அயர்ன் டோமை தூக்கி குப்பையில் போடுங்க.
ஈரானின் அதிநவீன லேசர் வான் பாதுகாப்பு சாதனம் தயார் நிலையில்.
எதிரிகளின் ஆளில்லா விமானங்கள் உட்பட, எந்த விதமான வான்வழி அச்சுறுத்தல்களையம் எதிர்கொள்ளும் திறன் கொண்ட, அதி நவீன லேசர் ஆயுதத்தை தயாரித்து நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளதாக ஈரான் கூறுகிறது. "சதேப்" என்று அழைக்கப்படும் இந்த லேசர் பீரங்கி, சக்திவாய்ந்த லேசர் கற்றைகளைப் பயன்படுத்தி, வான்வழி இலக்குகளை இலகுவாக சுட்டு வீழ்த்த முடியும் என்றும், இந்த லேசர் பாதுகாப்பு அமைப்பானது "முக்கியமான பகுதிகளை" பாதுகாக்க பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், லேசர் ஆயுத தொழில்நுட்பத்தில், ஈரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்பது உலகம் அறிந்த செய்தி. இராணுவ பயன்பாடுகளுக்காக ஈரான் பல வகையான லேசர் அமைப்புகளை உருவாக்கியுள்ளது என்று, பலவிதமான உலகளாவிய ராணுவ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன, இதில் துல்லியமான இலக்குக்கான, லேசர் வழிகாட்டப்பட்ட ஆயுதங்கள் மற்றும், வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவையம் அடங்கும். வெட்டுதல் மற்றும் வேலைப்பாடு போன்ற தொழில்துறை பயன்பாடுகளுக்கு லேசர்களைப் பயன்படுத்துவதில் உள்ள திறன்களையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், குறிப்பிட்ட செயல்பாட்டு அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்திறன் பற்றிய விவரங்கள், குறைவாகவே வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுவிட்டால், இஸ்ரேலும், அமெரிக்காவும், மற்றும் மேற்கத்திய நாடுகளும், எந்த பொந்துகளில் ஓடி ஒழிந்து, தங்களது அவமானகர முகத்தை மறைத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
ஈரானின் லேசர் ஆயுதங்களைத்தவிர, சீனா, ரஷ்யா போன்ற பெருந்தலைகளும், தங்களது நவீன வான் பாதுகாப்பு சாதனங்களை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த மாதம், அதாவது அக்டோபர் நான்காம் தேதி. மெஹ்தி எச் என்பவரின் எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு படத்தின்படி, ஈரான் ஒரு புதிய மேம்பட்ட லேசர் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த லேசர் அமைப்பு, சீனாவில் தயாரிக்கப்பட்ட, ஷென் நுங் ஷீல்ட், அதாவது தெய்வீக விவசாயி என்னும் குறியீட்டுடன் மூவாயிரம் மற்றும் ஐயாயிரம் வரிசை லேசர் பாதுகாப்பு அமைப்பாக இருக்கலாம் என்று, ஆரம்ப பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன, இது 'சைலண்ட் ஹண்டர்' என்றும் அழைக்கப்படுகிறது. குறைந்த உயர அச்சுறுத்தல்களுக்கு எதிராக, அதன் தற்காப்பு திறன்களை மேம்படுத்த, ஈரான் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை பெற்றிருக்கலாம் என்பதை இந்த பார்வை குறிக்கிறது.
ஈரான் அமைத்துள்ள இந்த வான் பாதுகாப்பு சாதனங்களில் கண்டறியப்பட்ட அமைப்பு, எல் ஏ எஸ் எஸ் எனப்படும், ஒரு குறைந்த உயர, லேசர் பாதுகாப்பு அமைப்பு ஆகும், இது ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும், பிற குறைந்த உயரத்தில் பறக்கும் பொருட்களை குறிவைத்து அழிக்கும் திறனால் வகைப்படுத்தப் படுகிறது. "சைலண்ட் ஹண்டர்" என்று அழைக்கப்படும் இந்த பாதுகாப்பு சாதனம் மின்சாரத்தால் இயங்கும், Fiber Optic லேசர் ஆயுத அமைப்பாகும். இது முப்பது முதல் நூறு கிலோவாட் வரையிலான சக்தி வெளியீட்டைக் கொண்டுள்ளது, இது பல்வேறு வரம்புகள் மற்றும் உயரங்களில் உள்ள இலக்குகளை திறம்பட ஈடுபடுத்த அனுமதிக்கிறது.
மேலும், நவீன சமச்சீரற்ற போர்முறையில், ஒரு பொதுவான அம்சமாக மாறியுள்ள அதிநவீன ட்ரோன் ஊடுருவல்களுக்கு எதிராக, அதன் வான்வெளியைப் பாதுகாப்பதற்கான ஈரானின் திறனை இது மேம்படுத்துகிறது.
ஏற்கெனவே, அமேரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் லேசர் ராணுவ தளவாடங்களை தயாரித்து வருகின்றன. இஸ்ரேலிலும், ஐயன் டோம் போல, ஐயன் பீம் என்கிற லேசர் சாதனத்தை தயாரிக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், எலி வலை போன்ற இத்தனூண்டு இடத்தில் உக்கார்ந்து கொண்டு, அளவில்லாத அளவுக்கு அட்டகாசம் செய்ய நினைக்கும். இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாட்டுத்தலைவர்களுக்கு, பாதுகாப்பு என்று நினைத்து தாங்கள் தயாரிக்கும் பாதுகாப்பு சாதனங்கள், தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுவிடும் என்பதை, தாங்கள் உணர்வதற்கு முன்னரே அழிந்துவிடுவோம் என்பதை உணராத முட்டாள்களாக இருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
சரி, மேலும் இதுபோல, மற்றொரு செய்தியில் மீண்டும் சந்திப்போம். தொடர்ந்து இணைந்திருக்க subscribe செய்து கொள்ளுங்கள். உடலையும் மனதையும் திடமாக வைத்துக்கொள்ளுங்கள், தாய் தந்தையருக்கும், எளியோருக்கும் உங்களால் ஆன உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள். நன்றி.
No comments:
Post a Comment