Friday, 17 October 2025

புடின் மாநாடு சிதறியது | Katz திட்டம் தீவிரம் | டிரம்ப் சொன்னால், தெருக்...


 டிரம்ப் சூழ்ச்சி – Katz எச்சரிக்கை: ஹமாஸ் வீழ்ச்சி, புடின் தோல்வி!" 
  Trump’s Gameplan – Katz Warns: Hamas Collapse, Putin’s Summit Shame!
---

🌍 உலக அரசியல் ஒரு திருப்புமுனையில்! இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Katz, ஹமாஸ் அமைப்பை முற்றாக வீழ்த்தும் திட்டத்தை IDF-ஐக் கொண்டு தயாரிக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ceasefire தோல்வியடைந்தால், இஸ்ரேல் மீண்டும் போருக்கு திரும்பும் என CNN-இல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே நேரத்தில், ரஷ்ய அதிபர் புடின், அரபு உச்சிமாநாட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தார் — காரணம், அரபு தலைவர்கள் வரவில்லை!

🔴 ஹமாஸ் இறந்தவர்களின் உடல்களை திருப்பி அனுப்ப தவறியது. 

🔴 காசா-எகிப்து எல்லை மூடப்பட்டது. 

🔴 புடின் அரபு உச்சிமாநாட்டை ரத்து செய்தது. 

🔴 பலஸ்தீன உடல்களில் சித்திரவதை அடையாளங்கள் காணப்பட்டது. 

🔴 Trump–Netanyahu சமாதான ஒப்பந்தம் எதிர்ப்பு. என்று, 

இந்த வீடியோவில், இந்த அனைத்து முக்கிய செய்திகளையும்  பகிர்கிறோம். உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் பகிருங்கள்!

👉 Subscribe செய்ய மறக்காதீர்கள் 👉 Like & Share for awareness 👉 🔔 Bell icon-ஐ கிளிக் செய்யுங்கள். செய்திகள் தொடர்கின்றன..

----

cease fire தோல்வியடைந்தால், அல்லது ஹமாஸ் சமாதான ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால், மீண்டும் போர் துவங்க IDF தயாராக இருக்க வேண்டும்என்று கட்ஸ்  தெறிவித்திருக்கிறார். இதற்கான திட்டத்தை தயாரிப்பதற்காக, IDF தலைமை அதிகாரி லெ.ஜென் மற்றும்,  ஐயல் ஸமிர் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஹமாஸிடம் பிணமாக உள்ளவர்களை மீட்பது , ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக அகற்றுவது, அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படை மூலம் சுரங்கங்களை அழிப்பது, மேலும், இதற்கு ஹமாஸ் ஒத்துழைக்கவில்லை என்றால், இஸ்ரேல் மீண்டும் போர் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் எதிர்த்தால், காசா இராணுவம யமாக்கப்படுவதையும், இனி இஸ்ரேலுக்கு ஒரு அச்சுறுத்தலாக இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக, அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து, இஸ்ரேல் மீண்டும் சண்டையிடும் என்று Katz  எச்சரித்தார்.

இது இப்படி இருக்க, புதன்கிழமை இரவு செஞ்சிலுவைச் சங்கத்திடம், மேலும் இரண்டு உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எங்களால் அணுக முடிந்த அனைத்து பணயக்கைதிகளின் உடல்களும், இப்போது இஸ்ரேலிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, ஹமாஸ் அறிவித்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, திங்கட்கிழமைக்குள் இருபத்தெட்டு  உடல்கள் திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டிய போதிலும், இதுவரை மொத்தம் ஒன்பது உடல்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

---
இது தொடர்பான தற்போதைய  முக்கிய முன்னேற்றங்களில்,

இறந்தவர்களை தேடுதல் தொடர்பான, குறிப்பிடத்தக்க முயற்சிகள் இல்லாமல், மீதமுள்ள பத்தொன்பது உடல்களை மீட்டெடுக்க முடியாது என்று ஹமாஸ் கூறுகிறது. காசாவின் சில பகுதிகளை அணுக முடியாத சூழ்நிலை இருப்பதாலும், இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளால் காசா கட்டமைப்பு சேதம் அடைந்திருப்பதாலும், இறந்தவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு உபகரணங்கள் தேவைப்படும் நிலை இருப்பதாலும், தேடல்பணிகள் தொய்வடைந்திருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் இஸ்ரேலிடம் உடல்களை ஒப்படைத்தபோது , நான்கு சவப்பெட்டிகள் இருந்தன, ஆனால் அதில் ஒன்று, அறியப்பட்ட எந்த பணயக்கைதிகளுடனும் பொருந்தவில்லை, இது, இறந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலையையும், மற்ற உடல்கள் எந்த நிலையில் உள்ளன என்பதைக் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக்க கூறப்படுகிறது..
---
மனிதாபிமான உதவியை தாமதப்படுத்துவதன் மூலமும், ரஃபா எல்லையைக் கடக்க அனுமதிக்காமல் மூடி வைத்திருப்பதன் மூலமும், ஹமாஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற, இஸ்ரேல் தற்போது அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த காரணங்களால், காசா மற்றும் இஸ்ரேலுக்கான போர்நிறுத்தம் கேள்விக்குறியாகி உள்ளது.

எதிர்பாராத இந்த திருப்பம்,  பலவீனமான, அமைதி ஒப்பந்த செயல்பாட்டில், ஒரு முக்கிய புள்ளியாக மாறியுள்ளது, அனைத்து இஸ்ரேலிய உடல்களையும் திருப்பி அனுப்பத் தவறினால், மீண்டும் இராணுவதாக்குதலைத் தொடங்குவோம்  என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தம் முறிந்தால், ஹமாஸை தோற்கடிக்க ஒரு விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு, பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், ஏற்கனவே ஐ.டி.எஃப்-ஐ கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
---
ஹமாஸ் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தவறினால், இஸ்ரேலியப் படைகள் மீண்டும் சண்டையிட, அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். நான் அந்த வார்த்தையைச் சொன்னவுடன், இஸ்ரேல் காசாவின் தெருக்களுக்குத் திரும்பும், என்று டிரம்ப் சீஎன்னென் இடம் கூறினார்.

ஹமாஸ் இன்னும் அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பாததால், உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள், நுழையக் காத்திருக்கும்  காசா மற்றும் எகிப்து இடையேயான எல்லையை மூடிவிட்டு, போரை மீண்டும் துவக்க இஸ்ரேல் தயாராகி வருவதாகக் அறிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் இறந்த பாலஸ்தீனியர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளது. புதன்கிழமை மாலை, காசாவில் உள்ள தடயவியல் குழுக்கள், இஸ்ரேலியர்களால் ஒப்படைக்கப்பட்ட  பல உடல்கள்,  சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பதற்கான அறிகுறிகளைக் கொண்டிருந்ததாகக் கூறின. மற்றவை சிதைந்ததாகவோ, அல்லது எரிந்ததாகவோ தோன்றின, சிலவற்றில் கைகால்கள் அல்லது பற்கள் இல்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது..

காசாவின் தெற்கு மூலையில் உள்ள கெரெம் ஷாலோம் checkpost வழியாகவும், பிற checkpost வழியாகவும், மனிதாபிமான உதவிகள் இன்னும் காசா பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில், நாட்டின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பைக் கொண்ட, இஸ்ரேலிய இராணுவ நிறுவனமான கோகாட் இவ்வாறு கூறியுள்ளது.  
---

டிரம்பின்சூழ்ச்சிக்கு விலைபோன அரபுக்கள். ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின்அரபு உச்சி மாநாட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தார், காரணம்,  அரபு தலைவர்கள் யாரும் வரவில்லை. இந்த உச்சி மாநாடு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், அக்டோபர் பதினைந்தாம் தேதியன்று நடைபெற திட்டமிடப்பட்டது, ஆனால், சவூதி, எகிப்து, ஐக்கிய அரேபிய அமீரகம் போன்ற முக்கிய நாடுகள் பங்கேற்பை உறுதிப்படுத்தவில்லை. 

இந்த மாநாட்டில் பங்கேற்பதாக இருந்த இருபத்திரண்டு அரபு தலைவர்களில், சிரியா மற்றும் அரபு லீக் மட்டுமே பங்கேற்பை உறுதி செய்தனர்.  

