லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களை அடுத்து, ஹெஸ்பொல்லாவும் தனது எதிர்த்தாக்குதலைத் துவங்கியது.
நாங்கள் இஸ்ரேலை நேசிக்கிறோம். எர்டோகன் ஆதரவு பயங்கரவாதி பேட்டி.
மர்ம சூட்கேசுடன், உக்ரைன் சென்றடைந்த ஜெர்மன் Chancellor Olaf Scholz.
ஈரான் ஜனாதிபதி பெஜஸ்க்கியானுடன் புடின் பேச்சுவார்த்தை.
இந்தியாவுக்கு வருகை தரும் ரஸ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புதின்.
இஸ்ரேலின் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட, போர் நிறுத்த மீறல்களுக்குப் பிறகு, இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு பதிலடி தரும் வகையில், ஹிஸ்புல்லா தனது தாக்குதல்களைத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹர்துஃப் பிராந்தியத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீது ஹிஸ்புல்லா இன்று இரண்டு ராக்கெட்டுகளை வீசியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தெற்கு லெபனானில் உள்ள பெக்காவில், லெபனான் ராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், போர்நிறுத்த உடன்படிக்கையை இஸ்ரேல் முறித்துக்கொண்டது என்று ஹெஸ்பொல்லாஹ் தெரிவித்துள்ளது.
அதைத்தொடர்ந்து திங்களன்று, சியோனிச இராணுவ தளங்கள் மீது ஹெஸ்பொல்லாஹ் தனது முதல் தாக்குதலை நடத்தியது, இது கஃபர்ஷுபா ஹில்ஸ் பகுதியில் உள்ள, ருவைசத் அல்ஆலம் ஆக்கிரமிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.
ஹெஸ்பொல்லா இராணுவ செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சியோனிஸ்டுகள் போர்நிறுத்தத்தை மீறியதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அறிவித்தது. இஸ்ரேல் தாக்குதலால், லெபனான் பகுதிகளில் பொதுமக்களிடையே உயிரிழப்பையும் காயங்களையும் ஏற்பட்டுள்ளது.
தெற்கு லெபனானில் பல நகரங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இஸ்ரேலிய போர் விமானங்கள், மரூன் அல்-ராஸ் மற்றும் தல்லூசாவை குறிவைத்து அலையலையாக வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின.
ஹெஸ்பொல்லாஹ் நடத்திய பதில் தாக்குதல் காரணமாக, upper கலிலியோவில் சைரன்கள் ஒலித்தன என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன..
நாங்கள் இஸ்ரேலை நேசிக்கிறோம் என்று இத்லிப்பில் உள்ள எர்டோகன் ஆதரவு பயங்கரவாதி ஒருவர் ஹீப்ரூ Channel Elevenக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஈரான் மற்றும் சிரிய ஆட்சியுடன் எங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. நீங்கள் ஹிஸ்புல்லாவை தாக்கியபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். நாங்கள் இஸ்ரேலை நேசிக்கிறோம், மேலும் இஸ்ரேலுக்கு நன்றியும் கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், உக்ரைனுக்கு ஜெர்மனியின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்த ஜெர்மனியின் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் பயணம் செய்துள்ளார். அவரது வருகை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், உக்ரைனுக்கு மேலும் இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து விவாதிக்கவும் சென்றிருப்பாதாகக் கூறப்படுகிறது.
தலைநகர் கியேவுக்கு சென்ற ஜேர்மன் Chancellor, தனது கையில் ஒரு பெரிய மர்ம சூட்கேஸ் போன்ற ஒரு பெட்டியுடன் சென்றிருப்பது, பல புதிய சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது.
ஈரான் அதிபர் பெஜெஷ்கியானுடன் ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை.
தற்போது ரஷ்யாவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இது சிரியாவில் உருவாகி வரும் சூழ்நிலையை எப்படி சமாளிப்பது மற்றும், எப்படி பதிலடிகள் கொடுப்பது பற்றியதாக இருக்கலாம், ஏனென்றால், ஈரானும் ரசியாவும், ஸிரியாவுடன் ஆழமான நட்பு, அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பைக் கொண்டுள்ளனர். லெபனான் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் சிரியாவில் நடக்கும் நிகழ்வுகள் ஒரு சவாலான நேரத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும், கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியும், திங்கட்கிழமை காலை ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தி, காஸா, லெபனான் மற்றும் சிரியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும், ஈரானுக்கும் கத்தாருக்கும் இடையிலான, இருதரப்பு உறவுகள் குறித்தும் விவாதித்தனர்.
அரபு தேசிய மாநாடு, அலெப்போ மற்றும் இத்லிபில் அமெரிக்க ஆதரவிலான பயங்கரவாத மீளெழுச்சியைக் கண்டித்தது. அரேபியர்களின் ஒற்றுமை, கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துதல் மற்றும், சிரியாவின் இறையாண்மைக்கு ஆதரவு அளிப்பது ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஈரானுடனான உறவை துண்டிக்க பஷார் அல் அசாத்திடம் அமெரிக்காவும் ஐக்கிய அரபு அமீரகமும் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்கள் செல்லும் பாதைகளை தடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது..
இஸ்ரேல் மீது கவனம் செலுத்துவதற்காக, ஹிஸ்புல்லா தனது போராளிகளை சிரியாவிலிருந்து திரும்பப் பெற்றது, சிரியாவில் அசாத்தின் நிலையை பலவீனப்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
தற்போது சிரிய எல்லையை நோக்கி தனது சிறப்புப் படைப் பிரிவு செல்லும் படங்களை ஈராக்கைச்சேர்ந்த, Popular Mobilization Force வெளியிட்டுள்ளது. இந்த PMF ராணுவம் விரைவில் சிரியாவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இனைந்து செயல் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
ரசியாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு செய்தால் நாங்கள் அணு ஆயுதத்தைப் பயன் படுத்துவோம் என்பது மட்டுமல்ல, வழக்கமான ஆயுதங்களைக் கொண்டு எங்களை ஆக்கிரமிக்க நினைத்தாலும், அவர்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்று புதின் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்காவிலுள்ள புளோரிடாவின் மார்-ஏ-லாகோ உணவு விடுதியில், இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா நெதன்யாகுவுடன் டிரம்ப் உணவருந்திய புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வர உள்ளார். பயணத்திற்கான தேதிகள் இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் ஒரு மாநாட்டின் போது தெரிவித்தார்.
---
No comments:
Post a Comment