Friday, 2 February 2024

ஹவுதி தாக்கிய இரண்டாவது கப்பல் KOI | காசாவுக்கு உதவிய UNRWA-க்கு நோபல் ...



ஹவுத்தி ஏவுகணையால் தாக்கப்பட்ட இரண்டாவது கப்பல்:. K O I'''  

உயிரைத்துச்சமாக்கி காசா மக்களுக்கு உதவிய U N R W A - அமைப்புக்கு நோபல் பரிசு பரிந்துரை..

ரவுடித்தனம் செய்யும்  இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு  பைடன் தடை

 ஈரானுடன் தொடர்புடைய இலக்குகள் மீது. தாக்குதல் நடத்த அமெரிக்கா ஒப்புதல்.

காசாவைச்சுற்றி இஸ்ரேல் உருவாக்கும் "Buffer Zone " ஆக்கிரமிப்பின் அதடுத்த சொல்.

செங்கடலில், ஒரு கப்பல் மீது ஏவுகணை வீசிய பின்னர், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று, இரண்டாவது கப்பல் மீது தாக்குதல் நடத்தினர்.

யேமனின் மேற்கு கடற்கரையில் உள்ள துறைமுகமான, ஹுதைதா  மேற்குப் பகுதிக்கு பயணித்தபோது, பெயரிடப்படாத கப்பலின் ஸ்டார்போர்டு பக்கத்திலிருந்து, தூரத்தில் ஒரு வெடிப்பு பதிவாகியுள்ளதாக, யுனைடெட் கிங்டம் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு, U K M T O  தெரிவித்துள்ளது. மேலும், இரண்டாவது கப்பல். K O I  என்று பெயரிடப்பட்ட கப்பலை தாக்கியதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்குக் கரையில், பாலஸ்தீனர்கள் மற்றும் அமைதி ஆர்வலர்கள் மீது, தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட, இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு பைடன் தடை அறிவித்துள்ளார்..

குடியேற்றக்காரர்களின் வன்முறையானது, மேற்குக் கரை, இஸ்ரேல் மற்றும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, மேலும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும், வெளியுறவுக் கொள்கை நலன்களை அச்சுறுத்துகிறது என்று, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஜேக் சல்லிவன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன நிலத்துக்கு ஆசைப்பட்டு, சட்ட விரோதமாக,  அப்பாவிகளை மிரட்டி உருட்டி குடியேறும், இந்த மாஃபியா கும்பல் மீது, தடை போட்டு என்ன பயன்? போடாவிட்டாலும் என்ன பயன்? எல்லாம் ஒரு கண்துடைப்புதான் என்று செய்தியறிந்த பலரும் பேசிக்கொள்கிறார்கள். உண்மையா இல்லாயா? நீங்கள் தொடர்ந்து செய்திகளைப் பார்க்கிறீர்கள், உங்களது கருத்துக்கள் என்ன?


ஈராக், சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த, அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது 

அமெரிக்கா தனது இராணுவ ராணுவ நடவடிக்கைகள்  பல அடுக்குகளாக இருக்கும் என்றும், பதில் தாக்குதல்கள் பல நிலைகளில், பல நாட்களில் நடக்கும் என்றும் கூறியுள்ளது. இந்த பதிலடி நடவடிக்கை பற்றிய அறிவிப்பானது, ஈரானுடைய அறிவிப்புகளைப்போலவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

அசோசியேட்டட் பிரஸ் மற்றும்  N O R C சென்டர் ஃபார் பப்ளிக் அஃபயர்ஸ் ரிசர்ச்சின் புதிய கருத்துக் கணிப்பின்படி, காசாவில் இஸ்ரேலின் பதினைந்து வார கால இராணுவ நடவடிக்கை, "வெகுதூரம் சென்றுவிட்டது" என்று, அமெரிக்க பெரியவர்களில் பாதி பேர் கூறுகின்றனர், இது முக்கியமாக குடியரசுக் கட்சியினர் மற்றும் அரசியல் சுயேச்சைகளிடையே வளர்ந்து வரும் அதிருப்தியை உறுதி செய்கிறது.


வட கொரியா, மேலும் கப்பல் ஏவுகணைகளை சோதித்தது, தலைவர் கிம் போர் தயார்நிலைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், கப்பல் கட்டும் தளத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் போது, போர் தயாரிப்புகளை அதிகரிக்குமாறு தனது இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், வட கொரிய தலைவர் வெள்ளிக்கிழமை, கடலில் கப்பல் ஏவுகணைகளை ஏவி ஆயுத சோதனைகளில் ஈடுபட்டார்.

வடகொரியாவின் மேற்குக் கடலில் ஏவப்பட்ட ஏவுகணைகள் குறித்து, அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவங்கள், ஆய்வு செய்து வருவதாக தென் கொரியாவின் கூட்டுத் தளபதிகள் தெரிவித்தனர். தென் கொரியாவின் இராணுவம் பல ஏவுகணைகளைக் கண்டறிந்ததாக அது கூறியது, ஆனால் அது உடனடியாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையையோ, அல்லது அவற்றின் பறக்கும் தன்மை குறித்த மதிப்பீட்டையோ வழங்கவில்லை, 


இஸ்ரேல் காஸாவைச் சுற்றி ஒரு, "இடைத்தடை மண்டலத்தை" அதாவது "Buffer Zone "உருவாக்கி வருகிறது.

இஸ்ரேல் உருவாக்கும் இந்த  "இடைத்தடை மண்டலம்", காசாவிற்கு அருகிலுள்ள இஸ்ரேலிய சமூகங்களை "தாக்குபவர்கள் செல்வதைத் தடுக்கும்" என்று இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், முழு பாலஸ்தீனத்தையும் எப்படியாவது ஏமாற்றி, அபகரித்துவிடவேண்டும் என்று அலைந்துகொண்டிருக்கும் நிலையில்,  இது காஸாவை ஆக்கிரமிக்கும் முயற்சி என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.


நோர்வே நாட்டு தொழிற்கட்சியைச் சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினரான அஸ்முண்ட் ஆக்ரஸ்ட், பாலஸ்தீனத்திற்கும், பொதுவாக பிராந்தியத்திற்கும், முக்கிய ஆதரவை வழங்குவதில், அதன் நீண்டகால பணிக்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு UNRWA என்று சுருக்கமாக அழைக்கப்படும், U N பாலஸ்தீனிய அகதிகள் முகமையை பரிந்துரைத்தார்.

ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்தில் அதன் சில ஊழியர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படும் அகதிகள் நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் வந்துள்ள செய்தி, காஸாவில் உண்மையான சோகங்களை அனுபவித்து வரும் இந்த அமைப்பின் யாருக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமின்றி, இன்றைய இக்கட்டான நிலையில், UNRWA தான் உணவுக்கும், உடைகளுக்கும், மருத்துவ உதவிகளுக்கும், உறைவிடங்களுக்கும் இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆதரவு. இவர்களுக்குக்கூட பணமோ பொருளோ சென்று சேர்ந்து விடக்கூடாது என இஸ்ரேலும், அந்த நயவஞ்சகர்களை  ஆதரிக்கும் வல்லரசுகளும் முயற்சிகள் செய்கின்றன.. "லா தாஸின் இன்னால்லாஹ மான".

"ஆதரவற்றோர்களுக்கு ஆதரவாளனாக இறைவன் இருப்பான்" என்ற திருமறை வசனமே போதுமானதாக நாங்கள் கருதுகிறோம்.  உங்கள் கருத்துக்களையும், கமெண்டில் தெரிவியுங்கள். நன்றி.

----


No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...