Saturday, 24 February 2024

Analysis: காஸா மீதான போரில், ஐரோப்பா இறுதியாக, இஸ்ரேல் மீது அதன் கடும் க...


காஸா மீதான போரில்,  ஐரோப்பா இறுதியாக, இஸ்ரேல் மீது அதன் கடும் கோபத்தை திருப்புகிறதா?
இஸ்ரேலின் பொம்மை அரசுதான், பாலஸ்தீன தனி நாட்டுக்கான தீர்வா?

இன்னும் ஓரிரு வாரங்களில், காசா நெருக்கடி அதன் ஐந்தாவது மாதத்திற்குள் நுழையும். காசா பகுதி மீதான, இஸ்ரேலின் மிருகத்தனமான குண்டுவீச்சு நடைபெற்றுக்கொண்டிருக்கிற, இந்தக் கட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியமும், ஏனைய முக்கிய சக்திகளும், காஸாவிலும், அதைச்சுற்றி நடக்கின்ற மோதல்களில் பங்கு பெறுகிற பல்வேறு நாடுகளுடனும், எதிர்ப்புப்போராகளின் அமைப்புகளும், அவரவர்களின் நிலைப்பாட்டின் அடிப்படையில், ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று உலகம் முழுவதும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பிய தலைவர்கள், முன்னர் நினைத்துப் பார்க்காததை, நினைத்துப்பார்க்க முடியாததை இப்போது நினைத்துப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால்,  அதற்குள் முப்பதாயிரம்  பாலஸ்தீனியர்களின் மரணத்தை அது எடுத்துக் கொண்டது வெட்கக்கேடானது, இதை மெதுவாக உணர ஆரம்பித்திருக்கிற ஐரோப்பிய தலைவர்கள், இந்த பெரும் கொலைகளுக்காக, இஸ்ரேலை சரியாக பொறுப்புக்கூற வைப்பது பற்றி  சிந்திக்கிறார்கள் என்பதற்கான, அறிகுறிகள் தெளிவாகிக்கொண்டிருக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளுக்குள் நிகழ்கிற, ஒரு ரகசியமான, வெளியுலகில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளப்படாத ஒரு துப்பு ,  ஒரு ரகசியக்கடிதம் மூலம் கிடைத்துள்ளது. இந்தச் செய்தி, மூடிய கதவுகளுக்குள்ளே ஐரோப்பிய நாடுகளுக்குள் பகிரப்பட்டது. இந்த ரகசியப்பகிர்வு, E E A S, அதாவது European Union External Actions Service என்று அழைக்கப்படுகிற ஒரு ஐரோப்பிய நிறுவனம் மூலம் உறுப்பு நாடுகளுக்குள் பகிரப்பட்டுள்ளது. இந்த டாக்குமென்டில், மத்திய கிழக்கில் மீண்டும் சமாதானத்தையும், அமைதியையும் எப்படி ஏற்படுத்துவது என்பதற்கான வழிமுறைகள், ஆராயப்பட்டுள்ளன என்கிற செய்தி, மெதுவாகக் கசிந்துள்ளது.

