Monday, 19 February 2024

சுட்டு வீழ்த்தப்பட்ட MQ9 விமானம் செயலிழந்த பிரிட்டிஷ் கப்பல் RUBYMAR எ...


 ஏமன் தாக்குதல், சுட்டு வீழ்த்தப்பட்ட MQ9 விமானம். 

செயலிழந்த Rubymar என்னும் பிரிட்டிஷ் கப்பல். 

எட்டி குதித்து  தப்பி பிழைத்து ஓடிய மாலுமிகள்.

பசிக்கு ரொட்டி தயாரிக்க கோழித்தீவனங்களை சேகரிக்கும் காசா மக்கள்.

Yemeni ஆயுதப் படைகளின் இராணுவ செய்தித் தொடர்பாளர் சற்று முன்பு வெளியிட்ட செய்தி.: ஹூதைதா என்ற இடத்தில், அமெரிக்காவின் எம் க்யூ நைன்  ரக விமானம் ஒன்று, தகுந்த ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஏடன் வளைகுடாவில், rubymar பிரிட்டிஷ் கப்பலை குறிவைத்து, பல ஏவுகணைகளைக் கொண்டு, தரமான இராணுவ நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம். இந்த தாக்குதலின் காரணமாக, பிரிட்டிஷ் கப்பல் பலத்த சேதமடைந்து செயல்பாடுகளை இழந்ததால், அந்தக் கப்பல் முற்றிலுமாக செயல்பாடின்றி நிறுத்தப்பட்டது.

தாக்குதல் மிகத்துல்லியமானதாக இருந்ததால், கப்பலுக்கு ஏற்பட்ட பெரிய அளவிலான சேதத்தின் விளைவாக, தாக்கப்பட்ட அந்தக் கப்பல், ஏடன் வளைகுடாவில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, பிரிட்டிஷ் கப்பலின் குழுவினர் பாதுகாப்பாக வெளியேறுவதை நாங்கள் உறுதி செய்தோம்.  இந்தத் தாக்குதல்கள் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும்வரையில் தொடரும். மேலும், இந்தத்தாக்குதல்களை அதிகப்படுத்த நாங்கள் சிறிதும் தயங்கமாட்டோம்  என்று யெமனிலிருந்து யஹ்யாசாரீ தெரிவித்துள்ளார்.

காஸாவுக்கு, மனிதாபிமானப் பொருள்களை ஏற்றிவரும் வண்டிகள், இஸ்ரேலிய பயங்கராவாதிகளால், தடுத்து நிறுத்தப்படும் நிலையில், அங்குள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கும், மிகுந்த துன்பத்தை அடைந்து வருகிறார்கள், இந்நிலையில், வடக்கு காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள், சமைத்து உன்ன மாவுப்பொருள்கள்கூட இல்லாமல்,  ஏற்பட்டுள்ள கடும் பஞ்சத்தின் காரணமாக, பசிக்கு ரொட்டி தயாரிக்க, கோழிகளை கொழுக்க வைக்கும் தானியங்களை அதாவது கோழித்தீவனங்களை சேகரித்து வருகின்றனர். 

பாலஸ்தீன அரசியலில், ஹமாஸ் போராளிகளின்  இயக்கம், பிரிக்க முடியாத பகுதி என்றும், ஹமாஸை இஸ்ரேலால் ஒழிக்க முடியாது என்றும், பாலஸ்தீன பிரதமர் முகமது ஷடாயே தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனிய ஆணையம் (பிஏ), ஹமாஸுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது, ஏனென்றால்,, ஹமாஸ் பாலஸ்தீனிய அரசியலில், பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும், மேலும் நாங்கள், (பாலஸ்தீனிய பிரிவுகள்), அரசியலில் ஒன்றுபட வேண்டும்" என்று, ஞாயிற்றுக்கிழமை, முனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஷடாயே கூறினார். இந்த ஷடாயே, பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை  பிரதம மந்திரி ஆவார்.

பாலஸ்தீனிய பகுதிகள்  அனைத்திலும், தேர்தல்களை நடத்த, பாலஸ்தீன அதிகாரம் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார். அவ்வாறு தேர்தல் நடந்தால், தொண்ணூறு சதவீதம் வாக்குகளுடன், ஹமாஸ் வெற்றிபெற பெரும் வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னும், பாலஸ்தீனர்கள் நம்பும் ஒரே அமைப்பு ஹமாஸ் போராளிகளின் அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதற்கிடையில், February  இருபத்தாறு  அன்று, ரஸ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்,த அனைத்து பாலஸ்தீனிய பிரிவுகளுக்கும் ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது என்பதை, ஷ்தாயே உறுதிப்படுத்தினார்.  

