Thursday, 2 October 2025

பாலஸ்தீன வீரர்களுக்கான ஒலிம்பிக் நம்பிக்கை – IOC உதவித் திட்டம் | Gaza-வ...


நண்பர்களே! இன்றைக்கு நாம பாக்கப்போறது, ஒரு நல்ல செய்தி. காசாவில் நடைபெறும் கடுமையான போரால் ஏற்பட்டுள்ள, துயரம் மற்றும் சொல்ல முடியாத தடைகளுக்கு நடுவுல, ஒரு சின்ன ஒளி. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, அதாவது,  International Olympic Committeeயானது,  பாலஸ்தீன விளையாட்டு வீரர்களுக்காக அதிரடியான scholarship என்னும் உதவித்தொகை கொடுக்கப்போறாங்க. இது சாதாரண உதவி இல்லங்க... போரினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு , இது ஒரு நம்பிக்கையின் சின்னம்.  

IOCல இருக்குற Olympic Solidarity program மூலமா, சுமார் ஐம்பது பாலஸ்தீன விளையாட்டாளர்களுக்கு பயிற்சி செய்வதற்கும், பயணம் மேற்கொள்வதற்கும், உபகரணங்கள் வாங்குவதற்கு என்று, எல்லாத்துக்குமே உதவி கொடுக்கப் போறாங்க.

இந்த பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள், இந்த வருடம் பஹ்ரைனில் நடக்க இருக்கும்  Asian Youth Gamesசிலும், அடுத்த வருடம் செனிகல் நாட்டுத்தலை நகரம் டகரில் நடக்க இருக்கிற Youth Olympics போட்டிகளிலும், ஜப்பானில் நடக்க இருக்கிற, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், மற்றும்,  இரண்டாயிரத்து இருபத்தெட்டில்  லாஸ் ஏஞ்ஜெல்சில் நடக்க இருக்கும் Olympics போட்டிகளுக்கும்  தயாராகப் போறாங்க.

இதில் டக்கர் நகரம்,  அட்லாண்டிக் கடற்கரையோரத்தில் அமைந்த ஒரு முக்கியமான நகரம். செனிகல் நாட்டின் அரசியல், பண்பாட்டு, மற்றும் பொருளாதார மையமாகவும் இருக்கிறது. அடுத்த வருடம்  இளைய ஒலிம்பிக் போட்டிகள், அதாவது, Youth Olympic Games அங்கே நடக்கப்போகுது, அதனால தான் International Olympic Committee, பாலஸ்தீன விளையாட்டாளர்களுக்கு scholarship கொடுக்குறதுல, Dakar முக்கிய இடம் பெற்றிருக்குது. தொடர்ந்து, ஜப்பான் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க இருக்கும் போட்டிகளில் பங்கு பெரும் வாய்ப்பும், எதிர்கால பாலஸ்தீன இளைஞர்களுக்கு, ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, சர்வதேச ஒலிம்பிக் வாரிய  தலைவர் Kirsty Coventry சொன்னத பாருங்க.  நாங்க பாலஸ்தீன மக்களின் அமைதிக்காக நம்பிக்கையோட இருக்கோம்.  இந்த உதவி, அந்த அமைதிக்கான ஒரு படி அப்படின்னு சொல்லி இருக்காங்க.

பாலஸ்தீன விளையாட்டாளர்கள், கடுமையான போர் சூழ்நிலையில, electricity இல்லாம, properஆன play  ground இல்லாம, அடிப்படையான பயிற்சிகூட இல்லாம,  வெறும் கலர்  கனவுகளோட மாட்டும் பயிற்சி பண்ணுறாங்க.

பலப்பல  தடைகளையும் கடந்து, ஒவ்வொரு நாளும் போராடுறாங்க.

ஒலிம்பிக்குல சாதாரணமா, பத்து  பேர் கூட qualify பண்ண முடியாது. ஆனா, இப்ப International Olympic Committee உதவியாலஐம்பது  பேர் பயனடையப் போறாங்க.

இது வெறும் medal-க்கான பயணம் இல்லங்க. இது ஒரு மக்கள் குரல்.  நாங்க இருக்கோம்,  நாங்க கனவு காண்றோம்ன்னு சொல்லுற ஒரு சின்னம்.

"Gaza-வுல நடக்குற போரம், Israelலின் blockade, basic human rights-ஐ கூட மறுக்கிற  பண்ணுற சூழ்நிலை. இதுல IOC யோட இந்த உதவி, ஒரு பெரிய செய்தியை சொல்லி இருக்கு.

'Sports is not politics'ன்னு சொல்லுற IOC, இப்போ ஒரு மனிதாபிமான humanitarian signal கொடுக்குறாங்க.

இது ஒரு சின்ன உதவி மாதிரி தெரியலாம். ஆனா, இது ஒரு பெரிய நம்பிக்கை, ஒரு பெரிய Hope.

ஸ்போர்ட்ஸ் என்னும் விளையாட்டு நிகழ்ச்சி, அரசியல் தடைகளை கடக்குற ஒரு பாலமா இப்போ மாறியிருக்கு,

இந்த வீடியோவை நீங்க share பண்ணீங்கன்னா, ஒரு viewer-க்கு ஒரு உணர்வு ஏற்படலாம். ஒரு குழந்தைக்கு ஒரு கனவு, ஒரு குடும்பத்துக்கு ஒரு நம்பிக்கை.

Subscribe பண்ணுங்க, comment பண்ணுங்க, உங்கள் friends-க்கும் forward பண்ணுங்க.

Gaza-வுக்கு நீதி வேண்டும். விளையாட்டு வழியாகவும், மனிதநேயத்தால் கூடவும், அந்த நீதி சாத்தியமா இருக்கலாம். நன்றி.

No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...