அமெரிக்க பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம் போர் நிறுத்த தீர்மானத்தை VETO செய்த அமேரிக்கா.
சொல்லொணாக் கொடூரங்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையின் அடையாளமாக, ரஃபாவின் வானத்தை நிரப்பும் காத்தாடிகள்
ஹமாஸ், ஹெஸ்பொல்லாஹ் நடத்தும் தொடர் தாக்குதல்கள், காசாவிலிருந்து ஹெலிகாப்டர்களில் அள்ளிச் செல்லப்படும் இஸ்ரேல் பயங்கரவாதிகளின் இறந்த மற்றும் படுகாயமடைந்த உடல்கள்.
விடிவின்றி பசியில் வாடும் காசா மக்கள்.
------
காஸா மீதான இஸ்ரேலின் பயங்கவாத போருக்கு மத்தியில், நம்பிக்கையின் அடையாளமாக, ரஃபாவின் வானத்தை நிரப்பும் காத்தாடிகள்.
ரஃபாவின் பயங்கரமான, நெரிசலான முகாம்களில், குழந்தைகள் மேலே வானத்தில் பட்டன்களை பறக்கவிட்டு, ஒரு பிரகாசமான விளையாட்டு மற்றும், புன்னகையைக் காண்கிறார்கள்.
ரஃபாவின் வானத்தில் பறக்கும், வண்ணமயமான காத்தாடிகள். அவை பறக்கும் யதார்த்தத்தை பொய்யாக்குகின்றன: இறுக்கமாக, ஒன்றாக நிரம்பிய கிழிந்த கூடாரங்கள், உணவு, தண்ணீர் மற்றும் விறகு ஆகியவற்றைத் தேடி மக்கள் வரிசையாக நிற்கிறார்கள். உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகள், பறக்கும் அதிசயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, களைத்துப் போன முகங்களில் சிறு புன்னகை தவழ்கிறது.
காஸா மீதான இஸ்ரேலின் கொடூரமான போர், ஐந்து மாதங்களை நெருங்குகையில், இடிபாடுகள், மரணங்கள், இடப்பெயர்வு, பசி மற்றும் உறைபனி குளிருக்கு மத்தியில், இதை நிர்வகிக்கும் குழந்தைகளின் தோற்கடிக்க முடியாத உறுதிக்கு, வானில் பறக்கவிடும் பட்டங்கள் போன்ற, எளிய பொம்மை அந்தக் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியின் தருணங்களை கொண்டு வர முடியும் என்பது ஒரு அதிசயமாகும்.
----
ரஃபா மீதான ஒரு கொடூரமான படையெடுப்பை தவிர்ப்பதற்காக, பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்திற்காக, கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது, ஏனெனில், அமெரிக்காவின் பரந்த ஜனநாயக விரோத ரத்து அதிகாரம் காரணமாக தொடர்ந்து பல அட்டூழியங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
இஸ்ரேல் நடத்துகிற கண்மூடித்தனமான மனிதப் படுகொலைகளையும், இன அழைப்பையும் கண்டித்த பிரேசில் ஜனாதிபதி இனாசியா லூலா டா சில்வா, இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டார்.
ஜனாதிபதி லூலா, பிரேசிலில் இருந்து, இஸ்ரேலிய தூதரை வெளியேற்றினார் மற்றும், டெல் அவிவிலிருந்து, தனது தூதரையம் திரும்ப அழைத்துக் கொண்டார்.
------
இஸ்ரேல் பயங்கரவாத ராணுவத்தின், ரஃபா தாக்குதலுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருமித்த அறிக்கையை வெளியிட விடாமல், ஹங்கேரி இரண்டு முறை தடுத்துள்ளது. ஹங்கேரியின் இந்த மனிதாமானமற்ற, கொடூர எண்ணங்களின் வெளிப்பாடு, இஸ்ரேல் பயங்கரவாத வெளியுறவு மந்திரியின் வேண்டுகோளுக்கு இணங்க செயல்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக இஸ்ரேல் பயங்கரவாத அரசு, ஹங்கேரிக்கு நன்றி தெரிவித்துள்ளது.