மற்றொருபுறம், அமெரிக்கா மற்றும் டிரம்ப் முன்னெடுத்த அமைதி முயற்சிக்கு எதிரான ரஷ்யாவின் ஆதரவை காட்ட வேண்டும் என்பதற்காக, மாஸ்கோ உச்சிமாநாடு திட்டமிடப்பது என்றும்,  மாநாடு ரத்து — ரஷ்யாவின் மத்திய கிழக்கு தாக்கம் குறைந்து வருகிறது என விமர்சனங்களும் எழுந்துள்ளது.  டிரம்ப் நெதன்யாஹுவுடன் இணைந்து, வெளியிட்ட சமாதான ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று ஈரான், ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
---
உலகம் பதற்றத்தில் இருக்கிறது… உங்கள் கருத்து என்ன? கீழே comment செய்யுங்கள். Like, Share, Subscribe செய்யுங்கள் – உங்கள் ஆதரவே எங்கள் பலம்! நன்றி.


--

Wednesday, 15 October 2025

WORLD IN FLAMES! Gaza, Ukraine, India, Iran – Truth Unleashed! The world...


காசா கொடூரம், உக்ரைன் அரசியல், Google AI Hub – உலகம் பதறும் 5 அதிரடி செய்திகள்!

Description :

இன்றைய உலக அரசியல், தொழில்நுட்ப, மற்றும் மனிதநேயம் சார்ந்த ஐந்து  முக்கிய செய்திகள்.

காசா அழிவுக்கு பொறுப்பானவர்கள் நீதிமன்றத்தில் நிற்க வேண்டும் என்று, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் கூறியுள்ளதும், 

“இனி உலகம் உக்ரைன்-ரஷ்யா போரையே கவனிக்கும் என்று, Zelensky மகிழ்ச்சிஅடைந்திருப்பதும்,

ஏ ஐ தொழில் நுற்பத்துக்கான, கூகுள் நிறுவனத்தின் பதினைந்து பில்லியன் அளவினான முதலீட்டை, இந்தியா ஏன் வரவேற்கிறது? ஐரோப்பா ஏன் எதிர்க்கிறது என்பதற்கான காரணமும்,

சமாதானம் பேசும் அமெரிக்க ஜனாதிபதியை நம்ப முடியாது என்று, ஈரான் காட்டமாகக் கூறியிருப்பதும், 

கைதிகளை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படுவதற்கான காரணம், இஸ்ரேல் ஏற்படுத்திய அழிவுகள்தான் என்று, ஹமாஸ் கூறியிருப்பதும் இந்தத் தொகுப்பில் அடங்கும்.

இந்த வீடியோவில், உலகம் பதறவைக்கும் அரசியல், தொழில்நுட்ப, மனிதநேயம் சார்ந்த உண்மைகளை நாங்கள் பகிர்கிறோம். Subscribe செய்ய மறக்காதீர்கள்.


Content  1:

காசா கொடூரங்களை மறக்கக்கூடாது. காசா அழிவுக்கு  பொறுப்பானவர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் சமீபத்தில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர்நிறைவு ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியது:

போர்நிறைவு என்பது, நடந்த கொடூரங்களை மறக்க வேண்டியதற்கு அல்ல. காசாவில் நடந்த  அழிவுகளுக்கு பொறுப்பானவர்கள், நீதிமன்றத்தில் கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அவரது கருத்து, மனிதநேயம் மற்றும் நீதியின் இடையே சமநிலை வேண்டும் என்பதாகும். இது ஐரோப்பிய அரசியல் வட்டத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் இதற்கு கடுமையாக பதிலளித்து, சில ஸ்பெயின் அமைச்சர்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

----

Content  2:

மீண்டும் உக்ரைன் ரஸ்சியா போர் அரசியல். சந்தோசத்தில் துடிக்கும் Zelensky. 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான, சமீபத்திய போர்நிறைவு ஒப்பந்தம் மூலமாக, காசா கமக்கள் மகிழ்ச்சியில் அடைகிறார்களோ இல்லையோ, zelensky மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். உலகத்தின் கவனத்தை மீண்டும் உக்ரைன்-ரஷ்யா போருக்கு திருப்பும் என, உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் கூறியது:

இஸ்ரேல் காசா போர்நிறைவு ஒரு முக்கிய முன்னேற்றம். இதுபோன்ற முயற்சிகள் மற்ற போர்களையும் முடிவுக்கு கொண்டு வரலாம். இப்போது உலகம் உக்ரைனின் போரையும் கவனிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆயினும், இனி மீண்டும் தனது பெயர் உலக தலைப்புச் செய்திகளில் வலம் வருவதுடன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆயுதங்களும், பணமும் தன்னிடம் வந்து குவியும் என்னும் நம்பிக்கையில் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

----

Content  3:

google நிறுவனம்,  கிட்டத்தட்ட பதினைந்து பில்லியன் அளவிலான முதலீட்டில், இந்தியாவில் மிகப்பெரிய தகவல் மையத்தை நிறுவுவதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற DATA CENTERகளை ஐரோப்பா எதிர்த்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினத்தில் நிறுவ அனுமதி கொடுத்ததால், பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.   

இந்தியா ஏன் வரவேற்கிறது?

இந்தியா வளர்ச்சி மற்றும் நீண்டகால முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது:

  • Digital India திட்டத்தின் கீழ் A I, Cloud, Fiber போன்ற உள்கட்டமைப்புகள் விரிவாக்கம்.

  • பணியிடங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி. விசாகப்பட்டினத்தை மையமாகக்கொண்டு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

  • பசுமை சக்தி: Google, Adani, Airtel கூட்டாக இணைந்து, renewable powered compute என்னும் பசுமை சக்தியை உருவாக்குகின்றனர்.

  • உலகளாவிய A I தலைமை. இந்தியா, A I யுகத்தில் முன்னிலை வகிக்க விரும்புகிறது.

  • Subsea Gateway. புதிய cable landing மூலம் உலகளாவிய data connectivity மேம்படும்.

Google C E O சுந்தர் பிச்சை கூறும்போது, இது அமெரிக்காவுக்கு வெளியே, நாங்கள் செய்த மிகப்பெரிய முதலீடு. இந்தியாவின் கனவுக்கு இது ஒத்துப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.

சரி, ஐரோப்பா ஏன் எதிர்க்கிறது?

பல ஐரோப்பிய நாடுகள் பெரிய டேட்டா சென்டர்களை தடைசெய்து அல்லது கட்டுப்படுத்தி வருகின்றன, காரணங்கள்:

  • சுற்றுச்சூழல் கவலைகள்: டேட்டா சென்டர்கள் மின்சாரம் மற்றும் நீரை அதிகம் பயன்படுத்துகின்றன. நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள் grid overload காரணமாக திட்டங்களை நிறுத்தியுள்ளன.

  • நிலம் மற்றும் நகரமைப்பு: பெரிய அளவிலான உள்ளூர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அதனால் பல சிரமங்கள் ஏற்படுத்தப்பட்டு, நகர் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படலாம்.

  • டிஜிட்டல் சுனாமித்துவம்: ஐரோப்பிய நாடுகள், வெளிநாட்டு tech நிறுவனங்களின் ஆதிக்கத்தை உள்ளூரில் கட்டுப்படுத்த விரும்புகின்றன.

  • மின்சாரத் தட்டுப்பாடுகளிலிருந்து உள்ளூர் மக்கள் மற்றும் தொழிற்சாலைகளை காப்பதற்காகவும், இதற்கு அனுமதி மறுத்து  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

--

Content 4:

கொலையாளிகளின் பக்கம் நின்றுகொண்டு, சமாதானம் பேசும் அமெரிக்க ஜனாதிபதியை நம்ப முடியாது என்று, ஈரான் காட்டமாகக் கூறியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் மீது வைக்கப்பட்டுள்ள, அராக்சியின் முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால்.,

  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் அமைதியான அணுசக்தி திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்.

  • அவரால்  இஸ்ரேலின் தாக்கத்தை குறைக்க முடியவில்லை; அதனால் போர்க்களவாதிகளுக்கு ஆதரவு அளிக்கிறார். அவர்களைப் புகழ்ந்து பேசுகிறார். மேலும், 

  • சமாதானத்தின் தலைவர் என்ற பெயரை வெறுமனே பயன்படுத்த முடியாது, என்றார் அராக்சி.

