிவரக்கூடிய வலிமை இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிவேக தற்கொலைப்படகுகளும், அமெரிக்காவை தெரிக்கவைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

--
இப்போது நேட்டோ, உக்ரைனில் இருந்து ஏவப்பட்டஆறு அமெரிக்க ஏட்டிஏசிஎம்எஸ் ஏவுகணைகளால் ரஷ்யாவைத் தாக்கியது. ரஷ்யாவின் கொள்கை மற்றும் கோட்பாட்டின்படி, அது இப்போது உக்ரைன் மற்றும் நேட்டோ இரண்டையும் அணு ஆயுதங்களால் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இந்த நீண்டதூர ஏவுகணை தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடிகள் தருவது தொடர்பான ஆலோசனைகள் விரைவில் ரசிய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யா மீது உக்ரைன் குண்டு வீசுவதற்கு, பைடன் ஒப்புதல் அளித்ததற்கு பதிலடியாக, இருபத்தைந்தாவது திருத்தத்தின் கீழ், பைடனை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அமெரிக்க தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். டொனால்ட் ட்ரம்பிடம் ஒப்படைக்கப்படும் ஆட்சி, ட்ரம்புக்கு பெரிய தலைவலியாக இருக்க வேண்டும் என்னும் நோக்குடனேயே இதுபோன்ற காரியங்கள் அரங்கேறுகின்றன என்றும் கூறப்படுகிறது.

---
நீண்டதூர ஏவுகணைகளைக்கொண்டு ரஷ்யாவைத்தாக்க பைடன் அனுமதி அளித்ததும், அதைத்தொடர்ந்து உக்ரைன் ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்தியதும், அதைத்தொடர்ந்து ரஷ்யா நடக்கவிருக்கும் எதிர் வினை தொடர்பான அச்சம், நாட்டோ நாடுகளிடம் மேலோங்கி இருக்கும் நிலையில், ரஷ்யாவிற்குள் நடக்கும் தாக்குதல்களை ஆதரிக்கவில்லை என்று இத்தாலி கூறியுள்ளது.

ரஷ்யாவிற்குள் உக்ரைன் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் அமெரிக்க அதிபர் பைடனின் முடிவை, இத்தாலி ஆதரிக்கவில்லை என்று, இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.

மோதலின் விரிவாக்கம் குறித்து, இத்தாலி எச்சரிக்கையான அணுகுமுறையைப் பேணுவதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது என்றும். மெலோனியின் நிலைப்பாடு, நேரடி இராணுவ மோதலைக் காட்டிலும், பிற வழிகளில் அமைதியை ஊக்குவிக்கும் பரந்த மூலோபாயத்தை பிரதிபலிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும் அதிக செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம், தொடர்ந்து இணைந்திருங்கள். எமது நுன்னுரை பதிப்புகளை subscribe செய்துகொள்ளுங்கள். பெல் பட்டனையும் அழுத்தி வையுங்கள். நன்றி .
---

Tuesday, 19 November 2024

Conspiracy : சதி வலை - முஸ்லிம்களை அடியோடு ஒழிக்க பின்னப்பட்ட சதி வலை #...


முஸ்லிம்களை அடியோடு ஒழிக்க பின்னப்பட்ட சதி வலை. 

அடுத்த 25 வருடங்களில் உலகில் உள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளையும் ஒழித்து, இஸ்லாத்தை சுவடில்லாமல் அழித்துவிட நடைபெறும் சதிகள்.

ஆதிக்க வெறி பிடித்தவர்களும், பாசிச சிந்தனைவாதிகளும், பண முதலைகளும், முதலாளித்துவவாதிகளும், சாமானியர்களாக வாழும் மனிதகுலத்தை  தனக்கு அடிமைகளாக்கி, ராஜபோகத்தை அனுபவிக்க நினைக்கும் தனவந்தர்களுக்கும் இஸ்லாத்தின் வளர்ச்சி ஒரு பேரிடியாகத் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். 

உலகத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் அடக்கிவைத்து ஆதிக்கம் செலுத்த நினைக்கும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. இவர்களுக்கு இஸ்லாம் போன்ற சகோதரத்துவம் பேசுகிற, சமத்துவம் பேசுகிற  மார்க்கங்கள் முதன்மையான எதிரிகள். இவர்கள் ஒருக்காலும் இஸ்லாம் போன்று நியாயம் பேசுகிற தத்துவங்களை ஏற்பதில்லை. இவர்களுக்கு இறை நம்பிக்கை இல்லை, இறைவனைப்பற்றிய பயமும் இல்லை. இம்மை மறுமை போன்றவற்றை ஏற்பதுமில்லை.

இன்று இஸ்லாம் இந்த உலகில் பெருமளவு வளர்ந்து பறந்து இருப்பதற்குக் காரணம், அது பேசுகிற சமதத்துவ நீதிதான். இஸ்லாம் என்பது ஏழைகளுக்கானது, எளியவர்களுக்கானது, வறியவர்களுக்கானது. இவர்களுக்கு ஆதரவாக இஸ்லாம் நியாத்தை போதிப்பதால், பெரும்பாலோர் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாக இருக்கின்றனர். அதானால் இஸ்லாம் ஒரு வளர்ந்த மிகப்பெரிய மாதமாக இருக்கிறது.

ஆனால், ஆதிக்க சிந்தனையில் மூழ்கியிருக்கின்ற பணக்காரர்களோ, இம்மையில், இந்த உலகில் வாழும்போது சாதாரண மக்களுக்கும், அப்பாவிகளுக்கும் அநீதி இழைத்தால், மறுமையில், அதாவது மரணத்துக்குப்பின், மரணிப்பதற்குமுன் செய்த பாவங்களுக்கு கடுமையான தண்டனை, எல்லாம் வல்ல இறைவனால் வழங்கப்படும் என்ற பயத்தின் காரணமாக நல்லவர்களாக இருக்கிறார்கள், அல்லது, நல்லவர்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆதிக்கவாதிகள், இறைவனுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ, எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிற நியாயவாதிகளுக்கு பயப்படுகிறார்கள்.  இறைவனின் சட்டமாக கருதப்படும், முஸ்லிம்களின் ஷரீயத் என்னும் சட்ட புத்தகம், நியாயவாதிகளையும் நீதிமான்களையும் வழிநடத்தக்கூடியதாக இருக்கிறது.  இந்த ஷரியத் காட்டும் வழியில் நடை பயில்பவர்கள், தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய தனவந்தர்களாலும் அவர்களை தண்டித்து விடுவார். நீதி நிலைநாட்டப்பட்டுவிடும்.  ஆனால் இந்த  தண்டனைகள் எல்லாம், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின்  மையப்பகுதியில் தகுதியற்றதாகப் போய்விடும். 

நாம் மற்றவர்களைவிட அதிகமாக வளரவேண்டும், மற்றவர்களைவிட சிறப்பாக வாழவேண்டும்,  பெரும்பான்மையானவர்கள் தனக்குக்கீழ்  இருக்கவேண்டும். மற்றவர்கள் தனது ஆளுமையின்கீழ் தனக்காக வேலை செய்யவேண்டும் என்று நினைப்பதும் சிறிய அளவிலான ஆதிக்க வெறியே. அதற்க்கு மாறாக, நாம் மற்றவர்களையும் உயர்த்தவேண்டும், நம்முடன் மற்றவர்களும் சிறப்பாக வாழவேண்டும், பெரும்பானமையானவர்கள் மற்றவர்களை பெருமைப்படுத்துபவர்களாக வாழவேண்டும், தனது ஆளுமை மற்ற ஆளுமைகளுடன் இனைந்து ஒரு ஆளுமை மிகுந்த சமுதாயமாக வாழவேண்டும் என்று நினைப்பதுதான் மனிதநேயம். இதைத்தானே இஸ்லாம் மார்க்கமும் போதிக்கிறது.  நமக்குத் திறமையிருந்தால் எவ்வளவு அதிகமாக வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் தேவைக்கு அதிகமாக சம்பாதித்ததை, தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து, தனது சமுதாயத்தில் எல்லார்க்கும் எல்லாம் என்னும் சமநீதியை உருவாக்குபவன்தான் சரியான மனிதன். இந்த நிலையை அடைய, மனித நேயமும், மனிதாபிமானமும், சக மனிதனை நேசிக்கின்ற எண்ணம் கண்டிப்பாக வேண்டும். 

ஆனால், அடிமைத்தனத்தை விரும்புகின்ற ஆதிக்கவாதிகள் இதற்கு மாறுபட்டவர்கள். மனித நேயத்தையும், மனிதாபிமானத்தையும் எதிர்க்கிறார்கள். சமநீதியை ஒரு சாக்கடையாகப் பார்க்கிறார்கள். எல்லா மனிதர்களும் சமமானவர்களல்ல, வெகுசில ஆதிக்கவாதிகளை  உயர்வானவர்களாகவும், மற்ற மனிதர்களை அடிமைகளாகவும் கருதுகிறார்கள். இந்த சிந்தனை உடையவர்கள் தற்போது தங்களை வலிமைப்படுத்திக் கொண்டார்கள்.  எப்படித் தெரியுமா?

இருபதாம் நூற்றாண்டுக்கு முன்புவரை, உடல்பலமும், வாள், வேல், வில் அம்பு போன்றவைதான் நீதியை  நிலை நாட்டும் ஆயுதங்களாக பயன்பட்டன. மனிதர்களுக்கான சமநீதியை மறுப்பவர்கள் எல்லை மீறாமல் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் என்று வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டனவோ, அன்றிலிருந்து புத்துணர்வுபெற்ற மனிதகுல விரோதிகள் தற்போது உச்ச நிலையை எட்டிக்கொண்டிருக்கும் ஏ ஐ - Atrificial Intelligence technology வரை தமக்கு சாதகமாக வளர்த்துக்கொண்டு, இந்த உலகை  மேலான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டார்கள். மனிதர்களை கொலை செய்வது இவர்களுக்கு ஓரு  விளையாட்டு, இந்த கொலைகளை சுவையான சக்கரைப்பொங்கல் சாப்பிடுவதைப்போல மகிழ்ச்சியடைகிறார்கள். எவ்வளவு நூறுகோடி மக்களையும், இவர்கள் ஈவிரக்கமின்று கொன்று குவித்து தமது ஆதிக்கவெறியை நிலை நாட்டத்துணிந்து விட்டார்கள்.  இனி இவர்களுக்கு சட்டங்களில் பயமில்லை, இறைவன், இம்மை, மறுமைகளைப்பற்றி பயமில்லை, நியாவாதிகளின் புஜபலமும் ஆயுதபலம் பற்றியெல்லாம்கூட பயமே இல்லை. 

ஆதிக்கவெறி பிடித்தவர்கள் வளர்ந்து விட்டார்கள், கற்பனைக்கு எட்டாத உயரத்துக்கு ஆயுத பலம் பெற்றுவிட்டார்கள். உலக வங்கியும், உலக மயமாக்கலும், ஐக்கியநாட்டு சபையும், அமெரிக்க பொருளாதாரத்துக்கு அடிமைப்பட்டவையே. இத்தகைய அடிமையாக்கப்பட்ட உலக பொருளாதாரத்தின்கீழ் அனைத்து நாட்டில் பொருளாதாரங்களும்  அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. ஒருநாட்டில், வணிகம், தொழில்துறை, விவசாயம் என்று எவ்வளவு தன்னிறைவு அடைந்திருந்தாலும், அது உலகப் பொருளாதாரத்தின் கீழ் அடிமையாக்கப்பட்டு, பன்னாட்டு முதலாளித்துவத்தின்கீழ் கட்டுப்பட்டுக்கிடக்கிறது. ஒருநாடு மற்றொரு  சகநாட்டுடன் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும்  வணிகம் மேற்கொள்ள முடிவதில்லை. அவ்வாறு முடிந்தால் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு இவ்வுலகில்  இடமில்லை.  அமெரிக்கப்பொருளாதாரம் இந்த உலகைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் எல்லா நாடுகளும் கண்ணியத்துடனும், தன்னிறைவுடனும் வாழக்கூடிய தகுயைப்பெறும் என்பதை மறுக்க முடியாது. 

---

இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன், குறிப்பாக, இஸ்லாம் தோன்றியதற்குப்பின், தனது ஆதிக்கவெறியை மண்ணில் புதைத்துக்கொண்ட ஆதிக்கவாதிகள், சிறிது சிறிதாக தங்களின் குதர்க்கமான சிந்தனைகளை வளர்த்து, banking system என்னும் வங்கி முறையை அறிமுகப்படுத்தி, உலக வங்கியாக வளரச்செய்து, உலக நாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கியப்புள்ளியாக தன்னை மாற்றிக்கொண்டதுடன், தனக்கு சாதகமான தொழில்நுட்பத்தை உலகம் முழுவதும் இலவசமாக அளித்து, Advanced Tehnology என்னும் பெயரில் இந்த உலகத்தின் அறிவியல் வளர்ச்சியை, தமக்குச்சாதகமான அறிவியல் வளர்ச்சியாக மாற்றி, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டது. இன்று நாம் உபயோகிற மற்றும் கொண்டாடுகிற அனைத்து தொழில் நுட்ப மேம்பாடுகளும் மேலைநாடுகள் இட்ட பிச்சையே என்பதை யாரால் மறுக்கமுடியும்? 

உதாரணமாக, அனைத்து தொழில்நுட்பத்துக்கும் தலையானதாக இருக்கும் கணினி அதாவது computer.  இந்த கணினியை இயக்கக்கூடிய operating system எனப்படும் மென்பொருள், விண்டோஸ், ஆப்பிள் மெக்கிண்டோஷ், யூனிக்ஸ், லினக்ஸ், சன் சோலாரிஸ், android போன்று இருக்கும் அனைத்து மென்பொருள்களும் ஆதிக்கவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்ற நாடுகளிலிருந்து வந்தவையே. இந்தியாவில், இன்போசிஸ், விப்ரோ, TCS என்று எத்தனை மிகப்பெரிய நிறுவனங்கள் software program செய்து மென்பொருள்களை உருவாக்கினாலும்,  விண்டோஸ், மெக்கிண்டோஷ், ஆன்ட்ராய்ட் போன்ற முக்கிய மூல மென்பொருள் இன்றி இயங்காது. இந்த மூல மென்பொருள்களோ, இந்த ஆதிக்கவாதிகளின் சொத்தாகவே இருந்து  வருகிறது. இந்த கணினி மென்பொருள்களை வைத்தே இந்த உலகின் அனைத்து advanced டெக்னாலஜிகளும் வளர்ந்து வருகிறது. இவை இல்லை என்றால், எல்லா நாட்டு தொழில்நுற்ப வளர்ச்சிகளும் பூச்சியம்தான். 

மென்பொருள்களை அடுத்து, இன்டர்நெட் எனப்படும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அமெரிக்காவின் ராணுவத்திற்கு  சொந்தமானது. இந்த தொழில் நுட்பத்தை வணிக மயமாக்கி இந்த உலகிற்கு வழங்கியதன் மூலம், இன்டர்நெட்டானது, இந்த உலகத்தின் மூளை முடுக்குகளிலெல்லாம் இன்றியமையாததாக மாறிவிட்டது. இதன்மூலம், இந்த பூமியின் எந்த மூலையிலும் உள்ள மனிதன் மட்டுமல்ல, ஒவ்வொரு எலக்ட்ரானிக் பொருளின் அசைவும் ஆதிக்கவாதிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதேபோல, இதை தொழில்நுட்பங்களில் மேம்பட்டுள்ள எந்த ஒருநாடும் ஆதிக்கவாதிகள் நாட்டை தாக்கி அழித்துவிடலாம் என்று நினைப்பதுவும் பகல் கனவுதான்.  ஏனென்றால், ஆதிக்கவாதிகள் ஒரு தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அந்த தொழில் நுட்பம் தமக்கு எதிராக ஏவப்பட்டால் அதை எப்படி தவிர்ப்பது என்று யோசித்து, அதற்கு ஒரு மாற்றை உருவாக்கிக் கொண்டுதான் புதிய தொழில் நுட்பத்தை இந்த உலகில் வணிகமயமாக்குகிறார்கள்.  உதாரணமாக, மேலைநாடுகளிடம் இருந்து வாங்கப்படும் ஒரு அதிநவீன ஏவுகணை, விற்ற நாட்டின்மீதே ஏவப்பட்டால், அது அங்கு சென்று தாக்குமா என்பது கேள்விக்குறியே.   ஏனென்றால், அந்த நவீன ஏவுகணைகள் அதை விற்ற நாடுகள் மீது தாக்காதவண்ணம் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியா வாங்குகிற ரஃபேல்  விமானங்கள் பிரான்ஸை நோக்கி ஏவினால் அது அந்த நாட்டை தாக்காதவண்ணம் அதன் GPS லொகேஷன் nullify செய்யப்பட்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. 

சரி, இந்த உலகத்தை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து , இந்த உலக மக்கள் அடிமைகளாக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் யார்? குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த உலகை தனது அடிமைகளாக வைத்திருந்த வரலாறு நமக்குத்தெரியும், இங்கிலாந்து, இந்தியா போன்று பலநாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆதிக்க வெறியர்களை எதிர்த்துப் போராடுபவர்கள், தீவிரவாதிகள், ஆயுதம் ஏந்திப்போராடுபவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர். இன்றும் கூட இவர்களுக்குப் பணியாதவர்கள் மற்றும் இவர்களை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள் என்றும், எதிராக இயங்கும் இயக்கங்கள் பயங்கரவாத இயக்கங்கள் என்றும், எதிர்க்கும் நாடுகள் பயங்கரவாத நாடுகள் என்றும் முத்திரை குத்துகிறார்கள். உதாரணம், ஈரான், ரஷ்யா, நார்த் கொரியா, க்யூபா, வெனிசூலா போன்ற நாடுகளை பயங்கரவாத நாடுகள் என்று கூறுகிறார்கள். அமேரிக்காவோ, இன்று பாதுகாப்பு என்ற பெயரில், உலகம் முழுவதும் தனது படைகளை நிலை நிறுத்தி, அந்தந்த நாடுகளின் அண்டைநாடுகளுடன் பகையை உருவாக்கி, எந்த ஒரு நாடும் அண்டை நாட்டுடன் இனைந்து செயல்படாவண்ணம் தடுத்தும், கண்காணித்தும் தனது ஆதிக்கவெறியை சாதித்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, இந்தியாவின் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தான், சீனா போன்ற முக்கியநாடுகளுடன் இந்திய பகையை வளர்க்கிறது. சீனாவுக்கு எதிராக தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தூண்டிவிடப்படுகின்றன. ரசியாவை எதிர்த்து ஐரோப்பா, உக்ரைன், போன்ற நாடுகள் தூண்டிவிடப் படுகின்றன.

இன்றைய கால கட்டத்தில் இந்த ஆதிக்கவெறியர்களை வெளிப்படையாகவும் வன்மையாகவும், பட்டவர்த்தனமாகவும் எதிர்ப்பவர்கள், ஈரான் மற்றும் ஹமாஸ்,  ஹெஸ்பொல்லாஹ், ஹௌதி அன்ஸாருல்லாஹ் போன்ற இயக்கங்கள்.  இவர்களை தயவு தாட்சயம் இல்லாமல் படுகொலை செய்து  அழித்துவிட்டால், பிறகு மற்ற மத்தியக்கிழக்கு நாடுகள், இந்தியா உட்பட மற்ற ஆசிய நாடுகள் மற்றும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளை சுலபமாக அழித்துவிடலாம்.  இந்த ஆதிக்கவெறி பிடித்தவர்களை சுலபமாக அடையாளம்  காணலாம். உதாரணமாக, யூதர்களின் ஒரு பிரிவினர் இந்த உலகை ஆள எங்களைத்தான் இறைவன் தேர்ந்தெறுத்திருக்கிறான் என்கிறார்கள். இவர்களின் கடவுளாக Lucifer இருப்பதாகக் கூறப்படுகிறது. லூசிஃபர் என்பது சாத்தானுடைய பெயர் என்று கிருத்துவர்கள் கூறுகிறார்கள்  ஐரோப்பா அமேரிக்கா உட்பட பல நாடுகள் இவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்பது இந்த உலகம் அறிந்ததே.  இந்தியாவை ஆட்சி செய்கிற  BJP யின் தாய்க்கட்சி R S S என்பது தெரியும். இவர்கள் சனாதனம் என்னும் மனிதர்களை தாழ்த்துகிற சாதி பேதங்களை   உருவாக்கி மனிதர்களை கேவலப் படுத்துகிறார்கள். ஆதிக்கவெறி பிடித்த அமெரிக்காவுடன் சேர்ந்து ஜப்பான் போன்ற நாடுகளும் நடை போடுகிறது.

இந்த ஆதிக்க வெறியர்களை எதிர்த்துப்  போராடும் இஸ்லாமிய நாடுகளை, இரண்டாயிரத்து ஐம்பதுக்குள்  அழித்து விடவும், எஞ்சியிருக்கும் முஸ்லீம்களை அடுத்த இருபத்தைந்து வருடங்களில், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திக் கொன்று குவித்து, இஸ்லாத்தை முற்றும்முழுதாக அழித்துவிடவேண்டி, சதியாலோசனைகளும், சதிச்செயல்களும் உறுதியுடனும் முழுவேகத்துடனும்  நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இஸ்லாம் இல்லாத உலகம், மனித அடிமைகளை விரும்பும் ஆதிக்கவாதிகளின் சொர்க்கம் என்று நம்புகிறார்கள். இவர்களை மனித நேயம் பேசித் தடுக்க முடியாது. மாறாக, இத்தகையோரை எதிர்க்க உலகம் முழுவதும் உள்ள கண்ணியமிக்க நாடுகள், எல்லையற்ற ஆயுத பலத்தையும், தாக்குதல் பலத்தையும் வளர்த்துக் கொள்வது மட்டுமே தற்காத்துக் கொள்வதற்காக சரியான வழி என்பது தற்போது நிரூபணமாக்கிக்கொண்டு இருக்கிறது. மனித குலத்தைப்போற்றிய, சிந்து சமவெளி நாகரீகம் உட்பட, உலகின் பல சிறந்த நாகரீகங்கள்,   எப்படி அழிந்தன என்பதற்கான  சுவடுகள் இருக்கிறதா?  நாகரீகங்கள் எல்லாம் பேரழிவு ஆயுதங்களால் சுவடுகளின்றி அழிக்கப்பட்டது என்றால், மனிதர்களுக்கான தலை சிறந்த நாகரீகங்களை பாதுகாப்பது எப்படி?  தற்போது பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள், பெரும் ஆயுத பலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.  இது போன்ற பேரழிவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, உலகின் மற்ற சாமானிய நாடுகளும் தகுந்த ஆயுத பலம் பெறுவார்களா? பேரழிவு  ஆயுதங்கள்  உண்மையிலேயே தேவையா? ஆயுதமில்லாத உலகத்தை  உருவாக்க முடியாதா? பேரழிவு ஆயுதங்கள் மூலம் ஒருவரை ஒருவர்  தாக்கி அழித்துக் கொள்வதன் மூலமாகத்தான் இந்த உலகில் அமைதி ஏற்படுமா? உங்களது மேலான  கருத்துக்களை பதிவு செய்யுங்கள்,   நமது Channelஐயும்  subscribe செய்து கொள்ளுங்கள். நன்றி.









Tuesday, 12 November 2024

கமேனிக்கு எதிராக பொங்கி எழுங்கள், ஈரான் மக்களுக்கு நெதன்யாஹு அழைப்பு | H...


கமேனிக்கு எதிராக பொங்கி எழுங்கள், ஈரான் மக்களுக்கு நெதன்யாஹு அழைப்பு.

அயர்லாந்தை இஸ்ரேல் காலனியாக மாற்றுங்கள். இஸ்ரேல் குடியேற்றவாசிகள் அழைப்பு.

ஈரான் ரசியா பணப்பரிமாற்றம் அதிகாரபூர்வமாக ஒன்றிணைப்பு.

ஹவுதிக்கள் செங்கடலில் மீண்டும் தாக்குதல்.

---

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாஹூ, ஈரானின் சுப்ரீம் லீடர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக ஈரானிய மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நெதன்யாஹூவின் இந்த இரண்டாவது ஆங்கிலப் பேச்சு   அறிக்கை தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான நெதன்யாஹூவின் முதல் அழைப்பைப் பற்றிய அறிக்கையானது,  இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு சில  வாரங்களுக்கு முன்னர் வெளிவந்தது. இந்த அழைப்பிலும் ஈரானிய அரசுக்கு எதிராக ஈரானிய மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு முன்னர், இஸ்ரேலிய மக்களுக்காக கமேனி நிகழ்த்திய உரைக்கு போட்டியாக நெதன்யாகுவின் பேச்சு இருந்தது குறிப்பிடத்தக்கது.

