இன்றைய பரபரப்பு உலகச்செய்திகளின் தொகுப்பு.
செய்த்தித் தொகுப்புகளில் இன்னும் பல.. இஸ்ரேலைத்தாக்கிய ஹிஸ்பொல்லாஹ்
பணயக் கைதிகளுக்கு, மருந்து ஏற்றிச் சென்ற கத்தார் விமானம், எகிப்தில் தரையிறங்கியது; காசாவில், இரண்டு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ், மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான, கத்தார் மத்தியஸ்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய பணயக்கைதிகள், மற்றும் காசா பொதுமக்களுக்கு, மருந்து மற்றும் உதவிகளை ஏற்றிச் சென்ற கத்தார் விமானம், எகிப்தில் உள்ள அரிஷ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. காசாவில் உள்ள பணயக் கைதிகளுக்கு மருந்துகள் அடையும்போது, மற்ற நோயாளிகளுக்கும் தேவைப்படும் மருந்துகளை அனுமதிக்கும் உடன்பாடு இஸ்ரேல் நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொண்டு செல்லப்பட்ட மருந்துகளில், ஆஸ்துமா, நீரிழிவு, சிறுநீரக நோய், இதய நோய் போன்றவற்றுக்கான மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் பிணைய கைதிகளுக்கு போய் சேருமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
ஈராக்கில் தாக்குதல் நடத்திய, ஈரானின் 'அத்துமீறல்' குறித்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், ஈராக் புகார் அளித்துள்ளது இதுகுறித்து, ஈராக் வெளியுறவு அமைச்சகம், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் "ஆக்கிரமிப்பு" தொடர்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு எதிராக ஈராக் புகார் அளித்துள்ளது.
டெல் அவிவ் நகரில், போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை, இஸ்ரேலிய போலீசார், வலுக்கட்டாயமாக கலைத்ததுடன், போராட்டக்காரர்கள் வைத்திருந்த பதாகைகளையும் பறிமுதல் செய்தனர்.
பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில், கத்தார் அதிகாரிகளுடன், அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
பல ஐரோப்பிய நாடுகள், "அக்கறை" கொண்ட அரபு நாடுகள், மற்றும் அமெரிக்கா ஆகியவை, பாலஸ்தீனத்திற்கு மறுசீரமைப்பு நிதியை ஈர்க்க க்கூடிய, ஒரு ஒருங்கிணைந்த, பாலஸ்தீனிய அரசாங்கத்திற்கான, ஒருமித்த கருத்தை உருவாக்க முயன்று வருகின்றன என்று, நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் டாவோஸில், ஒரு பேட்டியின்போது கூறினார்.
வாஷிங்டனின் முழு ஆதரவையும் அனுபவித்து வரும் இஸ்ரேல், காசாவில் போர் என்ற பெயரில், இனப்படுகொலைகளை செய்து வரும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைவிதியுடன் "தனது தலைவிதியை முடிச்சுப் போட" வேண்டாம் என்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஈரான் எச்சரித்துள்ளது.
செவ்வாயன்று, அமெரிக்க வணிக செய்தி சேனலான, சிஎன்பிசியிடம் பேசிய ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், மேற்கு ஆசியாவில், பாதுகாப்பின்மையின் வேராகத்திகழும் இஸ்ரேலின் படுகொலைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதை விவரித்தார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த, உலகப் பொருளாதார மன்றத்தின் போது, அவர் அளித்த பேட்டியில், "அமெரிக்கா தங்கள் தலைவிதியை, நெதன்யாகுவின் தலைவிதியுடன் முடிச்சுப் போடக்கூடாது, திரு. ஜோ பைடன் அவ்வாறு செய்யக்கூடாது" என்று கூறினார்.
"இஸ்ரேலில், நெதன்யாகு போன்ற குண்டர்களுடன், பைடன் மற்றும் வெள்ளை மாளிகையின் முழு அளவிலான ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையின் வேராக மாறும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment