ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த ஈரான்...
ஈரானுக்குள் கேட்ட வெடிச்சத்தம், வான் பாதுகாப்பு சாதனங்கள் எழுப்பியதே...
இஸ்ரேல் தாக்குதலுக்குப்பின் ஈரானில் நிலை.
ஈரானிலிருந்து பிரத்தியேகச் செய்தி ...
தெஹ்ரான், குஜெஸ்தான் மற்றும், இலாம் மாகாணங்களில் உள்ள நிலைகளை குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை ஈரானின் வான் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்றும் ஈரான் கூறியுள்ளது.
இஸ்ரேலின் எந்தவொரு தாக்குதல் நடவடிக்கையையும் தவிர்ப்பதற்காக, குற்றவியல் மற்றும் சட்டவிரோத சியோனிச ஆட்சிக்கு எதிராக , இஸ்லாமிய குடியரசின் அதிகாரிகள் முன் கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், இந்த இஸ்ரேலிய போலி ஆட்சி, இன்று காலை தெஹ்ரான், குஜெஸ்தான் மற்றும் இலாம் மாகாணங்களில் உள்ள இராணுவ மையங்களின் சில பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈரானை தாக்கியது என்று ஈரானின்விமான பாதுகாப்புப் படை, இன்று சனிக்கிழமை காலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
--
ஈரான் நாட்டின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதலை வெற்றிகரமாக இடைமறித்து எதிர்கொண்டது என்று ஈரான் கூறியது.
இந்த தாக்குதல்கள், சில இடங்களில் மட்டுப்படுத்தப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியதாகவும், சம்பவத்தின் பரிமாணங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்பாக, இந்த கட்டத்தில் நான் கவனித்தது இதோ,:
இஸ்ரேலியர்கள் நிறைய ஏவுகணைகளை ஏவினர் - அனைத்தும் அதிகபட்ச ஏவக்கூடிய தூரத்தில் இருந்து ஏவப்பட்டது...
ஈரான் நிறைய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை நிறுவி வைத்துள்ளது...
சேதங்கள் தொடர்பான உறுதியான அறிக்கைகள் அல்லது வீடியோ ஆதாரங்கள் இதுவரை இல்லை என்று, வில் ஷ்ரைவர் என்கிற ஒரு நோக்கரின் அறிக்கை தெரிவிக்கிறது.
--
முன்னதாக, தெஹ்ரானுக்கு அருகிலுள்ள சிலரால் கேட்கப்பட்ட உரத்த ஒலிகள், வான் பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்துவதால் ஏற்பட்டவை என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈரானின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம், சனிக்கிழமை காலை ஒரு பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி, தலைநகரில் கேட்ட சில ஒலிகள் "தெஹ்ரானில் பாதுகாப்பு நடவடிக்கைகளால்" ஏற்பட்டவை என்று கூறியது.
உதவி தேவைப்படும் சம்பவங்கள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை என்றும், மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தின் நிலைமை "இயல்பானது" என்றும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானிய வான் பாதுகாப்பு "தெஹ்ரான் மாகாணத்தைச் சுற்றியுள்ள வான்வெளியில் எதிரி இலக்குகளை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது" என்று ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் பகிரப்பட்ட காட்சிகள் ஈரானிய தலைநகர் மீது இடைமறிப்புகள் போல் தோன்றியதைப் படம்பிடித்தன.
--
இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையம் மற்றும், மெஹ்ராபாத் விமான நிலையத்தில் நிலைமை இயல்பானது என்று, தஸ்னிம் செய்தி நிறுவனம் சனிக்கிழமை காலை தெரிவித்துள்ளது.
தெஹ்ரானின் மேற்கு மற்றும் தென்மேற்கில் உள்ள இஸ்லாமிய புரட்சி காவலர் படை (ஐ.ஆர்.ஜி.சி) இராணுவ மையங்கள் மீது, எந்த ஏவுகணை தாக்குதலும் அல்லது தாக்கமும் ஏற்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி நிறுவனம் பெற்ற தகவல்களின்படி, தெஹ்ரானின் மேற்கு அல்லது தென்மேற்கில் உள்ள I R G C இராணுவ மையங்களில் எந்த பாதிப்பும் இல்லை.
தெஹ்ரானைச் சுற்றியுள்ள மூன்று பகுதிகளில், இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தின் வான் பாதுகாப்பு தொடர்பான ஒலிகள் கேட்கப்படுகின்றன.
"முன்னர் கூறியபடி" இஸ்ரேலிய அராஜக தாக்குதல்களுக்கு பதிலளிக்க ஈரான் தயாராக இருப்பதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தஸ்னிமிடம் தெரிவித்தன.
"எந்த வடிவிலான ஆக்கிரமிப்புக்கும் பதிலளிப்பதற்கான அதன் உரிமையை, ஈரான் தக்க வைத்துக் கொண்டுள்ளது, எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும், இஸ்ரேல் தகுந்த பதிலடிகளைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவிக்கிறது.
மேலும் செய்திகள் தொடரும். subscribe செய்து கொள்ளுங்கள். நன்றி.
No comments:
Post a Comment