இந்த டாக்குமெண்ட், அதாவது, இந்த ஆவணம், முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது. இது அக்டோபர் ஏழு தாக்குதலையும், அதைத் தொடர்ந்து நடந்தவற்றையும், அதை சாதகமாக்கி, இஸ்ரேல் காசா மீது ஒரு இனப்படுகொலைப் போரைக் கட்டவிழ்த்துவிட்டது போன்றவற்றைப்பற்றிப்  பற்றி பேசுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக, இந்தஹ மோதலின் மூல காரணங்கள், ஹமாஸ் ஏன் தாக்கினார்கள், எதற்காக தாக்குதல்களை நடத்தினார்கள் என்பதற்கான அடிப்படைக்காரணம்  மற்றும் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழில் இருந்து, பாலஸ்தீனர்களை நசுக்கியது, பொருளாதாரத்தடைகளை ஏற்படுத்தியது, வேலைவாய்ப்புகளைப் பறித்தது, காசா மக்களை திறந்தவெளிச்சிறையில் வைத்தது, ஆகியவற்றைப் பற்றி பேசுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. சுருக்கமாகவும், சற்று தெளிவாகவும் கூற வேண்டுமென்றால், ஹமாஸ் தாக்கினார்கள், ஹமாஸ் தாக்கினார்கள், என்று கத்திக்கொண்டிருப்பதைவிட, ஏன் ஹமாஸ் தாக்கினார்கள், இந்தத்தாக்குதலுக்கான அடிப்படைக்காரணமென்ன? என்பதைப்பற்றி, ப்ராக்டிகல்லாக பேசுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இவர்களின் சிந்தனையைப் பாருங்கள், யூதர்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட, ருடால்ப் ஹிட்லர் என்னும் ஒரு ஐரோப்பியத்தலைவன், யூதர்களை படுகொலை செய்தான் என்று கூறுகிறார்கள். ஆயினும், எஞ்சிய யூதர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, ஐரோப்பியர்கள், பிரிட்டனின் தலைமையில், பாவம் யூதர்கள், என்கிற ஒரு ஆயுதத்தைக் கையிலெடுத்து, சத்தமில்லாமல், யூதர்களுக்கு உதவி செய்கிறோம் என்கிற  பெயரில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, நாசூக்காகபி பேசி, யூதர்களையெல்லாம் நாடுகடத்தி, பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில், இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்கி வைத்து விட்டார்கள். யூதர்கள் என்னவோ அப்பாவிகள்தான், ஆனால், ஆதிக்க வெறிகொண்ட அமெரிக்காவின் வேட்டைநாய்களாக, ஜியோனிஸ்டுகள், அப்பாவி யூதர்கள் என்னும் போர்வைக்குள் புகுந்து, அமைதியான மத்திய கிழக்கை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை ஐரோப்பியர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஆனால், அமெரிக்காவை பகைத்துக்கொள்ளவும் வழியில்லை. துப்பவும் வழியில்லை, விழுங்கவும் வழியில்லை. 

ஆயினும் ஏன் இஸ்ரேலுக்கு உதவி செய்கிறார்கள் தெரியுமா, இந்த ரத்தவெறி பிடித்த ஜியோனிஸ்டுகள் தோற்கடிக்கப்பட்டால், இவர்கள் மீண்டும், ஐரோப்பாவுக்குள் ஊடுருவி விடுவார்கள். பின் ஐரோப்பிய ஆட்சி முழுவதும் இந்த ஜியோனிஸ்டுகளின் கட்டுப்பாட்டுக்கும் சென்றுவிடும். இது மேலும் பல டஜன் ஹிட்லர்கள் பிறக்க வழி வகை செய்துவிடும், என்னும் அச்சத்திலேயே, ஐரோப்பியர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த அமெரிக்காவுக்கோ, யாரைப்பற்றியும் கவலையில்லை. உலகமயமாக்கல், உலக வங்கி, ஐக்கியநாடுகள் என்னும் உலக சபை, ICC, ICJ போன்ற உலக நீதிமன்றங்கள், உங்க சுகாதார நிறுவனங்கள் போன்ற இன்னும்பல சர்வதேச அமைப்புகளை, தங்களது கட்டுப்பாட்டிலும், தங்களது பொருளாதாரத்தின்கீழ் செயல்படுகிற அமைப்புகள் மூலம், இந்த உலகத்தின் சக்கரவர்த்தியாக வளம் வரும் பேராசையின், மொத்த உருவமாக காட்சி அளிக்கிறது.   

இந்த அமெரிக்காவால், உலகின் எந்தப்பகுதியையும் சுலபமாக அணுகிவிட முடியும். ஆனால் இஸ்லாம் தழைத்தோங்கி நிற்கும் மத்திய கிழக்கில், அதன் நரித்தனமான வஞ்சகம் என்றும் பலிக்காது. இன்றைக்கு மொத்த அரபு நாடுகளும், அமெரிக்காவுக்கு கீழ்ப்படிந்து, இஸ்ரேல் என்னும், லேண்ட் மாஃபியா திருட்டு கும்பலுக்கு பாலஸ்தீன நிலத்தை தாரை வார்த்து, ஒரு நாடாக அங்கீகரிப்போம் என்று அணிதிரண்டு நிற்பது, இஸ்லாத்திற்கு முழுமையான ஒரு அவமானத்தை கொண்டுவந்து சேர்ப்பது.  இந்த அவமானம் உலக முஸ்லிம்களுக்கு, அந்த இஸ்லாத்தின் மையங்களாக இருக்கும் மக்கா, மதீனா உள்ள நாட்டிலிருந்து வரவேண்டும் என்னும், அமெரிக்க மற்றும் சியோனிச சாத்தான்களின் பிடியில், சவூதி அரேபியா உள்ளிட்ட பெரும்பாலான அரபு நாடுகள் செயல்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். 

