ஏமனின் செங்கடல் முற்றுகையிலிருந்து தப்பிக்க இஸ்ரேலுக்கு உதவுவது யார்?
சிறப்புத் தொகுப்பு
ஏமனால் விதிக்கப்பட்ட செங்கடல் முற்றுகையைத் தவிர்ப்பதற்கு இஸ்ரேலுக்கு உதவுவது யார்? மத்தியக்கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளும் இஸ்லாமிய நாடுகளே. இவர்கள் ஒன்றிணைந்தால், இஸ்ரேல் என்ன, அமெரிக்காவையே தெறித்து ஓடும்படி செய்யக்கூடிய வல்லமை நிறைந்த பகுதி. மத்தியக்கிழக்கு முழுவதும் அரபியர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆட்சியையும் செய்கிறார்கள். துருக்கியும், ஈரானும் மட்டுமே விதிவிலக்கு. ஏனென்றால் இந்த இரு நாடுகள் மட்டும் அரேபிய நாடுகள் அல்ல. ஆனால், பாலஸ்தீன நிலப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, ஒரு பயங்கரவாத மாஃபியா கும்பலால் இஸ்ரேல் என்று பெயர் சூட்டப்பட்டு, பல படுகொலைகளை செய்யும் குண்டர்களுக்கு, மத்தியக்கிழக்கில் உதவக்கூடியவர்கள் யார்? இதில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன நாடும் அரேபிய நாடே..!
இஸ்ரேலின் இனப்படுகொலைகளை அராபியர்கள் கண்டும் காணாமல் இருக்கும் நிலையில், ஏமனைச்சேர்ந்த அன்ஸாருல்லா அமைப்பு செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களுக்கு பாப்-எல்-மண்டப் பகுதியில் தடைகளை விதித்தது. இந்தத்தடைகள், இஸ்ரேல் பயங்கரவாதிகள், காசாவில் தாக்குதல்களை நிறுத்தும்வரையில் தொடரும் என்று அறிவித்திருந்தது அனைவருக்கு தெரிந்ததே. இந்நிலையில், செங்கடல் வழியாக செல்லமுடியாத இஸ்ரேலிய கப்பல்கள், அதன் சரக்குகளை வேறு ஏதோ ஏமாற்று வேலைகள் செய்து இஸ்ரேலுக்குள் கொண்டுசெல்லப்படுவதாக செய்திகள் வரவே, அந்த தகவல்களை சேகரித்து வெளியிட முயற்சி செய்தோம். அதன் விளைவாக கிடைத்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
காஸாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலைகளும் , அதைத்தொடர்ந்து ஏமன், சியோனிசப் பகுதிக்கு செல்லும் கப்பல்கள்மீது தாக்குதல்கள் நடத்தியதும், இந்த தாக்குதல்கள் பல மதிப்புமிக்க கப்பல் நிறுவனங்களை, முக்கியமான செங்கடல் நீர்வழிப்பாதையை தவிர்க்க கட்டாயப் படுத்தியுள்ளன, இது இஸ்ரேலிய ஆட்சியின், நிதியடிப்படியிலான இரத்த நாளங்களில் பலத்த அடியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட பல்வேறு அறிக்கைகளின்படி, இஸ்ரேல் செல்லும் சரக்குகள், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியாவின் உதவியுடன் செங்கடலைத் தவிர்த்து, ஒரு மாற்று வர்த்தக பாதையை ஏற்படுத்தியுள்ளன. நினைவு கொள்ளுங்கள், இஸ்ரேலின் கூற்றுப்படி, இஸ்ரேல் பயங்கரவாத நாட்டிற்கு உதவும் கருப்பு ஆடுகள், U A E, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா.
இஸ்ரேலின் சேனல் Thirteenஆல் ஒளிபரப்பப்பட்ட ஒரு சமீபத்திய அறிக்கை, ஒரு புதிய அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது, கப்பல்கள் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயிலிருந்து புறப்பட்டு, சவுதி அரேபியா மற்றும் ஜோர்டானைக் கடந்து, இறுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள ஜோர்டான் பாலத்தை அடைகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்த சிக்கலான செயல்பாட்டில் இரண்டு முக்கிய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் - ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட, ப்யூர்ட்ரான்ஸ் எஃப்இசட்கோ மற்றும், டிரக்நெட் ஆகியவை, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் அதாவது இஸ்ரேலுக்கு, இந்த இரண்டு நிறுவனங்களும், லாரிகள் மற்றும் சரக்கு மூலம், பொருட்களை கொண்டு செல்ல ஒத்துழைக்கின்றன.
அரபு நாடுகளிலேயே மிகவும் ஏழ்மையுடன் இருக்கும் நாடான ஏமன், பாலஸ்தீன அரேபியர்களுக்காக செங்கடலில் தடைகளை ஏற்படுத்தி இருக்க, பணபோதையில் மிதந்து கொண்டிருக்கும் பணக்கார அரபு நாடுகளோ, தங்களது சகோதரிகளையும், குழந்தைகளையும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளுக்கு விற்றுக்கொண்டிருக்கின்றன. மன்னிக்க முடியாத துரோகங்களை இழைத்துக் கொண்டிருக்கின்றன.
எமிராட்டி மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களில் இருந்து, இஸ்ரேலிய பகுதிகளுக்கு, சரக்குகள் மற்றும் ஆயுதங்களை, தரைவழியாக கொண்டு செல்வதற்கு வசதியாக, டிரக்நெட் எண்டர்பிரைஸ் லிமிடெட் போன்ற, மென்பொருள் தொடக்க நிறுவனங்களை, இஸ்ரேல் முக்கியமான தரகர்களாக வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று, டிரக்னெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹனன் ஃப்ரிட்மேன் தெரிவித்தார்.
டிரக்நெட், ப்யூர்ட்ரான்ஸ் எஃப்இசட்கோ மற்றும், டி. பி. வேர்ல்ட் ஆகியவற்றுடன் இணைந்து, செங்கடலை தவிர்த்து, சவுதி அரேபியா மற்றும் ஜோர்டான் வழியாக, இரு-திசை வர்த்தக பாதையை நிறுவியுள்ளது என்று ஃப்ரிட்மேன், மேலும் வெளிப்படுத்தினார்.
ஜெர்மன் கப்பல் நிறுவனமான ஹப்பக் லாயிட் ஏஜி, இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, துபாயின் ஜெபல் அலியை, கிழக்கு சவுதி துறைமுகங்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, செங்கடலில், இஸ்ரேல் செல்லும் கப்பல்களுக்கு இடையூறுகள் காரணமாக, மாற்று வழிகளைப் பயன்படுத்துகிறது . அதன் மற்றொரு பகுதியான ஜெபல் அலியை ஜோர்டானுடன் இணைக்கிறது" என்று அறிக்கை மேலும் கூறியது.
இருப்பினும், இந்த நில வழிகள், வரையறுக்கப்பட்ட சரக்குகளுக்கு ஒரு தற்காலிக தீர்வாக கருதப்படுகின்றன, இதை ஹப்பக் லாயிட் ஏஜி செய்தித் தொடர்பாளர் நில்ஸ் ஹாப்ட் ஒப்புக் கொண்டார்.
இந்த வழித்தடங்கள் மெதுவானவை மற்றும், கடினமானவை என்று ஹாப்ட் வலியுறுத்தினார், ஆனால் செங்கடலில், யேமன் இராணுவத்தின் பாலஸ்தீன சார்பு நடவடிக்கைகள் தொடர்வதால், அரபு துறைமுகங்கள் வழியாக வர்த்தகத்தை அதிகரிக்க இது உதவும். ஆக, இஸ்ரேலுக்கு திருட்டுத்தனமாக உதவுவது மட்டுமின்றி, இஸ்ரேலின் சரக்கு வியாபாரமும் களைகட்டத் தொடங்குவதாக கூறுகின்றனர்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட, எஸ் அண்ட் பி குளோபல் இன்க் என்றழைக்கப்படும், சந்தை புலனாய்வு நிறுவனத்தின், கிறிஸ் ரோஜர்ஸ் கூறுகையில், "தரை பாலம், சிறிய அளவிலான சரக்குகளை சுமந்து செல்லும்போதிலும், குறிப்பாக இஸ்ரேலுக்கு, ஏற்றுமதி செய்வதற்கான ஒரு முக்கிய தீர்வாக இருக்கும்" என்று மேற்கோளிட்டுள்ளார்.
