இஸ்ரேலிடம் ஏமாந்த அமெரிக்கா.
போர் முடியும்போது ஹமாஸிடம் கெஞ்சியே தீர வேண்டும்.
ஏன்? எதற்கு?
மேற்கத்தியரை மிரட்டும் இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் சீறிப்பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை.
ஒரு சிறிய மற்றும் Exclusive Report .
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள், யேமனியர்களின் எதிர்வினையைத் தூண்டக்கூடும் என்று, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அஞ்சுகின்றன.
இரண்டாயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள்தான், அன்சருல்லாவின் மிகப்பெரிய பாதுகாப்பு.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க சொத்துக்களும், இந்த ஏவுகணைகளின் வரம்பிற்குள் உள்ளன.
அமெரிக்கா மற்றும் அதன் நண்பர்களுக்கோ, ஹவுதிகளின் இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் சீறிப்பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை தூக்கத்தைக் கெடுக்கிறது.
மத்திய கிழக்கில், ஒரு முழு அளவிலான போரை தொடங்குவதற்கு முன்பு, அமெரிக்கா தனது ஐம்பத்தைந்தாயிரம் அமெரிக்க துருப்புக்களை, மத்தியக் கிழக்கு பிராந்தியத்திலிருந்து வெளியேற்ற வேண்டும், என்று பல இராணுவ வல்லுநர்கள் நம்புகின்றனர்.
போர்க்கப்பலில் இருந்து, ஒரு சில ஏவுகணைகளைத்தடுக்கலாம், நூற்றுக்கணக்கான ஏவுமனைகளைத் தடுப்பது என்பது, அசாத்தியமான ஒன்று.
இந்தப்படத்தை பாருங்கள், மொத்த செங்கடலும், ஹவுதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
.
சாஹப் த்ரீ - ஆயிரத்து முந்நூற்று ஐம்பது கிலோமீட்டர் வரை செங்கடலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
கத்ர் ஹெச் - ஆயிரத்து அறுநூற்று ஐம்பது கிலோமீட்டர் வரை செங்கடலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
கத்ர் ef - ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது கிலோமீட்டர் வரை செங்கடலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
இதைத்தாண்டி உள்ளே வரும் எந்தக்கப்பலும், பத்திரமாகி செல்லும் என்பதற்கு, எந்த உத்திரவாதமும் இல்லை.
ஏமன் வைத்திருக்கும் சக்திவாய்ந்த, பல்லாயிரம் கடல் கன்னி வெடிகள், உள்நுழையும் கப்பல்களை சாம்பலாக்கிவிடும். அத்தகைய கடல் கன்னி வெடிகளை கண்டுபிடிப்பதும், மிகமிகச்சிரமமானது மட்டுமல்லாமல், அதைத்தூளாவி எடுத்து கடலை சுத்தம் செய்வதும், பலகாலம் தேவைப்படுகின்ற செயலாகவே இருக்கும் .
சமீபத்தில் ஹௌதியின் மூன்று படகுகள், அமெரிக்க போர்க்கப்பலால் தாக்கப்பட்டு, பத்து பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உண்டான சர்ச்சையில், யேமெனினின் அடுத்த இலக்காண, அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீதான, தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக , அமேரிக்கா தனது போர்க்கப்பலை அங்கிருந்து உடனடியாக அகற்றியது.
இது எமனுடன் போரைவிரும்பாத தனது நிலைப்பாட்டை வெளிச்சமாகக் காட்டியது. இதுவரை அமெரிக்கப்போர்க்கப்பல் ஏமன் தரையின் மீது, எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஏமன் ஹவுதிக்கள் அமெரிக்க போர்க்கப்பலைத்தாக்கி மூழ்கடித்ததாக வந்த செய்தியை இருபக்கத்தினரும் மறுத்தனர்.
இது தொடர்பாக அன்ஸாருல்லாஹ் விடுத்த சமீபத்திய அறிக்கையில், அமெரிக்காவுக்கும் எங்களுக்கும் இடையில் சண்டை எதுவும் நடைபெறவில்லை. இதுபோன்ற வதந்திகளை இஸ்ரேல் தந்திரமாகப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார். ஆகா, எந்த நேரமும் பற்றிக்கொள்ளத்துடிக்கும், நெருப்பின்மீது நடக்கும் பயணமாகவே இந்த நிகழ்வுகள் இருக்கிறது என்பது எமது பணிவான கருத்து.