ஆனால், ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை "ஷாஹ்" மன்னர்களால் ஆளப்பட்டு வந்த ஈரான் நகரங்கள், குடியும் குடித்தனமுமாக, கிளப்புகளும், காசினோக்களும், சூதாட்ட விடுதிகளும், மேற்கத்திய நாகரிகத்தையும் மிஞ்சி, விண்ணைமுட்டி நின்ற காலத்தில், அத்தகைய கேவலமான கலாச்சாரத்தை ஒழித்து, இஸ்லாமிய நாகரிகத்தை ஏற்படுத்த, இமாம் கமேனி தலைமையில் ஒன்றிணைந்த மாணவர்களும், இளைஞர்களும், அமெரிக்க கலாச்சாரத்தை வேரறுத்து, இஸ்லாமியக் republic ஓர் Iran என்ற பெயருடன், இஸ்லாமியக் குடியரசை உருவாக்கினார். அன்று அமெரிக்காவுக்கு துவங்கிய தலைவலி, இன்று உலைகள் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு பலம் பெற்றுள்ளது. ஈரான் ஆதரவு இருந்தால் போதும், அது போராளிக்குழுவாக இருந்தாலும் வெற்றிபெறும் என்பது சரித்திரமாக  வருகிறது. 

மேற்கத்திய நாகரீகத்தால் ஈர்க்கப்பட்ட பலரும், அப்பாவிகளைக் கொள்வதும், கட்டிடங்களை இடிப்பதும் வெற்றி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், அது கோழைத்தனம் என்றும், மனிதகுல, மனிதநேய, இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்பதும் புரிவதில்லை. எவர் சாதாரண மனிதர்களின் மனங்களை வென்றெடுத்து, சமத்துவத்தையும், சமதர்மத்தையும், சமநீதியையும் அனைவருக்கும் அளிக்கிறார்களோ  அவர்களே வெற்றியாளர்கள். அவர்களே ஆளத்தகுதி உள்ளவர்கள். கொலை செய்பவர்களும்,  பொது மக்களின் சொத்துக்கு சேதம் விளைவிப்பவர்களும் குற்றவாளிகள். இவர்களுக்கு சரியான தண்டனை  நிச்சயமாக உண்டு என்று இறைவன்  உறுதியளிக்கிறான். இவர்களுக்கு  பயப்படக்கூடாது,  எதிர்த்துத் தாக்க வேண்டும் என்று உறுதியுடன்  ஈரானும் அவர்களுடன் பல போராளிக்குழுக்களும் நிற்கிறார்கள்.

தமிழில்கூட ஒரு சில ஊடகங்கள். பாலஸ்தீனத்துக்கென்று ஓரு தனிநாட்டையும், பாலஸ்தீன மண்ணின் பெரும்பகுதியை, இஸ்ரேலுக்கு விட்டுக்கொடுத்து அதன் ஒரு நாடாக அங்கீகரிக்கவேண்டும் என்று கருத்துச்சொல்வதை சமீபத்தில் கேட்டிருப்பீர்கள். இஸ்ரேல் அங்கே வலிமையாக இருக்கிறான்,  பெரிய ராணுவம் வைத்துக்கொண்டு, பெரிய பெரிய கட்டிடங்களையெல்லாம் கட்டிக்குக்கொண்டு, அரசாங்கத்தை நடத்திக்பி[கொண்டிருக்கிறான். அவனிடம் போய் இஸ்ரேல் இருக்காக்கூடாதென்று இன்னும் சண்டைஇட்டுக்கொண்டு இருக்காக்கூடாது என்று கூறுகிறார்கள். பாலஸ்தீனம் என்பது நமது அப்பா சொத்தாக இல்லாமல் இருக்கலாம்/. பாலஸ்தீனத்தை இரண்டாக என்ன, இன்னும் யாராவது பத்து பேர், பேரழிவாயுதங்களுடன் சென்று அரசாங்கம் அமைத்தால், அவர்களுக்கும் நாட்டை பகிர்ந்து கொடுக்கச்சொல்வார்கள். காஃபிர்கள் முஸ்லிம்களின் நாட்டை அடித்துபிடுங்குகிறார்கள், இவர்கள் காஃபிர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். 

