Friday, 13 December 2024

திடுக்கிடும் செய்தி : மிரட்டப்பட்ட அசாத் மோசம் செய்த துருக்கி | Conspir...


மிரட்டப்பட்ட அசாத். மோசம் செய்த துருக்கி. திடுக்கிடும் செய்தி அம்பலம்.

திடுக்கிடும் செய்தி: இஸ்ரேலும் அமெரிக்காவும், துருக்கியின் மூலமாக, HTSசை முன்னிறுத்தி, சிரியாவில் பஷார் அழ அசாதுக்கு எதிராக தாக்குதலை தொடங்கிவதற்கு முன், சியோனிச அமைப்புடன், அதாவது இஸ்ரேலுடன், அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை இயல்பாக்குவது அல்லது பதவி விலகுவதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பஸார் அசாத் இதை மறுத்தால், HTS பின்னணியில், துருக்கி, அமேரிக்கா, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளால் தாக்கப்படும் என்றும், பஸார் அசாத் படுகொலை செய்யப்படுவார் என்னும் மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, சிரியா, ரஷ்யா, ஈரான், ஹெஸ்பொல்லாஹ் போன்றவற்றின் முக்கிய பிரமுகர்களால் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட ராஜதந்திர முடிவுகளுடன், ஈரான் மற்றும் ரஸ்சியாவின் முக்கிய ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் பெரும்பாலும் லெபனானுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும், பின் ஹெஸ்பொல்லாஹ்வும், ஈரானும் சிரியாவிலிருந்து வெளியேற, ரஷ்யா அவசர அவசரமாக, பஸார் அழ அசாதையும் மற்றும் அவரது குடும்பத்தையும் பத்திரமாக ரஸ்சியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  அதன்பிறகு, சிரியாவில் எஞ்சி இருந்த சிலபல ராணுவத்தளவாடகளையும், திருப்பி எடுத்துச்செல்லமுடியாத பல சாதனங்களையும் அழித்துவிட்டு, கடைசியாக ஈரானின் ஐஆர்ஜீசீ சிரியாவிலிருந்து வெளியேறி இருக்கிறது. 

அமேரிக்கா மற்றும் இஸ்ரேலால் முன் மொழியப்பட்டு, துருக்கியால் வழிநடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக, ஈரானும் ரசியாவும் தங்களது ராணுவ பலத்தைக்காட்டி இருந்தால், அதனால் ஏற்படும் பேரழிவு சிரியாவில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு முழுவதும் தீப்பிழம்புகள் பரவியிருக்கும். அதாவது சிரியாவிலுள்ள அமெரிக்க மற்றும் துருக்கிய நிலைகள், ஈரான் மற்றும் ரஸ்சியாவால்  தாக்கப்பட்டிருந்தால், அமெரிக்க, இஸ்ரேல், துருக்கி, ஈரான், ரஸ்சியா மற்றும் சிரியா ஆகிய ஆறு நாடுகளின் ராணுவத்திற்கு இடையிலும், நேரடியான பெரும் போர் வெடித்திருக்கும். மத்திய கிழக்கிலுள்ள அனைத்து அமெரிக்க ராணுவ நிலைகளும் தரைமட்டமாகியிருக்கும். மறுபுறம், ஈரான் மீது பாரிய தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன், வேறுபலநாடுகளும் இந்தப்போரில் ஈடுபட்டிருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஈரானையும் அமெரிக்காவையும் நேரடி சண்டையில் கோர்த்துவிடவேண்டும் என்று இஸ்ரேல் செய்த தந்திரங்கள் பலவும் தோல்வியில் முடிய, ஜோ பைடனின் பதவிக்காலம் முடியும் முன் சிரியாவில் வைத்து அதை  சாதித்துவிடவேண்டும் என்னும் நப்பாசையை சரியாகக்கணித்த ஈரான் கூட்டணி, உடனடியாக சிரியாவை விட்டு வெளியேறியது. இந்த வெளியேற்றம் ஈரானுக்கும் ரசியாவுக்கும் கிடைத்த தோல்வியல்ல. மாறாக இஸ்ரேலின் நரித்தந்திரத்துக்குக் கிடைத்த படுதோல்வி. அதனால்தான், சிறிய கிளர்ச்சியாளர்கள், பெரிய அளவிலான எதிர்ப்புகளை சிரியாவுக்குள் எதிர்கொள்ளாமல், பதினோரு நாட்களில் சிரிய தலைநகர் டமாஸ்கஸ்ஸை அடைந்தனர். 

இப்போதும் சிரியாவில் பெரும்பாலானவர்கள், கிளர்ச்சியார்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆயினும் எதிர்ப்புகள் எதையும் வெளிக்காட்டாமல், அமைதி காக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது. என்னென்ன  நிகழ்வுகள் ஏற்படுகிறது என்பதை கூர்ந்து கவனிக்க, ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. ஸிரியாவைச் சுரண்ட கிளர்ச்சியாளர்கள் அனுமதிக்கும்வரை அவர்கள் பதிவில் இருக்கலாம். என்றைக்கு விழித்துக்கொள்கிறார்களோ, அப்போது அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் துருக்கிய கூட்டணி, இவர்களை முடித்துவிடும்.

இறுதியாக, இப்போது சிரியாவில் அமைதி சூழ்ந்திருக்கிறது. அடுத்து ஏற்படப்போகும் பெரும் புயலுக்கு அச்சாரமாக இது அமைந்திருப்பதாகக் கூறலாம். பொறுத்திருந்து பார்ப்போம். தொடர்ந்து இணைந்துருங்கள். சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள். நன்றி.




Tuesday, 10 December 2024

‘தல’ இல்லாத சிரியாவில் தடி எடுக்கும் இஸ்ரேல் தண்டல்காரன் Israel Takes A...


தல இல்லாத சிரியாவில் தடி எடுக்கும் இஸ்ரேல் தண்டல்காரன்.

கடந்த சில மணி நேரங்களில் சிரியாவுக்குள் நூறுக்கும் மேற்பட்ட இடங்கள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசின. சிரியா மக்களை முழுமையான கொத்தடிமைகளாக மாற்றி, திறந்த வெளிச்சிறைச்சாலையில் வைக்கும் முயற்சி. சிறிய மக்கள் தாங்கள் சமையல் செய்வதற்காக, காய்கறிகளை நறுக்க உபயோகிக்கும்  கத்திகள் கூட இருக்கக்கூடாது என்ற அளவுக்கு தாக்குதல் நடத்தாது துணிந்துள்ள இஸ்ரேல் மற்றும் அமேரிக்கா.

கடந்த இருபத்து நான்கு  மணி நேரத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் , சிரியாவின் முழு வான் பாதுகாப்பு அழிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் இராணுவ ஆராய்ச்சி வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன . சிரிய விமானத் தளங்கள், போர் விமானங்கள், வெடிமருந்து சேமிப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. சிரியாவின் பல வருட இராணுவ முதலீடு ஒரு நாளுக்குள் அழிக்கப்பட்டுவிட்டது. 

தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்களால், லடாகியா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சிரியாவின் போர்க்கப்பல்கள் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டன. சிரியாவில் எங்கும் ஆயுதங்கள் இல்லை. வான் பாதுகாப்பு சாதனங்கள் இல்லை. சிரியா மக்களுக்குப் பாதுகாப்பில்லை, இனி மரியாதையும் இல்லை. இதை எதிர்த்து கேள்வி கேட்க யாரும் இல்லை. 

