Sunday, 18 February 2024

UN Article 6 ஐப் பயன்படுத்தி, ஐ நா விலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுங்கள...


இஸ்ரேலுக்கு அதிக அளவில் ஆயுதங்கள் அளிக்கும் அமேரிக்கா.

அல்ஜீரியா, ஐ நாவில் கொண்டுவந்த போர்நிறுத்த தீர்மானம்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக வீட்டோ, அமேரிக்கா கொக்கரிப்பு.

UN Article 6 ஐப் பயன்படுத்தி, ஐ நா விலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுங்கள். இது உங்களைப்போன்ற, உலகநலம் விரும்பிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு.

U N Article ஆறு என்றால் என்ன?

"தற்போதைய சாசனத்தில் உள்ள கொள்கைகளை தொடர்ந்து மீறும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் ஒருவர், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் பொதுச் சபையால் அமைப்பிலிருந்து வெளியேற்றப்படலாம்."

சட்டப்பிரிவு ஆறை ஏன் பயன்படுத்த வேண்டும்?

ஐ.நா. சபையின் பெரும்பான்மை உறுப்பு நாடுகளால், ஆதரவாக வாக்களிக்கப்பட்ட எந்தவொரு போர்நிறுத்தத்திலும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம், பாலஸ்தீனத்திலும் உலகளவிலும், அமைதி மற்றும் நீதிக்கு, மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது. அமெரிக்கா வெளியேறினால், போர் நிறுத்தம் நடக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரை நீக்க முடியுமா?

ஐ.நா. சாசனத்தின், ஆறாவது அத்தியாயம் இரண்டின் கீழ், ஐ நா சாசனத்தின் கொள்கைகளை, ஒரு உறுப்பு நாடு தொடர்ந்து மீறும் போது, ஐ நா உறுப்பு நாடு அமைப்பிலிருந்து வெளியேற்றப்படலாம்.

ஐ.நா. சாசனத்தை அமெரிக்கா தொடர்ந்து மீறுகிறதா?

ஐ.நா. நிறுவப்பட்டதிலிருந்து எழுபத்தைந்து ஆண்டுகளில், ஐக்கிய அமெரிக்க அரசுகள் செய்ததைப் போல, வேறு எந்த நாடும் ஐ.நா சாசனத்தின் கொள்கைகளை மீறியதில்லை.

 U N Article ஆறை  செயல்படுத்த நான் எவ்வாறு உதவ முடியும்?

முடியக்கூடிய, சாத்தியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். சமூக ஊடகங்களில் #ExpelUSAfromUN  மற்றும்   #InvokeArticle6 என்னும் ஹேஷ்டேகுகளைப் பகிரவும். 

பிறகு, w w w .invokethe6th.org என்னும் வெப்சைட்டில் உள்ள மனுவில் பதிவிடுங்கள்.

காஸா அழிக்கப்பட்டு வருகிறது. 

அமெரிக்கா ஐ.நா.வின் ஒரு பகுதியாக இருக்கும் வரை, ஒரு சுதந்திர பாலஸ்தீனிய நாடு ஒருபுறம் இருக்க, ஒரு நீடித்த போர் நிறுத்தத்தைக்கூட நாம் காண முடியாது. 

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள், போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க பல முயற்சிகளை மேற்கொண்டன, அதே நேரத்தில், அமெரிக்கா மீண்டும் மீண்டும் அத்தகைய வாக்குகளை வீட்டோ செய்கிறது, அல்லது புறக்கணிக்கிறது.

உண்மையில், மிக அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டம், போர் நிறுத்த நோக்கத்திற்காக கூட்டப்பட்டது, பின்னர், தீர்மானத்தின் "வார்த்தைகள்" காரணமாக, அமெரிக்காவால் பல நாட்கள் தாமதப்படுத்தப்பட்டது, ஆனால், அது மனிதாபிமான உதவி நீர்த்துப் போவதற்காகச் செய்யப்பட்டது, எனவே, போர் நிறுத்தம் ஏற்படவில்லை. காஸாவில் மக்கள், ஒவ்வொரு நிமிடமும் இறந்து கொண்டிருக்கையில், போர்நிறுத்தத்திற்க்காக கொண்டுவந்த தீர்மானத்தில் வாக்களிப்பதைத் தவிர்ப்பதற்கு, அவர்கள் வலியுறுத்திய அதே தீர்மானம் "திருத்தப்பட வேண்டும்" என்று வேண்டுமென்றே வீட்டோவின் மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்படுகிறது.

