Wednesday, 20 November 2024

மொசாத்தின் டிஜிட்டல் கோட்டையை தகர்த்த ஈரான் | இஸ்ரேலிய கப்பலை கப்பலை கைப...


மொசாத்தின் டிஜிட்டல் கோட்டையை ஈரான் தகர்த்த ஈரான்.

உக்ரைனில் தூதரகங்களை மூடிய அமெரிக்கா, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி. 

துருக்கி வான்பரப்பில் நெதன்யாஹு நுழைய அனுமதி மறுத்த எர்டோகன்.

சற்றுமுன் இஸ்ரேலிய கப்பலை கப்பலை கைப்பற்றிய ஏமன் படைகள்.
---
ஈரான் வெற்றிகரமாக மொசாட்டின் எஸ் எஸ் வி பிளாக்செயின் நெட்வொர்க்கை ஹேக் செய்து, எட்டு Terabyte அளவிலான வகைப்படுத்தப்பட்ட தகவல்களை ஹேக்  செய்துள்ளது. 

மொசாத்தின் டிஜிட்டல் கோட்டையை ஈரான் தகர்த்தது. எட்டு Terabyte வகைப்படுத்தப்பட்ட தரவானது,  நாம்தான் பெரியவர் என்று கொக்கரித்துக் கொண்டிருந்த மொசாத்துக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.

இவ்வாரு  தகவல்களை ஹேக் செய்வதும், உச்சத்தில் உள்ள ஒரு வகையான சைபர் போராகும். மொசாட்டின் பிளாக்செயின் நெட்வொர்க்கை ஈரான் வெற்றிகரமாக மீறியது, மொசாத்துக்கும், மற்றவர்களுக்கும் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது. அந்த செய்தியானது, எந்த அமைப்பும் பாதுகாப்பானது அல்ல என்பதைக் குறிக்கிறது.

இந்த சம்பவம்  ஒரு ஹேக் மட்டுமல்ல, இது உளவுத்துறை விளையாட்டில் ஒரு பெரிய  நில அதிர்வு  மாற்றம். மொசாத் உட்பட யாரும்,  எட்டமுடியாத உயரத்தில் உள்ளவர்கள்  அல்ல என்பதை ஈரான் நிரூபித்ததாகக் கூறப்படுகிறது..
---
அமெரிக்கா, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள், ஒரு பெரிய ரஷ்ய தாக்குதலை எதிர்பார்த்து, உக்ரைனில் உள்ள தங்கள் தூதரகங்களை மூடியுள்ளன.  அவசரகதியில் ரஷ்யாவைத் தாக்க பைடன் கொடுத்த அனுமதியை நிராகரித்த இத்தாலி, ரஷ்யாவின்மீது நடத்தப்படும் தாக்குதல்களை நாங்கள் ஏற்கவில்லை என்று  ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், உக்ரைனில் உள்ள அனைத்து A T C A M S   ஏவுகணைகளையும் தாக்கி அளிக்க, புடின் ஆணை பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மிதமாக இருந்த ரஷ்யாவை தூண்டிவிட்டு, உக்ரைனியர்களை சாகடிக்க அமேரிக்கா வழிவகுக்கிறது என்று பலரும்  கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
--
துருக்கி வான் எல்லைக்குள் நுழைய அனுமதி மறுத்து, நெதன்யாகுவின் விமானத்தை துருக்கி அதிபர் எர்டோகன் தடுத்துள்ளார். 

அசர்பைஜான்  தலைநகர் பாகுவில், பருவநிலை மாற்றம் தொடர்பான ஒரு மாநாட்டிற்கு செல்ல, துருக்கியின் வான்வெளியைத் திறக்க இஸ்ரேல் அதிபர் வலியுறுத்தினார், ஆனால் துருக்கி அதற்கு மறுத்துவிட்டது.

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் எந்தவொரு நாடும், தனது வான் பரப்பை, இஸ்ரேலிய  அரசியல்வாதிகள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்னும் கோரிக்கை வலுத்து வருகிறது என்று கூறப்படுகிறது.
----

சற்றுமுன் இஸ்ரேலிய கப்பலை கைப்பற்றிய ஏமன் படைகள்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான புதிய நடவடிக்கையில், ஒரு இஸ்ரேல் கப்பலை ஏமன் படைகள் கைப்பற்றியுள்ளன. 

இது ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டதாகக்  கருத்தப்படக்கூடிய U S S ஆப்ரஹாம் லிங்கன் போர்க்கப்பலை அமெரிக்கா திரும்பப் பெற்ற ஒரு நாளைக்குள், இஸ்ரேலிய கப்பல் செங்கடலில் ஹவுதிக்களால் கைப்பற்றப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
---
நேற்று  காசாவில் உடனடியான , நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தைக் கோரும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்தது. பகைமைகளை நிறுத்தி, பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பதினான்கு  வாக்குகள் கிடைத்தன, ஆனால், அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம் காரணமாக அந்த போர் நிறுத்த தீர்மானம் தடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, பல்வேறு சர்வதேச விமர்சனங்களை ஈர்த்துள்ளது, சிலர் அமெரிக்கா தொடர்ந்து வன்முறைக்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டினர்.

இந்த தீர்மானத்தில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக U K  ஆம் என்று வாக்களித்தது. மேலும், காஸாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவும் பாதுகாப்பும் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் போர் நிறுத்தப்பட நாம் தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் அறிவித்துள்ளது.

இந்தியா போர் நிறுத்தத் தீர்மானம் அமெரிக்காவால் தோற்கடிக்கப்பட்ட அதே நேரம், காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், எழுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்பது பெருத்த வேதனையாக இருக்கிறது.

---

காசா   போர் நிறுத்தத் தீர்மானத்தை வீட்டோ செய்த அமெரிக்கா 


No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...