Friday, 1 March 2024

ஒரே பாலஸ்தீனம் முஸ்லிம்கள், யூதர்கள், கிருஸ்தவர்கள் என அனைவரும் சம உரிம...


ஒரே பாலஸ்தீனம். முஸ்லிம்கள், யூதர்கள், கிருஸ்தவர்கள் என அனைவரும் சம உரிமையுடன் வாழக்கூடிய ஒரே நாடாக பாலஸ்தீனம் மீண்டும் மலரவேண்டும். 

அடக்குமுறைக்கு அடிபணிவது அவமானம், இஸ்ரேலின் முட்டாள்தனங்கள் ஒழிக்கப்படவேண்டும். சியோனிஸ்டுகள் ஆட்சி செய்யும் இஸ்ரேல், மனிதகுலத்திற்கு விரோதமாக செயல்படுவது மட்டுமின்றி, எந்த சர்வதேச சட்டங்களையும் மதிக்காமல், இந்த உலகத்தையே கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி,  பயங்கரவாத புத்தி பேதலிப்பும், இனவெறி என்னும் விஷமும் தலைக்கேறி, இந்த உலகம் முழுதும் பரந்து வாழும், பலகோடி மக்களையும், அவர்களின் அரசாங்கங்களும், தனக்கு அடிமையானவர்கள் என்று கொக்கரித்துத் திரியும், சிறு பயங்கரவாத கும்பலுக்கு அடிபணிவது, இந்த உலகம் முழுதும் உள்ள, மேன்மையான மனிதகுலம், சிறுமையான, புத்தி பேதலித்து வாழும் மூடர்களின் காலடியில் வீழ்ந்து கிடப்பதற்கு வழிவகுக்கும். 

இஸ்லாம் எதனால் உருவானது, அதன் கோற்பாடு என்ன? எத்தகைய கொடுமைகளையும், அநியாயங்களையும், அடக்குமுறைகளையும், அவமானங்களையும், பேரழிவுகளையம் தாண்டி இஸ்லாம் வளர்ந்து நின்றது. சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமநீதியையும், வறியவர்களை மேன்மைப்படுத்தி, சமதர்மத்தை வென்றெடுத்த இஸ்லாம் இன்று, இனவெறியின் உச்சகட்ட ஊசலாட்டத்தில் இருக்கும், ஒரு சிறு மூர்க்கத்தனமான காட்டுமிராண்டி கும்பலுக்கு பயந்து, மனித நேயத்தை அடகு வைப்பது எந்த வகையில் நாகரீகமானது. 

இஸ்ரேலின் இந்த அட்டூழியங்களை அனுமதிப்பது, இந்த நவீன உலகத்தை, கி.பி.ஐநூறுக்கு முன்னிருந்த காலத்தை நோக்கி இட்டுச்செல்லும். அதாவது நாம் வாழும் இந்த நிகழ்காலத்தை விட்டு, ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு பின்னோக்கி சென்றுவிடுவோம். இருநாடுகள் தீர்வும், அதில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி, பல பொய்களையும், படுகொலைகளையும், நிலங்களைத்திருடி, மிரட்டி, நிலமோசடிகளில் ஈடுபடும் மாஃபியாக்களிடம், ஆட்சியை, அரசாங்கத்தை ஒப்படைப்பது, எந்த வகையில் அமைதியை இந்த உலகில் ஏற்படுத்தும்?  கொடுங்கோல் புரிந்த அரசர்களையும், அரசங்களையும் ஒழித்து, நல்லவர்கள் நல்லாட்சி கொடுத்ததாக, வரலாற்றில் படிக்கிறோம். குழந்தைகளுக்கு, நன்னெறி படிப்பிணைகளுக்காக இது போன்ற, தீயவர்களை ஒழித்து, நல்லவர்களை, வறியவர்களை வாழவைக்க வேண்டும். அதற்க்கு, மனிதநேயம் வளர்க்கவேண்டும், அறிவை வளர்க்க வேண்டும், வீரம் வளர்க்க வேண்டும், விவேகம் வளர்க்க வேண்டும் என்றெல்லாம் கற்றுத் தருகிறோம்.  ஆனால் இன்று, ஒரு மூர்க்கன் பலசாலியாக இருக்கிறான் என்பதற்காக, ஒரு மிகப்பெரிய நிலபரப்பை மிரட்டி, ஏமாற்றி பிடுங்கி வைத்துக்கொண்டு, அளவற்ற கொலை கொள்ளைகள் புரிந்து, நாங்கள்தான் ஆட்சியாளர்கள், நாங்கள்தான் கடவுள் தேர்ந்தெடுத்த பிள்ளைகள், சர்வதேச சட்டங்களெல்லாம்  எல்லாம் எங்களிடம் செல்லாது, எங்கள் சட்டத்தைத்தான் சர்வதேசங்களும் மதித்து, கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இஸ்லாமிய உலகம் பெருமையுடன் போற்றும் அரபுநாடுகள், இன்று இந்த சியோனிஸ்டுகளின்  அடிவருடிகளாக, அவர்களை பின்தொடரும் நிழல்களாக,  மார்க்கம் மறந்து, சுயமரியாதையைத் துறந்து, வலிமை குன்றி, பெருமையைப் பறிகொடுத்து, மரபை மதியாது, திருமறையைப்பேணாது, போலி நாகரீகத்தின் மேல்பூச்சிலே மயங்கி,  பண்புகள் பிறழ, அறத்திலே பிடிப்பிழந்து, ஆண்மை குலைந்து, நம்பிக்கையை தவறவிட்டு, பதவி மோகத்தால் கவரப்பட்டு, பெட்ரோல் பணத்தில் திளைத்து. திருமறையைத் துழைத்து, மார்க்க நெறிகளைக் குலைத்து, மேற்கத்திய வாழ்வியலை வளைத்து, காஃபிரே பாதுகாப்பென அழைத்து, பதவி மோகத்துடனும், தமது அரச பரம்பரை, ஆண்டாண்டுகாலம் ஆட்சி செய்து அமோகமாக வாழ வேண்டும் என்னும் பேராசையே இன்று இஸ்லாமியர்களுக்கு பெரு நஷ்டமாக அமைகிறது என்பது, எங்கள் போன்ற பலரின் கண்ணோட்டமாக இருக்கிறது. உலகம் முழுவதும், சமத்துவத்தையும், மனித நேயத்தையும் ஏற்பவர்கள், முஸ்லிமாக இல்லாத போதும், இஸ்லாத்தின் கோட்பாடுகளின் பக்கம் நிற்கிறார்கள். குரல் கொடுக்கிறார்கள். இன்று பயங்கரவாதிகளுக்கெதிராக, அரசாங்க ரீதியாக நடவடிக்கை எடுக்கின்ற பல நாடுகளைப் பார்க்கிறோம். ஆனால், எந்த அரபு நாடு இஸ்ரேலுக்கு எதிராக, அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக ஒரு சிறு துரும்பையாவது நகர்த்தியது என்று உங்களால் கூற முடியுமா, சிந்தியுங்கள். 