நன்றியில்லாத மக்கள் எப்படியோ போகட்டும் என்று, சிரியாவை விட்டு வெளியேறிய பஸார் அல் அசாத். சிரியாவில் அநியாயமாக ரத்தம் சிந்தப்படக்கூடாது என்றும், பொது சொத்துக்கள் அழிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில், அசாத் எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல், தலை நகர் டமாஸ்கஸில் இருந்து வெளியேறியதாகத் தகவல். இனி சிரியாவை பாதுகாக்க ஈரானும் இல்லை, ரசியாவும் இல்லை. வெறும் துப்பாக்கிகளை மட்டும்  வைத்துக்கொண்டு, HTS சிரியாவை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பது எப்படி?

---

இனி சிரியாவில் ஏராளமான இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் தேவைப்படப் போகின்றன, மேலும், மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பார்கள் என்பது பற்றியும், சிரியாவை  மீண்டும் எப்படி வலிமை மிகுந்த  நாடாக மாற்ற முடியும் என்பது குறித்து நிறைய கேள்விகள் உள்ளன.

சிரியாவை எப்படி ஆளுவது அல்லது கட்டுப்படுத்துவது என்பதற்கான திட்டம், சிரிய  மக்களிடம் இதுவரை இல்லை. மேற்கே வெகு தொலைவில் உள்ள டமாஸ்கஸில் என்ன நடக்கிறது என்பதும், அலெப்போவில் என்ன நடக்கிறது என்பதும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிற்குத்தான் சிரிய மக்களுக்குத்தெரிகிறது. சிரியாவின் ஈராக்கிய எல்லையில் அல்லது ஜோர்டானுக்கு அருகே தெற்கே உள்ள சிரியாவில் என்ன நடக்கிறது என்பதற்கும், மக்களுக்கும் நிச்சயமாக எந்தத் தொடர்பும் இல்லை. சிரியாவின்  எல்லைகள் அனைத்தும் கைப்பற்றப்படப் போகின்றன, மேலும் சிரியாவில், பல ஆயுதம் ஏந்திய  குழுக்கள் உள்ளன. ஐஎஸ்ஐஎஸ்  அரசு உட்பட பல்வேறு ஆயுதக்குழுக்கள் உள்ளனர், இவை அனைத்தும்  கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களது பலத்தை அதிகப்படுத்தியுள்ளது..

இவை அனைத்தையும் சரிசெய்ய,  அனைவரும் ஒன்றுகூடிப்பேசி ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்  என்ற யோசனையை ஈரான் வெளியிட்டுள்ளது, அதில் அனைத்து சிரியர்களும் பங்கேற்கவேண்டும். சுமுகமானமுடிவு எட்டப்படவேண்டியதும் மிக அவசியம்.  இதைத்தவிர்த்து சிரியாவில் உள்நாட்டுப்போர் ஏற்பட்டால், அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக  இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

---

லெபனான் எல்லை நகரமான மரூன் அல்-ராஸில் தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்களில், மேலும் பல வீடுகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் வெடிவைத்துத் தகர்த்தன.

சியோனிச ஆக்கிரமிப்பின் நானூற்று முப்பதாவது நாளில் வடக்கு காசாவில், பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்க போராளிகளால், மூன்று இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பதினெட்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.

யேமெனில் இருந்து ஜெனரல் சாரியா, புதிய காசா ஆதரவு நடவடிக்கையை அறிவித்துள்ளார். யேமன் மீதான எந்தவொரு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும், நாங்கள் மேலும் அதிகமான தாக்குதல்களுடன் எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

சிரிய நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதை எகிப்து கண்டித்துள்ளது. இது, களத்தில் ஒரு புதிய யதார்த்தத்தை செயல்படுத்தும் முயற்சி, என்று எகிப்து வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம், சிரியாவின் வரலாற்றில் இந்த முக்கியமான கட்டத்தில், அறிவார்ந்த முறையில் செயல்படுவதற்கு  முன்னுரிமை அளிக்க வேண்டும்  என்று, அனைத்து சிரிய தரப்பினரையும் அறிவுறுத்தியுள்ளது.

காசாவில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திய தாக்குதல்களில்,  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாற்பத்து நான்காயிரத்து எழுநூற்று ஐம்பத்தெட்டாக உயர்ந்துள்ளது என்றும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆறாயிரத்து நூற்றி முப்பத்து நான்கு என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள் தொடர்க்கின்ற்ன. தொடர்ந்து இணைந்திருங்கள். Subscribe செய்து கொள்ளுங்கள். நன்றி.

---



Monday, 9 December 2024

சிரிய அரசாங்கத்தின் வீழ்ச்சியும் அதன் தாக்கங்களும் Fall of Syrian Govern...


ஐம்பத்து நான்கு வருட, சிரியா அரசு வீழ்ந்தது. 

நிச்சயமற்ற ஒரு நிலைமை சிரியாவில். இந்த இக்கட்டான நிலையில், பஷர் அல்-அசாத் என்பவர் யார்? பஷர் அல்-அசாத்தின் தற்போதைய நிலை என்ன? அடுத்த ஆட்சி எப்படி இருக்கும்? இதைப்பற்றி நாம் ஒரு ரத்தினச்சுருக்கமாகப் பாக்கப்போறோரோம்.  வாங்க செய்திக்குள்ள போலாம்.

பஷர் அல்-அசாத்,  ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தைந்தாம் வருடம்,  செப்டம்பர் மாதம் பதினொன்னாம் தேதி பிறந்தார். 

பஷார் அல் அசாதின் பெற்றோர் ஹாஃபிஸ் அல் அசாத் மற்றும் அனிசா மக்லூப் ஆவர். ஹாஃபிஸ் அல் அசாத், ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து ஒன்று முதல்  முதல் இரண்டாயிம் வரை,  அதாவது  அவர் மரணிக்கும் வரை சிரியாவின் அதிபராக இருந்தார், பஷார் அல் அஸாதின் தாயார் அனிசா மக்லூப் அம்மையார், சிரியாவின் மிக முக்கியமான குடும்பங்களுள் ஒருவராக இருந்தார்.

பஷர் அல்-அசாத், சிரிய ஜனாதிபதியாக பதவியேற்கும் முன், ஒரு  அரசியல்வாதியாகவும், மற்றும் இராணுவ அதிகாரியாகவும் பதவி வகித்தார். அவர் ஜூலை இரண்டாயிரம் முதல் தற்சமயம் வரை, சிரியாவின் பத்தொன்பதாவது ஜனாதிபதியாக பணியாற்றினார். ஜனாதிபதியாக, அசாத் சிரிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும், அரபு சோசலிச பாத் கட்சியின், மத்திய கட்டளையின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 

பஷர் அல்-அசாத்தின் தற்போதைய நிலை என்ன?

பஷார் அல் அசாத்தின் தற்போதைய இருப்பிடம் மர்மமாகவே உள்ளது. அவர்  எங்கே சென்றார் என்று தெரியவில்லை. சில அறிக்கைகள் அவரது விமானம் டமாஸ்கஸ் நகரிலிருந்து கிளம்பியதாக கூறுகின்றன. கிளர்ச்சியாளர்கள் நகரத்தை கைப்பற்றிக்கொண்டதும் அசாத் நகரை விட்டு கிளம்பினார் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இன்னும் சில அறிக்கைகள், அவர் சென்ற விமானம் எங்கோ அவசரமாகத் தரை இறங்கியது. அதன்பின் அவரைப்பற்றியும், அவர் சென்ற விமானத்தின் நிலை பற்றியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அவர் மாஸ்கோ அல்லது தெஹ்ரானில் தஞ்சம் கோரக்கூடும் என்று முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.  நிலைமை நிலையற்றதாகவே உள்ளது, மேலும் அவரது சரியான இடம் இன்னும் தெளிவாக இல்லை. அவரது அரசாங்கத்தின் திடீர் வீழ்ச்சி, சிரியாவின் அரசியல் எதிர்காலத்தை நிச்சயமற்றதாக்கியுள்ளது என்பது மட்டும் கண்முன்னே நிழலாடும் உண்மையாக இருக்கிறது.

