ஹவுதிக்கள் இன்று காலை நடத்திய தாக்குதல். "ஸ்டார் ஐரிஸ்" கப்பல் சேதம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹெர்ம்ஸ் நயன் ஹண்ட்ரேட் ட்ரோன்கள் இஸ்ரேலுக்கு கொடுக்கப்படுகிறதா?
ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல், பிணையாக கைதிகள் பேச்சுவார்த்தையை தகர்த்துவிடும் என்று ஹமாஸ் எச்சரித்துள்ளது.
ரஃபா தாக்குதல். BLOCKMAIL செய்து ஹமாசை பணியவைக்க இஸ்ரேல் முயற்சி.
இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா நிறுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் போரெல் பரிந்துரை.
பெண்கள் குழந்தைங்களை கொள்ளுங்க,. இல்லையென்றால், நாங்கள் அக்டோபர் ஏழை மீண்டும் பார்ப்போம் என்று Itamar Ben-Gvir கூறுகிறார்.
ஏமன் ஆயுதப் படைகள், இன்று காலை "ஸ்டார் ஐரிஸ்" கப்பல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், கப்பல் சேதம் அடைந்ததாக U K M T O தெரிவித்துள்ளது.
----
போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையில், ஹமாஸ் ஈடுபடலாம்னு சொல்லிட்டு இருக்குற இந்த நேரத்துல, அங்கே காசா பகுதியில இருந்த எல்லா மக்களையும், துரத்தி துரத்தி ரஃபாவைப் பார்த்து அனுப்பிவிட்டு, இப்ப அந்த இடத்துல பெரிய அளவில் தாக்குதல் நடத்தலாம், அங்கு இருக்கிற மக்களை, நிறைய பேரை கொண்ணுறலாம். அது மட்டும் இல்லாம, இந்த இஸ்ரேலோட பயங்கரவாத தாக்குதலை, தாக்கு பிடிக்க முடியாம, அண்டை நாடான எகிப்துக்குள் நுழைய முயற்சி செய்யலாம். இப்போ எகிப்து இந்த மக்களை எகிப்துக்குள்ள அனுமத்திக்கலைன்னா, முஸ்லீம் நாடு எகிப்து, மும்ஸ்லிம்கள அகதிகளா ஏத்துக்க மாட்டேங்குது. இதுக்கு காரணம், காசா மக்கள் மிகவும் மோசமானவங்க, அப்படிங்கற ஒரு பொய்யான ஒரு வதந்திய உருவாக்கி, அட்டகாசம் பண்ணலாம் அப்படிங்கற எண்ணத்தோடு, இஸ்ரேல் அப்பாவி மக்கள் தாக்குதல் நடத்தினால், ஹமாஸ் உடனடியாக இஸ்ரேல் பயங்கரவாதிகளுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தி விடும் அப்படின்னு, எச்சரிக்கை விட்டு இருக்காங்க.
பொதுவாகவே இஸ்ரேலுக்கு ஹமாஸ் கூட, பேச்சு வார்த்தை நடத்துவதற்கு எந்த விருப்பமும் கிடையாது. இங்க ஒரு முக்கியமான செய்தி என்ன அப்படின்னா, இஸ்ரேலோட பெரிய பிரச்சன, அங்க இருக்கிற இஸ்ரேலோட பணய கைதிகள். அந்த பணய கைதிகளை காப்பாற்ற சொல்லி, உள்ளூர்ல நடக்கிற போராட்டங்களும் அழுததாங்களும். இந்த அழுத்தங்கள், உள்ளூர்ல உள்நாட்டில் இருந்து மட்டும் இல்ல, அமெரிக்கா உட்பட வேறு பல நாடுகளில் இருந்து வந்த குடிமக்களும்அகதிகளாக இருக்காங்க. அந்த அகதிகள இஸ்ரேல்தான் மீட்டு தரணும். உதாரணமா, அமெரிக்கர்களோட குடிமக்கள் ஹமாஸ் கிட்ட கைதிகளா மாட்டிகிட்டு இருந்தாலும், அவர்களை விடுவிக்க அமெரிக்கா நேரடியாக ஹமாஸ் மீது தாக்குதல் நடத்த முடியாது. அவ்வாறு தாக்குதல் நடத்த முயற்சி செஞ்சாங்கன்னா, அடுத்த நொடி ஈரான் களத்துக்கு வருகிற வாய்ப்பு உண்டு.
