லெபனான் தோல்விக்குப்பின், சிரியாவில் பயங்கரவாதத்தை தேர்ந்தெடுத்த அமேரிக்கா மற்றும் கூட்டாளிகள்.
மத்திய கிழக்கின் வரைபடத்தை மாற்றியமைக்கும் நெதன்யாஹூவின் பிரம்மைக்கு மரண அடி.
சிரியாவில் கிழிந்த எர்டோகனின் முகத்திரை.
லெபனான் மற்றும் பாலஸ்தீனிய பிராந்தியங்கள் முழுவதிலும், இஸ்ரேல் பயங்கரவாதத்தை எதிர்க்கும் போராளி இயக்கங்களின் கைகளில், இஸ்ரேலிய ஆட்சி அடைந்துள்ள தோல்விகளைத் தொடர்ந்து, சிரியாவில் நடக்கும் மோதல்கள், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அமெரிக்காவின் மற்றொரு முயற்சியாக கூறப்படுகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை, தனது சிரியா பிரதிநிதி பாசம் அல்-சபாக் உடனான தொலைபேசி உரையாடலின் போது, ஈரானின் உயர்மட்ட இராஜதந்திரியான அப்பாஸ் அரக்ச்சி இந்த கருத்துக்களை வெளியிட்டார். மேலும் வடக்கு சிரியாவில், தக்ஃபிரி பயங்கரவாத தாக்குதல்களை, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சூழ்ச்சியான திட்டத்தின் விளைவு என்றும் தெரிவித்துள்ளார்.
ஹெஸ்பொல்லாவுடனான போர் நிறுத்தம், மேற்கு ஆசியாவை பலாத்காரத்தின் மூலம் மறுவடிவமைக்கும் இஸ்ரேலின் போலித் தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஹிஸ்புல்லாவுடன் இஸ்ரேல் செய்து கொண்ட போர் நிறுத்தம், மேற்கு ஆசியாவை மிரட்டி பலவந்தமாக மாற்றியமைக்கும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் - மாயையை - தகர்த்துவிட்டது என்று, பாலஸ்தீன எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ் கூறுகிறது.
டெல்அவிவை நோக்கி இடைவிடாமல் ஏவத்தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஹெஸ்பொல்லாவின் பன்னிரெண்டாயிரம் அதிநவீன ஏவுகனைகளில் சிக்கி, இஸ்ரேல் தலைநகரம் காசாவைவிட படுபயங்கர பேரழிவிலிருந்து தப்பிக்க, போர்நிறுத்தம் அறிவிக்கக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை மறைத்து, மேற்கத்திய ஊடகங்களும், பல தமிழ் ஊடகங்களும், இஸ்ரேலுக்கு முட்டுக்கொடுத்து தூக்கிப் பிடித்து வருகின்றனர் என்பதை நேயர்கள் யாவரும் அறிவர்.
லெபனானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை, தனது தாக்குதலுக்கான குறிக்கோள்களை அடையாமலேயே இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது, மத்திய கிழக்கின் வரைபடத்தை பலவந்தமாக மாற்றுவதற்கான, நெதன்யாகுவின் பிரமைகளை உடைப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும் என்று ஹமாஸ் புதன்கிழமை தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பயங்கரவாதத்தை எதிர்க்கும் எதிர்ப்புப் படைகளைத் தோற்கடிப்பது அல்லது அவர்களை நிராயுதபாணியாக்குவது போன்ற பிரம்மைகள் தவிடுபொடியாக்கப்பட்டன. போராளிகளின் உறுதியும், அவர்களுக்கான மக்கள் ஆதரவும் இல்லாமல், இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்காது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். எங்கள் இயக்கம் எங்கள் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் எங்களின் போராட்டத்தை ஆதரிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்று ஹமாஸ் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
சிரியாவில், ஹயாத் தஹ்ரிர் அல்ஷாம் அதாவது ஹெச் டீ எஸ் என்றழைக்கப்படும் தக்ஃபிரி பயங்கரவாத குழுவின் உறுப்பினர்கள், சிரியாவின் பல அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளை ஆக்கிரமித்ததாகவும், அரபு நாட்டின் வடக்கில், டஜன் கணக்கான சிரிய வீரர்களைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், லெபனானின் அல்-மயாதீன் தொலைக்காட்சி நெட்வொர்க், அலெப்போ மாகாணத்தில் பெரிய அளவிலான பயங்கரவாத நடவடிக்கைகளை, சிரிய இராணுவம் ஒரு முன்கூட்டிய தாக்குதல் மூலம் முறியடித்ததாக கூறியது.
அலெப்போவுக்கு வடமேற்கே, பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனாதான் நகரில் இருந்து தொடங்கவிருந்த, நான்கு பெரிய பயங்கரவாத நடவடிக்கைகள், அவை தொடங்குவதற்கு முன்பே முறியடிக்கப்பட்டன என்று அந்த நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
சிரியா அரசாங்கமும் சிரிய மக்களும் ஒன்றிணைந்து, பயங்கரவாதிகள் தங்களது குறிக்கோள்கள் அடியாதவண்ணம் தொடர்ந்து பதிலடிகள் கொடுப்போம் என்று சிரியா தெரிவித்துள்ளது.
சிரியாவின் இறையாண்மையின் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களை மிகக் கடுமையாகச் சாடியுள்ள ரஸ்சியா, இந்த தாக்குதல்கள் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
துருக்கியின் எர்தோகனைப்போன்ற அமெரிக்காவின் பினாமிகள், The Great சாத்தான் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் கூட்டணியில், சிரியாவில் மீண்டும் ஒன்று கூடி இருக்கிறார்கள். கடந்த முறையைப் போலவே இந்த முறையும் அவர்கள் தோல்வியடைவார்கள் என்று ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படை லெபனானில் இருந்து வெளியேறுகிறது என்று கேள்விப்பட்ட பின்னர், சிரியா மீது போர் தொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. லெபனான் அல்லது ஈரானை விட சிரியாவை தோற்கடிப்பது எளிது என்று டிரம்ப் நிர்வாகம் நினைக்கிறது என்றும் கூறப்படுகிறது.
----
No comments:
Post a Comment