இரு நாடுகள் கொள்கையில் ஒரு முக்கியமான செய்தியை நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.  இஸ்லாத்துக்கு எதிரானவர்கள், எப்படியாவது பலஸ்தீனத்திலிருந்து பெரும்பகுதியை கைப்பற்றிவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள். அதையும் இதையும் என்று எதையாவது செய்து, பலாஸ்தீன் மக்களுக்கு சொந்தமான மண்ணை அபகரித்துவிட முயற்சி செய்கிறார்கள். இதன் ஒரு பகுதியாகத்தான் இரு நாடுகள் கொள்கையை முன்வைக்கிறார்கள். உலகநாடுகள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலுயுறுத்துகிறார்கள். ஆனால், அந்த மண் உலக நாடுகளுக்குச் சொந்தமானது அல்ல. பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களுக்குச் சொந்தமானது.  தனது மன்னைக்காப்பாற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் வீர மரணம் அடைகிறார்கள். ஆனால், காஸாவில் ஏற்படுத்தப்பட்ட சேதத்தைப்பாருங்கள். இவ்வளவு பெரிய கொலைகாரப்பாவிகளுக்கு, பாலஸ்தீனர்கள் நிலம் கொடுப்பார்களா? தனது மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்தை கொடுங்கோலர்களுக்கு தாரை வார்ப்பார்களா? இஸ்லாமின் ஷரியத் சட்டம் இதற்கு இடம் தருமா?  ஏமாந்து விடக்கூடாது. இஸ்ரேல்  ஒன்றும் வெற்றிபெற்ற ராணுவம் கிடையாது. ஹமாஸ் இன்னுடம் தோற்கடிக்கப்படவில்லை.  முதலில் ஹமாஸைத் தோற்கடிக்கட்டும், பிறகு பேசட்டும் இரு நாடுகள் பாகப் பிரிவினையைப் பற்றி. 
----
ஹமாஸ், பாலஸ்தீனர்கள் சுதந்திரமாக வாழ, ஒரு பகுதி அளிக்கப்பட்டால்,  அதை மறுக்க வாய்ப்பில்லை. ஆனால், தண்ணிலத்தில் ஒரு பகுதியை இஸ்ரேலுக்கு தாரைவார்த்து, அதை ஒரு தனி  நாடென அங்கீகரிக்க மாட்டார்கள். இஸ்ரேல் என்னும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் யாரும், அந்த நிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை.  அங்கு வாழும் உண்மையான யூதர்களும், பாலஸ்தீன நாட்டைத்தான் விரும்புகிறார்கள், ஜியோனிஸ்டுகளால் நிரப்பப்பட்டுள்ள இஸ்ரேல் என்னும் நாட்டை அல்ல. 

ஹமாசுடைய மற்றொரு நிலைப்பாடு என்னவென்றால், காசாப்பகுதியிலும், மேற்குக்கரைப் பகுதியிலும்  வாழ்பவர்கள் மட்டும் பாலஸ்தீனர்கள் அல்ல. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள், மத்தியக்கிழக்குப்பகுதியிலும், மற்றும் உலகம் முழுவதும் பரவி அகதிகளாகச்சென்று வாழ்கிறார்கள்.  அவர்கள் அனைவரும் நாடு திரும்ப விரும்புகிறார்கள்.  அதாவது அவர்கள் எங்கிருந்து அடித்துத் துரத்தப் பட்டார்களோ, அங்கேயே சென்று  வாழ விரும்புகிறார்கள். அதுதானே அவர்களது நாடு.  அதுதானே அவர்களது நிலம், அதுதானே அவர்களது பூர்வீகம்.  ஆனால் இஸ்ரேல் அதை ஏற்க மறுக்கிறது. இதை ஹமாஸ் எதிர்க்கிறது.

அதுமட்டுமல்ல, இவர்கள் சொல்லும் பாலஸ்தீன தனிநாடு என்பது, முழுக்க முழுக்க இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும்.  அங்கு தனி ராணுவம்  இருக்கக்கூடாது. தூதரகங்களுக்கான கட்டுப்பாடும் உள்ளது. இதுபோன்ற எண்ணற்றவை.  இது தொடர்பான மேலும் பல விவரங்கள் தனியாக ஒரு வீடியோவாக வெளியிட  முயற்சி செய்கிறோம். சுருக்கமாக கூறினால் , மேற்கத்தியர்கள் எண்ணமே,  எப்படியாவது இஸ்ரேலை சட்டபூர்வமாக, ஒரு உரிமையுள்ள நாடாக அங்கே அமர்த்திவிடவேண்டும் என்பதுதான். ஆனால், மத்தியகிழக்கு,  எந்த அசுத்தமும் இல்லாமல், சுத்தமான, மனித நேயமுள்ள, சிறந்த சமத்துக்கு அர்த்தமுள்ளதாக  இருக்கவேண்டும் என்பதுதான், உண்மையான இஸ்லாமியர்களின், ஈமான்தாரிகளின் உள்ளக்கிடக்கை. நீங்கள்   புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.   இறைவன் நாடினால், மற்றொரு நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம்,  நன்றி. 

------

No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...