தொடர் தாக்குதல்கள் எதிரொலி. ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்க ராணுவம் திட்டம். தெஹ்ரான் மருத்துவ மையத்தில் பயங்கர தீ விபத்து. ஈரான் தலைநகர் காந்தி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று இஸ்ரேல் மீதான இனப்படுகொலை வழக்கில் I C J தீர்ப்பு.
அமெரிக்கப் படைகளை ஈராக்கிலிருந்து திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்க, ஈராக்கும் அமெரிக்காவும், முடிவு செய்துள்ளது..
அரபு நாடான ஈராக்கில் இருந்து, அமெரிக்கப் படைகளை, படிப்படியாக திரும்பப் பெறுவதற்கான கால அட்டவணையை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க, ஒரு குழுவை அமைக்க, பாக்தாத்தும் வாஷிங்டனும் ஒப்புக் கொண்டுள்ளதாக, ஈராக்கின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஈராக்கில், அமெரிக்கா தலைமையிலான இராணுவ கூட்டணியின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தை, இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடைபெற உள்ளது, என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமேரிக்கா ஈராக் ஆகிய இரு நாடுகளும், பணிக்குழுக்களை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளன., அது இறுதியில், "ஒரு குறிப்பிட்ட, மற்றும் தெளிவான காலக்கெடுவை உருவாக்க வழிவகுக்கும்... மற்றும் ஈராக் மண்ணில் அதன் (கூட்டணியின்) ஆலோசகர்களை, படிப்படியாக குறைக்கத் தொடங்க வேண்டும்," என்று அந்த அறிக்கை கூறியது.
"ஐ.எஸ் முன்வைக்கும் அச்சுறுத்தல், மற்றும் அதன் ஆபத்து", மற்றும், "ஈராக்கிய பாதுகாப்புப் படைகளின், திறன்களை வலுப்படுத்துதல்", ஆகியவற்றை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில், இந்த காலக்கெடு இருக்கும் என்று அமைச்சகம் குறிப்பிட்டது.
ஒரு அறிக்கையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், ஆகஸ்டில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற, கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையின் முடிவுகளின் அடிப்படையில், கூட்டணியின் "மாற்றம்" குறித்து விவாதிக்க, "வரவிருக்கும் நாட்களில்" சந்திப்புகள் தொடரும் என்பதை உறுதிப்படுத்தினார்.
டாவோஸில் நடந்,த உலகப் பொருளாதார மன்றத்தில், பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, ஈராக்கில், ஐ எஸ்ஸை ஒழிப்பதற்க்காக உருவாக்கப்பட்ட, "சர்வதேச ஆலோசகர்களின் பணியின் முடிவு குறித்து, ஒரு புரிதல் மற்றும் கால அட்டவணையை எட்டுவதற்கு, உடனடியாக ஒரு உரையாடலைத் தொடங்க வேண்டியது அவசியம்" என்று கூறிய,. சில நாட்களுக்குப் பிறகு, இந்த அறிக்கை வந்துள்ளது.
ஈராக்கில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் முடிவு, ஈராக்கின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரு தேவை, என்று மூத்த ஈராக்கிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, வெளியேற வேண்டும் என்று, ஈராக்கிய போராளிகள், நீண்டகாலமாக விடுத்து வரும் அழைப்புகள், ஈராக்கின் பாதுகாப்புப் படைகளின் ஒரு பகுதியான, ஈராக்கின் மக்கள் அணிதிரள்வு, அதாவது. P M U என்றழைக்கப்படுகிற Popular Mobilisation Forces என்னும் அமைப்பின் பிரிவுகள் மீது, அமெரிக்கா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, அமெரிக்க ராணுவப் படைகள் வெளியேற்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன..
ஈராக் அரசும், அமெரிக்கத் தாக்குதல்களை கண்டித்துள்ளது. பாக்தாத்தின் முக்கிய பகுதியில், ஒரு மூத்த P M U தளபதிக்கு எதிரான , சமீபத்திய தாக்குதலையும் கண்டித்துள்ளது.
ஈராக்கில் உள்ள, அமெரிக்காவிற்கு எதிரான, ஆயுதமேந்திய குழுக்களின் குடைக்குழுவான, ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு, காசாவின் போராளிகளின் எதிர்ப்பிற்கு ஆதரவாக, அமெரிக்க தளங்களின் மீது, டஜன் கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதி மீதான, இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டு வருவது மட்டுமே, மத்தியக் கிழக்கு முழுவதும் விரிவடையும் போரின் அபாயத்தை நிறுத்தும் என்று, பாக்தாத்தில் உள்ள, மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதும், இடப்பெயர்வு செய்வதும், இனப்படுகொலைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்று, ஈராக் கூறுகிறது.
இரண்டாயிரத்துப் பதிநாளில் ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய, தாயிஷ் என்னும் பயங்கரவாத குழுவை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற, சாக்குபோக்கின் கீழ் அமெரிக்கா, ஈராக்கில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ராணுவ துருப்புகளைப் பராமரித்து வருகிறது.
இரண்டாயிரத்துப் பதினேழு நவம்பரில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் (ஐ ஆர் ஜி சி) குட்ஸ் படையின் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் காசிம் சுலைமானி, முஸ்லீம் நிலங்களில் பயங்கரவாத குழுவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தபோது, ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டது.
இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டில், ஈராக்கின் நாடாளுமன்றம், அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதற்கு வாக்களித்தது. சில நாட்களுக்கு முன்பு, பாக்தாத் விமான நிலையத்திற்கு வெளியே. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட ட்ரோன் தாக்குதலில், ஜெனரல் சுலைமானி மற்றும் P எம்.யூ துணை தளபதி, அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இது போன்ற பல தாக்குதல்களை, தான் தோன்றித்தனமாக செய்து கொண்டிருந்த அமெரிக்காவை எதிர்த்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களும், பல்வேறு போராளிக்குழுக்களின் தொடர் தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டதன் காரணமாக, இந்த அமெரிக்க ராணுவ வெளியேற்றத்திற்கு தூண்டுகோள்களாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாகக் கூறப்படுவது தொடர்பாக, அதற்கு எதிராக "இடைக்கால நடவடிக்கைகள்" எடுக்க வேண்டும், என்ற தென்னாப்பிரிக்காவின் கோரிக்கை மீது, சர்வதேச நீதிமன்றம் (ஐ சி ஜே) தீர்ப்பளிக்கும்; பாலஸ்தீன பகுதிக்கு எதிரான தாக்குதலை நிறுத்துமாறு, ஐ.நா.வின் உயர்மட்ட நீதிமன்றம், இஸ்ரேலுக்கு உத்தரவிட முடியும்.
கான் யூனிஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதல், நகரம் முழுவதும் கொடிய குண்டுவீச்சுடன் தொடர்கிறது, நூறாயிரக்கணக்கானவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், ஆனால், குடியிருப்பாளர்கள், வன்முறைக்கு மத்தியில் தப்பி ஓட முடியாது என்று கூறுகின்றனர்.
ICJ தீர்ப்பு இன்று
No comments:
Post a Comment