தற்போது சிரியாவின் அரசியல் நிலைமை என்ன?

சிரியாவின் புரட்சியாளர்கள் டமாஸ்கஸுக்குள் நுழைந்துவிட்டார்கள். இந்த நிலையில், சிரியாவின் தற்போதைய பிரதமராக இருப்பவர் முகமது காசி அல்-ஜலாலி. இவர் செப்டம்பர் பதினாலு  இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டு, ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தால் நியமிக்கப்பட்டார். அல்-ஜலாலி சிவில் இன்ஜினியரிங் பின்னணியைக் கொண்டுள்ளார், மற்றும், முன்னர் இரண்டு வருடங்கள் தகவல் தொடர்பு மற்றும், தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பணியாற்றினார். சிரியாவின் தனியார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும், அரபு தர தயாரிப்பாளர்களின் அறங்காவலர் குழுவின் தலைவர் போன்ற பதவிகளையும் அவர் வகித்தார்.

தற்போது, ஜனாதிபதி பஷர் அல்-அசாத் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அல்-ஜலாலி சுதந்திரமான தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், அமைதியான அதிகார மாற்றத்தை உறுதிப்படுத்த, எதிர்க்கட்சி சக்திகளுடன் ஒத்துழைக்க தனது தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

சிரியாவின் தற்போதைய பிரதம மந்திரி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

சிரியாவின் பிரதமர் சிரியாவின் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். தேர்வு செயல்முறையின் சுருக்கமான கண்ணோட்டம் இங்கே பார்க்கலாம்.

முதலில், பிரதமர் பதவிக்கு, குடியரசுத் தலைவர் அதாவது ஜனாதிபதி ஒருவரை நியமிப்பார்.

இரண்டாவதாக,  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர், மற்ற அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் உறுப்பினர்களை பரிந்துரைக்கிறார்.

மூன்றாவதாக, சிரியாவின் மக்கள் சட்டமன்றம், புதிய அரசாங்கத்தின் சட்டமன்ற திட்டத்தை மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளிக்கிறது.

நான்காவதாக, மக்கள் சட்டமன்ற ஒப்புதல் கிடைத்தவுடன், புதிய பிரதமரும் அரசாங்கமும் முறையாக பதவியேற்கிறார்கள். இந்த பிரதமரையும், அவரது அமைச்சரவையையும், நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது.

இப்போது சிறிய ஜனாதிபதி இல்லாத நிலையில், புதிய சிரியாவின் அரசியல் அமைப்புச்சட்டத்தில் மாறுபாடுகள் ஏற்படுமா, அல்லது அதே அமைப்பு தொடருமா என்னும் கேள்விக்குப் பதில் இந்நடும் சில நாட்களில் கிடைத்துவிடும் என்று நம்பலாம்.

--

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் அரசு கவிழ்ந்துள்ளது. பிரதம மந்திரி முகம்மது காஜி ஜலாலி, ஞாயிறன்று அரசாங்கத்தை ஒப்படைக்கத் தயாராகி வருவதாக எக்ஸ்  வலைதளத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக ஆட்சி ஒப்படைக்கப்படும் வரை, அனைத்து அரச நிறுவனங்களும், பஸார் அல் அசாதால் நியமிக்கப்பட்ட, தற்போதைய பிரதமர் அல்-ஜலாலியின் மேற்பார்வையில் இருக்கும் என்று, ஹெச்ட்டீயெஸ்  தலைவர், அபு முகமது அல்-ஜுலானி என்று அழைக்கப்படும், அஹ்மத் அல்-ஷாரா கூறினார். இது கலவரமில்லாத, ஒரு நல்ல நம்பிக்கையிலான உடன்படிக்கை என்றும், இது ஒரு சுமுகமான மற்றும் கலவரமில்லாத ஆட்சி மாற்றத்துக்கு வலி வகுக்கும் என்றும் நம்பலாம்.

மேலும் செய்திகள் தொடர்கின்றன, தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள், Subscribe செய்து கொள்ளுங்கள். நன்றி.


===


குடும்பத்துடன் ரஸ்சியாவில் தஞ்சமடைந்த பஷார் அல் அசாத்


குடும்பத்துடன் ரஸ்சியாவில் தஞ்சமடைந்த பஷார் அல்.-அசாத்.

சிரிய மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அசாத்தை ஈரான் பலமுறை எச்சரித்ததாகத் தகவல்.

----

சிரிய மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அசாத்தை ஈரான் பலமுறை எச்சரித்தது என்று ஈரான்  சபாநாயகர் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத், தனது மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று, மறைந்த ஈரான் முன்னாள்  தளபதி, ஜெனரல் காசிம் சுலைமானி பலமுறை அறிவுறுத்தியதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது ஃபக்கீர் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

மின்னல் வேகத் தாக்குதல்களைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் - எச்ட்டீஎஸ் தலைமையிலான போராளிக் குழுக்கள், சிரிய தலைநகரைக் கைப்பற்றிய பின்னர், ஞாயிற்றுக்கிழமை தெஹ்ரானில் பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பில் கலிபாஃப் பேசினார், 

அப்போது, நான் இதை வெளிப்படையாகக் கூறுவேன் - தியாகி சுலைமானி, தனது மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று, பஷார் அல்-அசாத்திடம் பலமுறை கூறினார், ஏனென்றால், ஐ.எஸ் தவிர, சில எதிர்க்கட்சிகள் ஆயுதமேந்திய போராட்டக் குழுக்கள் தோன்றிய காரணத்தையும், அவை அஸ்தானா கூட்டங்களில் கூட விவாதிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

--

ஈரான் ஒருபோதும் HTS  குழுக்களை எதிர்கொண்டதில்லை, ஆனால் தாயிஷ் பயங்கரவாதிகளுடன் மட்டுமே எதிர்ப்பைக்கையாண்டது என்று கலிபாஃப் மேலும் கூறினார்.

சிரிய மக்கள் எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஈரான் மதிக்கிறது என்றும், சிரியாவில் அமைக்கப்படும் அரசாங்கத்தின் அடிப்படையில் அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிரியாவில் அமையும் புதிய அரசாங்கம், தாயிஷ் பயங்கரவாதிகளின் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு அணுகுமுறையைப் பின்பற்றவில்லை என்றாலும், இஸ்ரேலிய ஆட்சியுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்றாலும், முஸ்லிம் நாடுகளிடையே ஒற்றுமையை உருவாக்க, ஈரான் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று, ஈரானின் உயர்மட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஜெஷ்கியன், டமாஸ்கஸை போராளிகள் கைப்பற்றிய பின்னர், நாட்டின் அரசியல் தலைமை குறித்து ஒருமித்த கருத்தை எட்ட, சிரியாவில் உள்ள எதிரெதிர் பிரிவுகள் பேச்சுவார்த்தை நடத்த  முன்வர வேண்டும் என்று கூறினார்.

நாட்டின் எதிர்காலம் மற்றும் அதன் அரசியல் அமைப்பு குறித்து சிரிய மக்கள்தான் முடிவுகளை எடுக்க வேண்டும், என்று பெஜெஷ்கியன் மேலும் கூறினார்.

மாஸ்கோவில் அசாத் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள நிலையில், சிரிய எதிர்த்தரப்பு பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்வதாக ரஷ்யா கூறுகிறது.

