ரூபாய் நோட்டு, அதாவது, பணத்தாள் என்பது என்ன?
ரூபாய் நோட்டு என்பது, ஒரு மாற்றத்தக்க, காகித்தத்தில் அச்சிடப்பட்ட உறுதிமொழி பத்திரமாகும், இது, ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினருக்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த பயன்படுத்தலாம். ஒரு பணத்தாள், கேட்பவருக்கு கொடுக்கப்பட வேண்டும், மேலும், செலுத்த வேண்டிய தொகை நோட்டின் முகப்பில் தெளிவாகத் தெளிவாகத் தெரியும்படி அச்சடிக்கப்பட்டு இருக்கும். இந்த ரூபாய் நோட்டுகள், சட்டப்பூர்வ, டெண்டராகக் கருதப்படுகின்றன; நாணயங்களுடன், பணத்தாளும், பல நவீன பணத்தின் டிசைன்களுடன் பிரிண்ட் செய்யப்படுகிறது.
ரூபாய் நோட்டு "பில்" என்றும்,அல்லது "நோட்டு" என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ரூபாய் நோட்டுகள், இந்திய நாட்டில், மத்திய ரிசர்வ் வங்கியால் பிரிண்ட் செய்யப்படுகிறது. எவ்வளவு ரூபாய் நோட்டுகளெல்லாம் அச்சிடலாம் என்பதை, அரசாங்கம் முன்கூட்டியே ரிசர்வ் வங்கிக்கு தெரியப்படுத்தி விடுகிறது. புதிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் முன், அது அரசாங்கத்தால் தகுந்த முறையில் பரிசீலிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியிடம் ஆணை கோறுக்கப்படுகிறது,
இந்நிலையில்,
500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக ராமரின் படமும், செங்கோட்டைக்குப் பதிலாக ராமர் கோயிலும் இருக்கும் ரூபாய் நோட்டுகள் ஜனவரி 22 அன்று வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அயோத்தியில், ராமர் கோவில், வரும் ஜனவரி 22 அன்று திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பல அரசியல்வாதிகள் மற்றும், பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒருபுறம், ராமர் கோவில் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மறுபுறம், இதுபோன்ற தகவல்களும், சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
சோஷியல் மீடியாவில், `இப்போது 500 ரூபாய் நோட்டில், செங்கோட்டைக்குப் பதிலாக ஸ்ரீராம் மந்திர் படம் இருக்கும்.-- ஜெய் ஸ்ரீ ராம்'... `புதிய 500 ரூபாய் நோட்டு. காந்தி ஒழிந்தார், இதற்கு மேல், அவரை மகாத்மா என அழைக்கத் தேவையில்லை’ எனப், பலர் குறிப்பிட்டு வருவதைக் காண முடிகிறது.
இது வெகுஜன மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து ஆராய்கையில், இந்த 500 ரூபாய் நோட்டு மார்பிங் செய்யப்பட்ட ஒன்று. மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளது குறித்து, எந்தவித பத்திரிகை செய்திகளும், மத்திய அரசு தகவலும் இல்லை. ரிசர்வ் வங்கியின் இணையதளத்திலும், இதுபோன்ற எந்த அறிவிப்பும் இல்லை.
ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில், தற்போதுள்ள மகாத்மா காந்தியின் உருவம் பதித்த 500 ரூபாய் நோட்டு காட்டப்படுகிறது. ஆக இந்த ராமர் படமுள்ள, மார்பிங் செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டு குறித்த குழப்பம் தேவையில்லை. இந்த தகவல் தவறானது.
இருந்தபோதும், மக்களின் குழப்பத்தைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் ரிசர்வ் வங்கி, இது குறித்து விளக்கமளித்து செய்தி வெளியிடுவது நல்லது. வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பது சாலச்சிறந்தது.
இதுபோன்ற மேலும் பல தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள், கமெண்டில் உங்கள் எண்ணங்களை பதிவிடுங்கள், Subscribe செய்து கொள்ளுங்கள், நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி.
No comments:
Post a Comment