நவம்பரில் பைலட் ஓட்டங்கள், அதாவது சோதனை ஓட்டங்கள் செய்யப்பட்டு, டிசம்பரில் முதல் ஏற்றுமதிக்கு வழி வகுத்தது, இஸ்ரேலை தளமாகக்கொண்டு, அங்கிருந்து சரக்கு அனுப்புநர், மென்ட்ஃபீல்ட் லாஜிஸ்டிக்ஸும், துபாய் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களிலிருந்து பொருட்களை அனுப்புவதன் மூலம், இந்த தரை வழி வர்த்தக பாதைக்கு பங்களித்துள்ளது.
ஏமன், இஸ்ரேலிய கப்பல்களுக்கு தடை விதித்தார்களோ இல்லையோ, இவர்கள் அதற்காகவே காத்திருந்ததுபோல வியாபாரத்தை ஆரம்பித்து விட்டார்கள். அரேபியர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வியாபாரம் களை கட்டத்தொடங்கிவிட்டது. இனி இந்தத் தரைவழியில் தொடர்ந்து வியாபாரம் பெருகும் என்கிறார்கள்.
இன்னும் சிலபேர், இந்தத்தரை வழித்தொடர்பு ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல, பலகாலமாகவே ரகசியமாக நடைபெறுகிறது என்கிறார்கள்.
சானல் thirteen கருத்துப்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும் டிரக்குகள், ஜோர்டானை அடையும் வரை, நியமிக்கப்பட்ட வழிகள் வழியாக, சவுதி அரேபியாவிற்குள் நுழைந்து, இறுதியில் ஜோர்டான் நதியைக் கடக்கும் வழியாக, இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹைஃபாவுக்குச் செல்கின்றன.
டெல் அவிவ் அரசாங்கத்துடன், ரியாத்திற்கு எந்த இராஜதந்திர உறவுகளும் இல்லை என்றாலும் கூட, இந்த பொருட்கள் சவூதி அரேபியா வழியாக செல்கின்றன, இது உலகெங்கிலும் உள்ள பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரகர்களிடமிருந்து, கோபத்தையும் சீற்றத்தையும் ஈர்த்துள்ளது. இந்த அரபியர்கள் உலக முஸ்லிம்களையும், மனிதநேய நல்லபிமானிகளிடம், நல்லவர்கள் போல நடித்து, முகங்களில் நன்றாகக் கறியைப்பூசி வைக்கிறார்கள். திருடன் என்று தெரியாத வரையில் நல்லவன், தெரிந்துவிட்டால், ஆம்.. திருடன், இப்போது என்ன அதற்க்கு என்று, சினிமாவில் பேசுகின்ற வசனம்போலவே இருக்கிறது அல்லவா?
சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வரும் கப்பல்கள், பஹ்ரைன் மற்றும் துபாய் துறைமுகங்களில் கொள்கலன்களை இறக்குகின்றன, பின்னர் சரக்குகள் ஜோர்டானிய டிரக்குகளில் ஏற்றப்பட்டு, ஜோர்டானுடனான கிங் ஹுசைன் எல்லை வழியாக இஸ்ரேலுக்கு தரைவழியாக மாற்றப்படுகின்றன, அங்கு இஸ்ரேலிய டிரக்குகள் பொருட்களுக்காக காத்திருக்கின்றன" என்று மென்ட்ஃபீல்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஓமர் இஜாரி கூறினார்.
இதுபோன்ற செயல்களெல்லாம், அங்குள்ள மக்களுக்குத் தெரியாமல் இருக்குமா? தெரிந்தாலும் சும்மாதான் இருப்பார்களா? என்ன நடக்கிறது அரேபிய நாடுகளில், உண்மையில் இந்த அராபியர்கள் என்பவர்கள் யார்? இவர்கள் முஸ்லீம்கள்தானா? இல்லை உலக மக்களை ஏமாற்றுகிறீர்களா? இப்படி அடுக்கடுக்காக பல கேள்விகள் எழுகிறதல்லவா?
