ஹவுதிக்கள் வைத்த உறுதியான ஆப்பு. அமெரிக்க போர்க்கப்பல் எஸ்கேப்.
துருக்கியின் Anatolu S சரக்கு கப்பலை தாக்கிய ஹவுதிக்கள்.
ஹெஸ்பொல்லாஹ் எச்சரிக்கை. 12000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் டெல்அவிவை நோக்கி தயார் நிலையில்..
டெல் அவிவை அழிக்கும் திறன் கொண்ட பதினோராயிரம் வெடிக்கும் ஆயுதங்கள் மற்றும் ஹைப்பர்சோனிக் வேகம் கொண்பன்னிரெண்டாயிரம் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரித்துள்ளதாக ஹெஸ்பொல்லா அறிவித்துள்ளது. அவை இப்போது எந்த நேரத்திலும் ஏவப்படுவதற்கு ஏவுதளங்களில் தயாராக உள்ளன. இந்தப் பன்னிரெண்டாயிரம் ஏவுகணைகளும் ஒரே நேரத்தில் தொடர்ந்து ஏவப்பட்டால், அயர்ன் டோம் என்னும் இரும்புக்கவசம் அட்டைக்கவசமாக மாறி பற்றி எரிந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதுவும் இத்தனை ஏவுகணைகளும் டெல்அவிவை நோக்கி மட்டுமே குறிவைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பாலிஸ்டிக் தாக்குதல் மட்டும் நடத்தப்பட்டால், இஸ்ரேல் தலைநகரமான டெல்அவிவின் நிலைமை காசாவின் தற்போதைய பேரழிவைவிட பெரும் பேரழிவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
--
செங்கடலில் துருக்கியின் அனடோலு எஸ் போர்க்கப்பல் மீது ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு முன்னர் கப்பலுக்கு பல எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதாக அன்சருல்லாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி துண்டித்துள்ளதாக ஜனாதிபதி எர்டோகன் கூறிய போதிலும், அனடோலு எஸ் இஸ்ரேலுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் எதிரிகளானாலும், முதுகில் குத்தும் துரோகிகளானாலும், பாலஸ்தீனத்தில் இன அழிப்பை நிகழ்த்தும் சியோனிச பயங்கரவாதிகளுக்கு உதவும் யாரையும் தாக்குவோம் என்று ஹஉதிக்கள் தெளிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
---
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஏமனில் இருந்து பெரும் தாக்குதலுக்கு உள்ளான ஆபிரஹாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை, மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா திரும்பப் பெற்றது. போர்க்கப்பல்களைப் பொறுத்தவரை, ஈரான், ரஷியா, சீனா போன்ற நாடுகள் நடத்திய, கடல்சார்ந்த ராணுவ ஒத்திகைகளில், அமெரிக்க போர்க்கப்பல்களை சுலபமாக அழித்துவிட முடியும் என்பதையே காட்டுகிறது. ஒரு தீவிரமானபோரின் முதல் பதினைந்து நிமிடங்களில், அமெரிக்கா அனைத்து விமானம் தாங்கி கப்பல்களையும் இழக்கும் நிலை ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், ஈரானின்torpedoes, அதிவேகப் படகுகள், போர்க்கப்பல்களுக்கு அருகிலேயே சென்று வெடிகுண்டுகளை கப்பலின் வெளிப்புறத்தில் ஆங்காங்கே ஒட்டவைத்துவிட்டு தப்பிவரக்கூடிய வலிமை இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிவேக தற்கொலைப்படகுகளும், அமெரிக்காவை தெரிக்கவைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
--
இப்போது நேட்டோ, உக்ரைனில் இருந்து ஏவப்பட்டஆறு அமெரிக்க ஏட்டிஏசிஎம்எஸ் ஏவுகணைகளால் ரஷ்யாவைத் தாக்கியது. ரஷ்யாவின் கொள்கை மற்றும் கோட்பாட்டின்படி, அது இப்போது உக்ரைன் மற்றும் நேட்டோ இரண்டையும் அணு ஆயுதங்களால் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இந்த நீண்டதூர ஏவுகணை தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடிகள் தருவது தொடர்பான ஆலோசனைகள் விரைவில் ரசிய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யா மீது உக்ரைன் குண்டு வீசுவதற்கு, பைடன் ஒப்புதல் அளித்ததற்கு பதிலடியாக, இருபத்தைந்தாவது திருத்தத்தின் கீழ், பைடனை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அமெரிக்க தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். டொனால்ட் ட்ரம்பிடம் ஒப்படைக்கப்படும் ஆட்சி, ட்ரம்புக்கு பெரிய தலைவலியாக இருக்க வேண்டும் என்னும் நோக்குடனேயே இதுபோன்ற காரியங்கள் அரங்கேறுகின்றன என்றும் கூறப்படுகிறது.
---
நீண்டதூர ஏவுகணைகளைக்கொண்டு ரஷ்யாவைத்தாக்க பைடன் அனுமதி அளித்ததும், அதைத்தொடர்ந்து உக்ரைன் ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்தியதும், அதைத்தொடர்ந்து ரஷ்யா நடக்கவிருக்கும் எதிர் வினை தொடர்பான அச்சம், நாட்டோ நாடுகளிடம் மேலோங்கி இருக்கும் நிலையில், ரஷ்யாவிற்குள் நடக்கும் தாக்குதல்களை ஆதரிக்கவில்லை என்று இத்தாலி கூறியுள்ளது.
ரஷ்யாவிற்குள் உக்ரைன் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் அமெரிக்க அதிபர் பைடனின் முடிவை, இத்தாலி ஆதரிக்கவில்லை என்று, இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.
மோதலின் விரிவாக்கம் குறித்து, இத்தாலி எச்சரிக்கையான அணுகுமுறையைப் பேணுவதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது என்றும். மெலோனியின் நிலைப்பாடு, நேரடி இராணுவ மோதலைக் காட்டிலும், பிற வழிகளில் அமைதியை ஊக்குவிக்கும் பரந்த மூலோபாயத்தை பிரதிபலிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும் அதிக செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம், தொடர்ந்து இணைந்திருங்கள். எமது நுன்னுரை பதிப்புகளை subscribe செய்துகொள்ளுங்கள். பெல் பட்டனையும் அழுத்தி வையுங்கள். நன்றி .
---
No comments:
Post a Comment