Friday, 8 March 2024

இஸ்ரேலுக்காக அமெரிக்கா பின்னும் சதிவலை | காசாப்பகுதியில் அமைக்கும் துறை...


இஸ்ரேலுக்காக அமெரிக்கா பின்னும் சதிவலை. காசாப்பகுதியில்  அமைக்கும்  துறைமுகம். 

கான் யூனிஸ் நகர மையப்பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியதா?

காசா மனிதாபிமான உதவிகளை, பேரம் பேசும் பொருளாக, இஸ்ரேல் பயன்படுத்தக் கூடாது என்று பைடன் கூறுகிறார்.

இந்த இஸ்ரேல், ஒரு பயங்கரவாத காட்டுமிராண்டி கூட்டம் என்பது எல்லாத்துக்கும் தெரியும், ஆனால் இவங்க, இவங்களோட எதிரியான, ஹமாச ஒன்னும் பண்ண முடியல. ஹமாஸ் கிட்ட போய் போய் நல்லா அடி வாங்குறாங்க, ஆனா, அப்பாவி மக்களையும் குழந்தைகளையும்  அநியாயமா கொன்னு, அதுதான் வெற்றி அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க.  இப்போ, காசால இருக்குற அப்பாவி மக்கள் உணவு இல்லாமல் தவிச்சிட்டு இருக்காங்க.  இதுக்கு  காரணமான  இஸ்ரேல் கொள்ளை கொள்ளைக்கூட்டத்த சேர்ந்த ரவுடிங்க,  அவங்களுக்கு சேர வேண்டிய உணவுப் பொருள தடுத்து, அந்த மக்கள் பட்டினியால சாகாமல் இருக்கணும் அப்படின்னா, ஹமாஸ் சரணடையனும், இல்லைன்னா நாங்க சொல்லுற மாதிரி  போர் நிறுத்த ;ஒப்பந்தத்துல கையெழுத்து போடணும், அப்படீன்னு பிளாக் மெயில் பண்றங்க. மக்கள் உணவில்லாமல் சாகிறது வேற, ஒரு ராணுவ சம்பந்தமான ஒரு அக்ரிமெண்ட் போடுறது வேற, இதையும் அதையும் முடிச்சு போறது தப்பு. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது, அப்படின்னு பொதுவா ஒரு பழமொழி சொல்லுவாங்க அதுதான் பண்ண கூடாது அப்படீன்னு பைடன் சொல்லி இருக்காரு.

பொதுவாகவே,  ஒரு முட்டாள்கிட்ட வாக்குவாதம் பண்ணக்கூடாது அப்படீன்னு சொல்லுவாங்க. அவங்க கிட்ட வாக்குவாதம் பண்ணா, கண்டிப்பா ஜெயிக்க முடியாது. ஏன்னா, இந்த  முட்டாள்கள் எந்த உண்மையையும் ஏத்துக்க  மாட்டாங்க.  அதனால முட்டாள்களோட வாக்குவாதம் பண்ற அந்த புத்திசாலிக்கு எந்த மரியாதையும் கிடைக்கப்போவதில்லை, அப்படிங்கற ஒரு தத்துவத்தை, காலம் காலமா சொல்லிட்டு இருக்காங்கல்.  இந்த இஸ்ரேல் ஒரு முழு முட்டாள். அந்த முட்டாளோட பேரம் பேசுறதனாலயோ,  ஆர்கியூ  பண்ணுறதுனாலயோ எந்த பிரயோஜனமும் கிடையாது. அவங்க அப்படித்தான்  கேவலமாக நடந்துக்குவாங்க. யாரையும்  மதிக்க மாட்டாங்க யார் சொல்றதையும் கேட்கவும் மாட்டாங்க. தாங்கள்தான் உலகத்தில் பெரியவங்க. நாங்க சொல்றததான் உலகத்துல இருக்குற எல்லாருமே கேட்கணும்னு நினைக்கிறாங்க. இவ ங்களோட  மொத்த மக்கள்தொகையே, உலகம் பூரா சேத்துனாலும், ஒரு கோடி தேராது.  இந்த ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் இனவெறியோட  திரியறப்போ,  இருநூறு  கோடி முஸ்லிம்கள் இன வெறியோட கிளர்ந்து எழுந்தாங்க அப்படின்னா, இவங்க எல்லாம் எத்தனை நாளைக்கு உலகத்துல இருப்பாங்க?  இது தெரியாம இவங்க ரொம்ப ஆடிட்டு இருக்காங்க. இந்த ஆட்டம் கண்டிப்பா ஒரு நாள் அவங்களையே காலி பண்ணிடும் அப்படின்னு நம்புவோம். 

காசாவில் உள்ள தெற்கு நகரமான, கான் யூனிஸின் மையப்பகுதியில் இருந்து, இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ளதாக, Associated File Press  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏ.எஃப்.பி நிருபர் ஒருவர் கூறுகையில், மையத்திலிருந்து படைகள் வெளியேறிய பின்னர், டஜன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை ஆய்வு செய்ய சென்றனர் என்று கூறுகிறது. 

படைகளை திரும்பப் பெறுவதை உறுதிப்படுத்தும் பொது அறிக்கை எதுவும், இராணுவத்திடம் இருந்து வெளியாகவில்லை, மேலும் உறுதிப்படுத்தலுக்கான அதன் கோரிக்கைக்கு, இராணுவம் இன்னும் பதிலளிக்கவில்லை என்று ஏ.எஃப்.பி தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பயங்கரவாதா ராணுவம், கடந்த பல வாரங்களாக, அந்நகரில் பெரிய அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இஸ்ரேல் எவ்வளவு படுகொலைகளைச் செய்தாலும், எவ்வளவு கட்டிடங்களை தரைமட்டமாக்கினாலும், காசா மக்கள் நம்பிக்கை இழக்காமல், உணவுக்கும் மருந்துக்கும் போராடி வருகிறார்கள். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதைப்போல, மேற்கத்தியர்கள், ஆளாளுக்கு  அறிக்கைகள் விடுவதில் குறியாக இருக்கிறார்கள்.களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டிய அராபியர்கள், பத்ருப் போர்க்களத்தைக்கண்ட மாவீரர்களின் சந்ததிகள், வீர தீர பராக்கிரமங்களை நிலைநாட்டிய புலிகள், இன்று  பல் பிடுங்கப்பட்ட எலிகளாக, சியோனிஸ்டுகளுக்குப் பின்னால் மறைந்து நின்று  வேடிக்கை பார்க்கிறார்கள். 

இவ்வளவு அழிவை ஏற்படுத்திய பின்னும், இஸ்ரேலின் உண்மையான எதிரிகளான ஹமாசை, இவர்களால் தொட்டுக்கூடப்பார்க்க முடியவில்லை. அதாவது அப்பாவிகள் மீதும், சாமானியர்கள் மீதும் பேரழிவை ஏற்படுத்தி, கொடூரமானவர்கள், பொய்யர்கள் மற்றும் கோழைகள் என்கிற தங்களது உண்மையான சொரூபத்தை வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்துள்ளார்கள்.  ஆனால், தங்களது திறமையையும், வீரத்தையும் நிலைநாட்டுவதில், பத்து சதவீதமாவது வென்றார்களா என்பது கேள்விக்குறியே.  ஆக, இஸ்ரேல் கால் பதிக்க முடியாத காசாப்பகுதியில்,  மனிதாமான உதவிகள் என்னும் பெயரில், ஒரு துறைமுகத்தை அமைக்க முயற்சி நடக்கிறது. இந்த அமேரிக்கா கால் ஊன்ற  நடக்கும் முயற்சியா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு துறைமுகம் நிறுவப்பட்டால், அது கண்டிப்பாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் சந்தேகமில்லை. ஏனென்றால், அந்த துறைமுகம் உருவாக்கப்படுவதே இஸ்ரேலுக்காகத்தான்.  காரணம்  மட்டும் மனிதாபிமான உதவிகளுக்காக என்று.  யோசித்துப்பாருங்கள், ஒரு துறைமுகத்தையே உருவாக்க நினைக்கும் அமேரிக்கா, ஆண்மையும், தைரியமும் இருந்தால், இஸ்ரேலை எச்சரிக்கட்டும், இஸ்ரேலிய பயங்கரவாத ராணுவத்துக்கு பாலஸ்தீனப்பகுதிகளில் தடை விதிக்கட்டும். போர் விமானங்கள் பறக்க தடை விதிக்கட்டும், முதல் கட்டமாக ஒரு லட்சம் வீடுகளையும், இரண்டாயிரம் மருத்துவமனைகளையும், ஆயிரம் பள்ளிக்கூடங்களையம் போர்க்கால அடிப்படையில் விரைவாக  கட்ட ஏற்பாடு செய்யட்டும்.  எல்லாம் வேடதாரிகள். 

இப்போதைய நிகழ்வுகளை, உலகம் தெளிவாக உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் எவ்வளவு பெரிய அயோக்கியர்கள் என்று. எப்படிப்பட்ட பொய்யும், புரட்டும், காட்டுமிராண்டித்தனமும், இவர்கள்  ரத்தத்தில் ஊறியிருக்கிறதென்று. இவர்களை ஆதரிப்பவர்கள் எப்படிப்பட்ட கயவர்கள் என்று.  இந்தப்போர் ஓய்ந்தபின், உலகில் மிகப்பல மாற்றங்கள் நிகழப்போகின்றன. புவிசார் அரசியலை புரட்டிப்போடும் திடமான அரசியல் மாற்றங்களுக்கு, இது ஒரு வரலாற்று மையப்புள்ளியாக, வரலாற்றில் பலகாலம் பேசப்படும்.  மேலும் செய்திகள் எமது அடுத்தடுத்த காணொளிகளில்.  எங்களது சேனலை subscribe செய்துகொள்ளுங்கள், நன்றி.



No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...