அதனாள, இஸ்ரேல் பயங்கரவாதிகளுக்கு தேவையான எல்லா உதவிகளும்,பணம் மற்றும் ஆயுதங்கள் உட்பட அனைத்தையும் கொடுத்து, ஹமாசை இல்ல, அப்பாவிமக்களை கொலை பண்ண சொல்லிட்டு இருக்காங்க. ஹமாஸ் எங்க இருக்காங்கன்னே தெரியல/ ஆனா தாக்குதல் வருது உறுதியா வருது. அந்த தாக்குதல்கள இஸ்ரேல் பயங்கரவாதிக்குகளால எதிர்கொள்ள முடியல. அதனால பொது மக்கள கொன்றும், மிரட்டியம், ஹமாசை Blockmail பண்ணி பணிய வச்சிரலாம் அப்படீன்னு முயற்சி செய்றாங்க. இந்த இஸ்ரேல் பயங்கரவாதிகளோட முக்கியமான குறிக்கோளே, பிணையக்கைதிகள காப்பாற்றுவது கிடையாது. எப்படியாவது, ஏதோ ஒரு முறையில தில்லுமுல்லுகள் செய்து, ஹமாஸ் கிட்ட இருக்குற, இஸ்ரேலோட பணயக்கைதிகள் எல்லாத்தையுமே கொன்றுவிட்டால், இஸ்ரேல் உள்நாட்டில் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது அவசியம் கிடையாது.
நம்மோட பனைய கைதிகள் நிறைய பேர ஹமாஸ் கடத்திட்டு போனாங்க. அப்படி புடிச்சிட்டு போனவங்க எல்லாத்தையுமே கொன்னுட்டாங்க. அப்படிப்பட்ட கொலைகாரங்க கிட்ட, நாம எதுக்கு பேச்சு வார்த்தை நடத்தணும்? இதை சாதகமா பயன்படுத்தி, காசா மக்கள் எல்லாத்தையும் கொன்னுட்டு, காசாவோட மொத்த நிலத்தையும் நாம கூறுபோட்டுக்கலாம் அப்படின்னு பேராசைப்படுறாங்க. இஸ்ரேல் பகுதில இருக்குற மக்களும், ஹமாஸ் கிட்ட பேசுங்க, இஸ்ரேலியர்கள காப்பாத்துங்க, அப்படின்னு சொல்றதுக்கு எந்த வாய்ப்பும் கிடையாது. அதனால, தன்னுடைய நாட்டு குடிமக்களை காப்பாத்துற எண்ணம். இஸ்ரேலுக்கு கிடையாது. ஆனால் ஒருத்தருவிடாம பணயக்கைதிகள் எல்லாத்தையும் கொன்னு தள்ளிட்டா, அதா வச்சு, இன்னும் அதிகமான தாக்குதலை rafaaல தங்கி இருக்கிற அப்பாவி மக்கள் மேல நடத்தலாம் அப்படின்னு, மனக்கணக்கு போட்டுட்டு இருக்காங்க.
ஆனா இப்போ, இஸ்ரேல் பயங்கரவாத ராணுவத்தோட தலைவலி என்னன்னா, அந்த பணைய கைதிகள் எங்கே இருக்காங்க அப்படின்னு தெரியல. ஹமாஸ் அத ஒரு ரகசியமாகவே வெச்சிட்டு இருக்காங்க. இந்த நிலைமையில, ரஃபால மிக அதிகமான அப்பாவி மக்களும், குழந்தைகளும், அந்த ஐக்கிய நாடுகள் சபை முகாம்கள்ள தங்கி இருக்காங்க. அவங்கள தாக்குவேன்னு இஸ்ரேல் சொல்லிட்டு இருக்கு. அப்படி தாக்கப்பட்டால் ஏற்படக்கூடிய பெரிய விளைவுகள், நாசங்கள், பேரழிவுகள் என்னென்ன சொல்லவே முடியாத அளவுக்கு இருக்குது.
------
குழந்தைகள், முதியவர்கள் வெளியேற முடியாமல் தவிக்கும் ரஃபா, பத்தொன்பது லட்சம் அகதிகள் தங்கியுள்ள பெரும் புகலிடம். இங்கு நடக்கும் தாக்குதல், இஸ்ரேல் பணயக் கைதிகளுக்கான பேச்சவார்த்தையில் பெரும் சரிவு ஏற்படும் என்று ஹமாஸ் கூறியுள்ளது.