---

அயர்லாந்தை கைப்பற்றி இஸ்ரேலிய காலனியாக மாற்றுங்கள் என்று  இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அயர்லாந்துக்கு எதிராக தூண்டிவிடும் பிரச்சாரத்தைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தெற்கு லெபனானில் இருந்து அமைதி காக்கும் படையினரை திரும்பப் பெற மறுத்ததுடன், அயர்லாந்தினர் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை வெளிப்படையாகக் கண்டித்துள்ளனர். மேலும், இஸ்ரேல் லெபனானின் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்ந்துள்ளதாக  குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அயர்லாந்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்கு, சமூக ஊடகங்க ளை நாடியுள்ளனர். அங்கு அயர்லாந்துக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்த பதிவுகளுடன் சில கருத்துக்கள் - அயர்லாந்தை சுனாமியால் மூழ்கடிப்பது - என்ற அச்சுறுத்தல்கள் உட்பட, வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். நாம் அயர்லாந்தைக் கைப்பற்றி அதை ஒரு இஸ்ரேலிய காலனியாக மாற்ற வேண்டும் என்றும், நமக்கு எதிராக இருக்கின்ற உலகின் மிக மோசமான மக்களை அகற்றவேண்டும் என்றும் அந்த இடுகை  அழைப்பு விடுத்துள்ளது.

---

ஈரானும் ரஷ்யாவும் தங்கள் தேசிய கட்டண முறைகளின் ஒருங்கிணைப்பை அதிகாரப்பூர்வமாக முடித்துள்ளன.

தெஹ்ரானில் இன்று நடந்த விழாவில் ரஷ்யாவின் மிர் கட்டண முறை ஈரானின் ஷெடாப்புடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பின் முதல் கட்டம் ஷெடாப் தேசிய கட்டண முறை அட்டைகளை வைத்திருப்பவர்கள் அவற்றை ரஷ்ய ஏடிஎம்களில் பயன்படுத்த அனுமதிக்கும்.

இரண்டாவது கட்டத்தில், ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் ஈரானில் தங்கள் மிர் அட்டைகளைப் பயன்படுத்த முடியும். மூன்றாம் கட்டம் முடிந்ததும், ஈரானிய குடிமக்கள் ரஷ்யாவில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த தங்கள் ஷெடாப் அட்டைகளைப் பயன்படுத்த முடியும்.

-----

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்டு, பின் டொனால்ட் டிரம்ப்புக்காக போட்டியிலிருந்து விலகிய  விவேக் ராமசாமியுடன் டோஜ் ஏஜென்சியை வழிநடத்த,  பிட்காயினைப்போன்ற டோஜ்காயினின் ரசிகர் எலான் மஸ்க்கை டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.

அதிகாரத்துவத்தைக் குறைப்பதன் மூலமும், செலவுகளைக் குறைப்பதன் மூலமும், வளர்ச்சியின்றி இருக்கும்  அதிக பொறுப்புள்ள கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், அமெரிக்க அரசாங்கத்தை நெறிப்படுத்துவதையம் இந்த D O G I அதாவது  Department of Government Efficiency  என்ற நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ட்விட் செய்த எலன் மஸ்க், - நமது பாதுகாப்பு வரவு செலவு திட்டக்கணக்கு மிகவும் பிரம்மாண்டமானது. இது ஒரு டிரில்லியன் டாலர்கள் அளவில் உள்ளது. இந்த அளவானது, அமெரிக்காவின் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதமானது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை விட அதிகமாக உள்ளது. இது நல்லதற்கு அல்ல. அதனால்தான் இந்த அரசின் செயல்திறன் துறை எங்களுக்கு தேவைப்படுகிறது. இதே அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் என்று கூறியுள்ளார்.

---

கப்பல் எதிர்ப்பு கப்பல் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி அரேபிய கடலில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (சிவிஎன் -எழுபத்திரண்டு ) மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி, செங்கடலில் ஒரு ஜோடி -ஆர்லே பர்க்-வகுப்பு வழிகாட்டப்பட்ட-ஏவுகணை அழிப்பாளர்கள் ஆகிய இரண்டையும் "வெற்றிகரமாக குறிவைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக ஹவுதிக்கள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தனது பயங்கரவாத தாக்குதல்களையும், பாலஸ்தீன இன அழிப்பையம் நிறுத்தும்வரை தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என்று மேலும் அறிவித்துள்ளது. செங்கடலில் அன்ஸாருல்லாஹ் அமைப்பினர் ஏற்படுத்தியுள்ள தடைகளால் இஸ்ரேல் மிகப்பெரும் பொருளாதார இழப்பை அடைந்து வருகிறது. சவூதி அரேபியா, துருக்கி மற்றும் சில அரபு  நாடுகளின் மறைமுகமான உதவிகளுடன், இஸ்ரேல் தனது பிரச்சினைகளை ஓரளவே சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

---


அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...