Wednesday, 10 January 2024

அதிரடி திருப்பங்கள் : UAE ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஹவுதிக்கள் கடும் எச்...



UAE ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஹவுதிக்கள் கடும் எச்சரிக்கை. அப்பாவியாக இருந்து, உள்ளடி வேலை பார்க்கிறதா UAE? திகைக்க வைக்கும் உலக அரசியல் காய் நகர்த்தல்கள்.

இஸ்ரேல் அல்லாத கப்பல்களைத் தாக்க, கூலிப்படையினரை நியமித்தால், ஐக்கிய அரபு அமீரகம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுத்திகள் எச்சரிக்கை.

அன்சருல்லாவின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரான, அப்துல்சலாம் ஜஹாப் கூறுகையில், இஸ்ரேல் அல்லாத கப்பல்களைத் தாக்க, ஐக்கிய அரபு அமீரகம் கூலிப்படையினரை நியமித்து, எங்கள் மீது பழியை சுமத்தி எங்களது பெயரை கெடுக்க நினைக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவ்வாறு செய்தால், அவர்கள் எங்கள் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரித்திருக்கிறார்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் UAE கண்டைனர் மூலம் கொண்டு சொல்லப்படுகிறதா? அல்லது வேறு ஏதாவது தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு சொல்லப்படுகிறதா? அல்லது இஸ்ரேலுக்காக சண்டையிட ஆட்கள் கொண்டு செல்லப்படுகின்றனரா?

இஸ்ரேலுக்கு, சந்தேகத்திற்கிடமான பொருட்களை ஏற்றிச் சென்ற, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கப்பலை, ஈரான் தடுத்து நிறுத்தியது. ஈராக் துறைமுகத்திற்கு செல்லும் வழியில், ஈரானிய கடற்பரப்பில், இந்த டேங்கர் கைப்பற்றப்பட்டதாக, ஷஃபாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால் ஈராக்கில் காபூல் சூழலை எதிர்கொள்ள நேரிடும்: ஈராக் எதிர்ப்பு கமாண்டர் எச்சரிக்கை 

ஈராக்கில் சர்வதேச கூட்டுப் படைகள் இருப்பதற்கான நியாயங்கள் முடிந்து விட்டதாக ஈராக் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, மற்றும் அதன் ஆதர்வர்களின் படைகள், தாலிபான்களை ஒழிப்பதற்காக, பலகாலம் ஆப்கானிஸ்தானத்தில் சண்டையிட்டும், எதையும் சாதிக்க முடியாமல், அங்கே இருந்த அவர்களது ஆயுதங்கள், மற்றும் வாகனங்கள் அனைத்தையும்,உள்ளதை உள்ளபடி விட்டு விட்டு, தத்தமது நாடுகளுக்கு தப்பிச் சென்றது அனைவரும் அறிந்ததே.  இதே போன்ற நிலை ஈராக்கிலும் ஏற்படாமல் இருக்க, அமெரிக்காவும் அதன் நண்பர்களும் கௌரமாக ஈராக்கை விட்ட வெளியேற வேண்டும் என்று ஈராக் விரும்புகிறது.

காசாவில், பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் அவர்கள் உயிர்கள் எல்லாம், கட்டிடங்கள்போல, ஆயுதங்கள் போல, வாகனங்கள் போல ஏற்படும் சேதம் அல்ல, Collateral Damage அல்ல. அவர்கள் உயிருள்ள, பெயர்கள் மற்றும் குடும்பப் பெயர்களைக் கொண்ட ஆண்களும் பெண்களும் ஆவர் என்று போப்பாண்டவர் குறிப்பிட்டுள்ளார். 

இனப்படுகொலைக்காக, இஸ்ரேலை விசாரிப்பதற்கான விசாரணைகளுக்கு, சில நாட்களுக்கு முன்பு, போப் பிரான்சிஸ், பொதுமக்கள் Collateral Damage  அல்ல என்று மீண்டும் வலியுறுத்தினார். இவர் கடந்த கிருஸ்துமஸ் தினத்தன்று பேசும்போது, காசாவில் மடியும் ஒவ்வொரு குழந்தையும், ஒரு குட்டி ஜீசஸ் என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கு காட்டப்படும் பட்டியலைப் பாருங்கள். இதனால்தான் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த தயக்கம் காட்டுகின்றன. 

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளின் பட்டியலை, ராணுவ நிபுணர் ஃபேபியன் ஹின்ஸ் தொகுத்துள்ளார்.

ஏமன் கணக்கிடப்பட வேண்டிய ஒரு சக்தி. பெரும்பாலான நேட்டோ நாடுகளில் அத்தகைய ஏவுகணை திறன்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

நெதன்யாகு ஹெஸ்பொல்லாவுடன் போரை விரும்புகிறார், அமெரிக்காவின் போரைத்தனிக்கும் முயற்சிகள்,  தோல்வியைத் தழுவப் போகின்றன.

நெதன்யாகு என்ன வேண்டுமானாலும் செய்ய அமெரிக்கா அனுமதிக்கும் வரை, மத்திய கிழக்கில் நிலைமையின் தீவிரத்தை குறைக்கும் முயற்சியில்,  பைடன் நிர்வாகம் வெற்றி பெறாது.

காசாவில் தனது இலக்குகளை அடையத் தவறியதால், நெதன்யாகு ஹெஸ்பொல்லாவுடன் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க தீவிரமாக விரும்புகிறார். 

பணயக்கைதிகளை விடுவிக்க ஐ.டி.எஃப் தவறிவிட்டது,  மற்றும் டெல் அவிவ் காசாவிலிருந்து தினசரி ஏவப்படும் ராக்கெட்டுகளைப் எதிர்கொள்கிறது.

நெதன்யாகு, இந்தப்போரில் முழுமையாக வெற்றிபெற்று,   ஒரு பெரிய சாதனையை படைக்கவில்லை என்றால், மேற்கொண்டு அவரது அரசியல் வாழ்க்கை வீழ்ந்து விடும். 

இஸ்ரேலின் மிக முக்கியமான துறைமுகமான ஹைஃபா மீது, ஈராக்கிய எதிர்ப்புப் படைகள் ஒரு புதிய ஏவுகணையை ஏவின. ஹைஃபா துறைமுகம் அருகே விழுந்த ஏவுகணை இடைமறிக்கப்படவில்லை. 

இது ஒரு தீவிரமான போரின் விரிவாக்கம் மற்றும் இஸ்ரேலுக்கு மேலும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஹைஃபா துறைமுகம், இனி கப்பல் வணிகள் செய்யும் வணிகர்களுக்கு பாதுகாப்பானது அல்ல, என்று இதன் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

மற்றொரு எக்ஸ் வலைப்பக்க செய்தியில், ஈராக்கிய எதிர்ப்புப் படைகள், தங்கள் புதிய க்ரூஸ் ஏவுகணை மூலம், மத்திய கிழக்கில் அதிர்வலைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இது உண்மையில் ஒரு தீவிரமான அதிகரிப்பு என்றால், அது நிச்சயமாக இஸ்ரேலுக்கு சில பொருளாதார தலைவலிக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
=============





No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...