Tuesday, 12 November 2024

கமேனிக்கு எதிராக பொங்கி எழுங்கள், ஈரான் மக்களுக்கு நெதன்யாஹு அழைப்பு | H...


கமேனிக்கு எதிராக பொங்கி எழுங்கள், ஈரான் மக்களுக்கு நெதன்யாஹு அழைப்பு.

அயர்லாந்தை இஸ்ரேல் காலனியாக மாற்றுங்கள். இஸ்ரேல் குடியேற்றவாசிகள் அழைப்பு.

ஈரான் ரசியா பணப்பரிமாற்றம் அதிகாரபூர்வமாக ஒன்றிணைப்பு.

ஹவுதிக்கள் செங்கடலில் மீண்டும் தாக்குதல்.

---

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாஹூ, ஈரானின் சுப்ரீம் லீடர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக ஈரானிய மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நெதன்யாஹூவின் இந்த இரண்டாவது ஆங்கிலப் பேச்சு   அறிக்கை தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான நெதன்யாஹூவின் முதல் அழைப்பைப் பற்றிய அறிக்கையானது,  இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு சில  வாரங்களுக்கு முன்னர் வெளிவந்தது. இந்த அழைப்பிலும் ஈரானிய அரசுக்கு எதிராக ஈரானிய மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு முன்னர், இஸ்ரேலிய மக்களுக்காக கமேனி நிகழ்த்திய உரைக்கு போட்டியாக நெதன்யாகுவின் பேச்சு இருந்தது குறிப்பிடத்தக்கது.

---

அயர்லாந்தை கைப்பற்றி இஸ்ரேலிய காலனியாக மாற்றுங்கள் என்று  இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அயர்லாந்துக்கு எதிராக தூண்டிவிடும் பிரச்சாரத்தைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தெற்கு லெபனானில் இருந்து அமைதி காக்கும் படையினரை திரும்பப் பெற மறுத்ததுடன், அயர்லாந்தினர் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை வெளிப்படையாகக் கண்டித்துள்ளனர். மேலும், இஸ்ரேல் லெபனானின் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்ந்துள்ளதாக  குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அயர்லாந்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்கு, சமூக ஊடகங்க ளை நாடியுள்ளனர். அங்கு அயர்லாந்துக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்த பதிவுகளுடன் சில கருத்துக்கள் - அயர்லாந்தை சுனாமியால் மூழ்கடிப்பது - என்ற அச்சுறுத்தல்கள் உட்பட, வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். நாம் அயர்லாந்தைக் கைப்பற்றி அதை ஒரு இஸ்ரேலிய காலனியாக மாற்ற வேண்டும் என்றும், நமக்கு எதிராக இருக்கின்ற உலகின் மிக மோசமான மக்களை அகற்றவேண்டும் என்றும் அந்த இடுகை  அழைப்பு விடுத்துள்ளது.

---

ஈரானும் ரஷ்யாவும் தங்கள் தேசிய கட்டண முறைகளின் ஒருங்கிணைப்பை அதிகாரப்பூர்வமாக முடித்துள்ளன.

தெஹ்ரானில் இன்று நடந்த விழாவில் ரஷ்யாவின் மிர் கட்டண முறை ஈரானின் ஷெடாப்புடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பின் முதல் கட்டம் ஷெடாப் தேசிய கட்டண முறை அட்டைகளை வைத்திருப்பவர்கள் அவற்றை ரஷ்ய ஏடிஎம்களில் பயன்படுத்த அனுமதிக்கும்.

இரண்டாவது கட்டத்தில், ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் ஈரானில் தங்கள் மிர் அட்டைகளைப் பயன்படுத்த முடியும். மூன்றாம் கட்டம் முடிந்ததும், ஈரானிய குடிமக்கள் ரஷ்யாவில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த தங்கள் ஷெடாப் அட்டைகளைப் பயன்படுத்த முடியும்.

-----

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்டு, பின் டொனால்ட் டிரம்ப்புக்காக போட்டியிலிருந்து விலகிய  விவேக் ராமசாமியுடன் டோஜ் ஏஜென்சியை வழிநடத்த,  பிட்காயினைப்போன்ற டோஜ்காயினின் ரசிகர் எலான் மஸ்க்கை டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.

அதிகாரத்துவத்தைக் குறைப்பதன் மூலமும், செலவுகளைக் குறைப்பதன் மூலமும், வளர்ச்சியின்றி இருக்கும்  அதிக பொறுப்புள்ள கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், அமெரிக்க அரசாங்கத்தை நெறிப்படுத்துவதையம் இந்த D O G I அதாவது  Department of Government Efficiency  என்ற நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ட்விட் செய்த எலன் மஸ்க், - நமது பாதுகாப்பு வரவு செலவு திட்டக்கணக்கு மிகவும் பிரம்மாண்டமானது. இது ஒரு டிரில்லியன் டாலர்கள் அளவில் உள்ளது. இந்த அளவானது, அமெரிக்காவின் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதமானது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை விட அதிகமாக உள்ளது. இது நல்லதற்கு அல்ல. அதனால்தான் இந்த அரசின் செயல்திறன் துறை எங்களுக்கு தேவைப்படுகிறது. இதே அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் என்று கூறியுள்ளார்.

---

கப்பல் எதிர்ப்பு கப்பல் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி அரேபிய கடலில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (சிவிஎன் -எழுபத்திரண்டு ) மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி, செங்கடலில் ஒரு ஜோடி -ஆர்லே பர்க்-வகுப்பு வழிகாட்டப்பட்ட-ஏவுகணை அழிப்பாளர்கள் ஆகிய இரண்டையும் "வெற்றிகரமாக குறிவைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக ஹவுதிக்கள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தனது பயங்கரவாத தாக்குதல்களையும், பாலஸ்தீன இன அழிப்பையம் நிறுத்தும்வரை தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என்று மேலும் அறிவித்துள்ளது. செங்கடலில் அன்ஸாருல்லாஹ் அமைப்பினர் ஏற்படுத்தியுள்ள தடைகளால் இஸ்ரேல் மிகப்பெரும் பொருளாதார இழப்பை அடைந்து வருகிறது. சவூதி அரேபியா, துருக்கி மற்றும் சில அரபு  நாடுகளின் மறைமுகமான உதவிகளுடன், இஸ்ரேல் தனது பிரச்சினைகளை ஓரளவே சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

---


No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...