சிரியா மீதான தாக்குதல்கள். இஸ்ரேல் பின்னணியை அம்பலமாக்கிய வீடியோ.
சிரியாவின் ஹமாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
எர்தோகன் இஸ்ரேலுக்கு அளித்த அதிர்ச்சி சேவைகளின் பட்டியல்.
ஒன்றிணைந்த முஸ்லீம் ராணுவம். Operation True Promise 3 நிச்சயம்.
சியோனிச ஆய்வாளர் மொர்டெச்சாய் கேதார் என்பவர், சிரியா, ஈரான் மற்றும் ஹெஸ்புல்லாவிற்கு எதிரான வெளிநாட்டு ஆதரவு பயங்கரவாதிகளுக்கு, இஸ்ரேல் வழங்குகின்ற ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
தூதரகங்கள், சமாதான ஒப்பந்தங்கள் மற்றும் தாக்குதல்களுக்குத் தேவையான ராணுவ தளவாடங்கள், செலவுகளுக்காக கோரிக்கைகள் போன்ற திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் சிரியாவில், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன், இஸ்ரேலின் தொடர்புகளை வீடியோ காணொளி மூலம் விளக்கியிருக்கிறார்.
இஸ்ரேலின் சேனல் ட்டூக்கு அளித்த பேட்டியில், அரபு கலாச்சாரத்தின் இஸ்ரேலிய அறிஞரும், முன்னாள் இராணுவ புலனாய்வாளருமான லெப்டினன்ட் மொர்தெச்சாய் கேதார் கூறுகையில், அவர் சிரிய ஆயுதமேந்திய எதிர்த்தரப்பு பிரிவுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் ஒரு நிபந்தனையின் பேரில் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்திற்கு தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்.
இஸ்ரேலில் உள்ள மூத்த அதிகாரிகளிடம், அவர்கள் இஸ்ரேலிடமிருந்து பெற வேண்டிய தளவாடங்களின் விரிவான பட்டியலை நான் கொடுத்தேன். அவர்கள் சிரியா மற்றும் லெபனானை கட்டுப்படுத்தினால் மட்டுமே இஸ்ரேலுடன் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு தயாராக உள்ளனர் என்று கூறினார்.
நான் சிரிய எதிர்த்தரப்பு பிரிவுகளின் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் இஸ்ரேலை ஒரு எதிரியாக கருதவில்லை என்பதே அவர்களின் எண்ணம்.
டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தூதரகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக சிரிய எதிர்த்தரப்பு பிரிவுகளின் தலைவர்கள் டெல் அவிவுக்கு தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அந்நாட்டு ராணுவத்திற்கு உதவ ஈராக்கிய தன்னார்வப் படைகள் சிரியாவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதல்களுக்குள்ளான, சிரியாவின் ஹமாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது, சிரிய இராணுவம் பல வெளிநாட்டு ஆதரவு பயங்கரவாதிகளைக் கொன்றது மற்றும் சிறைபிடித்தன் விளைவாக ஹாமாவில் இயல்புநிலை தொடர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.
சிரிய மற்றும் ரஷ்யா ராணுவம் பயங்கரவாதிகளுக்கெதிராக இத்லிபில் கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. கூடிய விரைவில் இத்லிபிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இன்றிரவு சிரியாவில் ரஷ்ய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதல்களில் நிலைகுலைந்த ஐஎஸ்ஐஎஸ். தீக்கிரையான ஆயுதங்கள்.
துருக்கிய இராணுவத்திடம் இருந்து கொண்டு செல்லப்பட்ட எரிபொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அனைத்தும் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. அதன் ஒரு ஒரு தாக்குதல் வீடியோ இங்கு பதியப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எர்டோகன் அளித்த முக்கிய ஐந்து சேவைகளுக்கான பட்டியல் இதோ-
ஒன்று, பாலஸ்தீனத்திற்கு ஏற்றுமதி என்ற போர்வையில் இஸ்ரேலுக்கு எஃகு ஏற்றுமதி அளவை அதிகரித்தல்.
இரண்டு, துருக்கி வழியாக இஸ்ரேலுக்கு அஜர்பைஜான் எண்ணெய் பாரியளவில் மாற்றப்படுவதைத் தொடர்வது.
மூன்று, ஒரு சியோனிச ரப்பியை தாக்கியவர்களை அடையாளம் கண்டு துருக்கிய உளவுத்துறை மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தகவல் அளித்தல்.
நான்கு, சிரியாவின் அலெப்போவை நோக்கி தக்ஃபிரி பயங்கரவாதிகளை ஆயுதபாணியாக்கி அனுப்பி சிரிய முன்னணியையும் ஹிஸ்புல்லாவையும் பயங்கரவாதிகளுடன் சிக்க வைப்பதன் மூலம் இஸ்ரேலை எதிர்கொள்ளும் எதிர்ப்பு முன்னணியின் சக்தியைக் குறைத்தல்.
ஐந்து, பாலஸ்தீன பிரச்சினை மற்றும் சிரியாவில் முஸ்லிம்களுக்கிடையேயான மோதலுக்கு இஸ்ரேலால் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டது ஆகியவற்றிலிருந்து உலகளாவிய கவனத்தை திசை திருப்புதல் ஆகிய சேவைகளை எரடோகன் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானின், இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் முன்னாள் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் மொஹ்சென் ரெஜாயிஇடம், லெபனானின் போர்நிறுத்தம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஈரான் அதன் திட்டமிட்ட இஸ்ரேளுக்கு எதிரான, ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் மூன்றை மறுபரிசீலனை செய்யுமா என்று கேட்கப்பட்டபோது, "நாங்கள் பொருத்தமானதாக கருதும் இடத்திலும், நேரத்திலும், இஸ்ரேலிய ஆட்சியை தண்டிப்போம், இந்த பதிலடி நடவடிக்கை திட்டவட்டமானது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட முஸ்லிம் இராணுவம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் கூறினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சிரியாவிற்கு எதிராக பலமுறை முயன்று தோற்றும், மீண்டும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதே காட்சியை இருவரும் ஈராக், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் ஜோர்டானிலும் செயல்படுத்த முற்படுகின்றனர் என்றும் எச்சரித்தார். எனவே, ஒரு Unified Muslim Army யை உருவாக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
---
No comments:
Post a Comment