கத்தாரில், ஈரான் நடத்திய துல்லிய தாக்குதல். செயலிழந்த Trump தன் வாலைச்சுருட்டிய பின்னணி. வெளிவந்த ஆதாரம்.
சமீபத்தில், கத்தாரிலுள்ள அல் உதைத் விமானப்படைத்தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், Geodesic Dome Housing எனப்படும் பாதுகாப்பு வலையத்துக்குள் ஊடுருவி, அமெரிக்க தொலைத்தொடர்பு சாதனங்கள், முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன. தற்போது வெளியாகியுள்ள அதிர்ச்சியளிக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள், ராணுவ மற்றும் தூதரக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஜூன் மாதம் இருபத்து மூன்றாம் தேதி அதிகாலை, ஈரானால் நடத்தப்பட்ட அதி துல்லிய தாக்குதலில், குறிவைக்கப்பட்ட கட்டிடம் எரிந்து கொண்டிருந்ததால், சேத விவரங்கள் வெளிப்படவில்லை. ஆனால், இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் இருபத்தைந்தாம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில், தாக்குதல் நடந்த இடம் முழுவதுமாக அழிக்கப்பட்டிருப்பதும், அந்த இடத்தைச் சுற்றியிருந்த மற்ற கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதும், தெளிவாகப் பதிவாகி இருக்கிறது.
சுமார் பதினைந்து மில்லியன் டாலருக்கும் அதிகமான பொருற்செலவில் அமைக்கப்பட்ட இந்த நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பு, இரண்டாயிரத்துப் பதினாறாம் ஆண்டு, அமெரிக்க விமானப்படையின் முந்நூற்று எழுபத்து ஒன்பதாவது Air Expeditionary Wingஆல் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அல் உதைத் விமானப்படைத்தளம், மத்திய கிழக்கு முழுமைக்குமான அமெரிக்காவின் central command என்றழைக்கப்படும் centcomமின் தலைமை நிலையமாகும். இந்த அதிமுக்கிய அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டு நிலையம் செயலிழந்ததால், ஈரானின் அதிகாலைத் தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் நடத்த எந்த வாய்ப்பும் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
இதனால் அச்சமும் பதட்டமும் அடைந்த டிரம்ப், அந்த கடுமையான தாக்குதலை மறைக்க முயன்றது மட்டுமின்றி, வீரியமில்லாத சாதாரண தாக்குதல் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும், ஈரானின் தாக்குதல் பற்றிய தகவல் முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்ததால், அந்தத்தளத்தை காலி செய்துவிட்டு, உடனடியாக அனைவரும் வெளியேறிவிட்டனர் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அனால், உண்மை என்னவென்றால், மத்தியகிழக்கின் முக்கியமான, அமெரிக்க விமானப்படை கட்டுப்பாட்டு தலைமையகத்திலிருந்த கட்டளைக்கருவிகள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஈரானின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தும் எந்த திறனும், வாய்ப்பும் அமெரிக்காவுக்கு இல்லை என்பதே உண்மையாகும்.
இதனால் ஏற்பட்டிருந்த மோசமான பின்னடைவின் விளைவாகவும், மேற்கொண்டு ஈரான் மீண்டும் தாக்கினால் உருவாகும் பெருத்த சேதத்தையும், அவமானத்தை தவிர்க்க, அவசர அவசரமாக, ஈரான் இஸ்ரேல் உடனடி போர் நிறுத்தம் என்றும், சமரசம் என்றும் Trump பிதற்றியது அனைவருக்கும் நினைவிருக்கும். தலைகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை போலும்.
இந்நிலையில் வெகுண்டெழுந்த ஈரான், எங்களது தாக்குதல் ஒரு துல்லிய தாக்குதல் மட்டுமல்ல, அமெரிக்காவின் சென்ட்காம் தலைமையகம் முக்கிய இலக்காக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பென்டகனின் எந்த கட்டுப்பாட்டு மையமும் எங்களைத் தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ முடியாது என்று Pentagonனுக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளது.
ஈரானின் இந்தத்தாக்குதல், உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதற்குக் காரணம் என்னவென்றால், அமெரிக்காவின் அதிமுக்கிய ஆறு ராணுவக் கட்டுப்பாட்டு முனையங்களில், கத்தாரின் அல் உதைத் ராணுவக் கட்டுப்பாட்டு முனையமும் ஒன்றாகும். இதை சர்வசாதாரணமாக ஈரானால் அழிக்க முடியுமென்றால், பரந்து விரிந்திருக்கும் அமெரிக்காவின் ராணுவ வல்லமை, மத்தியக்கிழக்கில் முடக்கப்பட்டுவிட்டது என்பதையே காட்டுகிறது. இனியொருமுறை அமேரிக்கா ஈரானை தாக்கவேண்டும் என்றால், மத்தியகிழக்கு முழுவதையும் காலி செய்துவிட்டு, தொலைதூரத்திலிருந்து தாக்குதல் நடத்தினால் மட்டுமே சாத்தியமாகும். எனினும், ஈரானைத்தாக்கி அழிப்போம் என்னும் அமெரிக்காவின் கூக்குரல் மட்டும் ஓய்வதற்கு வாய்ப்பே இல்லை.
----
இந்நிலையில், தோஹாவில் நடந்த, காசா மற்றும் இஸ்ரேலுக்கான அமைதிப் பேச்சு வார்த்தை இரண்டு முக்கிய காரணங்களுக்காக தடை பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, காசா முழுமைக்கும் இஸ்ரேல் ராணுவம் மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் என்பதும், ரஃபா மற்றும் தடை செய்யப்பட்ட பகுதி ஏற்படுத்தப்படுவதாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்டாய இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்ற அச்சம் காரணமாகவும், இரண்டாவதாக, controversial Gaza Humanitarian Foundation, அதாவது G H F என்றழைக்கப்படும், காசா மக்களுக்கு உணவளிக்கும் அமைப்பு தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்கவேண்டும் என்றும், நெதன்யாஹூவின் பிடிவாதாப் பேச்சால், சமாதான ஒப்பந்தம் இழுபறி நிலையில் உள்ளது. இது தொடர்பாக பல இஸ்ரேலிய அதிகாரிகளே, ஹமாஸ் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் G H F உணவு வழங்களின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு, உலகம் முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளது.
மேலும் இதுபோன்ற மற்ற செய்திகள் மூலம் உங்களை மீண்டும் சந்திப்போம். தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி.
---------
No comments:
Post a Comment