  • ஈரான், அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சிக்கிறது: சமாதானம் பேசுவது ஒருபக்கம், ஆனால் போரை ஊக்குவித்து, பேரம் பேசுவது  த்தை ஊக்குவிப்பது மற்றொரு பக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

---

Content 5:

பிணையக்கைதிகளை ஒப்படைப்பதில் தாமதம் ஏன்? ஹமாஸ் காட்டமான விளக்கம்.

இஸ்ரேலின் கட்டுப்பாடில்லாத அழிவுகள் காரணமாக, காசாவில் சிக்கியுள்ள கைதிகளின் உடல்களை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படுகிறது."

தற்போது நிலைமை எப்படி இருக்கிறது?

  • ஹமாஸ் தரப்பின் தகவலின்படி, பத்தாயிரக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்.

  • இதே இடங்களில் இஸ்ரேலிய மற்றும், வெளிநாட்டு கைதிகளின் உடல்களும் இருக்கலாம்.

  • இதை கண்டுபிடிக்க, நேரமும் முயற்சியும் தேவைப்படுகின்றன என ஹமாஸ் கூறுகிறது.

  • இதுவரை நான்கு கைதிகளின் உடல்கள் மட்டுமே இஸ்ரேலுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

  • இருபத்து நான்கு குடும்பங்கள், இன்னும் தங்கள் உறவினர்களின் உடல்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  • ரஃபாஹ்  எல்லை திறக்கப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது, இதற்கும் இந்த நிலைமை காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

----

உலகம் இன்று பல்வேறு சிக்கல்களில் சுழல்கிறது — காசாவின் அழிவுகள், உக்ரைன்-ரஷ்யா போர், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி, அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடுகள், மற்றும் பிணையக்கைதிகளின் துயரம்.

இந்தச் செய்திகளைப் புரிந்து கொள்ளும் போது, நாம் மனிதநேயம், நீதிமுறை, வளர்ச்சி, மற்றும் உண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.

நாம் பேச வேண்டும். நாம் கேட்க வேண்டும். நாம் கேட்கப்பட வேண்டும்.

இது உங்கள் குரல். இது உங்கள் பார்வை. இது உங்கள் உலகம். அடுத்த வீடியோவில் சந்திப்போம். 

Thursday, 9 October 2025

நாங்கள் அடிபணிய மாட்டோம் | Gaza’s Silent Scream | Hamas = Emotion, Ident...


ஹமாஸ் : நாங்கள் அடிபணிய மாட்டோம் | We Will Not Bow | Gaza Resistance Voice | Hamas = Emotion, Identity, Struggle.

அழிந்த வீடுகள்… சிதைந்த நகரங்கள்… ஆனால் அழிக்க முடியாத மனங்கள். இந்த வீடியோ, காசா மக்களின் சத்தமில்லா சத்தம். ‘நாங்கள் அடிபணிய மாட்டோம்’ என்ற முழக்கம், உலகம் கேட்க வேண்டிய உணர்வு."

பல பாலஸ்தீனர்கள், வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.  மேற்குக்கரையை ஆள்பவர்களும், மேற்பூச்சாக, அடிமைத்தனத்துக்குப் பணிந்துவிட்டார்கள். ஆனால், சுதந்திர வேட்கையை, தன்னிலத்தை, தனது மண்ணை, தனது உயிரினும் மேலாகக் கொண்டு, தமது இறுதி மூச்சைக் கையில் பிடித்துக்கொண்டு, கயவர்களுடன், பயங்கரவாதிகளுடன், குற்றுயிரும், குலையுயிருமாய் போராடும் காசா மக்களின் மனநிலை, அவர்களின் நிலையிலிருந்தே இங்கோ பகிர்கிறோம். 

---

அழிந்த நகரம், அழிக்க முடியாத மனம், சிதைந்த வீடுகள், வெறிச்சோடிய வீதிகள், காற்றும், நீரும் கூட மாசாகிவிட்டது. சூரிய உதயத்தின் ஒளி மட்டும், தற்போது சுதந்திரமாய்.

இந்த நிலம், இந்த மணல், இந்த காற்று, எங்களுடையவை. எங்களை அழிக்க முயற்சிக்கலாம். ஆனால் எங்கள் மனதை அழிக்க முடியாது.

ஹமாஸ் என்பது வெறும் அரசியல் இயக்கம் அல்ல. அது காசா மக்களின் மனதில் பதிந்த ஒரு உணர்வு. அது ஒரு எதிர்ப்பு, ஒரு அடையாளம், ஒரு விடுதலைக்கான கனவு.

பிறந்த குழந்தையே, “இஸ்ரேலுக்கு தலை குனிய மாட்டேன்” என்று மனதிலே உறுதி கொண்டிருக்கும்.

அந்த நிலம், அந்த அடையாளம், அந்த வரலாறு — எதையும் விட்டுக்கொடுக்க முடியாது.

அது ஒரு உயிரின் ஓசை. ஒரு குடும்பத்தின் கதைகள். ஒரு தலைமுறையின் துயரம்.

அதனால்தான், ஹமாஸ் மீது விமர்சனம் இருந்தாலும் கூட, அதன் எதிர்ப்பு உணர்வை மக்கள் தங்கள் இரத்தத்தில் சுமக்கிறார்கள்.

இஸ்ரேலின் தாக்குதலால் ஹமாஸ் பலவீனமடைந்திருக்கலாம். அதன் தலைவர்கள் பலர் இழந்திருக்கலாம்.

ஆனால் அதன் எதிர்ப்பு சுடர் இன்னும் அணையவில்லை. அது இன்னும் போராடுகிறது. அது இன்னும் காசாவின் அடையாளமாக இருக்கிறது.

நிலம் என்பது வெறும் மணல் அல்ல. அது ஒரு மக்களின் நினைவுகள், கனவுகள், தாய்மொழி, தாய்மடியில் பிறந்த குழந்தையின் முதல் அழுகை. காசா மக்கள் அந்த நிலத்தில் வாழ்ந்ததற்காக, அந்த நிலத்தை நேசித்ததற்காக, அந்த நிலத்தை காப்பாற்ற போராடுகிறார்கள்.

அந்த போராட்டம் ஒரு நாள் தொடங்கியது அல்ல. அது தலைமுறைகளாக தொடரும் ஒரு உணர்வு. ஒரு குழந்தை பிறக்கும் போது, அவன் கண்களில் ஒரு சுடர் இருக்கும். நான் என் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன், என்ற உறுதி.

---

ஹமாஸ் என்பது வெறும் இயக்கம் அல்ல. அது ஒரு உணர்வு. ஒரு எதிர்ப்பு. ஒரு அடையாளம். அது காசாவின் சத்தமில்லா சத்தம். அது, நாங்கள் இருக்கிறோம்,  என்ற உறுமல். அது, நாங்கள் வாழ்ந்த நிலம் எங்களுக்கே, என்ற நம்பிக்கை.

இஸ்ரேல் தாக்குதலால் ஹமாஸ் பலவீனமடைந்திருக்கலாம். அதன் கட்டமைப்புகள் சிதைந்திருக்கலாம். உணவு, உறக்கம், உறைவிடம் என்று, எதுவும் இல்லாத நிலை — ஆனால் எதையும் தாண்டும் உறுதியான மனம்.

உணவில்லாமல் வாழ்கிறார்கள். ஆனால் உணர்வுகள் அவர்களுக்கு உணவாக இருக்கின்றன. நாங்கள் அடிபணிய மாட்டோம், என்ற நம்பிக்கை, அவர்களின் வயிற்றை நிரப்புகிறது.

தண்ணீரில்லாமல் வாழ்கிறார்கள். ஆனால் தாயகத்தின் கனவுகள், அவர்களின் நாக்கை ஈரமாக வைத்திருக்கின்றன. ஒவ்வொரு சொற்களிலும் சுதந்திரத்தின் சுவை.

மருத்துவ வசதியில்லாமல் உயிர் காக்கிறார்கள். ஆனால் தன்னம்பிக்கை அவர்களின் மருந்து. நாங்கள் இருக்கிறோம், என்ற நம்பிக்கை, அவர்களின் காயங்களை ஆற்றுகிறது.

சுதந்திர வேட்கை நிறைந்த போராளிகள், பயிற்சி இல்லாமல் போராடுகிறார்கள். ஆனால், பிறந்த நாளிலிருந்தே, எதிர்ப்பு அவர்களின் உடலில், ஊறியிருக்கிறது.

அவர்கள் கையில் ஆயுதம் இல்லாவிட்டாலும், மனதில் ஒரு தீ எரிகிறது. எதிர்ப்பு என்பது ஒரு மனநிலை, ஒரு உயிரின் முழக்கம். ஹமாஸ் போராடுவது,  தொழில்நுட்பத்தால் அல்ல, உணர்வால். அவர்கள் கையில் டிரோன்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் உள்ளத்தில் தாயகத்தின் அழைப்பு இருக்கிறது.

அவர்கள் தங்கள் மக்களை காக்க போராடுகிறார்கள். பல தாய்மார்களின்  கண்ணீருக்காக. பசிக்காக அழும் குழந்தைகளுக்காக. ஒரு பள்ளிக்கூடம் மீண்டும் திறக்க வேண்டும் என்ற கனவுக்காக.

அவர்கள் தங்கள் சமூகத்தின் எதிர்கால சந்ததிகளை காப்பதற்காக போராடுகிறார்கள். நாங்கள் வாழ்ந்த நிலம் எங்களுக்கே, என்ற உணர்வை, அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக.

உலகம் மறந்தாலும், ஊடகங்கள் மறைத்தாலும், ஊடகங்கள் அவர்களின் கதைகளை ஒழிக்கலாம். ஆனால் அவர்கள் உணர்வுகள் ஒழிந்து போகாது.

ஒவ்வொரு சுவாசத்திலும், ஒவ்வொரு கண்ணீரிலும், நாங்கள் அடிபணிய மாட்டோம், என்ற முழக்கம் ஒலிக்கிறது.

உலகம் அவர்களை புறக்கணிக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் சுதந்திரத்தை புறக்கணிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் உரிமையை சாகவிட மாட்டார்கள்.

முடிவில். ஹமாஸ் போராடுவது ஒரு இயக்கமாக அல்ல, ஒரு உயிராக.  அவர்கள் சண்டையிடுவது ஒரு ராணுவத்துடன் அல்ல, உலகமகா பயங்கரவாதிகளுடன்.

துரோகம் இழைப்பவர்களை அவர்கள் எதிர்க்கிறார்கள்,  மறப்பை, மௌனத்தை, அழிவை எதிர்க்கிறார்கள்.

அவர்கள் காக்கிறார்கள், தாயகத்தை, தாய்மொழியை, காக்கிறார்கள். தாயின் கண்ணீரை துடைக்க முயல்கிறார்கள்.

அவர்கள் கையில் எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் உள்ளத்தில் எல்லாமே இருக்கிறது. அதனால்தான், அவர்கள் இன்னும் சண்டையிடுகிறார்கள். இடுவார்கள், வெல்வார்கள். வெளிச்சமேற்றுவார்கள். நாம் அவர்களின் தோளோடு தோள் வைத்து நிற்கவில்லை என்றாலும், உணர்வுபூரணமான தன்னம்பிக்கையும், உற்ச்சாகத்தையும் அளிப்போமாக.

------

நாங்கள் அடிபணிய மாட்டோம்” — ஒரு நிலத்தின் சத்தமில்லா சத்தம்

மனதில் எரியும் சுதந்திரத்தின் தீயால்,

காசா மக்கள் உலகத்தின் மிகப்பெரிய ராணுவத்துக்கு எதிராக போராடுகிறார்கள்.

இந்த வீடியோ, ஒரு மக்களின் உள்ளத்திலிருந்து எழும் சத்தமில்லா சத்தம் —

நாங்கள் அடிபணிய மாட்டோம் என்ற நம்பிக்கையின் முழக்கம்.

முடிவாக, உலகம் மறந்தாலும்… ஊடகங்கள் மறைத்தாலும்… காசா மக்களின் சத்தம் ஒழியாது. இந்த வீடியோ உங்கள் மனதை தொட்டால், உங்கள் சமூகத்தில் பகிருங்கள். உங்கள் குரல், அவர்களின் போராட்டத்திற்கு ஒளியாகட்டும்.| உங்கள் குரல், அவர்களின் நம்பிக்கை. நன்றி.

------

Monday, 6 October 2025

உலகம் காசாவுக்காக எழுகிறது | அமைதி திட்டம் உறுதியாகவில்லை | அமெரிக்க அர...


காசாவுக்குப் பெருகும் ஆதரவு. ஆர்வலர்களுக்கு உற்சாக வரவேற்பு.

வரலாற்றுச் சிறப்புமிக்க காசா அமைத்திட்டம் - இன்று என்ன?

வரலாறு காணாத அதிருப்தி, அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

----

குளோபல் சுமுட் ஃப்ளோட்டிலாவில் பங்கேற்ற ஆர்வலர்கள், மாட்ரிட் விமான நிலையத்திற்கு வந்தவுடன், அவர்களை வெற்றியாளர்களாக, ஆரவாரங்களுடனும் அரவணைப்புகளுடனும் வரவேற்றனர்.

இஸ்ரேலில் இந்தப் பொதுநலப் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், அவர்களை வீட்டிற்கு வரவேற்க குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பூக்கள் மற்றும் கொடிகளுடன் கூடினர்.

காசா மீதான, இஸ்ரேலின் கடற்படை முற்றுகையை உடைக்கவும், பாலஸ்தீனர்களுக்கு எதிரான, அதன் இனப்படுகொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நூற்றுக்கணக்கான சர்வதேச தன்னார்வலர்களுடன் இந்த குழு பயணம் செய்தது.

இஸ்ரேலிய படைகள் சட்டவிரோதமாக. சர்வதேச கடல் பகுதியில் படகுகளை தடுத்து நிறுத்தி, படகுகளில் இருந்தவர்களை தடுத்து வைத்து, பின்னர் அவர்களை, தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தத் தொடங்கின.

பிரபலமான ஆர்வலர்கள், மற்றும் சமூகத் தலைவர்கள் உட்பட, டஜன் கணக்கான பங்கேற்பாளர்களுடன், ஸ்பெயின் மிகப்பெரிய தேசிய படைப்பிரிவுகளில் ஒன்றைக் கொண்டிருந்தது. இந்த முயற்சி, உலகலாவிய , இஸ்ரேலுக்கு எதிரான ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான படகுகளில், லட்சக்கணக்கானவர்கள் கிளம்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, டிரம்ப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட, அமைதிப்பேச்சு முறிந்தால், அது இஸ்ரேலிய சர்வதேச அரசியலில், பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

------------

அமெரிக்காவில் உண்மையில் என்ன நடக்கிறது?

அமெரிக்க மக்களுக்கிடையில் பிளவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிழவுகள், பல குழப்பங்களுக்கும், வேற்றுமைக்கும், வெறுப்புக்கும் காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அமெரிக்கர்களில் அறுபத்தைந்து சதவீதம் பேர், அரசியலைப் பற்றி சிந்திக்கும் போது சோர்வாகவும், ஐம்பத்தைந்து சதவீதம் பேர் கோபமாகவும் உணர்கின்றனர். கிட்டத்தட்ட, பத்து சதவீதம் பேர் மட்டுமே நம்பிக்கையுடன் உள்ளனர். பல அமெரிக்கர்கள், தற்போதைய அரசியலை, தவறானது, உருண்டுவிட்டது, மற்றும் தரமற்றதாகவும், சீர்ப்பெறாமழும் உள்ளது என்று விவரிக்கிறார்கள். தலைப்பொறுப்பில் உள்ளவர்கள், பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு பதிலாக, தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்னும், சுயநலத்திற்காக மட்டுமே அரசியல் செய்கின்றனர் எனும் பார்வை பரவலாக உள்ளது.

கருத்து சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த வேறுபாடுகள் காரணமாக, அரசு நிறுவனங்கள், அரசு ஊடகங்கள், மற்றும் அரசியல் வாதிகளின் மேலான அதிருப்தி வளர்ந்துகொண்டே செல்வதாகக் கூறப்படுகிறது.

அரசியல் வன்முறையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிகாரிகளுக்கு எதிரான மிரட்டல்கலும் , கொலை முயற்சிகளும், அமெரிக்காவில், அரசியல் நோக்கமுடைய வன்முறைகள், கவலைக்குரிய வகையில் அதிகரித்துள்ளது. வல்லுநர்கள் இதை, கடுமையான உள்நாட்டுக்குழப்பம் என்றும், எந்தநேரமும், இந்த காரணத்திற்க்காக உள்நாட்டுப்போர் வெடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக விவரிக்கிறார்கள்.

