காசாவுக்குப் பெருகும் ஆதரவு. ஆர்வலர்களுக்கு உற்சாக வரவேற்பு.
வரலாற்றுச் சிறப்புமிக்க காசா அமைத்திட்டம் - இன்று என்ன?
வரலாறு காணாத அதிருப்தி, அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
----
குளோபல் சுமுட் ஃப்ளோட்டிலாவில் பங்கேற்ற ஆர்வலர்கள், மாட்ரிட் விமான நிலையத்திற்கு வந்தவுடன், அவர்களை வெற்றியாளர்களாக, ஆரவாரங்களுடனும் அரவணைப்புகளுடனும் வரவேற்றனர்.
இஸ்ரேலில் இந்தப் பொதுநலப் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், அவர்களை வீட்டிற்கு வரவேற்க குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பூக்கள் மற்றும் கொடிகளுடன் கூடினர்.
காசா மீதான, இஸ்ரேலின் கடற்படை முற்றுகையை உடைக்கவும், பாலஸ்தீனர்களுக்கு எதிரான, அதன் இனப்படுகொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நூற்றுக்கணக்கான சர்வதேச தன்னார்வலர்களுடன் இந்த குழு பயணம் செய்தது.
இஸ்ரேலிய படைகள் சட்டவிரோதமாக. சர்வதேச கடல் பகுதியில் படகுகளை தடுத்து நிறுத்தி, படகுகளில் இருந்தவர்களை தடுத்து வைத்து, பின்னர் அவர்களை, தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தத் தொடங்கின.
பிரபலமான ஆர்வலர்கள், மற்றும் சமூகத் தலைவர்கள் உட்பட, டஜன் கணக்கான பங்கேற்பாளர்களுடன், ஸ்பெயின் மிகப்பெரிய தேசிய படைப்பிரிவுகளில் ஒன்றைக் கொண்டிருந்தது. இந்த முயற்சி, உலகலாவிய , இஸ்ரேலுக்கு எதிரான ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான நாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான படகுகளில், லட்சக்கணக்கானவர்கள் கிளம்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, டிரம்ப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட, அமைதிப்பேச்சு முறிந்தால், அது இஸ்ரேலிய சர்வதேச அரசியலில், பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
------------
அமெரிக்காவில் உண்மையில் என்ன நடக்கிறது?
அமெரிக்க மக்களுக்கிடையில் பிளவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பிழவுகள், பல குழப்பங்களுக்கும், வேற்றுமைக்கும், வெறுப்புக்கும் காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அமெரிக்கர்களில் அறுபத்தைந்து சதவீதம் பேர், அரசியலைப் பற்றி சிந்திக்கும் போது சோர்வாகவும், ஐம்பத்தைந்து சதவீதம் பேர் கோபமாகவும் உணர்கின்றனர். கிட்டத்தட்ட, பத்து சதவீதம் பேர் மட்டுமே நம்பிக்கையுடன் உள்ளனர். பல அமெரிக்கர்கள், தற்போதைய அரசியலை, தவறானது, உருண்டுவிட்டது, மற்றும் தரமற்றதாகவும், சீர்ப்பெறாமழும் உள்ளது என்று விவரிக்கிறார்கள். தலைப்பொறுப்பில் உள்ளவர்கள், பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு பதிலாக, தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்னும், சுயநலத்திற்காக மட்டுமே அரசியல் செய்கின்றனர் எனும் பார்வை பரவலாக உள்ளது.
கருத்து சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த வேறுபாடுகள் காரணமாக, அரசு நிறுவனங்கள், அரசு ஊடகங்கள், மற்றும் அரசியல் வாதிகளின் மேலான அதிருப்தி வளர்ந்துகொண்டே செல்வதாகக் கூறப்படுகிறது.
அரசியல் வன்முறையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிகாரிகளுக்கு எதிரான மிரட்டல்கலும் , கொலை முயற்சிகளும், அமெரிக்காவில், அரசியல் நோக்கமுடைய வன்முறைகள், கவலைக்குரிய வகையில் அதிகரித்துள்ளது. வல்லுநர்கள் இதை, கடுமையான உள்நாட்டுக்குழப்பம் என்றும், எந்தநேரமும், இந்த காரணத்திற்க்காக உள்நாட்டுப்போர் வெடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக விவரிக்கிறார்கள்.
அமெரிக்க அரசியலில், தொண்ணூறு சதவீதம் பேர் நபீக்கை இல்லாமல் இருக்கும் நிலையில், அதிரடியாக எதுவேண்டுமானாலும் நடக்கலாம் அல்லவா? பொறுத்திருந்து பார்ப்போம் நண்பர்களே.
-----
காசா அமைதிப்பேச்சு வார்த்தையில் இழுபறி. காசா அமைதி பேச்சுவார்த்தைகள் இன்னும் சில நாட்கள் தொடரும் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டன் அரசு, பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களை கட்டுப்படுத்த, மேலும் கடுமையான சட்டங்களை அறிவிக்க உள்ளது. பிரிட்டனின் இந்த அறிவிப்பு ஒரு உரிமை மீறலா?அல்லது பாதுகாப்பு நடவடிக்கையா?
இந்த வீடியோவை உங்கள் சமூகத்தில் பகிருங்கள். உங்கள் குரல், உங்கள் ஆதரவு, உலக அமைதிக்கு ஒரு ஒளியாகும். Subscribe செய்யுங்கள், உங்கள் கருத்தை கீழே பகிருங்கள். உங்கள் குரல் முக்கியம். நன்றி.
----
No comments:
Post a Comment