----
சும்மா வேறுமனே, தமாசுக்கு கணக்கு காட்டி காமெடி பண்ணாமல், நிஜமாகவே பல்லாயிரம் குழந்தைகளையும், பெண்களையும், வயோதிகர்களையும், வியாதிஸ்தர்களையும், இசுரேலியா பயங்கரவாத ராணுவம் கொன்று குவித்ததற்கு, இங்கிலாந்து பிரபுக்கள் சபையின் உறுப்பினரான, ஆண்ட்ரூ ராபர்ட்ஸ், பாராட்டியுள்ளார்.
காஸாவில் நடக்கின்ற இந்தப்போர், பல பயங்கரவாத புள்ளிகளையும், பலநாட்டு பயங்கரவாத அரசாங்கங்களையும், அதன் உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தி, முகத்திரைகாலை கிழித்துள்ளது. பயங்கரவாதிகள் யார்? பயங்கரவாத அரசாங்கங்கள் என்னென்ன என்பதை, இந்தப்போர் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.
----
நேற்று வரை ஏமன் ராணுவமும், அன்சார் அல்லாவும், சிறிய ரக போர் விமானங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தி வந்தன. இஸ்ரேல், அமெரிக்கா அல்லது இங்கிலாந்துடன் தொடர்புடைய கப்பல்களுக்கு பெரிய சேதம் விளைவிப்பதை அவர்கள் தவிர்த்து எச்சரிக்கைக்காக மட்டும் தாக்குதல் நடத்தி வந்தன. ஹௌத்திக்களின் முக்கிய கொள்கை, காசாவில் இஸ்ரேலின் பயங்கரவாத ராணுவ தாக்குதல்களை நிறுத்துவது மட்டுமேயாகும்..
ஆனால், காசாவில் நடத்தப்படுகின்ற தீவிரவாதத்தாக்குதல்கள் நிறுத்தப்படாமல், ஏமன் இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க மற்றும் இங்கிலாந்தின் தாக்குதல்கள் பயனற்றவை என்பதையும், செங்கடலில், பாப்-எல்-மண்டப் யேமெனியர்களின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், உலக வல்லரசுகளாயினும் எல்லைதாண்டிவிட்டால், கிள்ளுக்கீரைகள்தான் என்று புரியவைப்பதற்காகவே, இந்தக்கப்பலை மூழ்கடித்துள்ளனர்.
------
ஹுதைதா நகருக்கு அருகே அமெரிக்காவின் எம்.க்யூ நைன் ரீப்பர் எனப்படும் ஆளில்லா விமானத்தை, ஏமன் சுட்டு வீழ்த்தியது நாம் ஏற்கெனவே அறிந்ததே.
முப்பது மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த ட்ரோன், பத்தாயிரம் அமெரிக்க டாலர் செலவில், சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்காக பயன்படுத்தப்பட்டது ஈரானிய ஏவுகணையாகும்.
அதாவது, இருநூற்று நாற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள, அமெரிக்காவின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆளில்லா விமானத்தை, ஈரானின் எட்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு ஏவுகணையைக்கொண்டு சுட்டுவீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. .
இதில், கொடுமை என்னவென்றால், இதுபோன்ற இரண்டு ஆளில்லா விமானங்களை, ஏமன் அடித்துத் தூள் கிளப்பியுள்ளது, இந்த சம்பவங்கள், அமெரிக்காவைப் பிடித்து மொட்டை அடித்து, கரும்புள்ளிகள் செம்புள்ளிகள் குத்தி, கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் அனுப்பியது போல உள்ளது என்று, பெயர் சொல்ல விரும்பாத, பல பெரிய பெரிய ஆய்வாளர்கள் எல்லாம் கூறிக்கொள்வதாக செய்திகள் வருகிறதாம். இதைக்கேள்விப்பட்டு, அமெரிக்காவின் சகாக்கள் எல்லாம், குப்புறக் கவுந்து படுத்துக்கொண்டு, குமுரிக்குமுரி அழுது கொண்டிருக்கிறார்களாம். என்னவொரு அவமானம்.,. அசிங்கம்.., வெட்கம்...?
------
காஸாவில் உள்ள பாலஸ்தீனிய அரசாங்க ஊடக அலுவலகம் வெளியிட்ட தகவல்-: காசா பகுதியில் பஞ்சம் காரணமாக நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது, மேலும், நூறாயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும், பெண்கள் அழிந்து போகும், உலகளாவிய மனிதாபிமான பேரழிவு குறித்து, நாங்கள் எச்சரிக்கிறோம் என்று அறிவித்துள்ளது.
காசாவில் உள்ள அரசாங்க ஊடக அலுவலகம் வெளியிட்ட மற்றொரு செய்தியில், இன்னும் இரண்டு நாட்களில், மனிதாபிமான பேரழிவு ஏற்படுவதற்கு முன்னர், கசாவின்மேல் திணிக்கப்பட்டுள்ள முற்றுகையை நீக்குமாறும், கிட்டத்தட்ட பத்தாயிரம் உதவி டிரக்குகள், காஸாவுக்குள் நுழைய வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம் என்று அறிவித்துள்ளது.
மேலும், காசாவின் முற்றுகையை உடைக்கவும், இனப்படுகொலை போரை நிறுத்த உடனடியாக நிறுத்தவும், அழுத்தம் கொடுக்கவும், ரஷ்யா, சீனா மற்றும் துருக்கிக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. ரசியா, சீனா, துருக்கி என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
------
ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி மிகைல் Bogdanov., பாலஸ்தீன ஃபத்தாஹ் மற்றும் ஹமாஸ் தலைவர்களுடன் தொலைபேசி விவாதங்களில் ஈடுபட்டார், Gazaவில் பாலஸ்தீனிய ஒற்றுமை மற்றும், மனிதாபிமான கவலைகள் குறித்து பேசினார். தற்போதைய பாலஸ்தீன மற்றும் காசா நிலவரம் குறித்த விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள, பிப்ரவரி இருபத்தாராம் தேதி, மாஸ்கோவில் சந்திப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஈரானின் ஆயுத ஏற்றுமதி, நாற்பது சதவீதம் அதிகரித்துள்ளது. ஈரானின் இராணுவ உபகரணங்களின் ஏற்றுமதி, மார்ச் இரண்டாயிரத்து இருபத்திரண்டு முதல் மார்ச் இரண்டாயிரத்து இருபத்து மூன்று வரை, சுமார் ஒரு பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, இருப்பினும், ஈரான் எதிர்பார்த்திருந்த அளவைவிட விற்பனை அதிகமாக உள்ளது என்று ஈரான் ஒரு செய்திக்குறிப்பில் தெரியப்படுத்தி உள்ளது.
--------
அல் மயாதீனுக்கு அளித்த பேட்டியில், டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் செனட்டர் டேவிட் நகித், இஸ்ரேலின் தூதரகங்களை மூடுவதும், அதன் தூதர்களை திரும்ப அழைத்துக் கொள்வதும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை Palestinian மக்களுக்கு எதிரான, அவர்களின் கொடூரமான இனப்படுகொலை நடவடிக்கைகளை"செய்வதிலிருந்து தடுக்காது என்று கூறினார்.
அதற்கு பதிலாக, இஸ்ரேல் உடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதற்கும் அப்பால் சென்று, தன்னை இஸ்ரேல் என்று அழைத்துக் கொள்ளும் அரசுக்கு எதிராக, இன்னும் உறுதியான நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றார்.
இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், அனைத்து முதலீடுகளையும் நிறுத்தவும், மற்றும் அமெரிக்காவும், European Union ஆயுதங்களை அனுப்பவதை தடை செய்வதும், அத்துடன் இஸ்ரேல் Gaza மீதான இனப்படுகொலையை நிறுத்த, கட்டாயப்படுத்த, பொருளாதார சக்தியைப் பயன்படுத்தவும், நகித் பரிந்துரைக்கிறார்.
-------
No comments:
Post a Comment