உலகின் அனைத்து கண்களும், ரஃபாஹ்வின் மீதே..
அழிவு பயத்தில் வாழும் அரபு நாடுகள்..
ஏமனில் இருந்து நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள்..
ரஃபாவில் தாக்குதல் - பலனில்லாத மனிதாபிமான பேரழிவு - டேனியல் மேக்ரோன்..
IDF நடத்திய கொள்ளைகளை உறுதி செய்த இஸ்ரேலிய ஊடகம்..
உலகின் அனைத்து கண்களும், ரஃபாஹ்வின் மீதே இருக்கின்றன. இயலாத நிலையில் உள்ள மக்களை வெளியேற்ற, இஸ்ரேல் பயங்கரவாதிகள் முன்னெடுக்கும், மிருகத்தனமான மற்றும், துணிவற்ற, கோழைத்தனமான திட்டம். ஹமாசைத்தாக்கி அழிக்கத் துப்பின்றி, பொதுமக்களை ஓடவிடும் அவலம்.
தெற்கு Gazaவின், "பாதுகாப்பு மண்டலம்" என்று குறிப்பிடப்பட்டுள்ள ரஃபாவில் குவிந்துள்ள, பதினைந்து லட்சம் பாலஸ்தீனர்கள் மீது, இஸ்ரேலிய துருப்புக்கள் படையெடுப்பதற்கு தயாராகி வருவதாக, இப்போதுதான் கூறப்பட்டது. உண்மையில், ரஃபா ஒருபோதும் பாதுகாப்பாக இருந்ததில்லை, மற்றும், தஞ்சம் கோரும் நூற்றுக்கணக்கான, இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள், சமீபத்திய வாரங்களில், விமானத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் எஞ்சியுள்ள ஒரே "பாதுகாப்பு வலயம்", ரஃபாவிற்கு மேற்கே ஒரு சிறிய துண்டு நிலம். அடுத்து அங்கிருந்து தப்பிச்செல்ல முடியாமல், எகிப்துக்குள் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. இப்போது ரஃபாவில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் எங்கே செல்வார்கள் என்பதுதான், உலகம் முழுவதும் உள்ள மக்கள் எழுப்பக் கூடிய கேள்வியாக இருக்கிறது.
-----
அழிவு பயத்தில் வாழும் அரபு நாடுகள். இறை பயத்தில் அல்ல. அழிவு பயத்தில். இத்தனை நாட்கள் இஸ்ரேல் அடித்துவிடும் என்று அமைதி காத்தனர். இஸ்ரேலுடன் சமாதானமாக சென்று அதை அங்கீகரிக்கவும் துணிந்தன. ஆனால் சமீபத்திய ஈரானின் வளர்ச்சியும், இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா என்று அணைத்து வல்லரசு நாடுகளையும், போராளிக்குழுக்களுடன் அங்கங்கே மோதவிட்டு, நெத்தியடி கொடுக்கும் ஈரானின் வளர்ச்சியைக் கண்டு, இப்போது பயப்படத் துவங்கிவிட்டனர்.
இதன்காரணமாக, ஹௌதிக்கள், இஸ்ரேலுக்கு சாதகமாக, யார் எங்களைத் தாக்கினாலும், எந்த நிலப்பரப்பிலிருந்து எங்கள் மீது ஆயுதங்கள் ஏவப்பட்டாலும், பாரபட்சம் இன்றி பதிலடி கொடுப்போம் என்று அறிவித்திருந்த நிலையில், காசா, லெபனோன், ஈராக், சிரியா, ஏமன் உள்ளிட்ட, ஒன்றிணைந்த போராளிக் குழுக்கள்மீது தாக்குதல் நடத்த, அமெரிக்க தங்கள் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இப்போது அமேரிக்கா போராளிகளைத் தாக்குவதென்பது, மிக மிக உயர்ந்த செலவை உண்டாக்கக் கூடியது. அந்த அளவுக்கு பலனும் அமெரிக்காவுக்கு இனி மத்தியக்கிழக்கில் இருந்து கிடைக்கப் போவதில்லை.
இதுபோன்ற, தொடர்ச்சியான புவிசார் அரசியல் நிகழ்வுகள், பெருமாற்றங்களை உண்டாக்கப் போகின்ற நிகழ்வுகள், துரிதமாக அரங்கேறிவருவதால், இனி சொற்ப நாட்களில், அமேரிக்கா மத்தியக் கிழக்கை காலி செய்துவிட்டு, பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இந்த உண்மைகளை மெல்ல மெல்ல உணரத் துவங்கியுள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் மற்றும் குவைத் ஆகியவை, ஈரான் ஆதரவு பெற்ற எதிர்ப்புப் போராளிகளின் மேல் தாக்குதல் நடத்த. தங்கள் நாடுகளில் இருந்து வான்வழித் தாக்குதல்களை நடத்த, அமெரிக்கவுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளன.