ஜனாதிபதி பஷார் அல்-அசாத் தனது குடும்பத்துடன் மாஸ்கோ வந்தடைந்ததாக கிரெம்ளின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது, சிரிய தலைநகர் மற்றும் அரபு நாட்டின் பல முக்கிய மாகாணங்களை கட்டுப்பாட்டில் எடுத்த, ஆயுதமேந்திய சிரிய எதிர்த்தரப்பின் பிரதிநிதிகளுடன் ரஷ்ய அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.

சிரியா அதிபர் ஆசாத் தனது குடும்பத்தினருடன் மாஸ்கோ வந்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது என்று, கிரெம்ளின் வட்டாரம் ஆர்ஐஏ நோவோஸ்டிக்கு தெரிவித்துள்ளது.

---

நேற்றிரவு அசாத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய விமானப்படை சிரிய தலைநகர் டமாஸ்கஸ் மீது கூடுதல் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது; Mezzeh விமானத் தளம் மீண்டும் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிரிய உளவுத்துறை தலைமையகமும் தாக்கப்பட்டுள்ளது. அங்கு இப்பொழுது பாரிய நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.

---

மேலும், பல செய்திகளுக்கு, தொடர்ந்து இனைந்திருங்கள், Subscribe செய்து கொல்லுங்க. நன்றி.

Friday, 6 December 2024

தீவிரவாதிகளின் மையப்புள்ளியாக மாறும் சிரியா. 

நெதன்யாஹு,  உள்நாட்டில் குற்றவாளி. உலகில் பயங்கரவாதி.

இஸ்ரேலுக்கான அரபுநாடுகளின் ஏற்றுமதி பெருமளவு அதிகரிப்பு.

காசா படுகொலைகள் - யுனிசெஃப் கடும் கண்டனம்.

அமெரிக்க மிரட்டலுக்கு பயப்படாத ஏமன் மக்கள்.

Netanyahu: Legal and Political Challenges

டெல் அவிவ் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு  மீதான குற்ற வழக்கு, மிகுந்த எதிர்பார்ப்போட விசாரணைக்கு வருது.  செவ்வாய்க் கிழம காலையில ஒன்பது  மணிக்கு துவங்குற இந்த விசாரணைல ஆஜராக..நெதன்யாஹூகூட ஒரு  கும்பலும்,  அதாவது நெதன்யாஹுவோட சட்ட  விரோத செயலுக்கு  முட்டுக் கொடுக்குறவங்களும், நெதன்யாஹுவை தூக்கிப் பிடிக்கிறவங்களும், நெதன்யாஹுவோட ஜால்ராக்களும், எடுபிடிகளும்,  ஒரு கும்பலா சேர்ந்து, சட்ட  அமலாக்கத்துறை எதிர்த்தும், பத்திரிகையாளர்களையும், மீடியாக்களையும் எதிர்த்தும்,  அட்டர்ணி ஜெனெரல்கள எதிர்த்தும்,  பெரிய அளவுக்கு பம்பார்ட்மென்ட் பண்ண போறதா இஸ்ரெலோட தேசிய பத்திரிகையான, ஹாரேட்ஜ், தன்னோட எடிட்டோரியில்ல  எழுதி இருக்கிறது.  இந்த ஹாரட்ஜ் அப்படிங்கற இஸ்ரேலோட தேசிய பத்திரிகை, நெதன்யாவுக்கு எதிரா சில பல உண்மைகளை எழுதறதுனால, அந்த பத்திரிக்கையை க்ளோஸ் பண்றதுக்கு, பத்திரிக்க ஆஃபீஸையே மூடு விழா பண்றதுக்கு,  நெதன்யாஹூ  எல்லா ஏற்பாடுகளையும் பண்றதா அந்த ஹாரட்ஸ் பத்திரிக்கை வெளிப்படையா எழுதியிருக்கு. 

லெபனான்ல ஏற்பட்டிருக்கிற போர் நிறுத்தம், இஸ்ரேல ஆளுகிற  கூட்டணிக்கும், அத தலம தாங்குற நபரான நெதன்யாஹுவுக்கும், நிறைய நேரத்த கொடுத்து இருக்குது. அது மட்டும் இல்லாம, அவங்கள எதிர்த்து வாதாடுற அரசாங்க வக்கீல், அட்டர்னி ஜெனரல், அதோட சின்பெட் பாதுகாப்பு சேவையை சேர்ந்தவங்க அப்புறம், இஸ்ரேல் சிவில் defense , பாதுகாப்பு படை,  இவங்களுக்கு இடையில  இருக்கிற ஒரு நெருக்கத்தை, அதாவது,  நெதன்யாவுக்கு எதிராக இருக்கிற, இவங்களுக்கு இடையே இருக்கிற நெருக்கத்தை கொறச்சு,  மிக மோசமான சட்ட சிக்கல்கள உருவாக்குறதுக்கு, இந்த ஃப்ரீயா இருக்கற நேரத்த, நெதன்யாஹு கும்பல் நல்லபடியா யூஸ் பண்ணிக்கிறாங்க அப்படின்னு சொல்றாங்க. இதெல்லாம் ஏதோ தற்செயலா நடந்துரல. நெதன்யாஹு கவர்ன்மெண்ட் ஃபார்ம் பண்ணதுல இருந்து, இவர் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும் ஒரு பெரிய சதித்திட்டத்தோட ஆரம்பமா,  அதாவது சதித்திட்டம் அப்படிங்கறது நெதன்யாஹுவோட ஆட்சியில பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்கிறது அப்படீன்னு சொல்றாங்க

தன்ன ஒரு குற்றவாளியா, சட்டத்துக்கு, முன்னாடி  நிறுத்தப்பட்டு இருக்கிறதுனால,  சட்ட அமலாக்கத்துறை மேல தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நெதன்யாஹூ  நடத்திட்டு இருக்காரு.  இவரு தன்னோட  அமைச்சரவைல இருந்து,  அவருக்கு விசுவாசமான அமைச்சர்கள அனுப்பி, சின் பெட்டோட தலைவரா இருக்கிற,  நெதன்யாஹு மேல வழக்குக்கு பதிஞ்சு விசாரிக்கிற ஷின்பேட் தலைவர்மேல,  முக்கியமான அரசு தகவல்களை லீக் பண்ணதா பொய்யான ஒரு குற்றச்சாட்டை உருவாக்கி, அவர் மேல பொது மக்களுக்கு இருக்க நல்ல அபிப்பிராயத்தை கெடுத்து, அவர குற்றவாளியாக சித்தரிச்சு,  தனக்கு எதிரா ஒருவர் இன்னொருவரோட சேரக்கூடாது அப்படீன்னு, எல்லாரையும் ஏமாத்தி பல தில்லுமுல்லுகள,  தொடர்ந்து செஞ்சுட்டு வர்றதா சொல்றாங்க. படை பலமும், ஆணவமும், அகங்காரமும், பதவி ஆசையும், ஒருத்தர எந்த அளவுக்கு கொடும்பாவியா மாத்திருதுன்னு பாத்தீங்களா?  இந்தியால மோடிகூட இந்தமாதிரி ஒரு கேரக்டர்தான்னு சொல்றாங்க.  ஆனா, ஒரு அளவுக்கு மேல ஓவரா போனா,  முடிச்சு விட்டுருவாங்கன்னு பயம் இந்த தேர்தலுக்கு அப்புறம் வந்திட்டதானால, அடங்கி ஒடுங்கி இருக்கிறார்னு சொல்றாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க?

