சிரியா போர் - துருக்கியை பகடையாக்கி காய் நகர்த்தும் நேட்டோ மற்றும் இஸ்ரேல் ஷின்பெட்.
ரஷ்யாவுடன் இணைந்து உலகின் நீதியை பாதுகாக்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
காசா கொலைகளிலிருந்து உலகை திசை திருப்ப, இஸ்ரேல் முன்னெடுக்கும் - தக்ஃபிரி - நடவடிக்கை.
வெற்றியை நோக்கி சிரிய ராணுவம். சிதறும் அதிருப்தி படைகள்.
சிரியாவின் அலெப்போ மீதான தாக்குதலுக்கு முன், இஸ்ரேலின் ஷின் பெட் தலைவர் துருக்கியின் புலனாய்வு அமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தையும், நேட்டோவின் தலைவர், எர்தோகனை சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தையும், சிரியாவை சூழ்ந்துள்ள போர்மேகங்களுக்கு முக்கிய அச்சாரமாக அமைந்துள்ளது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் உள்நாட்டுப்பிரச்சினையில், சிரிய நாட்டு மக்களின் பங்கெடுப்பைவிட, வெளிநாட்டைச்சேர்ந்த கூலிப்படைகளின் பங்கு மிக அதிகமாக இருப்பதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
சிரியாமீது நடத்தப்படும் தாக்குதல்கள், சிரிய நாட்டு ராணுவத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களைவிட, குர்திஷ் இன மக்களின்மீது நடத்தப்படும் தாக்குதல்கள்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவுடன் இணைந்து உலகின் நீதியை பாதுகாக்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவும் சீனாவும் நல்ல நட்பு நாடுகளாக உருவெடுத்துள்ளன. இவர்களுடன் ஈரான், நார்த் கொரியா உள்பட பல நாடுகள் ஒன்றிணைந்து, அமேரிக்கா என்னும் ஒற்றைத்தலைமையில் இயங்கும் இந்த உலகத்தில் ஏற்பட்டுள்ள அநியாயங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக, இவர்கள் ஒன்றாக பல துருவ உலகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அமெரிக்க மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்து. புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் முயற்ச்சியில் முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரிய அரபு இராணுவத்திற்கு உதவுவதற்காக குர்திஷ் குழுக்கள் இப்போது அலெப்போவுக்கு செல்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்காலிகமாக சிரியாவின் மூலோபாய நிலைகளை தங்களது பாதுகாப்பில் எடுக்கிறார்கள், இதனால் சிரிய அரபு இராணுவம், நேட்டோ, இஸ்ரேல் மற்றும் துருக்கியால் தூண்டிவிடப்பட்டுள்ள அதிருப்தியாளர்களுக்கு எதிராக, ஒரு எதிர் தாக்குதலுக்கு தயாராக முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிரியாவில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ஈராக்கில் இருந்து பல்லாயிரக்கணக்கான போராளிகள் புறப்பட்டுள்ளனர்.
மேலும், சௌதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய இரண்டு நாடுகளும் சிரியா ஜனாதிபதி பஸார் அல் அசாத் அரசாங்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
சிரியாவில் ஆயுதமேந்தி தாக்குதல் நடத்தும் குழு, அமெரிக்காவில் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் எப்போதும் இஸ்ரேலின் இலவச ஆதரவாளராக இருந்து வருகிறார், மேலும் டிரம்ப் அறிவித்துள்ள அமைச்சரவை தீவிர சியோனிஸ்டுகளால் ஆனது. ஆகவே, ட்ரம்ப் அதிகாரத்தில் இருக்கும்போது, பல தசாப்தங்களாக நெதன்யாஹு கனவு கண்டபடி, ஈரான் மீதான பெரியளவிலான தாக்குதலை நடத்த அமெரிக்க ஆதரவைப்பெறவும், காசா மற்றும் லெபனானியர்களுக்கு எதிராக தமது விருப்பம்போல் செயல்பட ஆதரவும் பெற முடியும் என்னும் உற்சாகத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், சரிந்து வரும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிலை நிறுத்தும்வரை, நெதன்யாஹூவின் ஆசைகளுக்கு இந்த முறை ஒரு தடைக்கல்லாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு சில ஆய்வாளர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதற்குக் காரணம், அமெரிக்காவின் பொருளாதாரத்தை முதன்மையானதாக நிலை நிறுத்துவதால் இந்த மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஆயினும் ட்ரம்மின் உண்மையான சொரூபம், அவர் பதவியேற்ற பின்புதான் வெளிப்படும் என்பதுதானே உண்மை.
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து அரங்கேற்றிவரும் படுகொலைகளிலிருந்தும், கொடூரமான பாலஸ்தீன இன அழிப்பு நடவடிக்கைகளிலிருந்தும், இந்த உலகை திசை திருப்ப, தக்ஃபிரி தீவிரவாத அமைப்பை, சிரியாவுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, உலக ஊடகங்களின் தலைப்புச்செய்திகளை மாற்றி எழுத, நாட்டோவுக்கும் இஸ்ரேலுக்கும் உதவி புரிவதாக, சிரிய கலகக்காரர்கள் மீது புகார் எழுந்துள்ளது.
சிரியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஆயுதமேந்திய குழுக்களுக்கு, ஆயதங்கள், பணம், மற்றும் பயிற்சி ஆகியவை துருக்கி மூலம் அளிக்கப்படுகிறது என்னும் குற்றச்சாட்டும் இருந்துள்ளது. மேலும் இந்த குழுக்களின் துருக்கி ராணுவமும்கூட மறைமுகமாக பங்கெடுத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
சிரிய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட, ஆயுதப்படையைச் சேர்ந்த பலர் மூலம், இந்த செய்தி கசிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
சிறிய ராணுவ விமானப்படையும், ரஷ்ய விமானப்படையும் இணைந்து நடத்தும் வான்வழித் தாக்குதல்களை எதிகொள்ள முடியாமல் எதிரிப்படைகள் சிதறி ஓட்டம் எடுப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. பல இடங்களில் இந்த தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகத்தெரிகிறது.
மேலும், சிரிய ராணுவத்துக்கு வலுசேர்க்கும் வகையில், குர்திஷ் படைகளும், ஈராக்கிலிருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்களும், ஈரான் மற்றும் ரஷ்ய படைகளுடன் இணைந்து சிரியவைப் பாதுகாக்க, அதன் எதிரிகளுக்கு எதிராக தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன.
முன்னதாக ரஷியாவின் விமானப்படை, இத்லிபில் நடத்திய தாக்குதலில், சிரியாவில் உள்ள தஹ்ரிர் அல்-ஷாம் பயங்கரவாத குழுவின் தலைவர் அபு முகமது அல்-ஜுலானி கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, ஆயுதம் ஏந்திய சிரிய அதிருப்தியாளர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.
---
No comments:
Post a Comment