காசாப்போர் எப்போது ஓயும்?
ஓயாமல் தாக்கும் போராளிகள், ஓயாத இஸ்ரேலின் படுகொலைகள்.
காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் முழுமையாக அழிக்கப்பட்டு, முழுமையான தோல்வி அடையும் வரையில் காசாப்போர் ஓயப்போவதில்லை.
இஸ்ரேலுக்கு போர் விமான பாகங்களை வழங்குவதை நிறுத்த நெதர்லாந்துக்கு நீதிமன்றம் உத்தரவு
காசாவுக்குள் இஸ்ரேல் பயங்கரவாதிகளை தாக்கும் ஆயிரக்கணக்கான தெரு நாய்கள்.
மத்திய தரைக்கடலை முழுமையாக ஏவுகணை தாக்குதலுக்குள் கொண்டு வந்த ஈரான். இப்போது மத்திய தரைக்கடல் முழுவதும் ஈரான் தாக்குதல் வளையத்துக்குள்.
------
இஸ்ரேலுக்கு, போர் விமான பாகங்களை வழங்குவதை நிறுத்த, நெதர்லாந்துக்கு நீதிமன்றம் உத்தரவு.
இந்த பாகங்கள், "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான சட்டங்களைமீறிப் "பயன்படுத்தப்படுகின்றன, என்ற தெளிவான ஆபத்தை, நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
காசா பகுதியில், இஸ்ரேல் குண்டு வீச பயன்படுத்திய, F Thirty five ரக போர் விமானங்களுக்கான, உதிரி பாகங்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு, நெதர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
திங்களன்று, மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நெதர்லாந்து ஏற்றுமதி செய்யும் பாகங்கள், "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான விதிமுறைகளை மீறி பயன்படுத்தப்படுவதற்கான "தெளிவான அபாயம்" உள்ளது, என்று கூறியது.
காஸா மீதான தாக்குதல்களில், இஸ்ரேல் தனது F Thirty five விமானங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று, நீதிமன்றம் கூறியது, இது ஏற்றுக்கொள்ள முடியாத, பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கிறது. ஏற்றுமதிக்கான அனுமதியில், புதிய சோதனை செய்ய வேண்டியதில்லை என்ற, டச்சு அரசின் வாதத்தை அது நிராகரித்தது.
---
நேற்று, இஸ்ரேலிய இராணுவம், கிர்யாத் ஷ்மோனாவின் காவல் நிலையத்தில், ஒரு சிறப்பு பயிற்சியை நடத்தியது, தாக்குதல்களைத் தடுக்க, அக்டோபர் ஏழாம் தேதி, ஸ்டெரோட்டில் உள்ள காவல் நிலையத்தின் காட்சியைப் பிரதிபலித்தது.
இன்று, ஹிஸ்புல்லா நேரடியாக, கிர்யாத் ஷ்மோனாவில் உள்ள, அந்த குறிப்பிட்ட காவல் நிலையத்தைத் தாக்கியது. இந்தத் தாக்குதல் அளிக்கும் செய்தி என்னவென்றால், உங்கள் அனைவரின் பின்னாலும் நாங்கள் நிழலாக வருகிறோம் என்பதுதான்.
லெபனான் மீது பகிரங்கப் போர் என்று, அச்சுறுத்தும் இஸ்ரேலியர்களுக்கு , வடக்கு முனையில் இருந்து இரண்டு மில்லியன் குடியேறியவர்களுக்கு தங்குமிடம் மற்றும், தங்கும் விடுதிகளைத் தயார் செய்யுமாறு ஆலோசனை கூறுங்கள் என்று, ஹசன் நஸ்ரல்லாஹ் கூறியுள்ளார்.
மத்திய தரைக்கடலை முழுமையாக ஏவுகணை தாக்குதலுக்குள் கொண்டு வந்த ஈரான்.
போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஐ ஆர் ஜி சி வெற்றிகரமாக சோதித்துள்ளது.
இது, இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள, நில அடிப்படையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கும், ஈரானின் திறனை அதிகரிக்கிறது
---
போர் தொடங்கியதிலிருந்து, வடக்கு காசாவில், இஸ்ரேலிய வீரர்களின் குழுக்களை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் தாக்கி வருகின்றன.
"சமீபத்திய நாட்களில், காசா பகுதியின் எல்லையில் இருக்கும், இஸ்ரேல் பயங்கரவாத ராணுவத்தில் உள்ள, வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து, டஜன் கணக்கான புகார்கள் வந்துள்ளன, காசாவிலிருந்து, நாய்கள் அவர்களைத் தாக்குவது குறித்து, இது, இன்று முதல் முறையாக, கான் நெட்வொர்க் பி இல் எஸ்டி பெரெஸ் பென் அமியுடன் "ஹசெட் ஹயோம்" என்ற நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
காசா பகுதியின் வடக்குப் பகுதியில், மக்கள் கூடும் பகுதிகளில் இருக்கும் ராணுவத்தினரை, நூற்றுக்கணக்கான நாய்கள் நெருங்கி வருகின்றன. அவை உறுமுகின்றன, பற்களைக் காட்டுகின்றன, சிப்பாய்களைக் கடிக்க முயற்சிக்கின்றன.
இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையத்தின் தலைமை விஞ்ஞானி, டாக்டர் யெஹோஷுவா ஷக்டி ஹினெட் ரெஷெட் பி யிடம் கூறியாது என்னவென்றால், "தெரு நாய்களின் நிகழ்வை, நாம் சமாளிக்க வேண்டும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம். அவர்களை சுட்டுக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்..
---------
பூகோளத்தின் எந்தப்பகுதியையும் தாக்கும், திறனை மேம்படுத்த, ஈரான் மேற்கொண்ட வெற்றிகரமான உத்திகள்.
சரக்குக் கப்பல்களில், நீண்ட தூர ஏவுகணைகளை ஈரான் நிறுவியுள்ளது. அதாவது, ஈரான் ஒரு சரக்கு கப்பல் கொள்கலனுக்குள், ஒரு இரகசிய ஏவுதளத்தை உருவாக்குகிறது.
இந்த சரக்கு கப்பல்கள், ஈரானிய கொடியின் கீழ் செயல்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த ஏவுகணைகள், ஈரானுடைய சரக்கு கப்பல்களில் மட்டும் இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லாமல், வேறு பல நாட்டு கொடிகளுடன் கூடிய, சரக்கு கப்பல்களிலும் இருக்கலாம்.
எனவே ஈரான், உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும், இப்போது ரகசியமாக ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் பால்மாச்சிம் விமான தளத்தில், F Thirty five ரக போர் விமானங்களை, தரை வழியாகவும், கடல் வழியாகவும், துல்லியமான பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைத்து தாக்கும் வீடியோவை, ஈரான் வெளியிட்டுள்ளது.
இந்த விமானப்படை தளத்தில் இருந்து, ஈரானுக்கு நெதன்யாகு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர ஈரான், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கொண்ட, சிறப்பு கொள்கலன்களைத் தயாரித்திருப்பதாகத் தெரிகிறது, இதன் பொருள், எந்த நேரத்திலும் ஈரானிய கொள்கலன் கப்பல்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுமந்து செல்லக்கூடும் என்பதாகும்.
ஈரான் நேரடியாகக் களத்தில் இறங்கி, இஸ்ரேலைத் தாக்க ஆரம்பித்தால், அதற்கு பதிலடியை அமெரிக்கா, மத்திய தரைக்கடலிலுள்ள போர்க்கப்பல்களிலுருந்துதான் கொடுக்கமுடியும். அந்த வாய்ப்பையும் சரியாக கணித்த ஈரான், இப்போது அதற்கும் செக் வைத்திருப்பது, குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment