Saturday, 10 February 2024

தண்டவாளம் ஏறும் இஸ்ரேலின் ராணுவ வண்டவாளம் அமேரிக்கா வெளியேற தொண்ணூறு நாட...


அமேரிக்கா வெளியேற தொண்ணூறு நாட்கள் கெடு.

பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்து போர்ச்சுகல்லில் நிறைவேறிய தீர்மானம்.

தண்டவாளம் ஏறும் இஸ்ரேலின் ராணுவ வண்டவாளம்.

shooting game விளையாடுற பசங்களுக்கு, RTS gameனு சொல்லி, ராணுவ பதவி கொடுத்த இஸ்ரேல். ரஃபா  முகாமில் என்ன ஆகும்? 

அதிகபட்சம் 90 நாட்களுக்குள் அமெரிக்கா, ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து வெளியேற வேண்டும். ஈராக்கில், அமெரிக்க ஆட்டங்களுக்கு ஒரு முழுமையான முடிவுரை எழுதப்படுகிறது. ஈராக்கில் உள்ள போராளிகளின் தொடர் தாக்குதல் காரணமாக அமெரிக்கா, முழுமையாகவோ அல்லது, பகுதியாகவோ, ஈராக்கை விட்டு வெளியேற, தயார்படுத்திக் கொண்டு வருகிறது.

ஈராக் பாராளுமன்றம், எவ்வளவு விரைவாக அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேற, சட்டம் இயற்ற முடியுமோ அந்த அளவுக்கு விரைவாக, சட்டங்கள் இயற்ற தயார்படுத்தி வருகிறது.

மறுபுறம் மத்திய கிழக்கில், அமெரிக்கா நடத்தும் போர்கள் காரணமாக, Tired ஆகிப் போய் இருக்கிற மக்கள், இந்த தேர்தல் நடக்கின்ற நேரத்தில் அமெரிக்கா, ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து வெளியேறும்  அறிவிப்பு அறிவித்தால், அது, போட்டியிடுகின்ற  பைடனுக்கு, ஒரு பூஸ்ட் ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது. இன்னைக்கு மத்திய கிழக்கில, அமெரிக்கா ஏன்  தொடர்ந்து தளம் அமைத்து இருக்கிறது என்கிற ஒரு அவேர்னஸ், அமெரிக்கால இருக்குற மக்களுக்கு எல்லாம், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா தெரிய வருது. இதுக்கு காரணம், இஸ்ரேல எதிர்த்து அமெரிக்கால மட்டுமில்ல, உலகம் முழுவதும் நடக்கிற தொடர் போராட்டங்கள். அங்கு தினசரி நாளிதழ்கள் தொடர்ந்து வெளியிடுகின்ற செய்திகள். வழக்கம்போல, அந்த செய்திகள் எல்லாமே அமெரிக்காவுடைய  நடவடிக்கைகளுக்கு சாதகமாக இருக்கின்ற நிலையில, அங்கே நடக்கிற எதிர்ப்பு போராட்டங்கள்,  அது மூலமாக ஏற்படுகின்ற  மக்கள் கூடுதல்கள்,  அந்தக்கூடுதல்களால் வாய்கள் மற்றும் காதுகள் மூலமாக பரவக்கூடிய செய்திகள்,  அவ்வாறு வாய்கள் மூலம் பரவக்கூடிய செய்திகள் ஊடகங்களில் வராத காரணங்கள், அந்தக்காரணங்கள், அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான, பத்திரிகை சுதந்திரத்தின்மீது விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகளோ, என்கிற சந்தேகம், அந்த சந்தேகங்கள் மூலமாக, போராட்டக்காரர்கள் சரியாகத்தான் சொல்கிறார்களோ என்று உருவாகக்கூடிய ஐயம், அந்த ஐயத்தின் காரணமாக இன்னும், அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று தூண்டுகிற ஆவல், அந்த ஆவலின் காரணமாக மக்கள் அறிந்துகொள்ளும் உண்மைகள், அந்த உண்மைகளின் காரணமாக பங்கெடுக்கும் எதிர்ப்புப் போராட்டங்கள்,   அந்த எதிர்ப்பு போராட்டங்களில், முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களாக, அமெரிக்காவை எதிர்த்து நடக்கிற போராட்டங்களும், இஸ்ரேலை எதிர்த்து நடக்கிற போராட்டங்களும், அங்கே இருக்கிற அமெரிக்க மக்களை தொடர்ந்து சிந்திக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாக, அமெரிக்கர்கள் கண்டுபிடித்து இருக்கிற இரண்டு மூன்று நிகழ்வுகள், அவைகளில் ஒன்று, அமெரிக்கா ஈராக்கிலும் சிரியாவிலும்  போய் உட்கார்ந்து என்ன செய்கிறது? கச்சா எண்ணெய் கடத்திக்கொண்டு வருகிறது. சிரியாவிலும், அந்த நாட்டு  எல்லை பகுதிகளில், தனி நாடு கேட்டுப் போராடுகிற குருதிஷ் இன மக்களுக்கு உதவுவதாகக் கூறினாலும், அதுக்கு பின்னணியில குருதிஷ் பகுதியில் இருக்கிற, எண்ணெய் கிணறுகளில் இருந்து எண்ணெய் திருடிக் கொண்டு வருவதும், அமெரிக்கர்கள் இப்பதான் கொஞ்சமா உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  இரண்டாவதாக, இந்த சுரண்டல்களை எதிர்த்து, சிரியாவிலும் ஈராக்கிலும், போராளிகள் நடத்துகிற போராட்டங்களும், தாக்குதல்களும், மூன்றாவதாக, அமெரிக்கா இறைக்கின்ற அமெரிக்கர்களின் வரிப்பணமும், இப்பொழுது பெரும் பேச்சாக அமெரிக்காவில் பரவி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல், இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் நடத்துகின்ற படுகொலைகளும், கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக, இஸ்ரேல் தினமும் நிகழ்த்துகிற, தினமும் செய்கின்ற அட்டூழியங்களையும், அமெரிக்க மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டிருக்கிறார்கள். 

எனவே அமெரிக்கா, ஈராக்கிலும் சிரியாவிலும் அமர்ந்துகொண்டு, அங்கு இருக்கிற எண்ணெய்யை கடத்துவது மட்டும் இல்லாமல், இஸ்ரேலுடைய அட்டகாசத்திற்கு பண உதவி வழங்கியும், ஒற்றறியும் செய்திகளை பகிர்வு செய்தும், மிரட்டல் மூலமாகவும், இஸ்ரேல் உடைய பல குற்றங்களுக்கு துணை போவதும், செங்கடல் பகுதிகளில், அமெரிக்காவின் மிரட்டல் தொடர்ந்து இருப்பதனால், ஹவுதிகளின் தாக்குதல்கள் அதிகமாவதும், இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளுக்கு எந்த எண்ணெய் கப்பல்களோ, சரக்கு கப்பல்களோ, போக்குவரத்துக் கப்பல்களோ செல்ல முடியாத நிலைமையும், மக்களை பல கோணங்களிலும் சிந்திக்க வைத்திருக்கிறது. மத்திய கிழக்கு ஆசியாவில் நடக்கிற எல்லா பிரச்சினைகளுக்கும், அமெரிக்காதான்  மூல முதற் கரணம் என்பதும் தெரிந்திருக்கிறது. ஏனென்றால், மத்திய கிழக்கில் நடக்கிற அத்தனை சண்டை சச்சரவுகளும், தாக்குதல்களும், போராட்டங்களும், எல்லாமே அமெரிக்கா என்கிற ஒன்றை முக்கியமாக வைத்து தான் நடைபெறுகின்றன அப்படி என்றால் அந்த "-அமெரிக்கா-" என்கிற அந்த வார்த்தையை அழித்துவிட்டால், போராட்டங்களும், தாக்குதல்களும் அமெரிக்கவைப்பற்றி இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை அல்லவா? 

இதை உணர்ந்து கொண்ட மக்கள், மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறினால், அது, தற்போதைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் என்கிற நிலைமைக்கு வந்திருக்கின்ற காரணத்தினால், இந்த தேர்தலில் ஜோ பைடன், ஈராக்கிலிருந்தும்  சிரியாவிலிருந்தும் அமெரிக்கா வெளியேறுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டால், அது அவருடைய வெற்றிக்கு சற்று உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. 

இதன் காரணமாக அமெரிக்கா, முழுமையாகவோ அல்லது, பகுதியாகவோ, ஈராக்கை விட்டு வெளியேற, தயார்படுத்திக் கொண்டு வருகிறது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.


காஸா திறந்தவெளி சிறைச்சாலையில் நான்கு மாத இராணுவத் தாக்குதலால், பல முறை இடம்பெயர்ந்த, ஆறு லட்சம் குழந்தைகள் மற்றும், அவர்களது குடும்பங்கள், பட்டினியாலும் அதிர்ச்சியாலும் இப்போது, ரஃபாவில் குவிக்கப்பட்டுள்ளனர். இணையற்ற அளவிலான ஒரு படுகொலையின் அபாயம், தொடுவானத்தில் தோன்றுகிறது. 

இதுவரை u n r w a மீது , இருநூற்றுத் தொண்ணூறு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில், ஐக்கியநாடுகள் சபையின் கொடியின் கீழ், பாதுகாப்பு தேடி வந்த முந்நூற்று எண்பத்தொன்பது பேர் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எங்கள் குழு, வடக்கு Gaza உணவு மற்றும், உயிர் காக்கும் உதவிகளை தொடர்ந்து விநியோகிக்கிறது - ஆனால் இந்த ஆண்டு எங்கள் பணி கோரிக்கைகளில் ஐம்பது சதவீதம் மறுக்கப்பட்டுள்ளன என்று u n r w a  கூறுகிறது.

வெள்ளிக்கிழமை, போர்ச்சுகல் நாட்டு பாராளுமன்றம், நக்பாவைக் குறிப்பிட்டு, பாலஸ்தீனிய அரசை அங்கீகரித்து தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஹெஸ்பொல்லாஹ் தாக்குதல். அல்-பாக்தாதி தளத்தில் ஒரு மெர்காவா டாங்கியை "சிறப்பு வழிகாட்டி ஏவுகணை" மூலம் அழித்த தாக்குதலைக் காட்டும் வீடியோவை ஹிஸ்புல்லா வெளியிட்டது. இது மற்றொரு அழகான பாதை-பதிவு செய்யப்பட்ட அல்மாஸ் ATGM காட்சிகள் ஆகும்.

 ரஷ்யாவின் ராட்சத ஏஎன்-நூற்று இருபத்து நான்கு, சரக்கு விமானம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரானை வந்தடைந்தது.

இந்த விமானம், கனமான பேலோடுகளை சுமந்து செல்வதாக அறியப்படுகிறது. ஆனால், அது எதையாவது வழங்குகிறதா, அல்லது ரஷ்யாவுக்கு கனமான ஒன்றை எடுத்துச் சென்றதா என்பது தெரியவில்லை. 

இருப்பினும், சுகோய்-thirty five  போர் விமானங்களுக்கான ஹேங்கர்களை உருவாக்குவதில் ஈரான் மும்முரமாக உள்ளது.

விளாடிமிர் புடின் டக்கர் கார்ல்சனிடம் "பிரச்சார உலகில், அமெரிக்காவை தோற்கடிப்பது மிகவும் கடினம், ஏனென்றால் அமெரிக்கா அனைத்து உலக ஊடகங்களையும் கட்டுப்படுத்துகிறது" என்று கூறுகிறார்.

---

"-குரங்கு கையில பூமாலை கொடுத்த மாதிரி-" அப்படீன்னு ஒரு வாக்கியத்தை நம்ம ஊர்ல அடிக்கடி உபயோகிப்பாங்க,  Phoneல, ஷூட்டிங் game, ஹண்டிங் game, firing game விளையாடுற பசங்ககிட்ட, ராணுவ சீருடையும், ஆட்டோமேட்டிக் rifleகளும் கொடுத்தால் என்ன நடக்கும்? இவர்களை போர்முனைக்கு அனுப்பினால் என்ன ஆகும்? 

பயிற்சி பெற்ற வீரர்கள் முன்னாடி நேருக்கு நேரா சண்டை போட்டா, இவங்க அடி வாங்கி காலி ஆயிடுவாங்க. அப்படி இல்லாம, குழந்தைகள்  முன்னாடியும், பெண்கள் முன்னாடியும் போய் நின்னா, அவங்க ஏதும் பண்ண மாட்டாங்க, இவங்கள பார்த்து அவங்க பயந்து ஓடுவாங்க.  இவங்க அந்த ஆட்டோமேட்டிக் துப்பாக்கிய வச்சு எப்படி வேணுன்னாலும் சுடலாம். குறி பார்த்து சரியாக சுடணும்னு அவசியமே கிடையாது. குறி பார்க்கவே தெரியாது. ரேண்டமா சுடுவாங்க. இங்கேயம் அங்கேயும் எங்கேயும் தோட்டாக்கள் பறக்கும். ஏதோ ஒன்னு ரெண்டு சரியாகப்போய் தாக்கி, அப்பாவிகள் உயிரிழப்பாங்க. உடனே இவங்க ஆஹா என்னோட மூணு தொட்டால ஒண்ணு கரெக்டா தாக்கிடுச்சுன்னு ஒருத்தரும், எனது முதல் தோட்டாவே தாக்கிடுச்சு இன்னொருத்தரும், பெருமையா பேசிக்கிறதும்,  அதை வீடியோ எடுத்துக்கறதும்,  இஸ்ரேலோட ராணுவம் எவ்வளவு கேவலமானதுன்னு. இப்போதுதான் அவங்க, வண்டவாளமெல்லாம் தண்டவாளம் ஏறுகிறது.



No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...