இஸ்ரேலுக்கு எதிராக, சட்டென கொதித்தெழுந்த German Chancellor Olaf Scholz.
எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். I C Jயின் புதிய பதில் சவுத் ஆப்பிரிக்காவுக்கு.
இஸ்ரேல் இனி ஃரபாஹ் எல்லையில் தாக்குதல் நடத்தாது.
காசாப்போரில் அரேபியப் பின்னணி
தொடரும் கசாப்போர், ரஃபாஹ் மக்களின் வேதனைகள், இஸ்ரேலிய பயங்கரவாத அட்டூழியங்கள், மத்தியக்கிழக்கின் அரசியல் சூழ்நிலைகள், ஈரானின் நிலைப்பாடு, அரபு நாடுகளின் மன்னராட்சி முறைகள் போன்றவற்றை தொகுத்து வழங்கும் ஒரு செய்தி ஊடகம் உங்களை மனமகிழ்வுடன் வரவேற்கிறது.
----
ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், காசாவில், இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கிற இனப்படுகொலையில், மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை கையாண்ட விதத்திற்காக, மேற்கத்திய நாடுகளை விமர்சித்ததுடன், முதல் நாளில் இருந்தே அத்து மீறி வரும் இஸ்ரேல், சர்வதேச சட்டத்தை மதிக்குமாறு "இஸ்ரேலை" வலியுறுத்தி இருக்கிறார். இஸ்ரேலை வலியுறுத்துவது எல்லாம் சரி, இவரும் மேற்கத்தியர்தானே. அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜெர்மனி நாட்டின் அதிபர். இவரை யார் வலியுறுத்துவது? "ஆடுகள் நனைகிறதே என்று, ஓநாய்கள் அழுததாம்" என்கிற பழமொழிதானே நினைவுக்கு வருகிறது?
சற்று யோசித்துப்பாருங்கள், இஸ்ரேலை கண்டிப்பதில் என்ன பயம் இருக்கிறது இவர்களுக்கு? இஸ்ரேல் மீது பொருளாதாரத்தடை விதிப்பதற்கு என்ன பயம் இவர்களுக்கு? காசா மக்களுக்கான நிவாரனப்பொருள்களை, நேரடியாக விமானத்தில் ஏற்றிச்சென்று, காஸாவில் இறக்க என்ன பயம் இவர்களுக்கு? மருத்துவர்களையும், மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் காஸாவுக்கு எடுத்துச்செல்வதில் என்ன தடை இருக்கிறது இவர்களுக்கு? பாலஸ்தீன மக்களுக்கு உதவக்கூடிய U N R W Aக்கு சேரவேண்டிய பொருளாதார உதவிகளை நிறுத்தியது ஏன்? எல்லாமே வேடங்கள்தான். நல்லவர்கள் போல காட்டிக்கொள்வார்கள், கூடவே இருப்பார்கள். நேரம் வரும்போது முதுகில் குத்திவிட்டு எனக்குத் தெரியாது, உனக்குத்தெரியாது என்று சொல்லி விட்டுப்போய் விடுவார்கள். இவர்கள் எல்லாம் உலகத்தலைவர்கள். ஊடகங்களும் இவர்களைத்தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். என்ன கொடுமை சார்,? போங்க.
-----
எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஃரபாஹ் எல்லையில் இஸ்ரேல் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் இனப்படுகொலை நடக்காமல் தடுக்க அவரச ஆணை பிறப்பிக்கவேண்டி, தென்னாப்பிரிக்கா ICJ இடம் முறை இட்டதற்கு, அப்படி ஒரு ஆணை ஃரபாஹ் தாக்குதல்களுக்கு தேவையில்லை என்று கூறிவிட்டது.
அதாவது ICJ நியாயமாகப்பேசுவது போல பேசும். அதை யாரும் கேட்காவிட்டாலும் கவலைப்படாது. மேலும், முக்கியமான நேரத்திலும் கூடவே இருந்து முதுகில் குத்திவிடும். இந்த ICC ICJ எல்லாம் அவங்க ஆளுங்க. அவங்கதாங்க இவங்களுக்கு எல்லாம் சம்பளமும், பதவியும் இதர வசதிகளும் செஞ்சு தர்றாங்க. இவங்க எப்படீங்க முதலாளிகளுக்கு எதிரே தீர்ப்பு சொல்லுவாங்க? உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வார்களா? செய்யத்தான் உடுவாங்களா? எல்லாம் கண்துடைப்புதாங்க...
-----
ரஃபாஹ் எல்லையில் இஸ்ரேல் நடத்தக்கூடிய பெரியதாக்குதல்கள்தான், இஸ்ரேலின் அழிவுக்கான சிவப்புக்கோடு என்று நாம் தொடர்ந்து எமது காணொளிகளில் சொல்லி வருகிறோம். நேற்று இம்மானுவல் மேக்ரோனும் இதே கருத்தைத்தான் பதிவு செய்திருந்தார். ஃரபாஹ் எல்லையில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தினால், ஈரான் நேரடியாக தாக்குதல்கள் நடத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதைத்தொடர்ந்து ஈரான் மத்தியகிழக்கு முழுவதும் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உண்மையே. இதனால் அமெரிக்காவும் பெரிய அளவில் பதிலடிகள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. ஆனால் அமெரிக்க நிலைகள்மீது விழக்கூடிய அடிகள், அமேரிக்காவுக்கு மத்திய கிழக்கில் விழும் இடியாக இருக்கும் என்பதும் உண்மையே.
இந்த நிலையில், பயங்கரவாத போதையிலிருந்து, சற்று புத்தி தெளிந்து சுதாரித்துக்கொண்ட இஸ்ரேல், ரஃபாஹ்வில், தரைவழித் தாக்குதல்களை இனி நடத்தாது. ஈரானின் தயார் நிலை, அமெரிக்காவின் தலையீடு சுறுக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் அரசாங்கத்துக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது..
இந்த செய்தியை, லெபனானில் இருந்து வரும் அல்மயாதீன் தொலைக்காட்சியும் உறுதி செய்துள்ளது.
ஆனாலும், வாழ்வா சாவா என்ற நிலையில், குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் இஸ்ரேல், அமேரிக்காவின் ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றால். தாக்குதல் நடத்தத் தயங்காது என்பதை மறுக்க முடியாது. இன்று அமேரிக்கா மத்தியக்கிழக்கில் காலூன்றி நின்றிருக்கிறது என்றால், அதற்குக்காரணம் இஸ்ரேல்தான். இஸ்ரேல் இல்லையென்றால், மத்தியக்கிழக்கில் அமேரிக்கா இல்லை. மத்தியகிழக்கு இல்லையென்றால், அமெரிக்காவில் பொருளாதாரம் இல்லை. பொருளாதாரம் இல்லையென்றால் அமேரிக்கா ஒரு சூப்பர் பவர் இல்லை. சூப்பர் பவர் இல்லையென்றால், அமெரிக்காவை கண்டுகொள்வார் யாருமில்லை. அமெரிக்காவை யாரும் கண்டுகொள்ளவில்லையென்றால், மீண்டும் மத்தியக்கிழக்கு நாடுகளை மிரட்டும்.இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொடுக்கும். இந்த சக்கரம் சுழன்றுகொண்டேதான் இருக்கும்.
மத்தியக்கிழக்கில் இஸ்ரேல் இருக்கும்வரை, இந்த சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். இந்த சக்கரத்தின் அச்சாக இருப்பது இஸ்ரேலின் பயங்கரவாதம். கொசுத்தொல்லைகளைப்போல அங்கங்கே சிறுசிறு தாக்குதல்களை நடத்தி இஸ்ரேலை ஒழிக்க முடியாது. கசாவுக்குள் நடத்தப்பட்டுள்ள நாசங்களுக்கு இணையான நாசங்கள், பயங்கரவாதத் தலைநகரான டெல்அவிவிலும் நடைபெறவேண்டும். ரஃபாஹ்வில் இஸ்ரேல் நடக்கவிருக்கும் பெருந்தாக்குதல்கள் இஸ்ரேலை இந்த நிலைமைக்கு கொண்டு செல்லலாம். ஈரான் செய்தால், ஈரானுக்கும் ஏராளமான இழப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியாது.
ஈரான் அழிந்துவிட்டால், அரபு மன்னர்கள் என்ன நினைப்பார்கள் ? ஈரானில் எழுந்த இஸ்லாமிய எழுச்சியைப்போல, தங்கள் நாட்டிலும் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டுவிடுமோ? தங்கள் அரசாட்சி பறிபோய்விடுமோ என்று, முன்னரே பயந்திருந்த அரபு மன்னர்கள், ஈரான் ஒரு முஸ்லீம் நாடே அல்ல என்று பிரச்சாரம் செய்து வந்தார்கள், வஹாபிசம் என்ற ஒரு கடும்போக்கு அமைப்பை உருவாக்கி, இதற்க்காகப் பயன்படுத்திக்கொண்டார்கள். மேலும் இந்த வஹாபிசம் என்பதே பயங்கரவாத யூதர்களின் கண்டுபிடிப்பு என்று பல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த வஹாபிசம் அமைப்பின் பல பெயர்களிலுள்ள கிளைகள், முஸ்லிம்கள் மீதும், முஸ்லீம் அல்லாதவர்களின் மீதும், தீவிரவாத தாக்குதல்களை நடத்தி, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, இஸ்லாம் எல்லோருக்குமான ஒரு மார்க்கம் அல்ல, அது தீவிரவாதத்தை போதிக்கிறது என்று, பொய்பிரச்சாரங்களை அத்தாட்சியுடன் சமர்ப்பித்து, இஸ்லாத்தை ஒழிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டன. தற்போதுகூட தமிழ்ப்படங்களில்கூட, தொப்பி அணிந்த, தாடி வைத்துக்கொண்டுள்ள, தொழுகை முடித்து எழுந்து வரும் ஒரு நபர், தீவிரவாதியாக, கொலை கொள்ளைகளுக்கு ஆணையிடும் ஒரு சமூக விரோதிபோல சித்தரிக்கப்படுவதை நாம் காண்கிறோம், இதுபோன்ற பொய்ப்பிரச்சாரங்களுக்கு, உலகம் முழுவதும், பல லட்சம் கோடி ரூபாய்கள் செலவு செய்யப்படுகிறதாம்.
ஒன்றை நினைவில் வையுங்கள். பாலஸ்தீனம் உள்பட. மத்தியக்கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளும் அரபுநாடுகளே. ஆனால் ஈரான் மற்றும் துருக்கி ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் அரபு நாடுகள் கிடையாது. பலநூறு ஆண்டுகளாக இந்த அரபிகள், அரபு நாடுகளை ஆளும் அரச குடும்பங்கள், தமது சந்ததிகளே தொடர்ந்து ஆட்சியில் இருக்கவேண்டும் என்றும், தங்கள் வம்சாவளிகளின் சொத்தாகவே இந்த நாடுகள் இருக்கவேண்டும் என்றும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த அளவற்ற பேராசையின் காரணமாக, தங்களையும் தங்கள் சந்ததிகளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, இஸ்லாத்தையும், அதன் மாண்பையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், ஈமான் என்கிற உறுதியான நம்பிக்கையையும், இந்த உலக வாழ்க்கை, சுய நலத்திற்காகவும், சுய வளத்திற்காகவும், சுய முன்னேற்றத்திற்காகவும் அல்ல என்பதை மறந்து. இஸ்லாம் போதிக்கும் எளிமையான வாழ்க்கையை அறவே மறந்து, இஸ்லாம் காட்டும் நீதி நெறிகளிலிருந்து முழுவதுமாக விலகிச்சென்று விட்டார்கள், ஷரியத் சட்டங்களை, தமக்கு சாதகமாக மாற்றி. அரேபிய மக்களை எழுச்சி கொள்ள விடாமல், அதாவது நல்ல, உண்மையான, தூய முஸ்லிம்களாக வாழ விடாமல், தங்கள் அரச குடும்பங்களுக்கு கீழ்ப்படிந்து வாழக்கூடிய, செம்மறி ஆட்டுமந்தைகளாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அரசனானாலும் ஆண்டியானாலும் அனைவரும் சமமே என்னும், இஸ்லாம் காட்டும் எளிமையான, வலிமையான வாழ்க்கை நெறிமுறையை, உலகம் முழுவதும் விதைக்கத்தவறி விட்டார்கள். தங்கள் சகோதரர்கள் பாலஸ்தீனத்தில் அடிபட, தங்கள்மீதும் அடி பட்டுவிடக்கூடாது என்று பயந்து, பதுங்கி, அமெரிக்க மற்றும் மேற்கத்தியர்களின் ஆயுதங்களின் கீழ் பணிந்து, மண்டியிட்டு வீழ்ந்து கிடக்கிறார்கள்.
இந்த நிலையில், அரபு நாடல்லாத ஈரான் நாடு, பாலஸ்தீன அரபிக்களுக்காக, இல்லை இல்லை, பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்காக கொதிக்கிறார்கள். எவ்வளவு பணக்கார அரபு நாடுகள் செல்வச்செழுப்புடன், சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். அந்த அரபு நாடுகள், இந்த பாலஸ்தீன அரபு மக்களை காப்பாற்றட்டும் என்று சும்மா இருக்காமல், அரபிக்கள் என்ற இனப்பார்வையை புறம் தள்ளிவிட்டு, முஸ்லிம்கள் என்ற சகோதரப்பார்வையை முன்வைத்து, பாலஸ்தீன மக்களுக்கு தமது சக்தியையும் தாண்டி உதவ நினைக்கிறார்கள். பல வல்லரசு நாடுகளுக்கும், அதன் ஆயுதங்களுக்கும், அதன் பொருளாதார அழுத்தங்களுக்கும் பயப்படாமல், இஸ்லாத்தின் மேலான வழிகாட்டுதல்களுடன், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, ஒற்றை நாடாக களத்தில் நிற்கிறார்கள். உண்மையாய் நிற்கவேண்டிய பதினெட்டு அரபு நாடுகள் எங்கே? நம்பிக்கையின் ஊற்றாக நின்று, "பதுறுப் போர்க்களம் கண்ட", வெற்றி என்னும் மேன்மையை அடைந்த மண்ணா, தற்போதைய அரபு மண்?
மக்களே சிந்திப்பீர். அரபு மன்னர்கள் ஒழிந்தால்தான் இஸ்லாத்திற்கு பொழிவு, இல்லையென்றால் அழிவு என்கிற எமது வாதம் சரியா தவறா என்று நீங்கள் கூறுங்கள், நீங்கள் அனைவரும் படித்தவர்கள், அறிவாளிகள், சிந்தனா சக்தி நிறைந்தவர்கள், எங்கள் வாதம் தவறு என்று நீங்கள் கூறினால் நாங்கள் திருத்திக் கொள்கிறோம். இது ஓரு, தனிமனித எண்ணங்களின், தன்னிச்சையான சிந்தனைகளின் பகிர்வுதான். எனவே, உங்களது சிந்தனையை எங்களுடன் பகிருங்கள். comment மூலமாக. நன்றி.
---
#ArabRulers #ArabKings #MiddleEastPolitics #ArabPolitics #IranPolitics #PalestineStruggle #GazaStruggle #GazaCrisis #Vahabism #Terrorism #MuslimConspiracy #WarAlarm, #WarCriminals #ThreattoIslam
Arab Rulers, Arab Kings, Middle East Politics, Arab Politics, Iran Politics Palestine Struggle, Gaza Struggle, Gaza Crisis, Vahabism, Terrorism, Muslim Conspiracy War Alarm, War Criminals, Threat to Islam
No comments:
Post a Comment