அமெரிக்க அரசியலில், தொண்ணூறு சதவீதம் பேர் நபீக்கை இல்லாமல் இருக்கும் நிலையில், அதிரடியாக எதுவேண்டுமானாலும் நடக்கலாம் அல்லவா? பொறுத்திருந்து பார்ப்போம் நண்பர்களே.

-----

காசா அமைதிப்பேச்சு வார்த்தையில் இழுபறி.  காசா அமைதி பேச்சுவார்த்தைகள் இன்னும் சில நாட்கள் தொடரும் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இப்போதைக்குப் போர்நிறுத்தம் இல்லை. இஸ்ரேல் அரசு, எந்த ஸீஸ் ஃபயரும்  இன்னும் நடைமுறையில் இல்லை என, உறுதியாக கூறியுள்ளது. பேச்சுவார்த்தைக்காக பிரதிநிதிகள் எகிப்து சென்றுள்ளனர்.

பிரிட்டன் அரசு, பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களை கட்டுப்படுத்த, மேலும் கடுமையான சட்டங்களை அறிவிக்க உள்ளது.  பிரிட்டனின் இந்த அறிவிப்பு  ஒரு உரிமை மீறலா?அல்லது பாதுகாப்பு நடவடிக்கையா?

இந்த வீடியோவை உங்கள் சமூகத்தில் பகிருங்கள். உங்கள் குரல், உங்கள் ஆதரவு, உலக அமைதிக்கு ஒரு ஒளியாகும். Subscribe செய்யுங்கள், உங்கள் கருத்தை கீழே பகிருங்கள். உங்கள் குரல் முக்கியம். நன்றி.

----

Sunday, 5 October 2025

அணு ஆயுதப் போர் Headquarters – 70,000 டன் கிரானைட் கற்களில் பதுங்கிய ரகச...



உலகம் அதிரும் மூன்றாம் உலகப்போர் தலைமையகம்! 😱 | 2000 அடி ஆழத்தில் WW3 Bunker - Explained in Tamil 

நண்பர்களே, இந்தப் பதிவில் நாம் பார்க்கப்போவது, மயிர்க்கூச்செரியும் செய்தியாக மாறிப்போயிருக்கிற,  அமேரிக்கா அதி பயங்கர அணு ஆயுதப்போருக்கு தயாராகிவிட்டது என்னும் செய்திதான். இது கொஞ்சம் இன்டெரெஸ்ட் ஆன செய்திதான். அதனால கடைசிவரை பாருங்க, இப்போ வாங்க செய்திக்குள்ள போலாம். 
 
இரண்டாயிரம் அடி ஆழத்தில் எழுபதாயிரம் ton அளவிலான  கிரானைட் கற்களால் கட்டப்பட்ட  பதுங்குமிடங்கள் .

கொலோராடோவில் ராக்கீஸ்  மலைத்தொடரிலுள்ள, செயன்னே மலைக்குழுமத்துக்கு அடியில், எழுபதாயிரம் டன் கிரானைட் கற்களைக்கொண்டு  கட்டப்பட்ட மாபெரும்  நகரம்.

மூன்று அடி கணமான பிரம்மாண்ட இரும்புக்கதவுகளுடன் உறுதியான வாயில்கள் உள்ளன. ஹிரோஷிமா நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளைவிட  ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த, அணுகுண்டு தாக்குதலையும் தாங்கும் திறன் கொண்ட கட்டமைப்பு, பல நாட்கள் பயமில்லாமல், பாதுகாப்புடன் தங்கி இருக்கக்கூடிய வசதி படைத்த, பாதுகாப்பான பதுங்குமிடம்.

இத்தகைய ஓவர் அமைப்பு, அமெரிக்காவின் கொலராடோ ராக்கீசில அமைக்கப்பட்டு தயாராக இருக்கிறது. கொலராடோ ராக்கீஸ் என்பது, அமெரிக்காவின் மேற்கு பகுதியில், குறிப்பாக கொலராடோ மாநிலத்தில் உள்ள, தொடர்ச்சியான பல மலைகளைக்கொண்ட ஒரு மலைத்தொடராகும் . இவை கனடாவிலிருந்து நியூ மேக்சிகோ வரை பரவியுள்ள, பெரிய ராக்கீ என்றழைக்க்கப்படும் மலைகளின் ஒரு பகுதியாகும். இங்கு அமைந்துள்ள, சேயென்னே மலைக்குழுமத்துக்கு டிடியில் அமைக்கப்பட்டுள்ளது. அணுகுண்டுகளாலும் அசைக்க முடியாக இந்த பாதுகாப்பு பதுங்குமிடத்துக்கு, தி நோட்ச், என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பைச்சுற்றிலும், அணுகுண்டு வீச்சினால் உண்டாகும் பேரதிர்வுகளை உள்வாங்குவதற்காக, பயங்கர இந்த ராட்சத குகைக்குள் பதினைந்து மாபெரும் கட்டிடங்கள் உள்ளன, இந்த கட்டிடங்கள் தரையில் இருந்து கட்டப்பட்டதல்ல. மாறாக, இந்த பதினைந்து கட்டிடங்களும், ராட்சத ஸ்பிரிங்குகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜப்பானில் உபயோகிக்கப்பட்ட அணுகுண்டைப்போல, ஆயிரம் மடங்கைவிட அதிகமான சக்தி வாய்ந்த அணு குண்டு வீசப்பட்டாலும், அதன் அதிர்விலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க, இந்த ராட்சத அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்டடமும், தனியாக நகரும் வகையில், பெரிய ஸ்பிரிங்களில் அமர்ந்துள்ளது. பெரும் நியூக்ளியர் வெடிப்பு ஏற்பட்டால், மாபெரும் அதிர்ச்சி அலைகள் மலையில் பரவுகிறது. ஆனால், இந்த ராட்சத ஸ்பிரிங்குகள், கட்டடங்களை நெகிழ்வாக்கி, தரைமட்டம் வீழ்ச்சி அடையாமளும், கட்டிடங்களுக்கு உள் புறத்தில் உருவாகும் சேதத்தைத் தடுக்கின்றன.

இதற்குள் Subway உணவகம் உள்ளது. இங்கு, ஹிரோஷிமாவை விட ஆயிரம் மடங்கு பாதுகாப்பு!

பல வேலைகளுக்காக, பணியாளர்கள் இன்னமும் இந்த நிலையத்தில் மாறி மாறி பணியில் இருக்கிறார்கள், தேவையான எந்த நேரத்திலும் உலகத்திலிருந்து, இந்த ராட்சதக் கதவுகளை அடைக்கத் தயாராக இருக்கிறார்கள். சமீபத்திய வரலாற்றில், இரண்டாவது முறையாக, இந்த பங்கரின் கதவுகள், Inside Armageddon நியூஸ் நேஷனுக்கு திறக்கப்பட்டது. சேயன்னி மலைத் தொகுப்பில் , ஒரு பரந்து விரிந்த நிலத்தடியில் உருவாக்கப்பட்ட இந்த நகரம். நேரடியான நியூக்ளியர் தாக்கங்களை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த மாபெரும் bunker, அமெரிக்க முக்கிய புள்ளிகளை பாதுகாக்க தயாராக காத்திருக்கிறது. மூன்று அடி தடிமனான எஃகு கதவுகளும், பல சோதனைப்புள்ளிகளும், பின்னால் பூட்டப்பட்டுள்ள இந்த கோட்டையை, ஹிரோஷிமாவுக்கு வீசப்பட்ட பாமை விட, ஆயிரம் மடங்கு வலிமையான நியூக்ளியர் வெடிப்பை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தடி நகரத்தில், தனது சொந்த மின் நிலையங்கள், குடிநீர்க் குளங்கள், பல நாட்களுக்குத் தேவையான, உணவு சேகரிப்பு அமைப்பையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த அபாய அமைப்பிற்குள், கமாண்ட் சென்டர்கள், கம்யூனிகேஷன் ஹப்புகள், குடியிருப்புகள், மருத்துவ அமைப்புகள், டேட்டா சென்டர்கள், அவசரகால சிகிச்சை மையங்கள், ஆகியவையும் உள்ளன.

அந்த சிக்கலான வளாகத்தில், தனிதத்துவமாக செயல்பட்டு வரும் சப்வே உணவகமும் உள்ளது, இது, உலகில் மிக பாதுகாப்பான சப்வே, என்று குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கா வடக்கு கட்டளை, மற்றும், வட அமெரிக்க, NORAD என்றழைக்கப்படும், விண்வெளி பாதுகாப்பு கட்டளை கமாண்டராக உள்ள, ஜெனரல் கிரெகரி கில்லோட் இருக்கிறார். அமெரிக்காவிற்கு வரும், நவீன அச்சுறுத்தல்கள், அமெரிக்க விமானப்பரப்பில், ரஷ்ய விமானங்கள் பறக்கும் நிகழ்வுகள், சீன கண்காணிப்பு பலூன்கள், அல்லது சைபர் தாக்குதல்கள், போன்றவை குறித்து கவலைப்படவில்லை என கிரிகோரி கூறினார். நாம் தயாராக உள்ளோம். ஐந்து ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள, பதினைந்து கட்டிடங்கள், அணு வெடிப்பின் அதிர்வை உறிஞ்சுவதற்காக, மிகப்பெரிய ஸ்பிரிங்குகளின் மேல் தொங்க வைக்கப்பட்டுள்ளன.

“பேட்டில் டெக்” எனப் பெயரிடப்பட்ட இந்தக் கோட்டை, பேரிடர் ஏற்படும் போது, அமெரிக்க மற்றும் கனடிய படைகளுக்கான, கட்டளை தலைமையகமாக செயல்படும். பேரழிவுப்போர் நடக்கும், போர் காலத்தின் உச்ச நேரத்தில், பூமியில் மிக பாதுகாப்பான இடம், என்று குறிக்கப்பட்ட குகைகள், மற்றும் பாதுகாப்பு அறைகளின், குழப்பமான அமைப்பு, சோவியத் ராக்கெட்டுகளிடமிருந்து பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. டிரம்ப், இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டில், இதன் வாசல்களை ஊடகத்திற்கு திறந்தார், அப்போது ஸ்டீவ் ரோஸ், அடிப்படை துணை இயக்குநர், இதை உலகின் மிக பாதுகாப்பான வசதி, என கூறினார். அணு ஆயுதப் போர் ஒன்றில், அமெரிக்காவிற்கான பாதுகாப்பு அமைப்பு, முன்பே திட்டமிடப்பட்டுள்ளது. பல நவீன கருவிகள், நுகர்விகள், ஹைட்ராலிக் இயந்திரங்கள், மற்றும், எலக்ட்ரோமெக்னெடிக்ஸ் அதிர்வுகளிலிருந்து, எலெக்ட்ரானிக்ஸ் பாதுகாப்பு செய்து கொண்டிருக்கும். இந்த நியூக்ளியர் குண்டு சுரங்கத்தின் கதவுகள், ஹைட்ராலிக் இயந்திரங்களால், நாற்பத்தைந்து விநாடிகளில் மூடவைத்து, உள்ளகத்தை பாதுகாக்க முடியும், அல்லது அவசரகாலத்தில் கையால் மூடப்படலாம். ஆனால், மூண்டு ஆதி தடிமனான ராட்சத இரும்பு கதவுகளை மூட, பல வலிமையான நபர்களின் உழைப்பு தேவைப்படலாம்.

அணு ஆயதப் போரின்போது, அமெரிக்க அதிபர், நேரடியாக வெள்ளை மாளிகையின் அடியில் உள்ள, பாதுகாப்பு கூடாரத்திற்கு அழைத்து செல்லப்படுவார், பின்னர் விமானப் படையின் சிறப்பு விமானத்தில் பயணம் செய்த்து, இந்த மலையடிக் கோட்டைக்கு வந்து சேருவார்.

இந்த கோட்டைக்கு, அமெரிக்க அதிபருடன், அவரது அலுவலக சகாக்கள் பயணம் செய்வார்கள், அதே சமயம், பாதுகாப்புத் துறை செயலர், குழு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், வேர்ஜீனியாவில் உள்ள மவுண்ட் வேதெர், அல்லது, பென்சில்வேனியாவில் உள்ள ரேவன் ராக் உள்ளிட்ட, கடுமையான பாதுகாப்புள்ள தொடர்ச்சித் தளங்களுக்கு நகர்த்தப்படுவார்கள்.

மேலும் இதுபோல பல செய்திகளுக்கி எமது நுண்ணுரைச்சேனலை subscribe செய்து கொள்ளுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி.


===============


Saturday, 4 October 2025

Trump Gaza Plan approved by Hamas. Is Gaza falling? Or is the door to vi...


Trump Gaza Plan  - ஹமாஸ் ஒப்புதல். காசா வீழ்கிறதா? அல்லது வெற்றியின் வாசல் திறக்கிறதா?.

இருவது அம்ச திட்டத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்.  காசா வீழ்ந்ததா? அல்லது அமைதியின் வாசல் திறக்கிறதா? வாங்க, ஒரு முழுமையான அலசல, அலசிப்பாத்துறலாம்.

 நண்பர்களே. இரண்டு வருடங்களாக தொடரும், காசா படுகொலைக்கு முடிவு காண்பதற்கான டிரம்ப் உடைய இருவது அம்ச அமைதி திட்டத்துக்கு, ஹமாஸ் இப்போது பதில் அளிச்சிருக்கு. 

இஸ்ரேல் தயார்.

இஸ்ரேல், கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க டிரம்ப் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறது. யுத்தத்தை முடிக்க, இஸ்ரேல் நிர்ணயித்த கொள்கைகளுக்கு ஏற்ப, டிரம்ப் மற்றும் அவரது குழுவுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம். இஸ்ரேலின் கொள்கைகள், டிரம்ப் பார்வைக்கு ஏற்பவே அமைந்துள்ளன என்று நெதன்யாஹூவின் அலுவலகக் குறிப்பு தெரிவிக்கிறது.

நீண்ட போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயார். காசா மீதான தாக்குதலை நிறுத்த, இஸ்ரேலுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். உடனடியாக அனைத்து கைதிகளையும் விடுவிக்க, ஹமாசும் இஸ்ரேலும், தயாராகி வருகின்றன. காசாவை வெளிநாட்டினர் நிர்வகிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மக்களை வெளியேற்றும் திட்டத்தையும். ஆயுதங்களை ஒப்படைக்கும் நிபந்தனையையும், ஹமாஸ்  ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. 

இருவது அம்ச ட்ரம்ப்  திட்டத்தின், முதல் பகுதியை நிறைவேற்ற, இஸ்ரேல் தயாராகி வருவதாக நெதன்யாஹுவுடைய அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.  இதற்கான முதல் படியாக,  ஹமாஸிடம் உள்ள, இறந்த மற்றும் உயிருடன் உள்ள, அனைத்து  கைதிகளை விடுவிப்பதும், உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வருவதும் இதில் அடங்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், சரியாக நடக்கக்கூடாது தெரியாத ஒரு சிறிய பெண் குழந்தை, அந்த இரவு நேரத்தில், எங்கு செல்வது என்று தெரியாமல், செல்வதற்கு இடமும் இல்லாமல், குடும்பமோ உறவினர்களோ யாரும் இல்லாமல், அங்கும் இங்கும் அழுது கொண்டு, அலைந்து திரிந்ததை பார்ப்பவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் கண்களில் கண்ணீர் குலமாக ஓடும் என்பதில் சந்தேகமே இல்லை.

---

இது உண்மையான அமைதியா? அல்லது டிரம்ப் பின் நோபல் பரிசு அடைவதற்கான பிரச்சாரமா?  

பொய்களால் சதாம் ஹுசைனைக் கவிழ்த்த டோனி பிளேர், மீண்டும் மேடைக் காட்சியில்.  இராக் நாட்டை பொய் தகவல்களால் அழித்த முக்கியமான அரசியல் முகமாக இருந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், இப்போது காசாவை மீண்டும் கட்டமைக்க, டிரம்ப் உடைய  திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்க போறார்னு தகவல்.

டிரம்ப் உடைய இருவது அம்ச காசா திட்டத்தில் , காசாவை சர்வதேச நிலைக்கு எடுத்துச்செல்லும் பொறுப்புக்கு தலைமை ஏற்க்கப் போறாராம்.

பிளேரோட think tank, காசாவுக்கான, போருக்குப் பிந்தைய நிலைக்கான திட்டத்தை வரையறை பண்ணியிருக்காங்க

டோனி பிளேர், டொனால்ட் டிரம்ப் மற்றும் நெதன்யாஹு ஆகிய மூவரும், காஸாவை கடற்கரை சுற்றுலாத்தலம் மாதிரியான ஒரு பொருளாதார மண்டலத்தை உருவாக்காத திட்டமிட்டிருக்காங்க. 

இந்த டோனி பிளேர்,ஈராக்ல பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகப் பொய் சொல்லி, அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து, ஈராக் மீதான படை எடுப்புக்கு வழிவகுத்தவர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுத்தி,  கோடிக்கணக்கான டாலர்களை வீணடித்தவர். 

இவர்மீது இங்கிலாந்தில் நடந்த விசாரணையிலும், உண்மைக்குப் புறம்பாக ஊழல் செய்தவர் என்பது நிரூபிக்கப்பட்டது. பழங்குடிகள் மற்றும் உள்நாட்டுப் போர்களுக்கான எச்சரிக்கையும் நிராகரித்தவர்தான் இந்த டோனி பிளேர்.

---

இதன் மூலம் காஸாவுக்கு நியாயம் கிடைக்குமா?

போருக்குப் பிந்தைய, காசாவுக்கான டோனி பிளேர் திட்டத்தில், காசா வெளிநாட்டுக்காரர்கள் பாதுகாப்பில் இருக்கும். அதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியும் கிடைக்கும். இத்தகைய காசாவை, வெளிநாட்டினர் நிர்வாகம் செய்வார்கள். உள்நாட்டு நிர்வாகத்தை, டிரம்ப் மற்றும் டோனி பிளேரும், மறைமுகமாக நெதன்யாஹுவும் நிர்வகிப்பார்கள். ஆக மொத்தம், முழுமையான காசாவின் கட்டுப்பாடு வெளிநாட்டினரிடம் இருக்கும். பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் சட்டம், ஒழுங்கு, அனைத்தும் இஸ்ரேலுடைய கண்ணசைவில் இருக்கும். 

இங்கே, பாலஸ்தீனியர்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன, மக்களின் விருப்பங்கள் நசுக்கப்படுகின்றன. இந்த டோனி பிளேரின் தலைமையை பாலஸ்தீன மக்கள் ஏற்கவில்லை. 

இப்போ,அமைதின்னு  சொல்லி, அடக்குமுறையை சட்டபூர்வமாக்கும் திட்டமா இருக்குனு, பலர் கேள்வி எழுப்புறாங்க.  அமைதி இல்லாத, நலிந்துபோன மக்களிடம், நியாயம் இல்லாத பிரச்சாரம் செய்து . நியாயம் உள்ளதுபோல வடிவமைக்கப்படும் ராட்சசர்களின்  நிழல் ஆட்சி, எதிர்காலத்தில் நடக்க இருக்கிறது .  

டோனி பிளேர் உடைய வருகை, ஒரு பழைய பாவம்.  இதற்க்கு எதிராக, இனி ஒரு புதிய போராட்டம் வெடிக்குமா? வெடித்தாலும் அது நிலைக்குமா? போராட்டம் நடத்துகிற தெம்பும், ஆதரவற்றிருக்கும் மக்களிடம் இருக்குமா? மனித சக்திகளைத்தாண்டி இறைவன்தான் துணை இருப்பானா?

காஸாவுக்கு மறுவாழ்வுன்னு சொல்லி, முழு காஸாவையும் ஆட்டையப்போடப்  பாக்குறாங்க, கனகச்சிதமா அதற்கு அரசியல் சாயம் பூசுறாங்க.  பல்லாயிரக்கனக்கில் உயிர்த் தியாகம் செய்த, பச்சிளங்குழந்தைகள், பெண்கள், பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பல்துறை வல்லுநர்கள் அனைவரும் எதற்காக தங்கள் உயிரையும் துச்சமாகப் பணயம் வைத்தார்கள்.  அடுத்த சந்ததி சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தானே? என்ன நடக்க இருக்கிறது இனி வரும் நாட்களில்?நண்பர்களே சிந்திப்பீர். 

உங்களது உளமார்ந்த கருத்துக்களை தவறாமல் பதிவிடுவீர். நன்றி.

Friday, 3 October 2025

அமெரிக்கா அதிர்ந்தது. லாஸ் ஏஞ்ஜல்சில் பயங்கர வெடிச்சத்தம். Ben Gvir திம...


அமெரிக்கா அதிர்ந்தது. லாஸ் ஏஞ்ஜல்சில் பயங்கர வெடிச்சத்தம்.

அதிர்ச்சி செய்தி. காசா போராட்டம் தீவிரமடைகிறது.

சர்வதேச அமைதிப் போராளிகள் தீவிரவாதிகள்.  Ben Gvir திமிர் பேச்சு.

---

இன்று இரவு, இஸ்ரேலின் கடுமையான, பயங்கரவாத வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர், இட்டமார் பென் க்விர், Ashdod என்ற இஸ்ரேல் இராணுவ துறைமுகத்திற்கு வந்தார். அங்கு Global Sumud Flotillaவில் பங்கேற்ற சர்வதேச அமைதிப் போராளிகள், மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களை நேரில் பார்த்த பென் க்விர், இவர்கள் தீவிரவாதிகள் எனக் கூறி, தகாத வார்த்தைகள் பேசி, வாய்வழி தாக்குதல் நடத்தியுள்ளார். அமைதிப் போராளிகள், காசாவில் பசியுடன் தவிக்கும் மக்களுக்கும், குழந்தைகளுக்குப்  பால், மருத்துவ உதவி, உணவுப் பொருட்கள், போன்றவற்றை  கொண்டு செல்ல முயன்கை செய்தனர். அந்த மனிதாபிமான முயற்சியை கூட, இஸ்ரேல் அமைச்சர் தீவிரவாதம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

----

அமெரிக்கா அதிர்ந்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள Chevron El Segundo எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிச்சத்தம்.

என்ன நடந்தது?

நேற்று இரவு,  Californiaவில் இருக்கும் Los Angelesசில் உள்ள, Chevron El Segundo எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரிய வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது.

 மக்கள் பதறி ஓட்டம். இந்த வெடிப்பு சத்தம் பல  கிலோமீட்டர்களுக்கு கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. South Bay பகுதி முழுக்க அழகிய இரவுக்காற்று தீயால் ஒளிர்ந்தது. மக்கள் பாதுகாப்புக்காக அங்குமிங்கும் தெறித்து ஓடினர், எல்லா இடங்களிலும் பயம் தொற்றிக் காணப்பட்டது. விண்ணோக்கி எழுந்த நெருப்பு மற்றும் புகை, வானத்தை நிரப்பியது.

அதிகாரிகள் என்ன சொல்றாங்க? Los Angeles County Fire Department மற்றும் Torrance Fire Departmentஐச் சேர்ந்தவர்கள், தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர். வெடிப்புக்கான உண்மையான  காரணம் இன்னும் தெரியவில்லை. பாதிப்பு அல்லது உயிரிழப்பு குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.  பிரிட்டனில் உள்ள ஒரு யூத கோவிலில் தாக்குதல் நடந்துள்ள நிலையில், இந்த பயங்கர வெடி விபத்திலும், ஏதாவது தாக்குதல் நடந்திருக்குமோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

அமெரிக்கா இரவில் எரிந்தது. Chevron எண்ணெய் நிலையம் வெடித்தது. மக்கள் ஓட்டம் பிதித்தனர், வானம் தீயால் ஒளிர்ந்தது.  இது தொழில்துறை தவறா? அல்லது எச்சரிக்கையா?
-----

அதிர்ச்சி செய்தி – காசா போராட்டம் தீவிரமடைகிறது.

Global Sumud Flotillaவில் பங்கேற்ற சர்வதேச அமைதிப் போராளிகள், இஸ்ரேல் பயங்கரவாத படையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது முடிவில்லா உண்ணாவிரத போராட்டத்தில், அதாவது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

என்ன நடந்தது?

International Committee for Breaking the Siege of Gaza என்னும் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பல தன்னார்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், அஷ்டோட் துறைமுகத்தில் இஸ்ரேல் ராணுவ பயங்கரவாதிகளால்  கடத்தப்பட்டனர். இப்போது அவர்கள் உணவின்றி போராட ஆரம்பித்துள்ளனர். இது ஒரு open-ended hunger strike, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் என்று கூறப்படுகிறது.

