ஈரான் - இஸ்ரேல் போர் பதட்டம் ஒரு கண் துடைப்பா?
அப்போது ஈரான் தாக்கியது - இப்போது இஸ்ரேல் தாக்கியது. யானைக்கும் - பானைக்கும் சரியாப்போனதா?
இஸ்ரேலை ஆட்டுவிக்கும் பயங்கரவாதப்பேய் ஒழிக்கப்படுமா?
----
கடந்த சில தினங்களுக்கு முன் ஹமாஸ் தலைவர் இஸ்மாயீல் ஹனியே ஈரானுக்குள் கொல்லப்பட்டதிலிருந்து அரங்கேறும் போர் பதட்ட நாடகங்கள் அனைத்தும், உலகை மக்களை ஏமாற்றும் நாடகம் என்றே தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன் ஈரான் இஸ்ரேலுக்குள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஈரானுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு, இஸ்ரேலுக்கு தலைவலியாக இருக்கும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் கொன்றதன் மூலம், இஸ்ரேல் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்துள்ளது.
ஈரானுக்குள் தாக்கி தனது கவுரவத்தை பாதுகாத்துக்கொள்ளவும், அதே நேரம், ஹமாஸ் தலைவரை கொலை செய்து தனது நாட்டில் கெத்து காட்டியிருக்கிறது நெதன்யாஹூவின் பயங்கரவாத அரசு.
இப்போதோ, இஸ்ரேலை தாக்கி தற்கொலை முயற்சி செய்யாமல் எப்படி இஸ்ரேலை தாக்குவது என்று ஈரான் குழம்பிப்போய் இருப்பதாக ஹாரெட்ஸ் போன்ற இஸ்ரேலிய முன்னணி பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சாமானியர்களான பலரின் கேள்விகள் எல்லாம், ஈரான் உண்மையிலேயே வெகுண்டு எழுமா? இல்லை வழக்கம்போல வார்த்தை ஜாலம் காட்டிவிட்டு அடங்கி விடுமா என்பதுதான்.
---
இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு தெஹ்ரானின் பதில், எதிர்பார்த்த நேரத்திலோ அல்லது இடத்திலோ வராது, என்று ஐ.ஆர்.ஜி.சியின் உயர்மட்ட தளபதி ஹொசைன் சலாமி கூறுகிறார். அதாவது யாருமே எதிர் பார்க்காத நேரத்தில், எதிர் பாராத இடத்தில் இஸ்ரேல் மீதான தாக்குதல் கடுமையாக இருக்கும் என்று கூறுகிறார்.
ஒரு பெரிய நிகழ்வுக்கான நடவடிக்கைகள், துரித கதியில், வெளிப்படையாகவும், மறை முகமாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எது, எப்போது, எங்கே வெடிக்கும் என்னும் பரபரப்பும், ஆர்வமும், பயமும் கலந்த ஒரு உணர்வும் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.
ஈரான் தாக்கினால், அதைத்தடுப்பதற்கும், எதிர்த்துத்தாக்குவதற்கும், அமெரிக்கப் போர்க்கப்பல்களுடன் இந்த நிலையில், பதற்றத்தை ஆறப்போட்டு, எதிர்பாராத நிலையில் ஒரு கடுமையான தாக்குதலை முன்னெடுக்க ஈரான் அதன் கூட்டாளிகளுடன் வியூகம் வகுத்து வருவதாகத்தெரிகிறது.
---
ஈரானுக்கு எதிராக எந்த அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்கப் போவதில்லை என்று எகிப்து அறிவித்தது மட்டுமின்றி, இஸ்ரேலைப் பாதுகாக்க உதவும் நாடுகளின் கூட்டணியிழும் சேரமாட்டோம் என்று அறிவித்துள்ளது. ஆயினும், மாட்டோம் மாட்டோம் என்று சொல்லி மறை முகமாக முதுகில் குத்தும் சவுதி அரேபியா போன்ற பல அரபு நாடுகளின் நடவடிக்கைகள், தெளிவாக இல்லாமலும், குழப்பங்களை அள்ளி வீசுவதாகவுமே அமைந்துள்ளது.
இத்தனை காலமும் இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்றும், ஈமான் என்னும் இறை நம்பிக்கை நிறைந்த பலசாலிகள் இந்த அரபியர்கள் என்று உலகம் மொத்தமும் நம்பி வந்த நிலையில், நிரந்தரமாக, மத்தியக்கிழக்கில் நிரம்பி வாழும் அரேபியர்களின் கூடாரம், சியோனிஸத்துக்கும், அமெரிக்க அடிமைத்தனத்துக்கும், மிரட்டலுக்கும் மட்டுமே அடிபணிந்து வாழும் நிலையை இப்போதைய உலகச்சூழல் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்த அரேபியர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை போன்ற சங்கதிகள் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை, ஆனால், இவர்களுக்கு தேவையானது எல்லாம், மன்னர் பதவி , அரசாட்சி, அதிகாரம், ஆடம்பரம், சொகுசு வாழ்க்கை என்பதிலேயே லயித்து இருக்கிறது என்னும் உண்மை, தற்போது உலகின் பேசு பொருளாக மாறி வருகிறது என்று நோக்கர்கள் கூறுகிறார்கள்.
----
மனித குளத்தை அழிக்கத்துடிக்கின்ற, இஸ்ரேல் என்று அழைக்கப்படுகின்ற, பயங்கரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியிலுள்ள, பென்-குரியன் விமான நிலையம், அமெரிக்க ஜே.டி.ஏ.எம் ஏவுகணைகளால் நிரம்பியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆறாயிரத்து ஐநூறு J D A M களை வழங்கியுள்ளது, மற்றும் இராணுவ விமானங்களுக்காக செலவிட மேலும் பதினெட்டு புள்ளி எட்டு பில்லியன்களையும் வழங்கியுள்ளது. JDAM என்பது, Joint Direct Attack Munitions, அதாவது, கூட்டு நேரடி தாக்குதல் வெடிமருந்துகள் என்பது பொருளாகும்.
இந்த வெடி மருந்துகள் அனைத்தும், காஸாப்பகுதியில் தாக்குதல் நடத்தி, மேலும் மேலும் பாதிக்கப்படுகின்ற அப்பாவிகளை மேலும் மேலும் கொன்று குவிக்கின்ற, படுகொலை செயலுக்காக, அமெரிக்காவால் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
---
லெபனோனிலுள்ள ஹெஸ்பொல்லாஹ் போராளிகளைக் காப்பாற்ற, லெபனான், சிரியா மற்றும் ஈராக்கில், குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பான அசரக்ஸ்ஐ நிலை நிறுத்தலாம் என்று தெரிகிறது.
ஈரான், ஐ.ஆர்.ஜி.சி மற்றும் அதன் இராணுவ தளங்களைப் பாதுகாக்க, இன்னும் குறுகிய தூர பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த குறுகிய தூர பாதுகாப்பு ஏவுகணைகள், தாக்க வரும் எதிரி ஏவுகணைகளை தாக்கி அழிக்கக்கூடிய வல்லமை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
---
No comments:
Post a Comment