எனவே ஐ நாவிலிருந்து அமெரிக்காவை வெளியேற்ற வாக்களிப்பீர். 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் புதிய போர் நிறுத்த தீர்மானத்தை, தனது  வீட்டோ அதிகாரத்தைப்  பயன்படுத்தித் தடுப்போம். அமெரிக்கா கொக்கரிப்பு.

காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று,  அல்ஜீரியாவால் முன்வைக்கப்பட்ட, புதிய ஐ நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தித் தடுக்க  அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

போர் நிறுத்தம் மற்றும், கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற ஹமாஸின் கோரிக்கைகளை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார்.  போர்நிறுத்தம் என்பது ஒரு கனவு என்றும், "மாயை" என்று அறிவித்துள்ளார்.

மேலும் ரஃபாஹ்வில் தாக்குதல் நடத்தாமல் வெற்றியடைய முடியாது என்றும், போர் முழுமை அடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

காஸாவில், டெய்ர் அல்-பலா மற்றும், ரஃபா விளிம்புகளில் உள்ள, விவசாய நிலங்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல்களில், குறைந்தது பத்து  பாலஸ்தீனியர்கள், ஒரே இரவில் கொல்லப்பட்டனர் என்று, வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கான் யூனிஸில் உள்ள, நாசர் மருத்துவமனையில் "ஏராளமான தொழிலாளர்களை" இஸ்ரேலிய படைகள் கைது செய்துள்ளதாக, காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள ரஃபா நகரில், இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை முன்னெடுப்பதாக நெதன்யாகு அளித்த வாக்குறுதியை, பாலஸ்தீனத்திற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் விமர்சித்துள்ளார்.

"காஸாவில் சிக்கியுள்ள மக்கள் எதிர்கொள்ளும், இடைவிடாத வேதனைகளுக்கு மத்தியில், ரஃபா, பாலஸ்தீனியர்களின் இருப்பின் கடைசி வரிசையாக நிற்கிறது" என்று பிரான்செசா அல்பானீஸ் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"இன்னொரு நக்பாவை நாம் எப்படி அனுமதிக்க முடியும்? நிஜமாகவே நாம் புத்தி பேதலித்து விட்டோமா? என்று கேள்வி எழுப்புகிறார்."

நக்பா என்பது இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் வெற்றியைக் குறிப்பது. கடந்தமுறை ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழில் நடந்த நக்பாவில், நிராயுதபாணிகளான எண்ணற்ற பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, அடித்து துரத்தப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.  இப்படி வெளியேற்றப்பட்டவர்களின் ஒரு பகுதியினர்தான் இன்று ஜோர்டான் எல்லையில் உள்ள மேற்குக்கரைப் பகுதியிலும், எகிப்து எல்லையில் உள்ள காசாப்பகுதியிலும் வசிக்கிறார்கள். இப்போது காசா காலியாகிவிட்டால், அங்கிருந்து இஸ்ரேல் பயங்கரவாதிகள், எகிப்துக்குள் ஊடுருவுவார்கள் என்பதில் ஐயமில்லை.

W H O எனப்படும், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல், டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது.:

"Gazaவிலுள்ள நாசர் மருத்துவமனையில், ஒரு வாரகாலமாக இடப்பட்ட முற்றுகையைத் தொடர்ந்து, தற்போது நடந்து வரும் சோதனைக்குப் பிறகு, மருத்துவமனை இப்போது செயல்படவில்லை. 

நேற்றும், அதற்கு முந்தைய நாளும், நோயாளிகளின் நிலைமைகள் மற்றும், முக்கிய மருத்துவ தேவைகளை மதிப்பிடுவதற்காக, உலக சுகாதார அமைப்பின் குழு உறுப்பினர்கள், மருத்துவமனைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை,

மருத்துவமனையில் இன்னும் சுமார், இருநூறு நோயாளிகள் உள்ளனர். குறைந்தது இருபது பேரையாவது அவசரமாக வேறு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

--

காஸாவில் பேயாட்டம் ஆடும் இஸ்ரேலின், பயங்கரவாத செயல்கலைக்கண்டு பொறுமை இழந்த, பிரேசிலின் பிரதமர், இனாசியோ லூலா டா சில்வா, வெளியிட்ட அறிக்கை வருமாறு.:  

