செங்கடலில் ஹவுதிக்கள் இன்று மீண்டும் தாக்குதல்.
வெடித்து சிதறிய அமெரிக்க F-16 Fighter Jet .
காசா தொண்டு நிறுவன வண்டிகளை உள்ளே விட, ஒவ்வொரு வண்டிக்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கும் எகிப்து.
ஹவுதிக்களுக்கு எதிராக போர் செய்ய, இங்கிலாந்துக்கு தகுதியில்லை, திறமையில்லை, ஆயுதங்களும் இல்லை.
மரண அடி வாங்கும் இஸ்ரேல் பொருளாதாரம். ஐ எம் ef எனப்படும் இன்டர்நேஷனல் மோனிட்டரி fund எச்சரிக்கை.
உக்ரைனிலும், மத்தியகிழக்கிலும் படுதோல்வி அடையும் நாடுகள்.
விரிவான செய்திகள் உள்ளே.
வெடித்து சிதறிய அமெரிக்க பைட்டர் ஜெட். தென் கொரியாவுக்கு அருகில் அமெரிக்க பைட்டர் ஜெட் இன்று வெடித்து சிதறியது. இந்தப் பகுதியில அமெரிக்கா fighter ஜெட் வெடித்து சிதறியது. இந்த வருடத்தில் இது மூன்றாவது flight ஆகும், .
F-Sixteen என்று அழைக்கப்படுகிற அதிநவீன போர் விமானம், அமெரிக்க கடல் படைத்தளத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில் வெடித்து சிதறி உள்ளது.
தொடர்ந்து F-Sixteen போர் விமானங்கள் வெடித்துச் சிதறுவது குறிப்பிடத்தக்கது.
----
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) செவ்வாய்க்கிழமை, "இஸ்ரேலின்" பொருளாதார வளர்ச்சி குறித்து கவலைகளை வெளிப்படுத்தியது, ஏனெனில் Gaza மீதான நீண்டகால போர் காரணமாக, இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டில், குறிப்பிடத்தக்க மந்தநிலையை எதிர்பார்க்கிறது.
தலைமை பொருளாதார நிபுணர், Pierre-Olivier Gourinchas, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), போருக்கு முந்தைய மதிப்பீட்டான மூன்று சதவிகிதத்தை விட, மிகக் குறைவாக அதிகரிக்கும் என்று கூறினார், மேலும், குறிப்பிட்ட திருத்தப்பட்ட எண்ணிக்கை, இன்னும் வெளியிடப்படவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டார்.
போர் நீடித்துக் கொண்டிருக்கையில், இஸ்ரேலிய அதிகாரிகள் தங்களது பொருளாதாரம் தகர்க்கப்படுவதைக்கண்டு அச்சப்படுகின்றனர். தொடர்ந்த ஹமாஸ் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, தங்கள் பொருளாதாரம் இன்னும் பல மாதங்கள், ஆண்டு முழுவதும் சரிவில் நீடிக்கும் சாத்தியக்கூறு உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
---
---------
இனி ஈரானை அழிக்காமல், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் வேலை இல்லை. உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும், அமெரிக்கா படு தோல்வி அடைகின்ற நிலையில், ஈரானைத் தாக்குவது என்பது, நிரந்தரமான மிகப்பெரிய ஒரு அழிவை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்காவும் இஸ்ரேலும், மிகக் கடுமையான குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஈரான் ஆதரவு பெற்ற சிறிய சிறிய போராளி குழுக்களையே சந்திக்க முடியாத நிலைமை இருக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரானை நேரடியாக எப்படி தாக்கி வெற்றி பெறப் போகிறது, என்பது மிகப்பெரிய கேள்வி குறியாகவே உள்ளது.
ஈரானை தாக்குவதால் மூன்றாவது உலகப் போர் உருவானாலும், அதன் விளைவு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பயங்கரமானதாக, மிகப் பல ஆண்டுகள் மத்திய கிழக்கில் கால் பாதிக்க இயலாத ஒரு நிலை உருவாகக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து அச்சப்படுகிறார்கள்.
---
மத்திய கிழக்கில் அவசர உதவி வழங்கும் சர்வதேச தொண்டு நிறுவனம், காஸாவுக்கு உதவி வழங்குவதற்காக, எகிப்தின் ஜிஐஎஸ் உடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்திற்கு ஒரு டிரக்கிற்கு ஐயாயிரம் டாலர், அதாவது நான்கு லட்சம் ரூபாய்களுக்குமேல் லஞ்சம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், காசாவில் நிவாரண நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் லஞ்சம் ஒழிய வேண்டும் என்று குமுறுகின்றனர்.
ஏற்கெனவே, மருந்துகளின்றி, குடிக்க தண்ணீரின்றி, உன்ன உணவின்றி, குளிரில் வாடி நிற்கின்ற, பாலஸ்தீன மக்களுக்கு சென்று சேரவேண்டிய உதவிப்பொருள்களை கொண்டுசெல்லும் வண்டிகளிடம், லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுமையிலும் கொடுமை என்று கதறுகின்றார்கள்.
--------
ஈராக்கிய எதிர்ப்புப் படைகள் தங்கள் நடவடிக்கைகளை இடைநிறுத்துகின்றன
ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஈராக்கில் கதாயிப் ஹிஸ்புல்லா நிறுத்தியுள்ளது
ஈராக்கிய அரசாங்கத்தை சங்கடப்படுத்தக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கதாயிப் ஹிஸ்புல்லா தலைவர் கூறுகிறார்
------
இங்கிலாந்துக்கு பெரிய சங்கடம்.
தரையில் உள்ள ஹவுத்தி இலக்குகளைத் தாக்க இங்கிலாந்து போர்க்கப்பல்களிடம் எந்த ஆயுதங்களும் இல்லை, அதனால்தான் இங்கிலாந்து போர்க்கப்பல்கள் ஹவுத்திகளுக்கு எதிரான தாக்குதல்களில் பங்கேற்கவில்லை, இது முக்கியமாக அமெரிக்காவால் செய்யப்படுகிறது
இங்கிலாந்து ராணுவம் ஏமனுக்கு எதிராக போர் செய்யத் தகுதியற்றவை, போர்க்கப்பல்களோ, ஹவுதிக்களைத் தாக்கப் பயனற்றவை என்று The Telegraph தெரிவித்துள்ளது.
--------
அன்சருல்லாஹ் அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் கூறுவது யாதெனில், எங்கள் போர் தார்மீகமானது, எனவே உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். எங்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு தெஹ்ரானிலோ , மாஸ்கோவிலோ அல்லது பெய்ஜிங்கிலோ இல்லை, மாறாக காசாவில் உள்ளது," என்றார்.
மனிதப்படுகொலைகளை தைரியமாக நிகழ்த்திக்கொண்டு, பாலஸ்தீனத்தில் இன அழிப்பு செய்கின்ற நாசகார துரோகிகளை தடுத்து நிறுத்தாத துப்பில்லாத வல்லரசுகளும் கோழைகளே.
எனவே செங்கடலில் அமெரிக்காவும், பிரிட்டனும் மற்றும் அதன் ஆதரவாளர்களும் தப்பிப்பிழைக்க ஒரே வழி, காஸாவில் போர் நிரந்தரமான போர் நிறுத்தம்தான் என்பதை அன்ஸாருல்லாஹ் தெளிவாக உணர்த்தி உள்ளது.
-----
No comments:
Post a Comment