எனவே இருநாடுகள் என்பது ஏமாற்றுவேலை.  ஆனால் ஒரே பாலஸ்தீன நாடு. அங்கே, எல்லா இன, மத, மொழியைச்சார்ந்தவர்கள் சம அந்தஸ்துடன் வாழவேண்டும் என்ற ஒரே நாடு கொள்கைதான் சரியான, வரலாற்றுப் பிழையற்ற, அறிவார்ந்த, சமஉரிமை சார்ந்த, நவ நாகரீகமான, மேன்மையடைந்த மனிதனின் தீர்வாக இருக்க முடியும். இந்த குழப்பமான கால கட்டத்தில், எங்கேயே ஏதோ பிரச்சினை நடக்கிறது, நமக்கென்ன என்று, சும்மாவாக,  செய்திகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்காமல், உங்கள் அறிவார்ந்த கருத்துக்களை, இந்த காணொலியைக் கேட்கின்ற அனைவரும் பதிவிடவும். அது உங்கள் எண்ணங்களையும், உங்கள் சிந்தனைகளில் தோன்றுகின்ற மேன்மைகளையும், அறிவு சார்ந்த, மனிதநேயம் சார்ந்த, நாகரிகம் சார்ந்த உங்கள் நிலைப்பாடுகளில், உங்களின் கண்ணியத்தை வெளிப்படுத்தும்.  

இனி மற்ற செய்தித்துளிகளை சற்று பார்ப்போம். அதற்க்கு முன், எங்கள் ச்சேனலை subscribe செய்யாத அனைவரும் subscribe செய்து கொள்ளுங்கள், subscription மிகவும் குறைவாக இருப்பதால், அடிக்கடி காணொளிகளை வெளியிட முடிவதில்லை. எமது channel monitize ஆனாலும், இதுவரையிலும் ஒரு நயா பைசா கூட வருமானம் ஈட்டித்தரவில்லை.  எங்களது நோக்கம் இந்த channelலில் இருந்து பணம் சம்பாதிப்பது அல்ல, நமது செய்திகளும், கருத்துக்களும் நிறைய பேர்களை சென்றடைகிறது, சிந்திக்கவைக்கிறது என்பதற்காகவே அதிக subscriptionகளையும், கமெண்டுகளையும் எதிர் பார்க்கிறோம்.

காஸாவில் உணவுக்காக காத்திருந்த அப்பாவிகள்,  நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்ற இஸ்ரேலிய ராணுவ கொலைகாரர்கள். மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயம். 