வீட்டோ அதிகாரம் முடிவுக்கு வர வேண்டும், ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்கள், அமைதிவாத வீரர்களாக இருக்க வேண்டும், போரைத் தூண்டும் நடிகர்களாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

தகுதியில்லாதவர்களின்  கைவசம் இருக்கும் வீட்டோ அதிகாரம், நாய் படாத பாடுபடுகிறது.  இந்த நயவஞ்சகர்கள், சிறப்பு அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு நல்லவர்கள் போல நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நல்லதை அநியாயமானதாகப் பிரச்சாரம் செய்துவிட்டு, அநியாயத்தை நல்லதென்று, அதனுடன் கொஞ்சிக்குலாவி கீழ்த்தரமங்க நடந்து கொள்கிறார்ககள். இவர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசும் மிகப்பெரிய வேடதாரிகள்.

---

 ஹீப்ரு செய்தித்தாள் "இஸ்ரேல் ஹயோம்" வெளியிட்ட செய்தியில், முழு Hamas உயரடுக்கினரும், யஹ்யா சின்வார், முஹம்மது அல்-டெய்ஃப் மற்றும் மர்வான் இஸ்ஸா ஆகியோர்  இன்னும் உயிருடன் உள்ளனர், அவர்கள் தொடர்ந்து வேலை செய்கிறார்கள், திட்டமிடுகிறார்கள், தாக்குதல் நடத்துகிறார்கள். இது "இஸ்ரேலுக்கு" ஒரு பரிதாபகரமான தோல்வியைக் குறிக்கிறது என்று குறிப்பிடுகிறது..

கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில், காசா பகுதியில் நடந்த சண்டைகளில், இருப்பது I D F படையினரும் அதிகாரிகளும் காயமடைந்ததாக ஆக்கிரமிப்பு இராணுவம் அறிவிக்கிறது.

மாரிவின் செய்திகளின் கூற்றுப்படி, தெற்கு லெபனானில் இருந்து, சஃபேத்தில் உள்ள, வடக்கு மாவட்ட கட்டளையகத்தின் மீது, சமீபத்தில் நடந்த குண்டுவீச்சின் விளைவாக, பத்து  இஸ்ரேல் ராணுவ வீரர்கள் / அதிகாரிகள் காயமடைந்தனர்  என்று குறிப்பிட்டுள்ளது.

---

இந்த உலகை மதிக்காமல், இந்த உலகம் முழுவதும் இனைந்து கூறும் ஒரு வார்த்தையான, பாலஸ்தீனத்துக்கு என்று ஒரு தனி நாடு, என்ற கோர்ஸை, நிராகரித்துள்ளது. இன்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில், பாலஸ்தீன நாட்டை உருவாக்கும் வெளிநாட்டு சக்திகளின், எந்தவொரு முயற்சியையும், நாடு "முற்றிலுமாக நிராகரிக்கிறது" என்று அறிவிக்கும் ஒரு நடவடிக்கைக்கு,  அரசாங்கம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை, அமைச்சரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில், நெதன்யாகு இந்த நடவடிக்கையை அறிவித்தார். காசாவில் ஹமாஸுக்கு எதிரான போருக்குப் பிறகு, ஐ.நா சபை மற்றும், அமெரிக்க  ஜனாதிபதி பைடனின் நிர்வாகத்தில் உள்ள பல்வேறு சக்திகள் கூட, இஸ்ரேலை இரண்டு நாடுககள் தீர்வை ஏற்க வலியுறுத்தியுள்ள போதிலும், இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

.

What is Article 6:

“A Member of the United Nations who has persistently violated the Principles contained in the present Charter may be expelled from the Organization by the General Assembly upon the recommendation of the Security Council.”

Why Invoke Article 6?

The US has been the single greatest obstacle to peace and justice in Palestine and globally by abusing its VETO power on any ceasefire voted in favour by majority of UN members. If USA is out, ceasefire is on.

Can a permanent member of the UN security council be expelled?

Expulsion from the UN ecf procedure under article 6 chapter II, of the UN charter when a member state of the UN can be expelled from the organisation when a member state has persistently violated the principles of the United Nations charter.

Has the USA bean persistently violating the UN charter?

In the 75 years Since the UN was founded, no country has violated the principles of the UN charter more than the United States of America did.

How can I help invoke article 6?

Elevate awareness of the possibility. Share  hashtags #ExpelUSAfronUN #InvokeArticle6 on Social Media. 

Sign petition at www.invokethe6th.org


No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...