Saturday, 6 January 2024

காஸாவில் பேரழிவு மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகள்: சமீபத்திய புதுப்பிப்பு...


ஹவுதிகள் கடும் எச்சரிக்கை...!

செங்கடலில் யேமனியர்களைக் கொன்ற அமெரிக்கர்களை அமெரிக்கா ஒப்படைக்க வேண்டும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த அமெரிக்கர்களை அமெரிக்கா விசாரணைக்கு ஒப்படைக்காவிட்டால், விளைவுகள், அமெரிக்காவுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், கடுமையாக இருக்கும் என்று, யேமன் தலைமை அதிகாரி எச்சரித்திருக்கிறார்.

பாலஸ்தீன நாட்டை உருவாக்குவது மட்டுமே அமைதிக்கு ஒரே வழி, என்று  ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் Josep Borrel தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவரான ஜோசெப் போரெல், நடந்து வரும் இஸ்ரேல்-காசா போரில், லெபனான் சிக்குவதைத் தவிர்க்க உதவும் முயற்சிகளில், சனிக்கிழமை, ஹெஸ்பொல்லாவின் அரசியல் அதிகாரியை சந்தித்தார்.

லெபனான் ஊடகங்களின்படி, ஹெஸ்பொல்லாவின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மொஹமட் ராத்துடன் போரெல் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஏஜென்சி பிரான்ஸ்-பிரஸ் தெரிவிக்கிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், கிரீஸ் செல்வதற்கு முன்பு, இஸ்தான்புல்லில் மூத்த துருக்கிய அதிகாரிகளை சந்தித்தார், அக்டோபரில், காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கு முழுவதும் அதிகரித்துள்ள பதட்டங்களை, அமைதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வார பயணத்தின் முதல் நிறுத்தம் இதுவாகும்.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுடனான சந்திப்பின் போது, பிளிங்கன் "மோதல் பரவுவதைத் தடுக்கவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும், மனிதாபிமான உதவிகளை விரிவுபடுத்தவும், பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்கவும் வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் சனிக்கிழமை தெரிவித்தார்.

காசாவில் உள்ள குழந்தைகள் "எல்லா வழிகளிலும் இறக்கின்றனர்" என்று எம்.எஸ்.எஃப் மருத்துவர் தான்யா ஹஜ்-ஹசன் அல் ஜசீராவிடம் கூறினார்.

டெல் அவிவ் நகரில், கைதிகளை விடுவிக்கக் கோரியும், நெதன்யாகு பதவியை  உடனடியாக  வெளியேறக் கோரியும், இஸ்ரேலியர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனநாயகக் கட்சியின், அமெரிக்க செனட்டர்களான, கிறிஸ் வான் ஹோலன் மற்றும் ஜெஃப் மெர்க்லி ஆகியோர், எகிப்து-காசா எல்லையில், இஸ்ரேலிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட, நீர் பரிசோதனை உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் உட்பட, உதவி பொருட்கள் நிறைந்த ஒரு கிடங்கிற்கு வருகை தருகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே முழு வீச்சிலான போர் நெருங்கிவிட்டது, இதனால் ஐரோப்பியர்கள் பதட்டமடைந்துள்ளனர்.ஹிஸ்புல்லா தனது நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், லெபனான் மீது படையெடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பியர்களின் பதட்டத்திற்கு காரணம், அவர்கள் ஹிஸ்புல்லாவின் திறமைகளை நன்கு அறிந்து வைத்திருப்பதுதான். மேலும் அவர்கள் எரிவாயுவை இஸ்ரேலிடம் இருந்து இறக்குமதி செய்கின்றனர். இஸ்ரேல் லெபனோனிடம் தொடுக்கும் போரானது, ஹிஸ்புல்லாவின் ஆயுதங்கள் இஸ்ரேலின் எரிவாயு கிடங்குகளை குறிவைக்கலாம் என்பதால் இந்தப் பதற்றம் அதிகரித்துள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி ஜோசெப் போரெல், லெபனானின் தெற்கு எல்லையில் இருந்து வெளியேறுமாறு ஹிஸ்புல்லா பிரதிநிதிகளை சமாதானப்படுத்தினார், ஆனால் ஹெஸ்பொல்லா மறுத்துவிட்டது. 

காஸாவில் ஏற்பட்டிருப்பது பஞ்சமல்ல. இஸ்ரேலால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட பட்டினியை அனுபவிக்கிறது, என்று சுகாதார உரிமைக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ட்லாலெங் மோபோகெங், எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

"எங்களுக்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை," என்று மோபோகெங் மேலும் கூறினார்.

சுயாதீனமான ஐ.நா மனித உரிமைகள் நிபுணராக பணியாற்றும் மொபோகெங், காசாவில் "பரவலான பஞ்சம் நிலவுகிறது" என்று எச்சரித்து, ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

போருக்குப் பிந்தைய காஸாவில், துருக்கி 'ஆக்கப்பூர்வமான' பங்கை வகிக்கும் என்று துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்த பிளிங்கன் தெரிவித்துள்ளார். 

பிராந்திய பதட்டங்களை எவ்வாறு தணிப்பது என்பது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சனிக்கிழமை இஸ்தான்புல்லில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் போருக்குப் பிந்தைய காசாவில் ஒரு "ஆக்கபூர்வமான" பாத்திரத்தை வகிக்க துருக்கி உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். 

ப்லிங்கனின் பயனற்ற பயணம், அரபு நாடுகளைச்சுற்றிச்சுற்றிச்சென்று, ஹமாஸிடம் போர் நிறுத்த நிர்ப்பந்தியுங்கள், இஸ்ரேலிடமிருந்து பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை   விடுவிக்கச்சொல்லுங்கள் என்றுதான் இருக்கிறதே தவிர,  இஸ்ரேலிடம் சென்று போரை நிறுத்துவதற்கான எந்த முயட்சியும் எடுப்பதில்லை. ஆனால் இஸ்ரேல் நிகழ்த்துகிற படுகொலைகளையும், இன அழைப்பையும், இஸ்ரேலுடைய தற்காப்பு என்று அதற்கு மேலும் மேலும் ஆயுதங்களும், பண உதவிகளும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேறினால், அது அமெரிக்காவின் தோல்வியாகிவிடும் என்பதனாலேயே, பிலிங்கன் ஹமாஸ் தனது ஆயுதங்களை கைவிட நிர்ப்பந்திக்கவேண்டும் என்று கூறி வருகிறார் என்றே பலரும் கருதுகிறார்கள்.  


No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...