ஸ்கை நியூஸ் உடனான ஒரு நேர்காணலின் போது, ஒரு இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர், வடக்கு காசாவில் இஸ்ரேலிய படுகொலை குறித்து பேசினார், அங்கு  நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் உணவு வாகனங்களுக்காக காத்திருந்தபோது காயமடைந்தனர். இஸ்ரேலிய படைகள் அவர்களை "தவறுதலாக" சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறிய செய்தித் தொடர்பாளர், அப்பகுதியை "போர் மண்டலம்" என்று விவரித்ததை தொடர்ந்து, தாங்கள் எந்த அளவுக்கு மனிதகுல விரோதிகள் என்பதை, இஸ்ரேலிய பயங்கரவாதிகள் இந்த உலகத்திற்கு உணர்த்தியுள்ளனர்.

சியோனிசமும், இனவெறி  மேலாதிக்கமும் முடிவுக்கு வர வேண்டும்.  எந்த இனமோ அல்லது மக்களோ சர்வதேச சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சம உரிமை கொண்ட ஒரே மாநிலத் தீர்வு. சியோனிஸ்டுகளிடமிருந்து ஆட்சி பறிக்கப்பட்டு,  உண்மையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாலஸ்தீன  நாட்டில், முஸ்லிம்கள், யூதர்கள், கிருஸ்தவர்கள் என அனைவரும் சம உரிமையுடன் வாழக்கூடிய ஒரே நாடாக பாலஸ்தீனம் உருவாக வேண்டும். 

நெதன்யாகு, பயங்கரவாதிகளின் தலைவன், காஸாவில் நடக்கின்ற போரால், 'உணர்ச்சி ரீதியாக நொறுங்கி, மோசமான இடத்தில்' இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மோசக்கார பேர்வழி, இன வெறியின் உச்சக்கட்டத்தில், உலகில் உள்ள அனைத்து மாஃபியா, திருட்டு கும்பலின் தலைவனாக, உலகில் நடக்கும் அனைத்து underground பயங்கரவாதிகளின் தாதாவாக, பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தி, அப்பாவி மக்களை கொன்று குவித்தும், குழந்தைகளைக்கொன்று அவர்களைத் தீவிரவாதிகள் என்று கூறியும், குழந்தைகளின் பொம்மைகளைக்கைப்பற்றி, அவைகளை பேரழிவு ஆயுதங்கள் என்று கூறித்திரிவதும், மனவியாதியின் உச்சக்கட்டத்தில் இருக்கும் ஒரு மனநோயாளியின்  செயல் என்பதில் சந்தேகம் ஏதேனும் உண்டோ?

I C J கோர்ட்டில் ஜெர்மனியை கோர்த்துவிடும்  நிகரகுவா. காசாவில் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதில், ஜேர்மனி உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டி, நிகரகுவா நாடு,  ஐ சி ஜே சர்வதேச நீதிமன்றத்தில்,  ஒரு முறையான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

ஜெர்மனி கடந்த ஆண்டு, இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை, பத்து மடங்கு அதிகரித்தது. அக்டோபர் ஏழுக்குப் பிறகு வழங்கப்பட்ட இருநூற்றுப் பதினெட்டு  உரிமங்களில் நூற்று எண்பத்தைந்து உரிமங்கள் இஸ்ரேலுக்கானது. இந்த நிலையில்தான், நிகரகுவா ஜெர்மனியை ஐ சி ஜே விடம் கோர்த்துவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீன இன அழிப்பு சம்பவத்தில், உலகளாவிய அளவில், அரேபியர்களின் மீது தொடர்ந்து  பெருகிவரும் அதிருப்தியின் காரணமாக,   ஏமனில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த, தனது வான்வெளியை பயன்படுத்த கூட்டணி நாடுகளுக்கு அனுமதி அளிக்க சவுதி அரேபியா மறுத்துள்ளது.

இதுநாள் வரையில் அமெரிக்க எமென்மீது போர்க்கப்பலில் இருந்தே தாக்குதல் நடத்தி வந்தன.  இது அமெரிக்காவுக்கு மிகமிக ஆபத்தானதும், மிகமிக அதிகமான செலவை உண்டாக்கக்கூடிய, பயனற்ற தாக்குதல்களாக இருக்கும் நிலையில், தரையில் இருந்து தாக்க வசதியாக, சவூதியிடம் அனுமதி கேட்டிருக்கலாம் என்றும், அதை சவூதி மறுத்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.  சவூதியையும் ஏமனையும் மீண்டும் கோர்த்துவிட்டு, குளிர்காய அமேரிக்கா நினைத்தால், அது இந்த முறை நடக்காது என்றே தெரிகிறது. ஏனென்றால் யேமெனின் பின்புலத்தில் ஈரானும், ஈரானின் பின்புலத்தில் சீனாவும், ரஷியாவும் இருப்பதும், ஈரான், சீனா, ரஷ்யாவுடன், சவுதிஅரேபியா  பிரிக்ஸ் கூட்டமைப்பில் கால் பதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...