Monday, 9 December 2024

சிரிய அரசாங்கத்தின் வீழ்ச்சியும் அதன் தாக்கங்களும் Fall of Syrian Govern...


ஐம்பத்து நான்கு வருட, சிரியா அரசு வீழ்ந்தது. 

நிச்சயமற்ற ஒரு நிலைமை சிரியாவில். இந்த இக்கட்டான நிலையில், பஷர் அல்-அசாத் என்பவர் யார்? பஷர் அல்-அசாத்தின் தற்போதைய நிலை என்ன? அடுத்த ஆட்சி எப்படி இருக்கும்? இதைப்பற்றி நாம் ஒரு ரத்தினச்சுருக்கமாகப் பாக்கப்போறோரோம்.  வாங்க செய்திக்குள்ள போலாம்.

பஷர் அல்-அசாத்,  ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தைந்தாம் வருடம்,  செப்டம்பர் மாதம் பதினொன்னாம் தேதி பிறந்தார். 

பஷார் அல் அசாதின் பெற்றோர் ஹாஃபிஸ் அல் அசாத் மற்றும் அனிசா மக்லூப் ஆவர். ஹாஃபிஸ் அல் அசாத், ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து ஒன்று முதல்  முதல் இரண்டாயிம் வரை,  அதாவது  அவர் மரணிக்கும் வரை சிரியாவின் அதிபராக இருந்தார், பஷார் அல் அஸாதின் தாயார் அனிசா மக்லூப் அம்மையார், சிரியாவின் மிக முக்கியமான குடும்பங்களுள் ஒருவராக இருந்தார்.

பஷர் அல்-அசாத், சிரிய ஜனாதிபதியாக பதவியேற்கும் முன், ஒரு  அரசியல்வாதியாகவும், மற்றும் இராணுவ அதிகாரியாகவும் பதவி வகித்தார். அவர் ஜூலை இரண்டாயிரம் முதல் தற்சமயம் வரை, சிரியாவின் பத்தொன்பதாவது ஜனாதிபதியாக பணியாற்றினார். ஜனாதிபதியாக, அசாத் சிரிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும், அரபு சோசலிச பாத் கட்சியின், மத்திய கட்டளையின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 

பஷர் அல்-அசாத்தின் தற்போதைய நிலை என்ன?

பஷார் அல் அசாத்தின் தற்போதைய இருப்பிடம் மர்மமாகவே உள்ளது. அவர்  எங்கே சென்றார் என்று தெரியவில்லை. சில அறிக்கைகள் அவரது விமானம் டமாஸ்கஸ் நகரிலிருந்து கிளம்பியதாக கூறுகின்றன. கிளர்ச்சியாளர்கள் நகரத்தை கைப்பற்றிக்கொண்டதும் அசாத் நகரை விட்டு கிளம்பினார் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இன்னும் சில அறிக்கைகள், அவர் சென்ற விமானம் எங்கோ அவசரமாகத் தரை இறங்கியது. அதன்பின் அவரைப்பற்றியும், அவர் சென்ற விமானத்தின் நிலை பற்றியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அவர் மாஸ்கோ அல்லது தெஹ்ரானில் தஞ்சம் கோரக்கூடும் என்று முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.  நிலைமை நிலையற்றதாகவே உள்ளது, மேலும் அவரது சரியான இடம் இன்னும் தெளிவாக இல்லை. அவரது அரசாங்கத்தின் திடீர் வீழ்ச்சி, சிரியாவின் அரசியல் எதிர்காலத்தை நிச்சயமற்றதாக்கியுள்ளது என்பது மட்டும் கண்முன்னே நிழலாடும் உண்மையாக இருக்கிறது.

தற்போது சிரியாவின் அரசியல் நிலைமை என்ன?

சிரியாவின் புரட்சியாளர்கள் டமாஸ்கஸுக்குள் நுழைந்துவிட்டார்கள். இந்த நிலையில், சிரியாவின் தற்போதைய பிரதமராக இருப்பவர் முகமது காசி அல்-ஜலாலி. இவர் செப்டம்பர் பதினாலு  இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டு, ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தால் நியமிக்கப்பட்டார். அல்-ஜலாலி சிவில் இன்ஜினியரிங் பின்னணியைக் கொண்டுள்ளார், மற்றும், முன்னர் இரண்டு வருடங்கள் தகவல் தொடர்பு மற்றும், தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பணியாற்றினார். சிரியாவின் தனியார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும், அரபு தர தயாரிப்பாளர்களின் அறங்காவலர் குழுவின் தலைவர் போன்ற பதவிகளையும் அவர் வகித்தார்.

தற்போது, ஜனாதிபதி பஷர் அல்-அசாத் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அல்-ஜலாலி சுதந்திரமான தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், அமைதியான அதிகார மாற்றத்தை உறுதிப்படுத்த, எதிர்க்கட்சி சக்திகளுடன் ஒத்துழைக்க தனது தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

சிரியாவின் தற்போதைய பிரதம மந்திரி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

சிரியாவின் பிரதமர் சிரியாவின் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். தேர்வு செயல்முறையின் சுருக்கமான கண்ணோட்டம் இங்கே பார்க்கலாம்.

முதலில், பிரதமர் பதவிக்கு, குடியரசுத் தலைவர் அதாவது ஜனாதிபதி ஒருவரை நியமிப்பார்.

இரண்டாவதாக,  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர், மற்ற அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் உறுப்பினர்களை பரிந்துரைக்கிறார்.

மூன்றாவதாக, சிரியாவின் மக்கள் சட்டமன்றம், புதிய அரசாங்கத்தின் சட்டமன்ற திட்டத்தை மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளிக்கிறது.

நான்காவதாக, மக்கள் சட்டமன்ற ஒப்புதல் கிடைத்தவுடன், புதிய பிரதமரும் அரசாங்கமும் முறையாக பதவியேற்கிறார்கள். இந்த பிரதமரையும், அவரது அமைச்சரவையையும், நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது.

இப்போது சிறிய ஜனாதிபதி இல்லாத நிலையில், புதிய சிரியாவின் அரசியல் அமைப்புச்சட்டத்தில் மாறுபாடுகள் ஏற்படுமா, அல்லது அதே அமைப்பு தொடருமா என்னும் கேள்விக்குப் பதில் இந்நடும் சில நாட்களில் கிடைத்துவிடும் என்று நம்பலாம்.

--

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் அரசு கவிழ்ந்துள்ளது. பிரதம மந்திரி முகம்மது காஜி ஜலாலி, ஞாயிறன்று அரசாங்கத்தை ஒப்படைக்கத் தயாராகி வருவதாக எக்ஸ்  வலைதளத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக ஆட்சி ஒப்படைக்கப்படும் வரை, அனைத்து அரச நிறுவனங்களும், பஸார் அல் அசாதால் நியமிக்கப்பட்ட, தற்போதைய பிரதமர் அல்-ஜலாலியின் மேற்பார்வையில் இருக்கும் என்று, ஹெச்ட்டீயெஸ்  தலைவர், அபு முகமது அல்-ஜுலானி என்று அழைக்கப்படும், அஹ்மத் அல்-ஷாரா கூறினார். இது கலவரமில்லாத, ஒரு நல்ல நம்பிக்கையிலான உடன்படிக்கை என்றும், இது ஒரு சுமுகமான மற்றும் கலவரமில்லாத ஆட்சி மாற்றத்துக்கு வலி வகுக்கும் என்றும் நம்பலாம்.

மேலும் செய்திகள் தொடர்கின்றன, தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள், Subscribe செய்து கொள்ளுங்கள். நன்றி.


===


No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...