Syria: A Hub for Terrorists

சிரியா அலெப்போல பெரும் பகுதிய புடிச்சதுக்கு அப்புறமும், சிரியா எதிர்ப்பு தீவிரவாதிகள் தொடர்ந்து முன்னேறிட்டு வராங்க. ஹாமாவோட புறநகர் பகுதியில கடுமையான சண்டை தொடர்ந்து நடந்துட்டு வருது. கத்தாரோட இன்னும் பல நாடுகளும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதா ரஷ்யா சொல்லி இருக்கு, ஆனா அதுக்கு உண்டான கண்டிஷன் இன்னும் செட் ஆகல அப்படின்னும் சொல்லப்படுது.

இஸ்ரேலும், அது கூட சேர்ந்து சிரியாவ எதிர்க்கிற தீவிரவாத குழுக்களும் ஒண்ணு  சேர்ந்து, மேற்கு ஆசியாவ ஒரு பயங்கரவாத மையமாக மாற்ற முயற்சி செய்து அப்படின்னு அரக்ச்சி சொல்லி இருக்காரு.  சிரியா தீவிரவாதிங்க கைக்குள்ள போயிருச்சுன்னா, அதனால பாதிக்கப்பட்ரது சிரியா மட்டும் கிடையாது, அதை சுற்றி இருக்கிற எல்லா நாடுகளுக்கும் ஆபத்து ஏற்படும் அப்படின்னு ஈரான் எச்சரிக்கை செஞ்சு இருக்கு. காசாவோட வடக்கு பகுதியில இஸ்ரேல் நடத்துன பயங்கர தாக்குதல டபிள்யூ ஹெச் ஓ கண்டிச்சு  இருக்குது. பாலஸ்தீன குழந்தைகளோட பேரழிவு மற்றும் பயங்கரமான நிலைமை குறித்து, ஐக்கிய நாடுகள் சபையோட குழந்தைகள் அமைப்பு யுனிசெஃப் கவலை தெரிவிச்சிருக்கு.

Yemeni People's Resilience Against American Threats

அமெரிக்காவோட மிரட்டலுக்கு பயப்படாத ஏமன் போராட்டக்காரர்கள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவா குரல் கொடுத்துட்டு இருக்காங்க. இஸ்ரேலோட இனப்படுகொலை போருக்கு உட்பட்ட பாலஸ்தீனர்களுக்கு, தங்களோட ஆதரவ மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, ஏமன் தலைநகர் சனாலயும், நாட்டோட மற்றும் பல நகரங்கள்லயும் ஏமன் மக்கள் ஒன்று கூடி, புதிய வாராந்திர ஆர்ப்பாட்டங்களை நடத்திட்டு வர்றாங்க.

Gaza Massacres and UNICEF's Condemnation

காசாமீதான இஸ்ரேலோட முழுமையான முற்றுகையால, பாலஸ்தீனர்கள் கடுமையான பசியையும் பட்டினியையும் சந்திச்சிட்டு இருக்குற அதே நேரத்துல, இஸ்ரேலுக்கு தேவையான பொருட்கள தொடர்ந்து வழங்குற, சில அரபு நாடுகள் கடைபிடிக்கிற செயலானது, ரொம்ப வெட்கக்கேடானது அப்படின்னு ஏமன்ல இருந்து வர்ர ஒரு அறிக்கை கண்டிச்சிருக்கு. 

Increase in Arab Countries' Exports to Israel

எகிப்தும், ஐக்கிய அரபு எமிரேட்சும், ஜோர்டான் போன்ற நாடுகள்ல இருந்தும், இஸ்ரேலுக்கு செய்ற ஏற்றுமதி, போன வருஷத்தைவிட இந்த வருஷம் பெருமளவு அதிகரிச்சிருக்குன்னு இஸ்ரேலோட வணிகத்துறை புள்ளி விபரங்கள வெளியிட்ருக்கு.

---









Monday, 2 December 2024

Breaking: லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது | Middle East and G...


லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களை அடுத்து, ஹெஸ்பொல்லாவும் தனது எதிர்த்தாக்குதலைத் துவங்கியது.

நாங்கள் இஸ்ரேலை நேசிக்கிறோம். எர்டோகன் ஆதரவு பயங்கரவாதி பேட்டி.

மர்ம சூட்கேசுடன், உக்ரைன் சென்றடைந்த ஜெர்மன் Chancellor Olaf Scholz.

ஈரான் ஜனாதிபதி பெஜஸ்க்கியானுடன் புடின் பேச்சுவார்த்தை.

இந்தியாவுக்கு வருகை தரும் ரஸ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புதின்.

இஸ்ரேலின் கிட்டத்தட்ட  ஐம்பதுக்கும் மேற்பட்ட,  போர் நிறுத்த மீறல்களுக்குப் பிறகு, இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு பதிலடி தரும் வகையில், ஹிஸ்புல்லா தனது தாக்குதல்களைத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹர்துஃப் பிராந்தியத்தில்,  ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீது ஹிஸ்புல்லா இன்று இரண்டு ராக்கெட்டுகளை வீசியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தெற்கு லெபனானில் உள்ள பெக்காவில், லெபனான் ராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், போர்நிறுத்த உடன்படிக்கையை இஸ்ரேல் முறித்துக்கொண்டது என்று ஹெஸ்பொல்லாஹ் தெரிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து திங்களன்று,  சியோனிச இராணுவ தளங்கள் மீது ஹெஸ்பொல்லாஹ் தனது முதல் தாக்குதலை நடத்தியது, இது கஃபர்ஷுபா ஹில்ஸ் பகுதியில் உள்ள, ருவைசத் அல்ஆலம் ஆக்கிரமிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.

ஹெஸ்பொல்லா இராணுவ செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சியோனிஸ்டுகள் போர்நிறுத்தத்தை மீறியதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அறிவித்தது. இஸ்ரேல் தாக்குதலால், லெபனான் பகுதிகளில் பொதுமக்களிடையே உயிரிழப்பையும்  காயங்களையும் ஏற்பட்டுள்ளது. 

தெற்கு லெபனானில் பல நகரங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இஸ்ரேலிய போர் விமானங்கள், மரூன் அல்-ராஸ் மற்றும் தல்லூசாவை குறிவைத்து அலையலையாக வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின.

ஹெஸ்பொல்லாஹ் நடத்திய பதில் தாக்குதல் காரணமாக, upper  கலிலியோவில் சைரன்கள் ஒலித்தன என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன..


நாங்கள் இஸ்ரேலை நேசிக்கிறோம் என்று இத்லிப்பில் உள்ள எர்டோகன் ஆதரவு பயங்கரவாதி ஒருவர் ஹீப்ரூ Channel Elevenக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஈரான் மற்றும் சிரிய ஆட்சியுடன் எங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. நீங்கள் ஹிஸ்புல்லாவை தாக்கியபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். நாங்கள் இஸ்ரேலை நேசிக்கிறோம், மேலும் இஸ்ரேலுக்கு நன்றியும்  கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


ரஷ்யாவுடன் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், உக்ரைனுக்கு ஜெர்மனியின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்த ஜெர்மனியின் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் பயணம் செய்துள்ளார். அவரது வருகை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், உக்ரைனுக்கு மேலும் இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து விவாதிக்கவும் சென்றிருப்பாதாகக் கூறப்படுகிறது.

தலைநகர் கியேவுக்கு சென்ற ஜேர்மன் Chancellor, தனது கையில் ஒரு பெரிய மர்ம சூட்கேஸ் போன்ற ஒரு பெட்டியுடன் சென்றிருப்பது, பல புதிய சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது. 


ஈரான் அதிபர் பெஜெஷ்கியானுடன் ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை.