போராட்டத்தின் நோக்கம் என்னவென்றால், பசியுடன்  தவிக்கும் காசா மக்களுக்கு மருத்துவ உதவி, உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல முயன்றவர்களை இஸ்ரேல், தீவிரவாதிகள் எனக் குற்றம்சாட்டி, high security சிறையில் அடைத்துள்ளது. அத்துடன் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.  TV, radio, மற்றும் சரியான உணவுகூட கொடுக்கப்படுவது இல்லை என்றும் கூறப்படுகிறது.

---

மலேசியா கொந்தளிக்குது – காசா போராட்டம் உலகம் முழுக்க பரவுது.

Gazaவிலே நடக்குற கொடூரங்களை எதிர்த்து, மலேசிய மக்கள் இப்போ Trumஐ நேரடியாக எதிர்கொள்ள தயாராக இருக்காங்க. KualaLumpurல அவர் வருகைக்கு முன்னதாகவே, போராட்டங்கள் தீவிரமடையுது.

என்ன நடக்குது மலேசியாவில்?

  • US தூதரகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினாங்க.

  • Global Sumud Flotilla-வில் பங்கேற்ற இருபத்து மூன்று  மலேசியர்கள் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டதுக்கு எதிராக, மக்கள் Trump மேல்  நடவடிக்கை எடுக்க வற்புறுத்துறாங்க.

  • P A S மற்றும் மலேசியாவின் பெரிய எதிர்க்கட்சிகள், Trump வருகைக்கு மாபெரும் எதிர்ப்பு கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்காங்க.

  • Trump என்பவர், இஸ்ரேலின் கொடூரங்களை வலி நடத்துகிற முக்கியமான நபர்னு, முன்னாள் பிரதமர் மகாதீர் கூறிஇருக்கிறார். மலேசியாவுக்கு வரும் டிரம்ப்பின்  அழைப்பை ரத்து செய்யணும்னு வலியுறுத்தினார்.

  •  Trumpஐ நேரில் எதிர்கொள்ளணும். நம்மை வலிக்க வைத்தவங்களை நாமும் வலிக்க வைக்கணும்னு, U M N Oவின்,  Youth Leader Akmal Saleh, Facebookல எழுதியிருக்கார்.

காசா எரிகிறது… மலேசியா எழுகிறது… Trumpஐ நேரில் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள். பசிக்கொண்டு தவிக்கும் மக்களுக்கு உதவ வந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இப்போது, உலகமே கேட்கிறது,  பயங்கரவாதிகளின் கூடாரமாகத் திகழும் இஸ்ரேலியர்களே, நீதியோடு பேசுங்கள்.

மேலும் இதுபோல பல செய்திகளுக்கு, எமது நுண்ணுறை சேனல்லை subscribe செய்திகொள்ளுங்கள், உங்களது கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள். நன்றி.

-------

Thursday, 2 October 2025

பாலஸ்தீன வீரர்களுக்கான ஒலிம்பிக் நம்பிக்கை – IOC உதவித் திட்டம் | Gaza-வ...


நண்பர்களே! இன்றைக்கு நாம பாக்கப்போறது, ஒரு நல்ல செய்தி. காசாவில் நடைபெறும் கடுமையான போரால் ஏற்பட்டுள்ள, துயரம் மற்றும் சொல்ல முடியாத தடைகளுக்கு நடுவுல, ஒரு சின்ன ஒளி. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, அதாவது,  International Olympic Committeeயானது,  பாலஸ்தீன விளையாட்டு வீரர்களுக்காக அதிரடியான scholarship என்னும் உதவித்தொகை கொடுக்கப்போறாங்க. இது சாதாரண உதவி இல்லங்க... போரினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு , இது ஒரு நம்பிக்கையின் சின்னம்.  

IOCல இருக்குற Olympic Solidarity program மூலமா, சுமார் ஐம்பது பாலஸ்தீன விளையாட்டாளர்களுக்கு பயிற்சி செய்வதற்கும், பயணம் மேற்கொள்வதற்கும், உபகரணங்கள் வாங்குவதற்கு என்று, எல்லாத்துக்குமே உதவி கொடுக்கப் போறாங்க.

இந்த பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள், இந்த வருடம் பஹ்ரைனில் நடக்க இருக்கும்  Asian Youth Gamesசிலும், அடுத்த வருடம் செனிகல் நாட்டுத்தலை நகரம் டகரில் நடக்க இருக்கிற Youth Olympics போட்டிகளிலும், ஜப்பானில் நடக்க இருக்கிற, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், மற்றும்,  இரண்டாயிரத்து இருபத்தெட்டில்  லாஸ் ஏஞ்ஜெல்சில் நடக்க இருக்கும் Olympics போட்டிகளுக்கும்  தயாராகப் போறாங்க.

இதில் டக்கர் நகரம்,  அட்லாண்டிக் கடற்கரையோரத்தில் அமைந்த ஒரு முக்கியமான நகரம். செனிகல் நாட்டின் அரசியல், பண்பாட்டு, மற்றும் பொருளாதார மையமாகவும் இருக்கிறது. அடுத்த வருடம்  இளைய ஒலிம்பிக் போட்டிகள், அதாவது, Youth Olympic Games அங்கே நடக்கப்போகுது, அதனால தான் International Olympic Committee, பாலஸ்தீன விளையாட்டாளர்களுக்கு scholarship கொடுக்குறதுல, Dakar முக்கிய இடம் பெற்றிருக்குது. தொடர்ந்து, ஜப்பான் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க இருக்கும் போட்டிகளில் பங்கு பெரும் வாய்ப்பும், எதிர்கால பாலஸ்தீன இளைஞர்களுக்கு, ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, சர்வதேச ஒலிம்பிக் வாரிய  தலைவர் Kirsty Coventry சொன்னத பாருங்க.  நாங்க பாலஸ்தீன மக்களின் அமைதிக்காக நம்பிக்கையோட இருக்கோம்.  இந்த உதவி, அந்த அமைதிக்கான ஒரு படி அப்படின்னு சொல்லி இருக்காங்க.

பாலஸ்தீன விளையாட்டாளர்கள், கடுமையான போர் சூழ்நிலையில, electricity இல்லாம, properஆன play  ground இல்லாம, அடிப்படையான பயிற்சிகூட இல்லாம,  வெறும் கலர்  கனவுகளோட மாட்டும் பயிற்சி பண்ணுறாங்க.

பலப்பல  தடைகளையும் கடந்து, ஒவ்வொரு நாளும் போராடுறாங்க.

ஒலிம்பிக்குல சாதாரணமா, பத்து  பேர் கூட qualify பண்ண முடியாது. ஆனா, இப்ப International Olympic Committee உதவியாலஐம்பது  பேர் பயனடையப் போறாங்க.

இது வெறும் medal-க்கான பயணம் இல்லங்க. இது ஒரு மக்கள் குரல்.  நாங்க இருக்கோம்,  நாங்க கனவு காண்றோம்ன்னு சொல்லுற ஒரு சின்னம்.

"Gaza-வுல நடக்குற போரம், Israelலின் blockade, basic human rights-ஐ கூட மறுக்கிற  பண்ணுற சூழ்நிலை. இதுல IOC யோட இந்த உதவி, ஒரு பெரிய செய்தியை சொல்லி இருக்கு.

'Sports is not politics'ன்னு சொல்லுற IOC, இப்போ ஒரு மனிதாபிமான humanitarian signal கொடுக்குறாங்க.

இது ஒரு சின்ன உதவி மாதிரி தெரியலாம். ஆனா, இது ஒரு பெரிய நம்பிக்கை, ஒரு பெரிய Hope.

ஸ்போர்ட்ஸ் என்னும் விளையாட்டு நிகழ்ச்சி, அரசியல் தடைகளை கடக்குற ஒரு பாலமா இப்போ மாறியிருக்கு,

இந்த வீடியோவை நீங்க share பண்ணீங்கன்னா, ஒரு viewer-க்கு ஒரு உணர்வு ஏற்படலாம். ஒரு குழந்தைக்கு ஒரு கனவு, ஒரு குடும்பத்துக்கு ஒரு நம்பிக்கை.

Subscribe பண்ணுங்க, comment பண்ணுங்க, உங்கள் friends-க்கும் forward பண்ணுங்க.

Gaza-வுக்கு நீதி வேண்டும். விளையாட்டு வழியாகவும், மனிதநேயத்தால் கூடவும், அந்த நீதி சாத்தியமா இருக்கலாம். நன்றி.

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...