ஜோர்டான் இஸ்ரேலுடன் இனைந்து முதுகில் குத்தும் துரோகி என்று ஈராக் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வலிமையில்லாத அப்பாவி நாடுகளைத் துழாவித் தாக்கும் அமெரிக்கா. ஈரானின் I R G C யைத் தொடவில்லை.
பெடோயின்களை மிரட்டி, ஆடுகளை திருடிச்சென்ற இஸ்ரேல் ராணுவம்.
அமேரிக்க தாக்குதல் தவறான வழிமுறை. இது மத்தியக்கிழக்கில் எங்கள் செயல்பாட்டை அதிகரிக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது .
ஏமன் மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித் தாக்குதல்கள்.
ஏமன் கட்டுப்பாட்டில், செங்கடல் அடியில், உலகை இணைக்கும் Fiber Optic கேபிள்கள் . துண்டிக்கப்போவதாக மிரட்டல்.
-------------
ஈராக்கில் அமேரிக்கா நடத்திய, எல்லை கடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின், ஈராக் பிரதமர் வெளியிட்ட செய்தி. :
ஈராக்கில் நேற்றிரவு, அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக, பொதுமக்கள் உட்பட, பதினாறு பேர் கொல்லப்பட்டனர். மற்றும், இருபத்தைந்து பேர் காயமடைந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ எஸ்.ஐ எஸ்ஸை எதிர்த்துப் போராட பயன்படுத்தப்பட்டு வந்த, ஈராக்கின் ஆயுதக் கிடங்கு மீது, அமெரிக்கா நடத்திய தீவிரவாதத் தாக்குதல்களால், தாங்கள் அமெரிக்கா மீது ஆத்திரமடைந்துள்ளதாக ஈராக் இராணுவம் கூறியுள்ளது, மேலும் அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்க தூதர் கையைக்கட்டி நின்று, ஈராக்கியர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
ஈராக்கில், அமெரிக்க தீவிரவாதத்தால் கொல்லப்பட்ட, இரண்டு மில்லியன் குடிமக்களுக்கு, அமேரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும், ஏனென்றால், நியூயார்க்கில், யூத இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
அமெரிக்க தீவிரவாதிகள், தனது எல்லைகளைத்தாண்டி , ஈராக் மற்றும் சிரியா மீது நடத்திய தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
----
ஈராக்கில் உள்ள அல் அன்பார் மீது, அமெரிக்கா நடத்திய தாக்குதலால், ஈராக்கிய குடும்பம் ஒன்று பதற்றமடையும் வீடியோ பரவி வருகிறது.
உண்மையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள, ஈரானிய / ஈரான் ஆதரவு குழுக்களை, அமெரிக்கா தாக்கவில்லை. அவ்வாறு தாக்கப்பட்டிருந்தால், அமெரிக்க தீவிரவாதிகளின் நிலைகள் தரைமட்டமாகிவிடும் என்னும், ஈரானின் எச்சரிக்கைதான் காரணம் என்று கூறப்படுகிறது.
சிரியாவின் எல்லையை ஒட்டியுள்ள, அன்பார் மாகாணத்தில் உள்ள, பாப்புலர் மொபிலைசேஷன் ஃபோர்சஸ், (அவர்களின் படைகளின் ஆபரேஷன்ஸ் கமாண்ட்) தலைமையகத்தை, மேற்கு ஈராக்கில் உள்ள ஆகாஷாத் வரை, அமெரிக்க தீவிரவாத விமானப்படை தாக்கியது.
இதற்கிடையில் ஜோர்டானிய இராணுவம் கூறியதாவது. ஈராக்கிற்குள், அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில், நாங்கள் பங்கு பெறவில்லை, இவை வதந்திகள்.. சகோதர ஈராக்கின் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம், அனைத்து அரபு நாடுகளுடனும், சகோதரத்துவ உறவுகளின் ஆழத்தை உறுதிப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளது .
-----
இஸ்ரேலிய தீவிரவாதக் குடியேற்றவாசிகள், இஸ்ரேலிய வீரர்களுடன், இன்று காலை, ராஸ் எயின் அவ்ஜா பெடோயின் சமூகத்திற்குள் நுழைந்து, ஆடுகளை திருடிச் சென்றதாக, பெடோயின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அல் பைதர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜோர்டானின் துரோகச் செயல்களால், ஈராக் வெறுப்படைந்துள்ளது.
ஈராக் மண்ணில், விமானத் தாக்குதல்களில் பங்கெடுத்ததற்காக, ஜோர்டானுக்கு மானிய விலையில் எண்ணெய் ஏற்றுமதி செய்வதை, ஈராக் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது..
அமெரிக்க ஊடகங்கள், ஏற்கனவே ஜோர்டான், குண்டுவெடிப்புக்களில் பங்கு பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளன.
ஜோர்டான், நீண்ட காலமாக, பாலஸ்தீனர்களை கத்தியால் குத்தி, இஸ்ரேலின் நலன்களுக்காக செயல்பட்டு வருகிறது என்று ஈராக் பிரதமர் தெரிவித்துள்ளார்..
-------
அமெரிக்காவும் இங்கிலாந்தும் மீண்டும் ஏமன் விமான நிலையங்களைத் தாக்கினால், செங்கடலின் அடிப்பகுதியில் இயங்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிளை துண்டிக்கப் போவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் அச்சுறுத்தி வருகின்றனர்.
இந்த கேபிள் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கை இணைக்கும் தகவல் தொடர்பு சேனல்களை இயக்குகிறது. கேபிள் சேதமடைந்தால், அது புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மை, நிதிச் சந்தைகள் மற்றும் தகவல் பாதுகாப்பை பாதிக்கும்.
அன்சருல்லா செங்கடலின் பிரச்சினை அல்ல; அமெரிக்காதான் உண்மையான பிரச்சினை என்று மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்,
---------------
அமெரிக்காவும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் இன்றிரவு சண்டையில் ஈடுபட்டுள்ளனர்
புதுப்பிக்கப்பட்ட யு.எஸ். மற்றும் யு.கே. ஏமனில் உள்ள சனா, ஹொடெய்டா, தமர், தைஸ், ஹஜ்ஜா மற்றும் அல்-பைதா ஆகிய நகரங்களுக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த சில நிமிடங்களில் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் உள்ள அமெரிக்க கப்பல்களை நோக்கி ஹவுத்திகள் பல கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன.
---
ஏமன் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி கூடியதாவது.
அமெரிக்க-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு விமானங்கள், கடந்த சில மணி நேரங்களில், நாற்பத்து ஏழு வான்வழித் தாக்குதல்களை நடத்தின, அவை பின்வருமாறு விநியோகிக்கப்பட்டன:.
அமானத் அல்-அசிமா மற்றும், சனா கவர்னரேட் மீதான பதிமூன்று தாக்குதல்கள்.
ஹொடெய்டா கவர்னரேட் மீது ஒன்பது தாக்குதல்கள்.
தாயிஸ் கவர்னரேட் மீது பதினோரு தாக்குதல்கள்.
அல் பைதா கவர்னரேட் மீது ஏழு 7 தாக்குதல்கள்.
ஹஜ்ஜா கவர்னரேட் மீது ஏழு தாக்குதல்கள்.
இந்த தாக்குதல்கள், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உள்ள, மனிதாபிமான நிலைப்பாடு,. இந்த உறுதியான ஆதரவில் இருந்தும், நமது தார்மீக, மத, மற்றும், மனிதாபிமான நிலைப்பாட்டிலிருந்து, நம்மைத் தடுக்காது. மற்றும், பதிலும் தண்டனையும் இல்லாமல் கடந்து செல்லாது என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment