பாலஸ்தீனத்தில் புதிய "பைடன் கோட்பாடு".
காசாவை மீண்டும் கட்டி எழுப்ப, பல்லாயிரம் கோடி ரூபாய்களும், எழுபது வருடங்களும் தேவை.
கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் போராளிகள் நடத்திய தாக்குதல் பற்றிய குறிப்புகள்.
ஹமாஸுடன் உடன்பாடு ஏற்படுத்த, நெதன்யாஹுவுக்கு அழுத்தம் கொடுக்கும் தீவிர வலதுசாரிகள்.
ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, தனது படைகள் இஸ்ரேலிய ராணுவ வாகனங்களை குறிவைத்து, ஒரு சியோனிச அதிகாரியை சுடுவதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டது. ஒரு அழகான, பயிற்சி பெற்ற வீரர்களின் சாதுர்யமான தாக்குதல், மிகத்துல்லியமாக, குறிப்பிட்ட அதிகாரியின் கழுத்தில் சுடும் காட்சிகள் வெளிப்பட்டுள்ளன.
"இஸ்ரேலால்" காசாவில் ஏற்பட்ட விரிவான குண்டுவீச்சு மற்றும், அதன் விளைவாக ஏற்பட்ட பேரழிவு, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, பிராந்தியத்தின் உள்கட்டமைப்பில், கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் வரை தகர்த்துள்ளது என்று ஐ.நா அறிவித்துள்ளது.
அழிவின் அளவு, காசா பகுதியை கிட்டத்தட்ட வாழத் தகுதியற்றதாக ஆக்கியுள்ளது, மறுசீரமைப்பு முயற்சி செய்ய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் தேவைப்படுகிறது, காசாவை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு எழுபது ஆண்டுகள் வரை ஆகலாம்.
எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு மற்றொரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, காசா மக்கள் ஒரு படுகொலையை எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ளது. பாலஸ்தீனிய பிராந்தியங்களுக்கான, தொண்டு நிறுவனத்தின் தலைவரும், தற்போதைய சூழ்நிலைகளில் காசா மக்களுக்கு உதவ, எம்.எஸ்.எஃப் இயலாமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் அறிவிப்பு: அக்டோபர் எட்டு முதல், லெபனான் எல்லையில் உள்ள குடியேற்றங்களில், ஐநூற்றுப்பன்னிரெண்டு இஸ்ரேலிய வீடுகளை ஹிஸ்புல்லா அழித்தது அல்லது சேதப்படுத்தியது. ஒரு குடியிருப்பில் ஐம்பது சதவீதம் வரை வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. ஓரு லட்சம் குடியேறிகள் தப்பி ஓடினர். நூறு வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தனது இனப்படுகொலையை நிறுத்தும் வரை ஹிஸ்புல்லா ஓயமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலிய படைகளுக்கு எதிரான அனைத்து போராளிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளின் பெரிய சுருக்கம் பிப்ரவரி 1.
யேமன் ஆயுதப்படை:.செங்கடலில் இஸ்ரேலிய துறைமுகங்களை நோக்கிச் சென்ற ஒரு பிரிட்டிஷ் வணிகக் கப்பலை குறிவைத்துத் தாக்கியது..
அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ்:.தெற்கு காசா நகரில் உள்ள, ஜைட்டூன் சுற்றுப்புறத்திற்கு தெற்கே, 3 ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காசா பகுதிக்கு தெற்கே, கான் யூனிஸுக்கு மேற்கே, பாதுகாக்கப்பட்ட ஒரு கட்டிடத்திற்குள் தங்கியிருந்த, IOF சிப்பாய்களின் ஒரு குழுவை குறிவைத்து தாக்கியது, T B G தடுப்பு அரண் எதிர்ப்பு வெடிபொருளைக் கொண்டு இலக்கு வைத்தனர், இதன் விளைவாக ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
காசா பகுதிக்கு தெற்கே கான் யூனிஸுக்கு மேற்கே ஒரு இராணுவ D9-புல்டோசரை குறிவைத்தது.
காசா நகரில் உள்ள ஷேக் ரத்வான் புறநகரில், அல்-யாசின் -105 ரக துப்பாக்கிகளுடன், 4 இராணுவ வாகனங்களை குறிவைத்து தாக்கியது.
காசா நகருக்கு மேற்கே உள்ள இராணுவ முகாம்கள் மீது கனரக பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன.
அல்-குத்ஸ் படையணி:.
காசா நகரத்திற்கு மேற்கே, தொழில்துறை சதுக்கத்தில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிலைகொண்டிருந்,த ஐ.ஓ.எஃப் படையினர் குழுவை இலக்கு வைத்தனர்.
கான் யூனிசின் மேற்கு மற்றும் தென்மேற்கு கோடரிகளில், இஸ்ரேலிய படைகள் மற்றும் வாகனங்களுடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டது.
கான் யூனிஸின் மையத்தில், 2 இராணுவ வாகனங்கள் மற்றும் ஒரு ஏ.பி.சியை, Tandem ராக்கட்டுகள் கொண்டு தாக்கியது.
Kisufim இராணுவ தளத்தைச் சுற்றியுள்ள இராணுவ முகாம்கள் மீது, சரமாரியான மோட்டார் குண்டுகள் வீசப்பட்டன.
காசா நகரில் உள்ள ஜைடவுன் பகுதிக்கு கிழக்கே உள்ள, ஐ.ஓ.எஃப் வீரர்கள் மற்றும் வாகனங்கள் மோட்டார் குண்டுகளால் தாக்கப்பட்டன.
இது தவிர, அல்`முஜாஹிதீன் படைகள், அல் அக்சா மார்ட்டயர்ஸ் பிரிகேட்ஸ், அல் ஆஷிfa forces, தியாகி உமர் அல்-காசிம் படைகள் ஆகியவையும் வெவ்வேறு இடங்களில் இஸ்ரேல் ஊடுருவல் ராணுவம் மீது தாக்குதல்கள் நடத்தியது.
இதைப்போலவே ஹிஸ்புல்லாவும், ஷெபா பண்ணைகள், ரம்டா தளம், அல்ஷமாகா தளம், zarit ராணுவ பயிற்சி தளம், போன்றவைமீது, ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
ஈராக் போராளிகளும் தன் பங்குக்கு, இஸ்ரேல் பகுதியிலுள்ள haifaa துறைமுகத்தை டிரோன்கள் மூலம் தாக்கியது, மற்றும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தளங்களின்மீது காமிகேஸ் டிரோன்களை ஏவி தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
-----
ஈரான் படைகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு
அமெரிக்க விமானப்படை ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய இலக்குகள் மற்றும், பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் என்று, அமெரிக்க அதிகாரி ஏபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
எனினும், ஈரானியர்கள் தாக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டால், பிராந்தியத்தில் உள்ள தனது சொத்துக்கள் மீது, அமெரிக்கா தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும் என்று, ஈரான் கூறியுள்ளது.
அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், குடியேற்றக்காரர்களின் வன்முறையை இஸ்ரேல் கட்டுப்படுத்துகிறது.
காஸா போர் நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக, ஹமாஸுடன் சாத்தியமான உடன்பாடு குறித்து நெதன்யாகுவுக்கு, தீவிர வலதுசாரிகளால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
இந்தச் செய்தித் தொகுப்பு இத்துடன் நிறைவு பெறுகிறது. நமது அடுத்த முக்கியச் செய்திகளுக்கி SUBSCRIBE செய்துகொள்ளுங்கள். நன்றி.
No comments:
Post a Comment