ஹைஃபா துறைமுகத்தை தாக்கிய ஈராக் போராளிகள்.
ஜியோனிஸ்டுகளின் கோட்டையை தகர்த்த ஹெஸ்பொல்லாஹ்.
காசாவில் பலி எண்ணிக்கை இருபத்தொண்ணாயிரத்தை நெருங்குகிறது.
அகண்ட இஸ்ரேலின் பேராசைப் பட்டியல்.
வலுவிழக்கும் யூ என் ஆர் டபிள்யூ ஏ செயல்பாடுகள்.
ஹெஸ்பொல்லாஹ் Snow ட்ரைனிங் வீடியோ உள்ளே.
ஹெஸ்பொல்லாஹ் நடத்திய தாக்குதல். இன்று காலை, ஷெபா பண்ணைகளில் உள்ள, எதிரி நிலையின் மீது, ஹெஸ்பொல்லாஹ் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு, சியோனிஸ்டுகளின் கோட்டைகளை தகர்த்துள்ளது.
--------------
காஸாவில் பலி எண்ணிக்கை இருபத்து ஆறாயிரத்து தொள்ளாயிரம் ஆக உயர்ந்துள்ளது.
யேமெனில் தாக்குதல்கள். பத்து ஹவுதி ஆளில்லா விமானங்களுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா தாக்கியதாக உறுதிப்படுத்தியது
இஸ்ரேல் வேண்டுமென்றே திட்டமிட்டு, காசாப்பகுதிக்கு வரும் உதவி விநியோகங்களை மறுக்கிறது என்று, பாலஸ்தீனத்திற்கான M S F செயல்பாடுகளின் தலைவர் கூறுகிறார்.
இன்று அல்-அக்ஸா மசூதி வளாகத்தை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கினர் இஸ்ரேல் காவல்துறையின் பாதுகாப்புடன், டஜன் கணக்கான நிலா ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள், அல்-அக்சா பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தனர், இதைக் கண்ட சாட்சிகள், மசூதியின் முற்றங்கள் வழியாக, போலி சுற்றுப்பயணங்களை மேற்கொண்டதாகக் கூறினார்.
-----
யேல் கான் என்பவர், ஒரு யூத இஸ்ரேலிய பெண், அவர் ஐம்பத்தொரு ஆண்டுகளாக, பாலஸ்தீனத்திற்காக பிரச்சாரம் செய்து வருகிறார். எல்லா இடங்களிலும் பாலஸ்தீனியர்களுக்காக வாதிடுவது, தனது கடமை என்று அவர் நம்புகிறார், "நான் பாலஸ்தீனர்களிடம் இருந்து திருடப்பட்ட நிலத்தில் வாழ்ந்தேன், அதனால் எனக்கு மன்னிப்பு இல்லை." என்று கூறி வருகிறார். வல்ல இறைவன் அவர் மீது கிருபை செய்வானாக.
இதற்கிடையில் ஒரு இஸ்ரேல் அரசியல்வாதியின் பேராசையைப் பாருங்கள்:
இஸ்ரேலிய அரசியல்வாதி டேனியல்லா வெய்ஸ், இஸ்ரேல், அதன் எல்லைகளை "யூப்ரடீஸ் முதல் நைல் வரை" கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "பெரிய இஸ்ரேல்". அதாவது, கிரேட்டர் இஸ்ரேல் அல்லது "அகண்ட இஸ்ரேல்".
இந்த அகண்ட இஸ்ரேலில் எதுவெல்லாம் இருக்குமென்றால், பாலஸ்தீனம் முழுவதும், ஜோர்டான் முழுவதும், ஈராக்கின் சில பகுதிகள், லெபனானின் சில பகுதிகள், சிரியாவின் சில பகுதிகள், எகிப்தின் சில பகுதிகள், துருக்கியின் சில பகுதிகள், சவூதி அரேபியாவின் சில பகுதிகள், இத்தனையும் இந்த நஸ்ரானிகளுக்கு தேவையாம்.
----
முக்கியச்செய்தி \. | காசாவில் உள்ள, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்று, U N R W A, கூறியது, ஏனெனில், நன்கொடை வழங்கும் பதினாறு,முக்கிய நாடுகள், நிறுவனத்திற்கு நிதி உதவியை நிறுத்த முடிவு செய்துள்ளன.
"யுஎன்ஆர்டபிள்யுஏ- இல்லாமல், காசாவாசிகள் இந்த நெருக்கடியில் தப்பிப்பிழைப்பார்கள் என்பதை, கற்பனை செய்வது கடினம்", என்று அந்த agency குறிப்பிட்டது. இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பல நன்கொடை வழங்கும் நாடுகள், ஏஜென்சிக்கு நானூற்றி நாற்பது மில்லியன் அளவிலான அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதியை, நிறுத்தியுள்ளதாகவும் நிறுவனம் தெரியப்படுத்தி உள்ளது.
-----
மற்றொரு முக்கியச்செய்தி : காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது, இஸ்ரேலிய போரின் இலக்குகளுக்கு எதிரானது என்று, இஸ்ரேலின் நிதியமைச்சர், பெசலெல் ஸ்மோட்ரிச் -- கூறுகிறார்.
"இது தொடர்பாக நான் நெதன்யாகுவுடன் பேசினேன், இது விரைவில் மாறப்போகிறது." என்று கூறியிருக்கிறார்.
காஸா மீதான போர்: காஸாவில் வீடுகளுக்கு தீ வைக்க இஸ்ரேல் அதிகாரிகள் ராணுவ வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸ், பாலஸ்தீனிய வீடுகளை எரிப்பதற்கு, சட்ட ஒப்புதல் தேவையில்லை என்றும், மற்றும், இது ஒரு பொதுவான நடைமுறை என்றும் தெரிவிக்கிறது. அதாவது பாலஸ்தீனர்களை, எவ்வளவு கொடுமைப்படுத்தி, எவ்வளவு கொடூரமாக சித்திரவதை செய்தாலும், அது சரியானதுதான் என்று இஸ்ரேல் தெரிவிக்கிறது.
காசா மக்கள், உணவில்லாமல், மருந்தில்லாமல், உடை மற்றும் உறைவிடம் இல்லாமல், குடிக்க தாண்ணீர்கூட இல்லாமல், அணுஅணுவாகச் சித்திரவதைப்பட்டு அழிந்துபோவதைக்கண்டு, ஆனந்தப்பட விரும்புகிறது போலும்.
ஆனால், வெகு விரைவில் ஒரு பிரளயம் நிகழப்போகிறது/ இயற்கையாகவே இஸ்ரேல் அழியப்போகிறது. பாலஸ்தீனம் பழைய நிலையை அடையப்போகிறது, மக்கள் பலனடையப்போகிறார்கள். இதுதானே இறைவனின் நியதியும், நீதியும்...?
இதற்கிடையில் மற்றொரு முக்கியச்செய்தி:
அயர்லாந்து, நோர்வே, ஸ்காட்லாந்து, ஸ்லோவேனியா மற்றும் ஸ்பெயின் ஆகியவை - U N R W A - வுக்கு தொடர்ந்து நிதியளிப்பதற்கான, தங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன. இறைவன் இவர்கள் அனைவருக்கும் கிருபை செய்வானாக.
இதுபற்றி அதிகமான உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நன்றி.
------
No comments:
Post a Comment