தற்போது ரஷ்யாவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இது சிரியாவில் உருவாகி வரும் சூழ்நிலையை எப்படி சமாளிப்பது மற்றும், எப்படி பதிலடிகள் கொடுப்பது பற்றியதாக இருக்கலாம், ஏனென்றால், ஈரானும் ரசியாவும், ஸிரியாவுடன் ஆழமான நட்பு, அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பைக் கொண்டுள்ளனர். லெபனான் போர் நிறுத்தம் அமலில் இருக்கும்  நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் சிரியாவில் நடக்கும் நிகழ்வுகள் ஒரு  சவாலான நேரத்தை ஏற்படுத்தியுள்ளன.


ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும், கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியும், திங்கட்கிழமை காலை ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தி, காஸா, லெபனான் மற்றும் சிரியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும், ஈரானுக்கும் கத்தாருக்கும் இடையிலான, இருதரப்பு உறவுகள் குறித்தும் விவாதித்தனர்.

அரபு தேசிய மாநாடு, அலெப்போ மற்றும் இத்லிபில் அமெரிக்க ஆதரவிலான பயங்கரவாத மீளெழுச்சியைக் கண்டித்தது.  அரேபியர்களின் ஒற்றுமை, கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துதல் மற்றும், சிரியாவின்  இறையாண்மைக்கு ஆதரவு அளிப்பது ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.


ஈரானுடனான உறவை துண்டிக்க பஷார் அல் அசாத்திடம் அமெரிக்காவும் ஐக்கிய அரபு அமீரகமும் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.

ஹிஸ்புல்லாவுக்கு  ஆயுதங்கள் செல்லும்  பாதைகளை தடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.. 

இஸ்ரேல் மீது கவனம் செலுத்துவதற்காக, ஹிஸ்புல்லா தனது போராளிகளை சிரியாவிலிருந்து திரும்பப் பெற்றது, சிரியாவில் அசாத்தின் நிலையை பலவீனப்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

தற்போது சிரிய எல்லையை நோக்கி தனது சிறப்புப் படைப் பிரிவு செல்லும் படங்களை ஈராக்கைச்சேர்ந்த, Popular Mobilization Force  வெளியிட்டுள்ளது. இந்த PMF  ராணுவம் விரைவில் சிரியாவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இனைந்து செயல் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..


ரசியாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு  செய்தால்  நாங்கள் அணு ஆயுதத்தைப் பயன் படுத்துவோம் என்பது மட்டுமல்ல, வழக்கமான ஆயுதங்களைக் கொண்டு எங்களை ஆக்கிரமிக்க நினைத்தாலும், அவர்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த எங்களுக்கு  உரிமை உண்டு என்று புதின்  தெரிவித்துள்ளார்.                                                                                                                                                                                                                                                                                                   இதற்கிடையில், அமெரிக்காவிலுள்ள புளோரிடாவின் மார்-ஏ-லாகோ உணவு விடுதியில்,  இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா நெதன்யாகுவுடன் டிரம்ப் உணவருந்திய புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வர உள்ளார். பயணத்திற்கான தேதிகள் இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் ஒரு மாநாட்டின் போது தெரிவித்தார்.

---

ஒன்றிணைந்த முஸ்லீம் ராணுவம் | True Promise 3 | Syrian Conflicts: Unveili...


சிரியா மீதான தாக்குதல்கள். இஸ்ரேல் பின்னணியை அம்பலமாக்கிய வீடியோ.

சிரியாவின் ஹமாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

எர்தோகன் இஸ்ரேலுக்கு அளித்த அதிர்ச்சி சேவைகளின் பட்டியல்.

ஒன்றிணைந்த முஸ்லீம் ராணுவம். Operation True Promise 3 நிச்சயம். 

சியோனிச ஆய்வாளர் மொர்டெச்சாய் கேதார் என்பவர், சிரியா, ஈரான் மற்றும் ஹெஸ்புல்லாவிற்கு எதிரான வெளிநாட்டு ஆதரவு பயங்கரவாதிகளுக்கு, இஸ்ரேல் வழங்குகின்ற ஆதரவை  உறுதிப்படுத்தியுள்ளார். 

தூதரகங்கள், சமாதான ஒப்பந்தங்கள் மற்றும் தாக்குதல்களுக்குத் தேவையான ராணுவ தளவாடங்கள், செலவுகளுக்காக கோரிக்கைகள் போன்ற  திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் சிரியாவில், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன், இஸ்ரேலின் தொடர்புகளை வீடியோ காணொளி மூலம் விளக்கியிருக்கிறார்.

இஸ்ரேலின் சேனல் ட்டூக்கு அளித்த பேட்டியில், அரபு கலாச்சாரத்தின் இஸ்ரேலிய அறிஞரும், முன்னாள் இராணுவ புலனாய்வாளருமான லெப்டினன்ட் மொர்தெச்சாய் கேதார் கூறுகையில், அவர் சிரிய ஆயுதமேந்திய எதிர்த்தரப்பு பிரிவுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் ஒரு நிபந்தனையின் பேரில் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்திற்கு தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்.

இஸ்ரேலில் உள்ள மூத்த அதிகாரிகளிடம், அவர்கள் இஸ்ரேலிடமிருந்து பெற வேண்டிய தளவாடங்களின் விரிவான பட்டியலை நான் கொடுத்தேன். அவர்கள் சிரியா மற்றும் லெபனானை கட்டுப்படுத்தினால் மட்டுமே இஸ்ரேலுடன் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு தயாராக உள்ளனர் என்று கூறினார்.

நான் சிரிய எதிர்த்தரப்பு பிரிவுகளின் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் இஸ்ரேலை ஒரு எதிரியாக கருதவில்லை என்பதே அவர்களின் எண்ணம்.

டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தூதரகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக சிரிய எதிர்த்தரப்பு பிரிவுகளின் தலைவர்கள் டெல் அவிவுக்கு தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அந்நாட்டு ராணுவத்திற்கு உதவ ஈராக்கிய தன்னார்வப் படைகள் சிரியாவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதல்களுக்குள்ளான, சிரியாவின் ஹமாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது, சிரிய இராணுவம் பல வெளிநாட்டு ஆதரவு பயங்கரவாதிகளைக் கொன்றது மற்றும் சிறைபிடித்தன் விளைவாக ஹாமாவில் இயல்புநிலை தொடர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

சிரிய மற்றும் ரஷ்யா ராணுவம் பயங்கரவாதிகளுக்கெதிராக  இத்லிபில் கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. கூடிய விரைவில் இத்லிபிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இன்றிரவு சிரியாவில் ரஷ்ய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதல்களில் நிலைகுலைந்த ஐஎஸ்ஐஎஸ். தீக்கிரையான ஆயுதங்கள்.

துருக்கிய இராணுவத்திடம் இருந்து கொண்டு செல்லப்பட்ட எரிபொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அனைத்தும் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. அதன் ஒரு ஒரு தாக்குதல் வீடியோ இங்கு பதியப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எர்டோகன் அளித்த முக்கிய ஐந்து சேவைகளுக்கான பட்டியல் இதோ- 

ஒன்று, பாலஸ்தீனத்திற்கு ஏற்றுமதி என்ற போர்வையில் இஸ்ரேலுக்கு எஃகு ஏற்றுமதி அளவை அதிகரித்தல். 

இரண்டு,  துருக்கி வழியாக இஸ்ரேலுக்கு அஜர்பைஜான் எண்ணெய் பாரியளவில் மாற்றப்படுவதைத் தொடர்வது. 

மூன்று, ஒரு சியோனிச ரப்பியை தாக்கியவர்களை அடையாளம் கண்டு துருக்கிய உளவுத்துறை மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தகவல் அளித்தல். 

நான்கு,  சிரியாவின் அலெப்போவை நோக்கி தக்ஃபிரி பயங்கரவாதிகளை ஆயுதபாணியாக்கி அனுப்பி சிரிய முன்னணியையும் ஹிஸ்புல்லாவையும் பயங்கரவாதிகளுடன் சிக்க வைப்பதன் மூலம் இஸ்ரேலை எதிர்கொள்ளும் எதிர்ப்பு முன்னணியின் சக்தியைக் குறைத்தல். 

ஐந்து, பாலஸ்தீன பிரச்சினை மற்றும் சிரியாவில் முஸ்லிம்களுக்கிடையேயான மோதலுக்கு இஸ்ரேலால் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டது ஆகியவற்றிலிருந்து உலகளாவிய கவனத்தை திசை திருப்புதல்  ஆகிய சேவைகளை எரடோகன் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  

ஈரானின், இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் முன்னாள் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் மொஹ்சென் ரெஜாயிஇடம், லெபனானின் போர்நிறுத்தம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஈரான் அதன் திட்டமிட்ட இஸ்ரேளுக்கு எதிரான, ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் மூன்றை மறுபரிசீலனை செய்யுமா என்று கேட்கப்பட்டபோது,  "நாங்கள் பொருத்தமானதாக கருதும் இடத்திலும், நேரத்திலும், இஸ்ரேலிய ஆட்சியை தண்டிப்போம், இந்த பதிலடி நடவடிக்கை திட்டவட்டமானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட முஸ்லிம் இராணுவம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் கூறினார்.  அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்  சிரியாவிற்கு எதிராக பலமுறை முயன்று தோற்றும், மீண்டும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதே காட்சியை இருவரும் ஈராக், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் ஜோர்டானிலும் செயல்படுத்த முற்படுகின்றனர் என்றும் எச்சரித்தார். எனவே, ஒரு Unified Muslim Army யை உருவாக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

---

Sunday, 1 December 2024

சிரியா போர் - துருக்கியை பகடையாக்கி காய் நகர்த்தும் NATO மற்றும் இஸ்ரே...


சிரியா போர் - துருக்கியை  பகடையாக்கி காய் நகர்த்தும் நேட்டோ மற்றும் இஸ்ரேல் ஷின்பெட்.

ரஷ்யாவுடன் இணைந்து உலகின் நீதியை பாதுகாக்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 

காசா கொலைகளிலிருந்து உலகை திசை திருப்ப, இஸ்ரேல் முன்னெடுக்கும் - தக்ஃபிரி - நடவடிக்கை.

வெற்றியை நோக்கி சிரிய ராணுவம். சிதறும் அதிருப்தி படைகள்.

சிரியாவின் அலெப்போ மீதான தாக்குதலுக்கு முன்,  இஸ்ரேலின் ஷின் பெட் தலைவர் துருக்கியின் புலனாய்வு அமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தையும், நேட்டோவின் தலைவர், எர்தோகனை சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தையும்,  சிரியாவை சூழ்ந்துள்ள போர்மேகங்களுக்கு முக்கிய அச்சாரமாக அமைந்துள்ளது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிரியாவின் உள்நாட்டுப்பிரச்சினையில், சிரிய நாட்டு மக்களின் பங்கெடுப்பைவிட, வெளிநாட்டைச்சேர்ந்த கூலிப்படைகளின் பங்கு மிக அதிகமாக இருப்பதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. 

சிரியாமீது  நடத்தப்படும் தாக்குதல்கள், சிரிய நாட்டு ராணுவத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களைவிட, குர்திஷ் இன மக்களின்மீது நடத்தப்படும் தாக்குதல்கள்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவுடன் இணைந்து உலகின் நீதியை பாதுகாக்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 

ரஷ்யாவும் சீனாவும் நல்ல நட்பு நாடுகளாக உருவெடுத்துள்ளன. இவர்களுடன் ஈரான், நார்த் கொரியா உள்பட பல நாடுகள் ஒன்றிணைந்து, அமேரிக்கா என்னும் ஒற்றைத்தலைமையில் இயங்கும் இந்த உலகத்தில் ஏற்பட்டுள்ள அநியாயங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக,  இவர்கள் ஒன்றாக பல துருவ உலகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அமெரிக்க மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்து. புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் முயற்ச்சியில் முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரிய அரபு இராணுவத்திற்கு உதவுவதற்காக குர்திஷ் குழுக்கள் இப்போது அலெப்போவுக்கு செல்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்காலிகமாக சிரியாவின் மூலோபாய நிலைகளை தங்களது பாதுகாப்பில் எடுக்கிறார்கள், இதனால் சிரிய அரபு இராணுவம், நேட்டோ, இஸ்ரேல் மற்றும் துருக்கியால் தூண்டிவிடப்பட்டுள்ள அதிருப்தியாளர்களுக்கு எதிராக, ஒரு எதிர் தாக்குதலுக்கு தயாராக முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிரியாவில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ஈராக்கில் இருந்து பல்லாயிரக்கணக்கான போராளிகள் புறப்பட்டுள்ளனர்.

மேலும், சௌதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய இரண்டு நாடுகளும் சிரியா ஜனாதிபதி பஸார் அல் அசாத் அரசாங்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

சிரியாவில் ஆயுதமேந்தி தாக்குதல் நடத்தும் குழு,  அமெரிக்காவில் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் எப்போதும் இஸ்ரேலின் இலவச ஆதரவாளராக இருந்து வருகிறார், மேலும் டிரம்ப் அறிவித்துள்ள அமைச்சரவை தீவிர சியோனிஸ்டுகளால் ஆனது. ஆகவே, ட்ரம்ப் அதிகாரத்தில் இருக்கும்போது, பல தசாப்தங்களாக நெதன்யாஹு  கனவு கண்டபடி, ஈரான் மீதான பெரியளவிலான தாக்குதலை நடத்த அமெரிக்க ஆதரவைப்பெறவும்,  காசா மற்றும் லெபனானியர்களுக்கு எதிராக தமது விருப்பம்போல் செயல்பட ஆதரவும் பெற முடியும் என்னும் உற்சாகத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், சரிந்து வரும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிலை நிறுத்தும்வரை, நெதன்யாஹூவின் ஆசைகளுக்கு இந்த முறை ஒரு தடைக்கல்லாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு சில ஆய்வாளர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதற்குக்  காரணம், அமெரிக்காவின் பொருளாதாரத்தை முதன்மையானதாக நிலை நிறுத்துவதால் இந்த மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஆயினும் ட்ரம்மின் உண்மையான சொரூபம், அவர் பதவியேற்ற பின்புதான் வெளிப்படும் என்பதுதானே உண்மை.

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து அரங்கேற்றிவரும் படுகொலைகளிலிருந்தும், கொடூரமான பாலஸ்தீன இன அழிப்பு நடவடிக்கைகளிலிருந்தும், இந்த உலகை திசை திருப்ப, தக்ஃபிரி தீவிரவாத அமைப்பை, சிரியாவுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, உலக ஊடகங்களின் தலைப்புச்செய்திகளை மாற்றி எழுத, நாட்டோவுக்கும் இஸ்ரேலுக்கும் உதவி புரிவதாக, சிரிய கலகக்காரர்கள் மீது புகார் எழுந்துள்ளது. 

சிரியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஆயுதமேந்திய குழுக்களுக்கு, ஆயதங்கள், பணம், மற்றும் பயிற்சி ஆகியவை துருக்கி மூலம் அளிக்கப்படுகிறது என்னும் குற்றச்சாட்டும் இருந்துள்ளது. மேலும் இந்த குழுக்களின் துருக்கி ராணுவமும்கூட மறைமுகமாக பங்கெடுத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. 

சிரிய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட, ஆயுதப்படையைச் சேர்ந்த பலர் மூலம், இந்த செய்தி கசிந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சிறிய ராணுவ விமானப்படையும், ரஷ்ய விமானப்படையும் இணைந்து நடத்தும் வான்வழித் தாக்குதல்களை எதிகொள்ள முடியாமல் எதிரிப்படைகள் சிதறி ஓட்டம் எடுப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. பல இடங்களில் இந்த தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகத்தெரிகிறது.

மேலும், சிரிய ராணுவத்துக்கு வலுசேர்க்கும் வகையில், குர்திஷ் படைகளும், ஈராக்கிலிருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்களும், ஈரான் மற்றும் ரஷ்ய படைகளுடன் இணைந்து சிரியவைப் பாதுகாக்க, அதன் எதிரிகளுக்கு எதிராக தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன. 

முன்னதாக ரஷியாவின் விமானப்படை, இத்லிபில்  நடத்திய தாக்குதலில்,  சிரியாவில் உள்ள தஹ்ரிர் அல்-ஷாம் பயங்கரவாத குழுவின் தலைவர் அபு முகமது அல்-ஜுலானி கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, ஆயுதம் ஏந்திய சிரிய அதிருப்தியாளர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

---

உலகை உறைய வைத்த ஹைப்பர்சோனிக் எறிகணை ரஸ்சியாவின் ஓரெஷ்னிக் IRBM #Oreshni...


உலகை உறைய வைத்த ஹைப்பர்சோனிக் எறிகணை ரஸ்சியாவின் ஓரெஷ்னிக் ஐ ஆர் பீ எம்.

நான்காயிரம் டிகிரி செல்ஷியஸில் கான்கிரீட்டையே எரித்து ஆவியாக்கும் திறன். 

நாட்டோவுக்கு புடின் உறுதியான எச்சரிக்கை. 

ரஷ்யாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஓரெஷ்னிக், ஒரு அதி சக்திவாய்ந்த வெப்பத்தை உமிழக்கூடிய,  நான்காயிரம் டிகிரி செல்சியஸில் கான்கிரீட்டையே எரித்து ஆவியாக்கக்கூடிய வல்லமை கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த ஒரோஷ்ணிக் மிகவும் கடினப்படுத்தப்பட்ட இராணுவ வன்பொருள்கள் மற்றும் கவச வாகனங்களையும் உருகச்செய்யக்கூடிய வலிமை கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த ஓரெஷ்னிக் அதி நவீன ஏவுகணை ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை, அதாவது  ஐ ஆர் பி எம் ஆகும். அதைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் இங்கே:

ஒரேஷ்நிக்குடைய வேகம் - மேக் ten, அதாவது  மணிக்கு பன்னிரெண்டாயிரத்து முன்னூறு  கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.

இதனுடைய சூழ்ச்சித்திறன் - இது எந்த வான் பாதுகாப்பு ஏவுகணையிடமும் சிக்காமல்  சூழ்ச்சி செய்யும் திறனைக் கொண்டுள்ளது, இதனால் இந்த ஒரேஷ்னிக்கை இடைமறிப்பது மிகவும் கடினம்.

போர்க்கப்பல்கள் - இந்த ஒரேஷ்னிக்கை, பல சுயாதீனமாக வழிகாட்டப்பட்ட போர்க்கப்பல்களில் எடுத்துச் செல்ல முடியும், ஒவ்வொரு போர்க்கருவியும் துணை ஆயுதங்களைக் கொண்டுள்ளது.

ஒரேஷ்ணிக்கின் வரம்பு - இந்த ஏவுகணை சுமார் இரண்டாயிரத்து ஐநூறு முதல் மூவாயிரம் கிலோமீட்டர் வரையிலான வரம்பைக் கொண்டுள்ளது, இது ஐரோப்பா முழுவதும் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.

ஒரேஷ்னிக்கின் முதல் பயன்பாடு - நவம்பர் இருபத்தொன்று இரண்டாயிரத்து இருபத்து நான்கு அன்று, டினிப்ரோவில் உள்ள உக்ரைனின் P A Pivdenmash வசதி மீதான தாக்குதலில் Oreshnik முதன்முதலில் செயல்பாட்டு ரீதியாக பயன்படுத்தப்பட்டது.

தப்பிக்கும் திறன் - அதன் ஹைப்பர்சோனிக் வேகம் மற்றும் சூழ்ச்சித்திறன், தற்போதைய உலகளாவிய பாதுகாப்பு அமைப்புகளுடன், ஒரோஷ்ணிக் ஏவப்பட்டபின், அதை இடைமறிப்பதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆக்குகிறது.

ஓரெஷ்னிக்கின் வளர்ச்சி மற்றும் வரிசைப்படுத்தல் ஏவுகணை தொழில்நுட்பத்தில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது, இது உலகெங்கிலும் உள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு புதிய சவால்களை முன்வைத்துள்ளது.

ஓரெஷ்னிக் ஏவுகணை குறிப்பிடத்தக்க சுடுதிறன் கொண்ட ஒரு வலிமையான ஆயுதமாகும்.  இந்த ஏவுகணை அணு ஆயுத மற்றும், வழக்கமான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.

ஒரேஷ்நிக்கின் M I R V திறனானது, பல சுயாதீனமாக இலக்கு ரீஎன்ட்ரி வாகனங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது வெவ்வேறு இலக்குகளைத் தாக்கக்கூடிய பல ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது.

ஒரேஷனிக், அதன் வேகம் மற்றும் சூழ்ச்சித்திறன் காரணமாக, தற்போதைய பாதுகாப்பு அமைப்புகளுடன் இடைமறிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

ஓரெஷ்னிக்கின் வேகம், வரம்பு மற்றும் Payload ஆகியவற்றின் கலவையானது, எந்தவொரு பாதுகாப்பு அமைப்புக்கும் ஒரேஷனிக்கை எதிர்கொள்வது மிகவும் மேம்பட்ட மற்றும் சவாலான முயற்சியாக அமைகிறது.

இந்த ஒரேஷனிக் ஏவுகணையைப்பற்றி ரஷ்யா ஜனாதிபதி புதின் பேசும்போது, கொள்ளமுடியாத ஆயுதம் என்றும், திகைக்க வைக்கிற மற்றும் திணற வைக்கிற ஆயுதம் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

ஓரெஷ்னிக் ஒரு மூலோபாய அணு ஆயுதம் அல்ல, ஆனால் அதன் தாக்கும் சக்தியும் துல்லியமும், அதை ஒப்பிடத்தக்கதாக ஆக்குகின்றன—குறிப்பாக,   நீண்ட தூர அமைப்புகளுடன் இணைந்தால், அந்த ஏவுகணையை இடைமறித்து தாக்க முடியாது என்று  விளாடிமிர் புதின் வலியுறுத்தினார். "இன்று அத்தகைய ஏவுகணைக்கு எதிராக எந்த எதிர் நடவடிக்கையும் இல்லை, அதைத் தடுக்க எந்த வழியும் இல்லை" என்று புட்டின் மேலும் கூறினார். பரிசோதனைகளைத் தொடர்வதற்கும், பாரிய உற்பத்தியை அதிகரிப்பதற்குமான திட்டங்களை அவர் வலியுறுத்தினார், ரஷ்யாவிடம் இதேபோன்ற அமைப்புகளின் போதுமான கையிருப்பு உள்ளது என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

---

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...