இந்தியாவை விடுங்கள். சீனாவைப்பாருங்கள். அதன் வியாபாரப் பொருள்களும் இந்த வழியாகத்தான் செல்கிறதாம். உங்களுக்கு நினைவிருக்கிறதா? சீனாவின் அலிபாபா வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் நீக்கப்பட்டுவிட்டது என்னும் செய்திகள் வந்தன. இப்போது அதே சீனப்பொருள்கள் மறைமுகமாக விற்கப்படுகின்றன என்றால் இதற்கு என்ன அர்த்தம்? உங்களுக்கு ஏதாவது புரிந்தால் கமெண்ட் பண்ணுங்கள்.
சரி, விட்ட இடத்திற்கு மீண்டும் வருவோம்.
சவுதி அரேபியா வழியாக கொண்டு செல்லப்படும், இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் பொருட்கள், இஸ்ரேலிய பொருட்களாக கண்காணிக்கப்படாமல் இருப்பதை, இந்த சேவை உறுதி செய்கிறது என்று, மென்ட்ஃபீல்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஓமர் இஜாரி மேலும் கூறினார்.
நாங்கள் வழங்கும் சேவையில், பொருட்கள் இஸ்ரேலுக்கு செல்கின்றன., ஆனால் அவை இஸ்ரேலுக்கு சாதாரண போக்குவரத்து வழியாக செல்கின்றன, மேலும், அது இஸ்ரேலிய பொருட்களாக தெரியப்படுத்தப்படுவதோ அல்லது கண்காணிக்கப்படுவதோ இல்லை" என்று இஷாரி கூறினார்.
இஸ்ரேலிய ஆட்சி, பாதைகளை பன்முகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவில் இருந்து, அபுதாபி வழியாக, சரக்குகளை தரைவழியாக மாற்றுவதற்கான திட்டங்களை உருவாக்கி வருகிறது, இது கப்பல் நேரங்களைக் குறைக்கிறது என்று, இஸ்ரேலிய போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அமைச்சர் மிரி ரெகேவ் ஜனவரியில் அறிவித்தார்.
இருப்பினும், கடந்த வாரம், இந்தியாவின் முன்னணி கடல்சார் ஒன்றியம், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியங்களுக்கு செல்லும் ஆயுத சரக்குகளை ஏற்றவோ அல்லது இறக்கவோ மாட்டோம் என்று கூறியது. இதுவெல்லாம் உண்மையா அல்லது கண்துடைப்பா யாருக்குத் தெரியும்?
இந்திய தொழிற்சங்கங்களின் ஒரு பகுதியான, துறைமுகத் தொழிலாளர்கள், எப்போதும் போருக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற அப்பாவி மக்களைக் கொல்வதற்கு எதிராகவும் நிற்பார்கள்" என்று, பதினோரு முக்கிய இந்திய துறைமுகங்களில், மூவாயிரத்து ஐநூறு தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும், இந்திய நீர் போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு கூறியது.
இதற்கிடையில், இஸ்ரேலிய ஆட்சியுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு எதிராக யேமன் இராணுவம் தனது நடவடிக்கைகளை தொடர்கிறது.
கடந்த மாதம் பல முறை ஏமன் மீது குண்டு வீசிய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு சொந்தமான கப்பல்களைத் தவிர, பல கப்பல்கள் தங்கள் அடையாள அமைப்புகளில் "இஸ்ரேலுடன் எந்த தொடர்பும் இல்லை" என்பதை ஒளிபரப்புவதன் மூலம் பாதுகாப்பாக செங்கடலை கடந்துள்ளன என்று யேமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்களது ஆதரவிற்கு நன்றி. மேலும் பல முக்கிய செய்திகளை அடுத்தடுத்த கானொளிகளில் காண்போம். நன்றி.
No comments:
Post a Comment