காசா இன அழிப்பு நடவடிக்கையில், அமெரிக்காவின் பங்கை அடுத்து, அமெரிக்காவின் செல்வாக்கு மத்தியக்கிழக்கில் மட்டுமின்றி, உலகளவிலும் விரைவாக சரிந்துவரும் இந்த நேரத்தில், அமெரிக்காவை ஆதரிப்பதன் மூலம், ஈரானையும் அதன் சொந்த மக்களையும் கோபப்படுத்த, பல அரபு நாடுகள் தயாராக இல்லை என்று, அமெரிக்க அதிகாரி பொலிடிகோ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
---
ஏமனில் இருந்து நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள், தடையே இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன, இன்று செங்கடலைக்கடந்த ஒரு கப்பல் அருகே, பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக, இங்கிலாந்து அறிவித்திருக்கிறது.
ஏமன் ஹூதிக்களின் நடவடிக்கைகளைத் தடுக்க, அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து, முக்கி முக்கி தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஆனால் ஹவுதிக்கள் எதையும் கண்டுகொள்ளாமல், அவர்கள் செய்யவேண்டிய பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கப் போர்க்கப்பல்களும், கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.
இதுவரை ஏமன் அன்ஸாருல்லாஹ் நடத்திய கடல் தாக்குதல்களில், பலத்த சேதங்கள் அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு ஏற்பட்டதாகவும், அவற்றையெல்லாம் மூடி மறைத்து, சேதங்களை சத்தமில்லாமல் சரி செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. . இந்தப் போர்க்கப்பல்களில் ஏதாவது ஒன்று கடலில் மூழ்கிவிட்டால் அது, அமெரிக்காவுக்கு மிகப்பெருத்த அவமாக போய்விடும் என்பதில் ஐயம் ஏதாவது உங்களுக்கு இருந்தால், அதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.
------
ரஃபாவில் நடக்கும் இஸ்ரேலிய தாக்குதல், "பலனில்லாத மனிதாபிமான பேரழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். மற்றும், இந்த தாக்குதல் நடந்தால், அது இந்தப் போரில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்" என்று பிரான்சின் மக்ரோன் கூறுகிறார்.
நமது முந்தைய ஒரு வீடியோவில், இஸ்ரேலுக்கான சிவப்புக்கோடு எது என்பதை தெளிவுபடுத்தியிருந்தோம். ரஃபாவில் இஸ்ரேல் நடத்தும் பெருந்தாக்குதல், இஸ்ரேல் மீதான பல நுண்ணிய தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். அதைத்தொடர்ந்து மத்தியக்கிழக்கு முழுவதும் மட்டுமின்றி, அதையும் தாண்டி தீப்பிழம்புகள் பறக்கும் என்பது பற்றிய, நமது கருத்துக்களையே இன்று, ஃபிரான்ஸ் அதிபர் மாக்ரோனும் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
போர் துவங்கிய சில நாட்களிலேயே, ஹமாஸை அழிக்கமுடியாது என்று கணித்து விட்ட மேக்ரோன், இஸ்ரேல் பொதுமக்களை தாக்குவதில் இருந்து தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார். அதுமட்டுமின்றி. காசாவில் காஸாவில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க, கப்பல் மருத்துமனையை அனுப்பி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-----
யெடியோத் அஹ்ரோனோத் என்னும் ஒரு, இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்ட செய்தி என்னவென்றால் :.
இஸ்ரேல் ராணுவ சிப்பாய்கள் கொள்ளைகளில் ஈடுபட்டனர், வீடுகள் மீது குண்டு வீசினர், கைதிகளை சித்திரவதை செய்தனர் என்பதை, தலைமை படைத்தளபதி உட்பட, தலைமை இராணுவ அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். மற்றும், அவர்கள் எடுத்த வீடியோக்கள், சர்வதேச நீதிமன்றத்தில், இஸ்ரேலுக்கு எதிரான சாட்சிகளாக அமைந்திருந்தன என்று செய்தி வெளியிட்டுள்ளது.
Israel Broadcasting Corporation வெளியிட்ட செய்தி என்னவென்றால்,:
கிர்யாத் ஷ்மோனாவில், இருபத்தைந்து ஏவுகணைகள் வீசப்பட்டது. இதன் விளைவாக, பெருத்த சொத்து சேதம் ஏற்பட்டது மட்டுமின்றி, பெரிய அளவில் உயிர்ச்சேதமும் ஏற்பட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் செய்திகளை வெளியிட கடுமையான தடைகள் உள்ளன. அனைத்து செய்திகளும் தணிக்கை செய்யப்பட்டு, வெகு சில செய்திகளே வெளியிட அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பல செய்திகளுக்கு SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். நன்றி.
--------
Rafah Crisis, Gaza Crisis, Arabs Ban Airspace to US Attack, Yemen Houthi Attack, IDF Robbery, Middle East Crisis, War Update, Middle East War, Daniel Macron, Rafah Attack, Israel Genocide, Israel War Criminal
#RafahCrisis,# GazaCrisis, #ArabsBanAirspacetoUSAttack, #YemenHouthiAttack, #IDFRobbery, #MiddleEastCrisis, #WarUpdate, #MiddleEastWar, #DanielMacron, #RafahAttack, #IsraelGenocide, #IsraelWarCriminal
No comments:
Post a Comment