மிரட்டப்பட்ட அசாத். மோசம் செய்த துருக்கி. திடுக்கிடும் செய்தி அம்பலம்.
திடுக்கிடும் செய்தி: இஸ்ரேலும் அமெரிக்காவும், துருக்கியின் மூலமாக, HTSசை முன்னிறுத்தி, சிரியாவில் பஷார் அழ அசாதுக்கு எதிராக தாக்குதலை தொடங்கிவதற்கு முன், சியோனிச அமைப்புடன், அதாவது இஸ்ரேலுடன், அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை இயல்பாக்குவது அல்லது பதவி விலகுவதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பஸார் அசாத் இதை மறுத்தால், HTS பின்னணியில், துருக்கி, அமேரிக்கா, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளால் தாக்கப்படும் என்றும், பஸார் அசாத் படுகொலை செய்யப்படுவார் என்னும் மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சிரியா, ரஷ்யா, ஈரான், ஹெஸ்பொல்லாஹ் போன்றவற்றின் முக்கிய பிரமுகர்களால் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட ராஜதந்திர முடிவுகளுடன், ஈரான் மற்றும் ரஸ்சியாவின் முக்கிய ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் பெரும்பாலும் லெபனானுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும், பின் ஹெஸ்பொல்லாஹ்வும், ஈரானும் சிரியாவிலிருந்து வெளியேற, ரஷ்யா அவசர அவசரமாக, பஸார் அழ அசாதையும் மற்றும் அவரது குடும்பத்தையும் பத்திரமாக ரஸ்சியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு, சிரியாவில் எஞ்சி இருந்த சிலபல ராணுவத்தளவாடகளையும், திருப்பி எடுத்துச்செல்லமுடியாத பல சாதனங்களையும் அழித்துவிட்டு, கடைசியாக ஈரானின் ஐஆர்ஜீசீ சிரியாவிலிருந்து வெளியேறி இருக்கிறது.
அமேரிக்கா மற்றும் இஸ்ரேலால் முன் மொழியப்பட்டு, துருக்கியால் வழிநடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக, ஈரானும் ரசியாவும் தங்களது ராணுவ பலத்தைக்காட்டி இருந்தால், அதனால் ஏற்படும் பேரழிவு சிரியாவில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு முழுவதும் தீப்பிழம்புகள் பரவியிருக்கும். அதாவது சிரியாவிலுள்ள அமெரிக்க மற்றும் துருக்கிய நிலைகள், ஈரான் மற்றும் ரஸ்சியாவால் தாக்கப்பட்டிருந்தால், அமெரிக்க, இஸ்ரேல், துருக்கி, ஈரான், ரஸ்சியா மற்றும் சிரியா ஆகிய ஆறு நாடுகளின் ராணுவத்திற்கு இடையிலும், நேரடியான பெரும் போர் வெடித்திருக்கும். மத்திய கிழக்கிலுள்ள அனைத்து அமெரிக்க ராணுவ நிலைகளும் தரைமட்டமாகியிருக்கும். மறுபுறம், ஈரான் மீது பாரிய தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன், வேறுபலநாடுகளும் இந்தப்போரில் ஈடுபட்டிருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈரானையும் அமெரிக்காவையும் நேரடி சண்டையில் கோர்த்துவிடவேண்டும் என்று இஸ்ரேல் செய்த தந்திரங்கள் பலவும் தோல்வியில் முடிய, ஜோ பைடனின் பதவிக்காலம் முடியும் முன் சிரியாவில் வைத்து அதை சாதித்துவிடவேண்டும் என்னும் நப்பாசையை சரியாகக்கணித்த ஈரான் கூட்டணி, உடனடியாக சிரியாவை விட்டு வெளியேறியது. இந்த வெளியேற்றம் ஈரானுக்கும் ரசியாவுக்கும் கிடைத்த தோல்வியல்ல. மாறாக இஸ்ரேலின் நரித்தந்திரத்துக்குக் கிடைத்த படுதோல்வி. அதனால்தான், சிறிய கிளர்ச்சியாளர்கள், பெரிய அளவிலான எதிர்ப்புகளை சிரியாவுக்குள் எதிர்கொள்ளாமல், பதினோரு நாட்களில் சிரிய தலைநகர் டமாஸ்கஸ்ஸை அடைந்தனர்.
இப்போதும் சிரியாவில் பெரும்பாலானவர்கள், கிளர்ச்சியார்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆயினும் எதிர்ப்புகள் எதையும் வெளிக்காட்டாமல், அமைதி காக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது. என்னென்ன நிகழ்வுகள் ஏற்படுகிறது என்பதை கூர்ந்து கவனிக்க, ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. ஸிரியாவைச் சுரண்ட கிளர்ச்சியாளர்கள் அனுமதிக்கும்வரை அவர்கள் பதிவில் இருக்கலாம். என்றைக்கு விழித்துக்கொள்கிறார்களோ, அப்போது அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் துருக்கிய கூட்டணி, இவர்களை முடித்துவிடும்.
இறுதியாக, இப்போது சிரியாவில் அமைதி சூழ்ந்திருக்கிறது. அடுத்து ஏற்படப்போகும் பெரும் புயலுக்கு அச்சாரமாக இது அமைந்திருப்பதாகக் கூறலாம். பொறுத்திருந்து பார்ப்போம். தொடர்ந்து இணைந்துருங்கள். சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள். நன்றி.
No comments:
Post a Comment