Sunday, 7 January 2024

அதிரடி News: சீனாவின் கோஸ்கோ இஸ்ரேலுக்கு ஏற்றுமதியை நிறுத்தியது, இஸ்ரேல்...


சீனாவின் கப்பல் நிறுவனமான கோஸ்கோ இஸ்ரேலுக்கு ஏற்றுமதியை நிறுத்தியது.

இஸ்ரேல் ஹெஸ்புல்லாவுக்கு எதிராக "கடினமான" நேரத்தை சந்திக்க நேரிடும் என்று  அமெரிக்க உளவுத்துறை எச்சச்சரித்துள்ளது.

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா வலியுறுத்த வேண்டும்: ஜோர்டான் மன்னர் வலியுறுத்தல்.
====
சீனாவின் கப்பல் நிறுவனமான கோஸ்கோ இஸ்ரேலுக்கு ஏற்றுமதியை நிறுத்தியது.

காசா முனைக்கு ஆதரவாக, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் மீது, ஏமன் இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சீன கப்பல் நிறுவனமான கோஸ்கோ, முக்கிய வழித்தடமான செங்கடல் வழியாக, இஸ்ரேலுக்கு செல்லும்  கப்பல் போக்குவரத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய நிதி செய்தி வலைத்தளமான குளோப்ஸ், ஞாயிற்றுக்கிழமை, கோஸ்கோவின் முடிவை மேலும் விவரங்களை வழங்காமல் தெரிவித்தது, மேலும், கப்பல் நிறுவனம் அதன் முடிவை சர்வதேச கப்பல் பயணிகளுக்கு இன்னும் அறிவிக்கவில்லை.

இஸ்ரேலில் உள்ள கோஸ்கோ அலுவலகங்கள். இந்த செய்திகளைப் பற்றி  கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. இஸ்ரேல் துறைமுக அதிகாரிகளும் இந்த அறிக்கையை சரிபார்த்து வருவதாக தெரிவித்தனர்.

இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு செல்லும்,அனைத்து கப்பல்களையும்  தடுப்போம் என்று ஏமன் இராணுவம் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ள நிலையில், காஸ்கோ கப்பல் கம்பெனியின் சமீபத்திய முன்னேற்றம் வந்துள்ளது.

கடந்த மாதம் முதல், காசா முனையில், கத்தார் தலையிட்டு உருவாக்கிய போர்நிறுத்தத்தை நீட்டிக்க விரும்பாமல், இஸ்ரேல் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய நிலப்பரப்பில், அதன் இனப்படுகொலை போரை தொடர்ந்து முன்னெடுத்ததை அடுத்து, இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை யேமன் இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் வரை, தனது தாக்குதல்களைத் தொடர்வோம், என்று ஏமன் சூளுரைத்துள்ளது, இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களை மட்டுமே நாங்கள் குறிவைப்போம் என்றும், மற்ற துறைமுகங்களுக்குச் செல்லும் மற்ற கப்பல்கள் அனைத்தும், நாட்டிற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சுதந்திரமாக செல்ல முடியும் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

லெபனானிலுள்ள, இஸ்ரேலிய எதிர்ப்பு இயக்கமான ஹிஸ்புல்லாவிற்கு எதிராக, இஸ்ரேல் வெற்றி பெறுவது கடினம் என்று, அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு கூறுகிறது.

ஞாயிறன்று,  தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஒரு செய்தியில், அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (டிஐஏ) புதிய ரகசிய மதிப்பீட்டை மேற்கோள் காட்டி, "காசாவில் மோதலைக் கருத்தில் கொண்டு இஸ்ரேலின் இராணுவ சொத்துக்கள் மற்றும் வளங்கள் அழிக்கப்பட்டும், எஞ்சியவை ஆங்காங்கே பரவியும் இருப்பதால்  இஸ்ரேலின் இராணுவம் வெற்றி பெறுவது கடினம்" என்று அமெரிக்க நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவிடம் நன்கு பயிற்சி பெற்ற போராளிகள், மற்றும், பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகள், மற்றும், ராக்கெட்டுகள் உள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அந்த பத்திரிகை, லெபனானின் தெற்குப் பகுதிகளில் போரை விரிவுபடுத்துவதை, நோக்கமாகக் கொண்ட இஸ்ரேலிய முயற்சிகளுக்கு பதிலளிப்பதாக சூளுரைத்த, லெபனான் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாவின், வெள்ளிக்கிழமை உரையை மேற்கோள் காட்டியது.

காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரின், பேரழிவுகரமான விளைவுகளுக்கு எதிராக, ஜோர்டான் மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார், முற்றுகையிடப்பட்ட பிராந்தியத்தில், உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு, அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஞாயிறன்று, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கனுடன் நடந்த சந்திப்பின் போது, மன்னர் அப்துல்லா இந்த கருத்துக்களை தெரிவித்தார், அதே நேரத்தில், காசாவில் சோகமான, மனிதாபிமான நெருக்கடிக்கு, தீர்வு காண வேண்டிய அவசர தேவையை வலியுறுத்தினார்.

காஸா, மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பாலஸ்தீனியர்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர நிர்ப்பந்தித்ததை,  "சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறல்" என்று மன்னர் அப்துல்லா மேலும் கண்டனம் செய்தார், பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

காஸாவையும் மேற்குக் கரையையும் பிரிப்பதற்கான, எந்தவொரு முயற்சிகளையும் தமது இராச்சியம் கடுமையாக நிராகரிப்பதாகக் கூறிய அவர், பாலஸ்தீன பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு இல்லாமல். பிராந்தியம் ஸ்திரத்தன்மையைக் காணாது என்றும், இரெண்டு நாடுகள்  என்னும் தீர்வின் அடிப்படையில், பிரச்சினை தீர்க்கப்படாமல், இந்தப் பிராந்தியம் விரிவான அமைதியை அடையாது என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், ஹமாஸைப்போல, ஹெஸ்புல்லாவைப்போல, ஏமன் ஹவுதிக்களைப்போல, வலுப்பெற்று வரும் ஈராக்கிலுள்ள இஸ்லாமிய எதிர்ப்புப்போராளிகளும்,  காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பல இஸ்ரேலிய, அமெரிக்க இலக்குகளைத் தாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
-------------------

No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...