தொடர்ந்து பின்னடைவுகளைச்சந்திக்கும் இஸ்ரேலிய தீவிரவாத கூட்டுப்படைகள். மரண அடி வாங்கினாலும். மீசையில் மண் ஒட்டவில்லை என்று தலைக்கனத்துடன், அதாவது egoவுடன் திரியும் அரசாங்கங்கள்.
இஸ்ரேலிய தீவிரவாத அமைப்பின் போர் மந்திரி அமெரிக்காவுக்கு அனுப்பிய ரகசிய வேண்டுகோள். ஹெஸ்பொல்லாஹ்வால் தமக்கு ஏற்படுகின்ற பேரிழப்புகளைப்பற்றிய செய்திகள்.போர்மந்திரி ஏவி கேளண்ட்டின் வயிற்றைக்கலக்கும் அளவுக்கு அரங்கேறும் நிகழ்வுகள்.
ஹெஸ்பொல்லாஹ் எங்களை, எங்கள் எல்லைப்பகுதிகளில், அடிக்கிறாங்க துரத்துறாங்க என்று இஸ்ரேலிய போர் மந்திரி அமெரிக்காவிடம் குமுறல்.
ஹவுதிக்களால் தொடர்ந்து தாக்கப்படும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள். மூடி மறைத்து ஒளித்து சத்தமில்லாமல் ரிப்பேர் பார்க்கும் அமெரிக்கா கடல்படை..
வெளியே தெரிந்தால் அவமானாமாக போய் விடுமே என்று பயந்து, அமெரிக்காவும், UKவும் மூடி மறைக்கும் உண்மைகள்.
மீண்டும் ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து வான்வழித் தாக்குதல்;. பதிலடி கொடுப்போம் என்று ஹவுத்தி இயக்கம் சூளுரை!
நோர்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பார்த் எய்ட் அவர்கள் கூறும்போது, பாலஸ்தீன மக்களை நாம் கைவிட முடியாது, யு என் ஆர் டபிள்யூ ஏவுக்கான நிதியை நிறுத்த இது சரியான நேரம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இந்த U N R W A யின் உதவியின்றி பாலஸ்தீன அப்பாவிகள் யாருக்கும், ஒருவேளை உணவுகூட கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீன மக்களை பட்டினி போட்டும் கொல்ல நினைக்கும், இஸ்ரேலிய தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகளுக்கு, நார்வே துணை போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நார்வேயைப்போலவே போர்ச்சுகல் எடுத்த சிறந்த முடிவு : போர்ச்சுகீசிய வெளியுறவு மந்திரி, ஜோவா கிராவின்ஹோவால், ட்விட்டர் எக்ஸ் வலைத்தளத்தில், யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ தலைவர் பிலிப் லாசரினியுடன், "பேச்சுவார்த்தை" நடத்திய பின்னர், காசாவுக்கு தொடர்ந்து உதவக்கூடிய முடிவு ஏற்றுக் கொள்ளப் பட்டதாக, கிராவின்ஹோ கூறினார்.
"காசாவில் மனிதாபிமான நிலைமை அவநம்பிக்கையாக உள்ளது, இந்த கடினமான நேரத்தில், பாலஸ்தீனிய மக்களுக்கு நாம் முதுகு காட்டாமல் இருப்பது அவசியம்", என்று அமைச்சர் கூறினார்.
போர்ச்சுகலின் தற்காலிக அரசாங்கம், வெள்ளிக்கிழமை யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ க்கு, அதன் சில ஊழியர்களுக்கு எதிராக, பயங்கரவாத குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ க்கு ,தொடர்ந்து நிதியளிக்கும் என்று கூறியது.
ஈராக் மீதான அதன் விமானத் தாக்குதல்களுக்காக, அமெரிக்கா தண்டிக்கப்படும் என்று, ஈராக்கிய மக்கள் அணிதிரட்டல் படைகளின், மூன்று லட்சம் வீரர்களைக்கொண்ட போராளிகளின் தலைவர் கூறுகிறார்
ஃபாலிஹ் அல்-ஃபயாத், முதல் முறையாக, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற அழைப்பு விடுத்திருக்கிறார்.
மத்திய கிழக்கு நோக்கிய, அமெரிக்க அரசாங்கத்தின் தற்போதைய நடத்தை, பின்னடைவை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது, மேலும், அமெரிக்கா தொடர்ந்து மக்களை கோபப்படுத்தும் வலையில் விழுந்து வருகிறது.