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளில்,  சட்டவிரோத இஸ்ரேலிய கொள்கைகள் குறித்து, ஐம்பத்திரெண்டு  நாடுகளின் விளக்கங்களை கேட்க I C J, இன்று முதல் ஆறு நாட்கள் நீடிக்கும், ஒரு விசாரணையை துவங்குகிறது.

ரஃபாஹ்வில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மனத்தில் கொண்டு, அங்கே தாக்குதல் நடத்தக்கூடாது என்று அவசர ஆணை வெளியிடும்படி, கடந்தவாரம் தென்னப்பிரிக்கா கேட்டிருந்தபோதும், ஐ சி ஜே அதை நிராகரித்த நிலையில், தற்போது ஆறு நாட்களுக்கான விசாரணையை துவக்கி உள்ளது. இந்த விசாரணையில், அதிக பட்ச ஐம்பத்தி இரண்டு நாடுகளின் விளக்கங்கள் கேற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐ சி ஜே, எல்லா விசாரணைகளையும் முடித்த பின் வெளியிடும் தீர்ப்புகளை, முன்னின்று நிறைவேற்றப் போவது யார்?  அவ்வாறு யாருக்கும் நிறைவேற்றக்கூடிய திடம் இல்லையென்றால், ஐ சி ஜேயால் எண்ண பயன்?

ஏற்கெனவே குற்றவாளியான இஸ்ரேலும், அந்த குற்றவாளியின் சகாக்களான அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஐ சி ஜே வை மதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலஸ்தீன தனி நாடு கோரிக்கையில், அமெரிக்காவாவது, ஐநாவாவது, மண்ணாவது. இந்த உலகிலிருந்து யார் எங்களைக் கட்டாயப்படுத்தினாலும், நாங்கள் கேட்க மாட்டோம் என்று, நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்க்கது.

ஈரானின் இரண்டு போர்க்கப்பல்கள் முறையே, தியாகி ஹசன் பகேரி மற்றும் தியாகி சையத் ஷிராசி ஆகியவை  ஐ ஆர் ஜி சி என்று அழைக்கப்படுகிற Iran Revolutionary Guards Corpsன் கடற்படையில் இணைந்துள்ளன. இந்த இரண்டு போர்க்கப்பல்களுக்கும் ஈரான் கடற்படைக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.

ஈரானின் கடற்படை பிரிட்டிஷ் கடற்படையை விட வலிமை வாய்ந்ததும், இஸ்ரேலிய கடல்படையைவிட பலமடங்கு பெரியதும் ஆகும். சில வருடங்களுக்கு முன்பு, பிரிட்டனுடைய குறும்புகள் காரணமாக, மிகப்பெரிய ஆயில் டேங்கர் கப்பலை, ஈரான் பல மாதங்கள் சிறை பிடித்து வைத்திருந்ததும், பின் பிரிட்டன் கெஞ்சிக்கூத்தாடி, மீட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காஸாவில் போராளிகள் நடத்திய தாக்குதல்கள்.

இன்று காஸாவில், ஒரு கட்டிடத்தில் தஞ்சம் புகுந்திருந்த பதினைந்து I D F அதிகாரிகள் மற்றும், சிப்பாய்களைக் கொண்ட இஸ்ரேலிய  படையை, டாங்கி எதிர்ப்பு ஆர் P  ஜி மற்றும், மற்றொரு ஆளணி எதிர்ப்பு ராக்கெட் மூலம், தாக்குதல் நடத்தியதை  உறுதிப்படுத்தியது. 

தெற்கு காசா பகுதியில், கான் யூனிஸுக்கு மேற்கே உள்ள, ஹவாஸ் பகுதியில், இஸ்ரேலிய  ராணுவ படையைச் சுற்றி, தீ பற்றி எரிந்த பின்னர், தங்கள் படையினரின் அலறல்களைக் கேட்டதாகவும், அவர்களில் பலர் கொல்லப்பட்டவர்கள் என்றும், மற்றும் பலர் காயமடைந்தவர்கள் என்றும் கஸ்ஸாம் போராளிகள் உறுதிப்படுத்தினர்.


No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...