தல இல்லாத சிரியாவில் தடி எடுக்கும் இஸ்ரேல் தண்டல்காரன்.
கடந்த சில மணி நேரங்களில் சிரியாவுக்குள் நூறுக்கும் மேற்பட்ட இடங்கள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசின. சிரியா மக்களை முழுமையான கொத்தடிமைகளாக மாற்றி, திறந்த வெளிச்சிறைச்சாலையில் வைக்கும் முயற்சி. சிறிய மக்கள் தாங்கள் சமையல் செய்வதற்காக, காய்கறிகளை நறுக்க உபயோகிக்கும் கத்திகள் கூட இருக்கக்கூடாது என்ற அளவுக்கு தாக்குதல் நடத்தாது துணிந்துள்ள இஸ்ரேல் மற்றும் அமேரிக்கா.
கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் , சிரியாவின் முழு வான் பாதுகாப்பு அழிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் இராணுவ ஆராய்ச்சி வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன . சிரிய விமானத் தளங்கள், போர் விமானங்கள், வெடிமருந்து சேமிப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. சிரியாவின் பல வருட இராணுவ முதலீடு ஒரு நாளுக்குள் அழிக்கப்பட்டுவிட்டது.
தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்களால், லடாகியா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சிரியாவின் போர்க்கப்பல்கள் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டன. சிரியாவில் எங்கும் ஆயுதங்கள் இல்லை. வான் பாதுகாப்பு சாதனங்கள் இல்லை. சிரியா மக்களுக்குப் பாதுகாப்பில்லை, இனி மரியாதையும் இல்லை. இதை எதிர்த்து கேள்வி கேட்க யாரும் இல்லை.
நன்றியில்லாத மக்கள் எப்படியோ போகட்டும் என்று, சிரியாவை விட்டு வெளியேறிய பஸார் அல் அசாத். சிரியாவில் அநியாயமாக ரத்தம் சிந்தப்படக்கூடாது என்றும், பொது சொத்துக்கள் அழிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில், அசாத் எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல், தலை நகர் டமாஸ்கஸில் இருந்து வெளியேறியதாகத் தகவல். இனி சிரியாவை பாதுகாக்க ஈரானும் இல்லை, ரசியாவும் இல்லை. வெறும் துப்பாக்கிகளை மட்டும் வைத்துக்கொண்டு, HTS சிரியாவை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பது எப்படி?
---
இனி சிரியாவில் ஏராளமான இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் தேவைப்படப் போகின்றன, மேலும், மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பார்கள் என்பது பற்றியும், சிரியாவை மீண்டும் எப்படி வலிமை மிகுந்த நாடாக மாற்ற முடியும் என்பது குறித்து நிறைய கேள்விகள் உள்ளன.
சிரியாவை எப்படி ஆளுவது அல்லது கட்டுப்படுத்துவது என்பதற்கான திட்டம், சிரிய மக்களிடம் இதுவரை இல்லை. மேற்கே வெகு தொலைவில் உள்ள டமாஸ்கஸில் என்ன நடக்கிறது என்பதும், அலெப்போவில் என்ன நடக்கிறது என்பதும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிற்குத்தான் சிரிய மக்களுக்குத்தெரிகிறது. சிரியாவின் ஈராக்கிய எல்லையில் அல்லது ஜோர்டானுக்கு அருகே தெற்கே உள்ள சிரியாவில் என்ன நடக்கிறது என்பதற்கும், மக்களுக்கும் நிச்சயமாக எந்தத் தொடர்பும் இல்லை. சிரியாவின் எல்லைகள் அனைத்தும் கைப்பற்றப்படப் போகின்றன, மேலும் சிரியாவில், பல ஆயுதம் ஏந்திய குழுக்கள் உள்ளன. ஐஎஸ்ஐஎஸ் அரசு உட்பட பல்வேறு ஆயுதக்குழுக்கள் உள்ளனர், இவை அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களது பலத்தை அதிகப்படுத்தியுள்ளது..
இவை அனைத்தையும் சரிசெய்ய, அனைவரும் ஒன்றுகூடிப்பேசி ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும் என்ற யோசனையை ஈரான் வெளியிட்டுள்ளது, அதில் அனைத்து சிரியர்களும் பங்கேற்கவேண்டும். சுமுகமானமுடிவு எட்டப்படவேண்டியதும் மிக அவசியம். இதைத்தவிர்த்து சிரியாவில் உள்நாட்டுப்போர் ஏற்பட்டால், அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
---
லெபனான் எல்லை நகரமான மரூன் அல்-ராஸில் தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்களில், மேலும் பல வீடுகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் வெடிவைத்துத் தகர்த்தன.
சியோனிச ஆக்கிரமிப்பின் நானூற்று முப்பதாவது நாளில் வடக்கு காசாவில், பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்க போராளிகளால், மூன்று இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பதினெட்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.
யேமெனில் இருந்து ஜெனரல் சாரியா, புதிய காசா ஆதரவு நடவடிக்கையை அறிவித்துள்ளார். யேமன் மீதான எந்தவொரு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும், நாங்கள் மேலும் அதிகமான தாக்குதல்களுடன் எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
சிரிய நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதை எகிப்து கண்டித்துள்ளது. இது, களத்தில் ஒரு புதிய யதார்த்தத்தை செயல்படுத்தும் முயற்சி, என்று எகிப்து வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம், சிரியாவின் வரலாற்றில் இந்த முக்கியமான கட்டத்தில், அறிவார்ந்த முறையில் செயல்படுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று, அனைத்து சிரிய தரப்பினரையும் அறிவுறுத்தியுள்ளது.
காசாவில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திய தாக்குதல்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாற்பத்து நான்காயிரத்து எழுநூற்று ஐம்பத்தெட்டாக உயர்ந்துள்ளது என்றும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆறாயிரத்து நூற்றி முப்பத்து நான்கு என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் தொடர்க்கின்ற்ன. தொடர்ந்து இணைந்திருங்கள். Subscribe செய்து கொள்ளுங்கள். நன்றி.
---
No comments:
Post a Comment