"இஸ்ரேலிய படைகள், எங்களுக்கு எதிராக உளவியல் போரைப் பயன்படுத்துகின்றன" என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
காசா அதிகாரிகளுக்கு எதிராக, பொதுமக்களைத் திருப்பும் முயற்சியில், இஸ்ரேல் உளவியல் போர் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது என்று, காசாவின் டெய்ர் அல்-பலாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் கூறுகின்றனர்.
ஹமாஸ்தான் அனைத்துக்கும் காரணம், நீங்கள் ஹமாசுக்கு எதிராக மாறி, ஹமாஸாக் காட்டிக் கொடுத்தால் பலனடைவீர்கள் என்று, இஸ்ரேல் ராணுவம் கூப்பாடு போடுவதாக செய்திகள் வருகின்றன.
கடந்த வாரம் முதல், இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள், வாடிக்கொண்டிருக்கின்ற காசா மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் அவசரகால உதவிப் பொருட்களை காசாவை அடைவதைத் தடுத்து வருகின்றனர்..
அவர்கள் நூறுக்கும் மேற்பட்ட டிரக்குகளை நிறுத்தி வைத்திருந்தனர், அவற்றில் சில இறுதியில் திருப்பி விடப்பட்டன மற்றும், மாற்று நுழைவாயிலைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இது உதவிகளை மேலும் தாமதப்படுத்தியது.
மேற்கு கலிலேயாவில் உள்ள, அரபு அல்-அரம்ஷா, எய்லோனில் தொடர்ந்து சைரன்கள் ஒலிக்கின்றன, காரணம், ஹிஸ்புல்லா சியோனிச எதிரிகளின் இலக்குகள் தொடர்ந்து குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்திக்கொண்டிக்கிறது.
இஸ்ரேலிய தடுப்புக் காவலில், நாற்பத்தைந்து நாட்களுக்கும் மேலும் மேலாக மேலாக, கடத்திச்செல்லப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டிருந்த, பாலஸ்தீன மருத்துவர், நாற்பத்தைந்து நாட்களுக்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பி னார் .
ஹிந்த் என்னும் பாலஸ்தீன குழந்தையின் அழைப்பை ஏற்று, காப்பாற்றச்சென்ற உதவி அமைப்பினர்கள் ஆறு நாட்களுக்குப் பிறகும் திரும்பவில்லை. மற்றும் இரண்டு மருத்துவர்களின் கதியம் தெரியவில்லை.
முகமது அப்துல்-சலாம், அன்சரல்லா செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
"நமது நாட்டின் மீதோ, அல்லது ஈராக் மற்றும் சிரியா மீதோ நடத்தப்படும் ஆக்கிரமிப்பு தாக்குதல்கள், மக்களின் வெறுப்பை அதிகரிக்கும் என்பதோடு, அப்பிராந்தியத்தில், அமெரிக்க காலனித்துவ முயற்சிக்கு எதிராக, அவர்களை வலுவாக ஒன்று திரட்டும், என்பதை வலியுறுத்தியாக வேண்டும்." என்று கூறியிருக்கிறார்.
"நீங்கள் சனாவை எரித்தால், நாங்கள் எப்போதும் காஸாவுடன் நிற்போம்." என்றார்.
யேமனின் ஹௌதி கட்டுப்பாட்டில் உள்ள, தலைநகர் சனா மீது, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து படைகள் குண்டுவீசுவதை வீடியோ எடுத்த, ஒரு யேமன் நபர் இப்படித்தான் எதிர்வினையாற்றினார்.
ஹூதி நிலைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால் யாரும் உண்மையில் அதைக்கண்டுகொள்ளவில்லை, கவலைப்படவுமில்லை.
இஸ்ரேலிய சேனல் ட்வெல்வ் செய்தியில் , இஸ்ரேலிய தீவிரவாத இராணுவத்தின் இழப்பு பற்றிய எண்களை மேற்கோள் காட்டும்போது, ஐநூற்று நாற்பது ராணுவ வீரர்கள், "தவறுதலாக", காயமடைந்ததாக தெரிவிக்கிறது.
மேலும் .தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எங்கள் சேனலை subscribe செய்துகொள்ளுங்கள். நன்றி.
No comments:
Post a Comment