ஹமாஸ் மற்றும் காசா விஷயத்தில், ,இன்று வெள்ளை மாளிகையில் உள்ள அரசியல்வாதிகள், கடுமையான சவாலை எதிர்கொள்கின்றனர். வாஷிங்டன் வெகுதூரம் சென்றுவிட்டதாகவும், காசா மற்றும் மேற்குக் கரையில் கடந்த மூன்று மாதங்களில், இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் குற்றங்களுக்கு முழு ஆதரவை வழங்கியிருக்கக்கூடாது, என்றும் சிலர் நம்புகிறார்கள், என்று, ஈரான் வெளியுறத்துறை அமைச்சர், அப்துல்லாஹியான் கூறுகிறார்.
இன்று, அமெரிக்க அரசியல்வாதிகள் தவறு செய்து, காசாவில் புதைகுழிக்குள் நுழைந்துள்ளனர். இது வெள்ளை மாளிகையில் ஒரு சவாலை, ஒரு பெரும் சவாலை சம்மதித்துக்கொண்டிருக்கிறது. "இந்த புதைகுழியில் இருந்து வெளியே வருவதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.ஏனென்றால், இஸ்ரயேல் ஹமாஸை வெற்றி பெற்றுவிடும் என்று குருட்டுத்தனமாக நம்பினார்கள். முழு உலகத்தையும் எதிர்த்துக்கொண்டு அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.ஆயுத உதவியும் செய்தார்கள். அதனால், இன்று செங்கடலில் நுழைவதற்குக்கூட, அமேரிக்கா, மிக அதிக கவனம் செலுத்தக்கூடிய நிலைக்கு ஆளாகியுள்ளது.
இஸ்ரேலிய ஆட்சி, ஹமாஸை அழித்துவிடலாம் என்று கனவு கண்டு, அதனைப் பின்பற்றியது. ஆனால் அது நடைபெறவில்லை. அவர்கள் இராணுவம், வான், தரை மற்றும் கடல் நடவடிக்கைகள் மூலம் ஹமாஸை நிராயுதபாணிகளாக்கப்போவதாக அறிவித்தனர், ஆனால் அதுவும் நடக்கவில்லை,.
ஹமாஸ் பிடித்துச்சென்ற பிணையக் கைதிகளை விடுவிக்க காசாவில் உள்ள சுரங்கங்கள் மற்றும் மருத்துவமனைகளின் அடித்தளங்களில் தாக்குதலைத் தொடரப்போவதாக அவர்கள் கூறினர், ஆனால் அவர்கள் தோல்வியை சந்தித்தனர். மேலும், ஒரு கைதியைகூட அவர்களால் விடுவிக்க முடியவில்லை.
ஹமாஸை ஒழிப்பது பற்றி பேசிய அமெரிக்கர்கள், இப்போது ஹமாஸுக்கு செய்திகளை அனுப்புகிறார்கள். மூன்றாம் நாடுகளில் சிறைபிடிக்கப்பட்ட கைதிகள் பரிமாற்றங்கள், மற்றும், போருக்குப் பிந்தைய காசாவை ஆளுவதற்கான வழிகள் குறித்து மறைமுகமாக விவாதிக்கின்றனர்.
இது, ஹமாஸ் சரியான பாதையைப் பின்பற்றுகிறது என்பதையும், கடந்த 85 நாட்களில் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பதையும் குறிக்கிறது.
முக்கியமாக, ஹமாஸ் பிடித்து வைத்துள்ள அமெரிக்க கைதிகளை, இஸ்ரேல் காப்பாற்றிவிடும் என்னும் நம்பிக்கையில், அமெரிக்கா வெளிப்படையாகவும், பெரிய அளவிலும், அதற்கு உதவியது. ஆனால், இஸ்ரேலின் கையாலாகாதத்தனம் அமெரிக்காவை பெரிய சிக்கலில் தள்ளியுள்ளது. அதாவது, இஸ்ரேலை நம்பி வெளிப்படையாக மோசம் போன அமெரிக்கா, இன்று தனது பணய கைதிகளை விடுவிக்க, ஹமாசிடம்தான் கையேந்த வேண்டி இருக்கிறது.
சில தினங்களுக்கு முன், சவுதி அரேபியாவுக்கும்,, ஈரானுக்கும், அமேரிக்கா அனுப்பிய ரகசிய கடிதத்திலிருந்த செய்தியில், இந்தப் பணயக்கைதிகளுக்கான விடுதலை விவகாரம், முக்கியப்பங்கு வகித்திருக்குக்கும் என்பதில் ஐயம் எதுவும் இருக்குமோ?
No comments:
Post a Comment