ரஃபா மீது படையெடுத்து, இங்குள்ள ஹமாஸ் இயக்கங்களின் இராணுவ திறன்களை அழிக்காமல், வெற்றி பெற முடியாது என்று, இஸ்ரேல் இராணுவம் கூறி வருகிறது.
ஆனால், இங்குள்ள பொதுமக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர், இது பேரழிவு தரக்கூடிய, சாத்தியமான விளைவுகள் குறித்து, பிராந்தியத்தில் உள்ள பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும், அரசுகளிடையே பரவலான கண்டனங்களைத் தூண்டியுள்ளது.
குறிப்பாக, இப்போது ரஃபா, பத்தொன்பது லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்கு, ஒரு பாரிய தங்குமிடமாக மாறியுள்ளது.
வெளியேற்ற மையங்கள் மற்றும், தற்காலிக முகாம்கள், சமீபத்தில் எகிப்தின் எல்லைகளை ஒட்டி நிறுவப்பட்டுள்ளன. இது எகிப்திய தேசிய பாதுகாப்பிற்கும், ஒரு புதிய குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை முற்றிலும் முன்வைக்கும் என்றும் கூறப்படுகிறது..
-----
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் உள்ள அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் மீது ஏவுகணை வீசப்பட்டது: ஏமன்
செங்கடலில் அமெரிக்க வணிகக் கப்பல் ஒன்றைத் தாக்கும் வகையில், நாட்டின் கடற்படைப் பிரிவுகள், பல ஏவுகணைகளை ஏவியதாக, ஏமன் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி திங்களன்று யேமன் தலைநகர் சனாவிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட ஒரு தொலைக்காட்சி உரையில், யேமன் இராணுவம் பல "பொருத்தமான" கடற்படை ஏவுகணைகளுடன் ஸ்டார் ஐரிஸ் பல்க் கேரியருக்கு எதிராக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், தாக்குதல்கள் துல்லியமாகவும் நேரடியாகவும் இருந்தன என்றும் கூறினார்.
ஹிஸ்புல்லா தலைவர், இஸ்லாமிக் ஜிகாத் தலைவர் வலியுறுத்தல்.' உறுதியளிக்கப்பட்ட வெற்றியை' அடைய உறுதியுடன் இருத்தல் அவசியம் என்று கூறியுள்ளார்.
உறுதியளிக்கப்பட்ட வெற்றியை அடைய உறுதியாக இருப்பதும் அயராது உழைப்பதும் அவசியம் என்று லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தின் உயர்மட்ட எதிர்ப்புத் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
லெபனான் ஹிஸ்புல்லா எதிர்ப்பு இயக்கத்தின் பொதுச் செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லா மற்றும் பாலஸ்தீனத்தின் இஸ்லாமிய ஜிகாத் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜியாத் அல்-நகலேஹ் ஆகியோர் திங்களன்று ஒரு சந்திப்பை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இடைவிடாத கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில், போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அரசியல் மற்றும் கள நிலைமைகளை உள்ளடக்கிய சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இரு எதிர்ப்புத் தலைவர்களும் விவாதித்தனர்.
----
அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படையை ஹேக் செய்த பஹ்ரைன் ஹேக்கர்கள்.
பஹ்ரைன் ஹேக்கர்கள் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படையை குறிவைத்து ரகசிய தகவல்களை அணுகுகின்றனர்.
பஹ்ரைன் ஹேக்கர்கள் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படையின் அமைப்புகளுக்குள் ஊடுருவி ரகசிய ஆவணங்களை அணுகியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை, ஹேக்கிங் குழு அல்-தௌஃபான் (வெள்ளம்) குழு பஹ்ரைனில் அமெரிக்க ஐந்தாவது கடற்படைக்கு எதிராக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது, இது மேற்கு ஆசியாவில் கடல் வழிசெலுத்தலை ஆபத்திற்கு உட்படுத்துகிறது.
பாலஸ்தீனம், லெபனான், ஏமன் மற்றும் ஈராக்கில் வீரம் செறிந்த மற்றும் கெளரவமான எதிர்ப்பின் ஹீரோக்களுக்கும், ஜெருசலேம் செல்லும் வழியில் உயிர்த்தியாகம் செய்த நேர்மையான தியாகிகளுக்கும், அமெரிக்க கடற்படையின் ஆவணங்கள் மற்றும் பதிவுகளின் ஒரு சிறிய பகுதி. நம்மிடம் இருப்பது பெரிது.
No comments:
Post a Comment